Search This Blog

Saturday, December 22, 2012

10th SA2 - இலக்கணம் வினாக்கள் மற்றும் செய்யுள் பொருளுணர் திறன்

Wednesday, December 5, 2012

சிறுசேமிப்பு



தேசிய மாணவர் படை



தேசிய ஒருமைப்பாடு



காலம்



 ‘காலம் யாருக்காகவும் காத்திருக்காது‘ (Time waits for no man) என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘காலம் பொன்னானதுஎன்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இவற்றிலிருந்து என்ன தெரிகின்றது? காலம் என்பது வாழ்க்கையில் மிகவும் இன்றியாமையாதது. எந்தக்காலத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதனை அந்தக் காலத்திலேயே செய்ய வேண்டும். காலத்தை வீணாக்கக்கூடாது; அது பொன்போன்றது; காலத்தின் அருமை தெரிந்து பயன்படுத்த வேண்டும், அதனையும் உரிய பருவம் அறிந்து பயன்படுத்த வேண்டும். இவை போன்ற உண்மைகளைக் காலம் நமக்குக் கற்பிக்கின்றது.
எனவே, ஒவ்வொன்றையும் செய்வதற்கு உரிய காலம் என்று ஒன்று உண்டு. அவற்றை மனத்திற்கொண்டு செயல்பட்டால் நன்மை விளையும். இது இயற்கையின் தன்மை. நம் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வாயிலாகவும்; வரலாற்று நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் இவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.
விவசாயியும் காலமும்
                     நிலத்தைப் பயிரிடும் விவசாயிகள் (Agriculturalist), பருவகாலத்தை அடிப்படையாகக்     கொண்டே     பயிரிடுகின்றனர். உழுது, விதைவிதைத்து, பயிரிட்டு, அறுவடை செய்வது வரையிலும் பருவகாலங்களே அடிப்படையாக அமைந்துள்ளன. காலத்தைக் கருத்தில் கொண்டு செய்யும் விவசாயி, தான் நினைத்த பலனைப் பெறுகிறான்.
எறும்புகள்     கூட,     மழைக்காலத்தை     மனத்திற்கொண்டு, வேனிற்காலத்தில் உணவுகளைச் சேமிக்கின்றன. இவ்வாறு பலநிலைகளில் உயிர்வாழ்வன, காலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ப, செயல்பட்டுப் பயன்பெறுகின்றன. இயற்கையின் இந்த உண்மையினை,
ஞாலம் கருதினும் கைகூடும், காலம்
கருதி இடத்தால் செயின்
(குறள்: 484)
(ஞாலம் = உலகம், கருதினும் = கருதினாலும், செயின் = செய்தால்)
என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
    தான் செய்யவேண்டிய வினையைத் தகுந்த காலம் அறிந்து செய்யவேண்டும். அவ்வாறு செய்தால், உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும் என்கிறார் வள்ளுவர்.

