Search This Blog

Thursday, November 14, 2013

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்

நம் நல்லுலகின் நவமணிகளாம் – நன் 
            நாணயத்தின் மணிகளாம் 
நித்திய கல்யாணிகளாம் – என்றும்
            நீங்கா நினைவலைகளாம்
நுண்ணிய அறிவுடையவர்களாம் – பற்பல
           நூலோர் வழி நடப்பவர்களாம்
நெஞ்சில் நிறை மறைகளாம் - இவண்
            நேருவின் நேசகர்களாம்
நையப் புடைப்பவர்களாம் – கண்
            நொடிப் பொழுதில் உறைபவர்களாம் – நல்
நோக்கமே மேலோங்குபவர்களாம் - அழகிய
            நௌவிபோல் நடைபயில்பவர்களாம் – அவரே
என் நெஞ்சில் என்றும் நெடுந்தொகையாய் வீற்றிருக்கும்
                        எனதன்பு அருமைச்செல்வங்கள் …………………..
வாழ்த்துதல் ஒன்றே வசீகரமானது !!!
வணங்கி ஏற்றல் ஒன்றே உன்வசமானது !!!
குழந்தைகள் தின நல்வாழ்த்துகள். J J J

Tuesday, November 5, 2013

9th Book back Study Materials - SA2 (2013-14)

To download the PDF files, 
click on the below link and go to "File--> Save"

இயல் 1 :

         

இயல் 2 :

           கிளி பேசுகிறது

இயல் 3 :

         

இயல் 4 :

           நல்ல உள்ளம்


இயல் 5 :

           நேர்மை


செய்யுள் பொருளுணர் திறன்


இலக்கணம் வினா & விடை:  
(குறிப்பு: அனைத்து இயல்களுக்கும் உரிய இலக்கண வினா&விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

       கோடிட்ட இடங்களை நிரப்புக - Questions - SA2 - 9th
       கோடிட்ட இடங்களை நிரப்புக - Answers - SA2 - 9th

       சான்று தருக - Questions - SA2 - 9th
       சான்று தருக - Answers - SA2 - 9th


       கூறியவாறு மாற்றுக - Questions - SA2 - 9th
       கூறியவாறு மாற்றுக - Answers- SA2 - 9th

Thursday, October 31, 2013

பாரதியின் பாடலில் தேசப்பற்றும் மொழிப்பற்றும்
வழங்கியவர் : அபிநயா { அருள்மிகு மீனாட்சி பள்ளி ஆலப்பாக்கம் }

பாட்டுக்கொருப் புலவன் பாரதி

வழங்கியவர் :  அபர்ணா... { அருள்மிகு மீனாட்சி பள்ளி.. ஆலப்பாக்கம்}

Sunday, September 8, 2013

நாட்டுப்புறப்பாடல்கள்

வழங்கியோர்:  வெங்கட வரதன், கெய்ன் அந்தோணி, ப்ரியதர்ஷன்.

Thursday, August 22, 2013

SA1 Model Question Papers - 10thTo download the PDF files, 
click on the below link and go to "File--> Save"

         SA1 - Model 1

         SA1 - Model 2

         SA1 - Model 3

         SA1 - Model 4

SA1 - Model Question Papers - 9thTo download the PDF files, 
click on the below link and go to "File--> Save"

            SA1 Model Question Paper - 1

            SA1 Model Question Paper - 2

            SA1 Model Question Paper 3

            SA1 Model Question Paper 4

Wednesday, April 24, 2013

வரதட்சணைபணம் பணமென்று பாரினிலே!

மணம் (மனம்) திருமணமென்று மாந்தர்கள்!

தினம் மணமகளை விலை பேசும்

மர உள்ளம் படைத்த மானிடர்களே!

வரன் தேடும் வணிக வண்டுகள் …….புகை நமக்குப் பகை
  புகை பிடிக்கும் பீமனே !
பீதியுடன் புகை பிடிப்பதை விட்டு விட்டால்
பிணமாகாமல் பிழைப்பாய்.
பீமன் என்ற பிரமிப்போடு
புகையைப் பற்ற வைத்தால்..
பிணி என்னும் சாக்காடு
சடுதியில் வந்தடையும்.
மூர்க்கனே! நீ என்ன தற்காலப் புகைவண்டியா?
தயங்காமல் தம்மடிக்க..
முதலே முடிவு என்பதை அறியாமல்
உனக்கே நீ கொள்ளி வைக்க
வாயில்  கொள்ளியை வைத்துப் புகைக்கிறாயோ ?
நீ புகைக்க புகைக்க உடலும்
புகைந்து கொண்டே இருக்கிறது…
பற்ற வைத்தால் புற்று உருவாகும்
என்பதை உடனே அறிந்து......
தற்காலப் புகைவண்டியைத் தயங்காமல் நிறுத்து…

Monday, March 4, 2013

மது??????

