கல்வியமுதே!!!!
நீவிர், கரை
காணத் துடிக்கும் கடலலை;
கல்வியெனும் காலச்சுவட்டிலே
கடிகாரமாய் சுழல்பவள்;
முயற்சி என்னும் சொல்லுக்காக
மூச்சடக்கி முத்துக் குளிப்பவள்;
– என்
முதல்வராய் மட்டுமன்றி - முதன்மைக்
கல்வி அதிகாரியாகிய அலைமகள்;
பணியில் பைரவி;
பார்வையில் பார்வதி;
கனிவில் இமயம்;
கருணையில் கார்முகில்.
தயையே
!!
நீவிர், புகழ்ச்சியை விரும்பாதவள்;
புறம் பேசத் தெரியாதவள்;
கல்விக் கரையினில் -களைந்தெடுத்த
முத்தாய்ப் பிறந்தவள்.
அன்னையே
!!
உம்மை அள்ளி அரவணைத்தவரும் -
அருந்தவம் செய்தவரோ?
இல்லை!! அள்ளி முடிந்தவரும் -
அரும்பேறு பெற்றவரோ?
என்ற வினாவுக்கு
இருவிடை பகிர்தலன்றி ;
ஒருவிடையாய் உதித்தெழுந்த வித்தகியே
!!
பல்லோர் குழுமி -
நற்சான்றிதழ்களை அளிக்கும் போது;
என் நா ஆடாமல், அகமாட ஆரம்பித்தது!!
உமது பெற்றோரை நினைக்கத்தூண்டியது!!
அதைவிட - கனியமுதன்,
காவலன்;
கட்டியங்காரன்;
ஓடத்திற்கு துடுப்பாய்ச் செயல்பட்டவன்;
அவனன்றி – அம்மையீர்! ஓர் அணுவும்
அசைந்திருக்க முடியாது என்று
எனது அகமாடியது, அழகாக!!!!
அன்று……
பெற்றோருக்குப் பெருமகளாய்
பேரின்பப் பெருமை சேர்த்தாய்!!
இன்று……
மாலையிட்ட மணாளனுக்கும்;
மடியில் தூளியைக் கட்டியவளுக்கும்;
பெற்ற சிராருக்கும்;
சிந்தை மகிழ உவகை நல்குகிறாய்.
ஆனால்!
என் பிம்பம்
கண்ணொளிக்காட்சியை மட்டுமே
இன்று கண்டுகளித்த வண்ணம்
இருந்ததே தவிர;
வாய் முனையவில்லை
வாழ்த்துதலைக்
கூற………..
ஏன்?
என் நிழலும் நிழலாட மறுக்கிறது?
என - என் நிழலிடமே
நிற்கதியாய் நின்றேன்….
அங்கும் மௌனம்!! மௌனம்!!
வியப்பு !! வியப்பு!!
ஆம்
விரிசிந்தனையாளர்;
விறுவிறுப்பான கல்வி அலுவலர் ;
தெவிட்டாத திட்டமிடுதல்;
பண்முகப் பார்வை;
பேச்சில் நாவலர்;
பிள்ளைக் கனியமுது;
பெரும்பிராட்டி;
இப்படிப் பல கோணங்களில்!!
பரிணமிக்கும் தாங்களுக்கு
வாய்ஜாலம் சிறந்ததன்று !!
செம்மொழியான
என் தமிழ்மொழிப்பாவே சிறந்தது!!!!
என
முடிவு செய்து
திரளும்
என் எண்ணக்கருத்தை
திரவியத்
தமிழில் தரவேண்டி……..
தாமதித்தேன்!!
தந்தேன்
இப்பொழுது!!!
முதல்வரே!!
முனைவர் பட்டம் -
உமது முயற்சியின் முக்கனிச் சாறு;
இஃது உமக்கே உரியச் சாத்தியக் கூறு;
சலசலப்புக்கு அஞ்சாத சங்கரிக்கு
சகல நலன்களையும் தரவேண்டி
எனது முதல்வனை ;
முத்துக்குமரனை வேண்டுவது மட்டுமே
நான் என் தமிழில் கூறும்
வேண்டுதலே தவிர……………
வாழ்த்துதலை!!
நான் உம்மை இன்று
வணங்கி நிற்கிறேன்
என் தமிழ்ப்பாலால்…..
சித்ர கலா . ப
No comments:
Post a Comment