மது குடிக்கும் மாக்கனே !
மங்கை ஒன்று சொல்கிறேன் கேள் !
மதுவைத் தேடி நீ அலைந்தால் ..
மரணம் உன்னைத் தேடி விரைவில் வரும்.
மதுவை நீ மாதுளஞ் ஜுஸ் என்றாயோ ? – அது
மனத்தை அழிக்கும் மது பானமல்லவா…..
கள்ளச் சாராயமென்று கடைவீதியே நீ அலைந்தால்
உன் உள்ளச் சரிரத்தை உருக்குருக்கி
கள்ளனே, உனக்கு கல்லணைக் கட்ட
கடும் வெயிலிலும் காத்திருக்கிறான் வெட்டியான்…


Sunday, February 24, 2013

தமிழ் இசைக்கலை (Tamil Isaikkalai) - Std:10


தொகுத்து வழங்கியவர் : ஹரினி ஸ்ரீ ரேகா, 10th, Vani vidyala School, CBSE

நாலாயிர திவ்ய பிரபந்தம் - Std:10


தொகுத்து வழங்கியவர் : கார்த்திக் ஸ்ரீராம் 10th (Vani Vidyalaya School, CBSE)


கலித்தொகை (kaliththokai) - Std:10
தொகுத்து வழங்கியவர்  :   கார்த்திக் ஸ்ரீராம்  . ( vani vidyalaya ) பத்தாம் வகுப்பு


Saturday, February 23, 2013

காந்தியம் (Gandhiyam) Std:10
தொகுத்து வழங்கியவர்  :   ஸ்ரீதர்.. ( vani vidyalaya ) பத்தாம் வகுப்பு

பிரியா விடை - Std:10 Farewell
பிரியா விடை......... ( 2012 - 2013 ) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக....

Monday, February 11, 2013

காமராஜர் (Kamarajar) Std:9தொகுத்து வழங்கியவர் :   சாய் மதன் ( 9 ) VANI VIDYALAYA ( CBSE )

Sunday, February 10, 2013

காந்தியம் (Gandhiyam) Std:10தொகுத்து வழங்கியவர் :   ஸ்ரீதர்  ( 10 ) VANI VIDYALAYA ( CBSE )

தேவாரம் (Dhevaram) Std:10தொகுத்து வழங்கியவர் :  கார்த்திக் ஸ்ரீராம். ( 10 )  VANI VIDYALAYA ( CBSE )

அன்னை
அன்னை என்ற ஆனந்தத்திலே ...
 என்னை ஈன்ற ஏந்தலே !
 உன்னை என்றும் மறவேனே ...
தன்னை உலகுக்களித்த அன்னையே !

Saturday, February 9, 2013

சாதிக்கொடுமை

ஆதி முதல் அந்தம் வரை ……..

சாதி ..சாதி.. என்று சாற்றும் சாமானியர்களே…

நாதி கெட்ட நர பிண்டங்களுக்கு

பாதியில் வைத்த பெயர்தான்

சாதி என்னும் சாக்கடைப் பேயோ ??

பேய் என்னும் சாதி உயிர்க்கொல்லியை

பேணி வளர்க்காமல் - உள்ளத்தகழ

உயர்ந்தோர் பல உருவாக்க…

இளையோன் சமுதாயமே !

திரண்டிடுவீர் !சாடிடுவீர் !

தீண்டாமை என்னும்

சாதிக்கொடுமையை முறியடிக்க!!!!

சீறாப்புராணம் (Seerappuranam) 10th
தொகுத்து வழங்கியவர் :  ஷியாம் சுந்தர்.  ( 10 ) VANI VIDYALAYA ( CBSE )

தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் Std:10தொகுத்து வழங்கியவர் :  ஸ்ரீதர் மற்றும் அஜய். ( 10 ) VANI VIDYALAYA ( CBSE )

Wednesday, February 6, 2013

இசையின் வடிவங்கள்
முன்னுரை:
இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை

இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.
இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும் பரிணமித்தது.
ஸ்லோகன்:
இசை வடிவங்களில் முதலாவதாக ஸ்லோகன், அதாவது சுருதி ஸுக்தி மாலா என்பதைப் பற்றி நாம் இப்பொழுது காணலாம். இவை நான்மறை வேதங்களின் உண்மைப் பொருளை அறியாதவர்களுக்கும், அவரவர்களில் மதம் கொள்கை, கருத்துகளை சொல்பவர்களுக்கும், முழுமுதற்கடவுள் பரமனே என்ற உண்மைத் தத்துவத்தை உணர்த்த எழுந்ததே ஸ்லோகன்

பஜன் :
               இசையின் அடுத்த வடிவமாக எழுந்ததே  ‘பஜன்’ என்று சொல்லப்படும் பக்தி. யோக மகரிஷிகள் கடவுள் மேல் உள்ள பக்தியின் காரணமாக உச்சரித்த மந்திரத்தை மாந்தரும் உச்சரிக்கும் வகையில் இசையுடன் எழுந்த கூட்டு வழிபாட்டுப் பாடலே பஜன்.
இசையின் வடிவத்தில் ஏற்பட்ட ஒரு மாபெரும் புரட்சியே ‘கும்மி’ மற்றும் ‘கோலாட்டம்’ . பார்ப்பான் முதல் பாமரர் வரை கடவுளை வழிபட பயன்படும் இசைவடிவங்களே இவைகள்.  முதலாவதாக கும்மி
கும்மி:
               தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை, பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம், பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து.
கோலாட்டம் :
               கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது. வட மாநிலங்களில் இது "தாண்டியா" என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது.


கிராமிய இசை :
               கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். பட்டிதொட்டி முழுவதும் அன்று முதல் இன்று வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் கவின்மிகு இசை வடிவமே கிராமிய இசை. இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப்பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு.
இதுகாறும் கூறியவற்றுள் மேற்குறிப்பிட்ட அனைத்து இசை வடிவங்களுக்கும் இனி வரும் காலங்களில் இருக்கின்ற, இருக்கும் இசைகளுக்கெல்லாம் முன்னோடியாகவும், தாயாகவும், தமிழ் இசையாகவும் விளங்கிக் கொண்டிருக்கும் ஒரே இசை வடிவம் கருநாடக இசை.
கருநாடக இசை :
               கருநாடக இசை  தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான சைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
முடிவுரை:
               உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன்னே இசை பிறந்து விட்டது. 50000 வ‌ருட‌ ப‌ழ‌மை வாய்ந்த "க‌ற்கால‌ புல்லாங்குழ‌ல்"  சான்றாக திகழ்கிறது. மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இசையே கருவியாயிற்று, இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இசைக்கு அடிப்படையாக இருப்பது ஒலி, ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பது சமயங்கள் உணர்த்தும் உண்மை. எனவே இசையை இசைந்து கேளுங்கள் வாழ்வை இனிமையாக்குங்கள்.எது பண்பாடு ?? 10thதொகுத்து வழங்கியவர்   :    E. அக்க்ஷயா    (   VANI VIDYALAYA  .... CBSE )

Monday, January 28, 2013

மேரி கியூரி (Marie Curie) 6thதொகுத்து வழங்கியவர் :  ஷைனி வர்கீஷ் ( 6 ஆம் வகுப்பு ) VANI VIDYALAYA ( CBSE )  

என்னவள் ??என்னவள் எனதருகில் வந்து
எதிரும் புதிருமாய்ப் பிதற்ற
என்னவென புரியாமல்
“புரியும்படி கூறு” என்றேன்
“விதியை மதியால் வெல்ல முடியுமோ?”
-    என்று கூற ,
வியந்து அவளை உற்று நோக்கி
“முடியும்” என முற்றுப்புள்ளி வைத்தேன்.
யான் உடன் - அவளின் விவரமில்லா
வினாவிற்கு விடை தேட விடாமுயற்சியுடன்
எனது குழுவுடன்  பணியைத் தொடங்கினேன்
என்னவளோடு யானும் களத்தில்
இறங்கி எண்ணற்ற ஊக்கத்தை
இடைவிடாது மாணவர்களிடம் ஊட்டி
மனமகிழ்வோடு உடல்வலிமையை அமைத்து
களத்தில் இறங்கினேன்.
என்னவளும் விடாமுயற்சியை விடாத – எம்
மாணவச்செல்வங்களுடன் கைகோர்த்து
பவனி வர பாலகர்களின் பலே முயற்சி
பளிச்சென்று கண்ணுக்கெட்டியது.
இறங்கி வந்தது !!
அந்த இறைவனின் கருணை போல்
கணக்கிலடங்கா கனியமுதுகள்.
எமது மாணவச் செல்வங்களின்
அயராத உழைப்பின் பயனும் கிட்டியது.
“முயன்றால் வெற்றி உன்னைத் தேடி வரும்”
என்பதை மீண்டும் நிரூபித்தார்கள்….
ஆம்,
என்னே ஆனந்தம்!! .
இறுதியில் எனதருகில் என்னவள்(வெற்றி) !!
(வெற்றியே என்னவள்….)
இந்த அளவிலா ஆனந்தக் களிப்பை
எங்களுக்குஅளித்த எமது
மாணவச்செல்வங்களுக்கு நன்றிகள் பல….
நன்றி, நன்றி, நன்றி


Thursday, January 24, 2013

ஊரும் பேரும் (Oorum Perum) - Std:7
தொகுத்து வழங்கியவர் :   யாழினி.  ( 7 ஆம் வகுப்பு )  vani vidyalaya   ( CBSE )

Monday, January 21, 2013

SA2 Tamil Q.Paper (2011-12) - Std:9


To download the PDF files, 
click on the below link and go to "File--> Save"9th - SA2 - Tamil Q.Paper - (2011-12)

P.S: The Above Question paper is in Old Question paper model. So the marks allotted, Type of questions asked and the portions may vary. So please refer to the needful portions.

Friday, January 18, 2013

நல்ல மூலிகைகள் - Std:9

 


தொகுத்து வழங்கியவர்:  யாமினி ( 9 ஆம் வகுப்பு ) 
VANI VIDYALAYA SCHOOL ... CBSE
Sunday, January 13, 2013

தொல்லியல் (Archaeology) Std:10

 


தொகுத்து வழங்கியவர்:  கார்த்திக் ஸ்ரீராம்( 10 ஆம் வகுப்பு)  vani vidyaalaya...CBSC


ஆசிரியர்: சித்ரகலா.ப


Thursday, January 10, 2013

குற்றாலக் குறவஞ்சி (Vanavarkal kani) Std:6

              தொகுத்து வழங்கியவர் & ஆசிரியர்:

சித்ர கலா.ப (தமிழ் ஆசிரியர்)              


அந்தக்காலம் இந்தக்காலம்.(Antha Kaalam Intha Kaalam ) 6 std

                                    தொகுத்து வழங்கியவர் & ஆசிரியர்:
                                       சித்ர கலா.ப (தமிழ் ஆசிரியர்)


ஊரும் பேரும் (Oorum perum) STD: 6தொகுத்து வழங்கியவர் & ஆசிரியர்:சித்ர கலா.ப (தமிழ் ஆசிரியர்)

Sunday, January 6, 2013

திரிகடுகம் (Thirikatukam) STD:7தொகுத்து வழங்கியவர் : பெர்னைஸ் , 7-B, Vani vidyalaya, CBSE School

ஆசிரியர்:
சித்ர கலா.ப (தமிழ் ஆசிரியர்)

Edited by:
Rajesh.A

தமிழக விளையாட்டுகள் - Std:7

தொகுத்து வழங்கியவர்: L.தாரணி ( 7 B) vani vidyalaya.


சித்ர கலா.ப (தமிழ் ஆசிரியர்)


"செய்யும் தொழிலே தெய்வம்" Std:7

"செய்யும் தொழிலே தெய்வம்" என்னும் இப்பாடல் 7ஆம் வகுப்பு தமிழ் பாடப்பிரிவின் கீழ் அமைந்துள்ளது .
இப்பாடப்பகுதி  செய்யும் தொழிலின் சிறப்பு பற்றி விளம்புகிறது.
இதனை எனது மாணவர்களுக்காக எளிய இனிய வடிவில் சமர்ப்பிக்கிறேன்.

தொகுத்து வழங்கியவர் & ஆசிரியர்:
சித்ர கலா.ப (தமிழ் ஆசிரியர்)


Edited by:
Rajesh.A

Translate