எரிபொருள் சிக்கனம்




Tuesday, November 13, 2012

குழந்தைகள் தினவிழா


செல்லக் குழந்தைகளே


பூக்களின் ராஜா ரோஜா—நம்
மாமாவோ ரோஜாவின் ராஜா
ரோஜாவை ராஜா என்றும் 
தம் சட்டையிலே வைத்திருப்பார்- ஆனால்
நம்  நேரு மாமா உங்களை
சட்டைப்போட்டு மறைத்துக்கொள்ளும்
உள்ளத்தில் அல்லவா இதமாய்
இதயமாய் வைத்திருந்தார்--- அப்படிப்பட்ட
அந்த நேரு மாமாவின் செல்லக் குழந்தைகளாய்
சிறகை விரித்தாடும் சின்னஞ்சிறு வண்ணத்துப் பூச்சிகளாய்
மெல்ல வருடி இன்பம் தரும் தென்றல் காற்றாய்
இனிய யாழினிலிருந்து வரும் இன்ப கீதமாய்
கொஞ்சிப் பேசும் கொஞ்சும் புறாவாய்
அணி அணியாய் வீற்றிருக்கும் அழகிய சொரூபமாய்
கலைமகள் உறையும் கல்வியியே
கருத்தூன்றி கலைகள் பயிலும் பகலவனாய்
கள்ளமிலா உள்ளம் உடையோராய்
பண்பினில் பாரதியாய்
கனவு காண்பதில் கலாமாய்
உண்மையில் காந்தியாய்
கொள்கையில் காமராசராய்
தொண்டில் தெரசாவாய்
சாதி மதங்களைப் பாராத
பாரதத் தாயின் குழந்தைகளாய்
எம்மை உமது உள்ளத்தில்
உயர்வாய் உவந்து வைத்திருக்கும்
உள்ளக் கோயிலாய்
பண்டிட் மாமாவின் மனம் கமழும்
பன்னீர் புஷ்பங்களாய்
புவியினை ஆளப்போகும் பொற்பதங்களே……………
உம்மை நான் என்னவென்று போற்றுவேன்
தங்கங்களே!!  நாளைத் தலைவர்களே!!!சிறாரே!!!!!
உமக்குள் இருப்பது நானன்றோ – அதனால்
என் நா இங்கு நடனமாட மறுக்கிறது.
உமது நாவினில் நடனமாடுகின்றேனோ??????—யான் அறியேன்
என் எண்ணமெல்லாம் நிறைந்திருக்கும் நித்தியக்கல்யாணியே----------- நீவிர்!
கலைமகளின் பெயரைக் கொண்ட இக் கல்விக்கூடத்திலே
பல கலைகள் பயின்று , பலர் போற்றும்
பண்டிட் குழந்தைகளாய்
இக்குழலிப் பருவத்தில் குதூகலூட்ட
என் மனம் அடிக்கடி குழந்தாய் குழந்தாய் என குதூகலிக்கிறது
குதூகலிக்கும் என் மனம் போல்
உங்கள் மனமும் வாழ்வும் என்றும் குதூகலிக்க வாழ்த்தும்---------
உங்கள் அன்பு ஆசிரியை-----------
ப.சித்ர கலா

Monday, October 22, 2012

மாணவர்கள்


இவண்-------------------
              மண்ணின் மைந்தர்கள்
               மாண்புடையவர்கள்
              வருங்காலத் தூண்கள்
              நினைத்ததை முடிப்பவர்கள்
              விடா முயற்சியை மேற்கொள்பவர்கள்
              வெற்றி என்னும் சின்னத்தை ஏந்துபவர்கள்
              விருட்சத்தின் கனிகள்
              விசாலப் பார்வை கொண்டவர்கள்
              தூண்டுகோலின் சாரல்கள்
              சமுதாய நலன் கொண்டவர்கள்
              நட்பை நல்குபவர்கள்
              கிள்ளைத்தன முள்ளவர்கள்
              கேள்வியின் கீதங்கள்
              கல்வியின் கலங்கரை விளக்கங்கள்
              குருவைப் போற்றும் குருமணிகள்
              பள்ளியின் விடி வெள்ளிகள்
              பற்பல பயிலும் பட்டாம்பூச்சிகள்
              நண்டு பிடி கொண்டவர்கள்
              நனி நாகரிகர்கள்
              அறிவு புலம் மிக்கவர்கள்
              ஆன்றோரின் வழி நடப்பவர்கள்
              அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள்
              பகுத்தறியும் பகலவர்கள்
              கலை பல கற்பவர்கள்
              பள்ளியின் பரமபதங்கள்
              உலக மகான் வழி நடப்பவர்கள்
              உத்வேக சிந்தனையுடையவர்கள்
              சீருடையின் நாயகர்கள்
              சீர்திருத்தக் கருத்துக்களை முன்மொழிபவர்கள்
              வகுப்பறையின் வண்ண விளக்குகள்
              வள்ளுவன் வழி நடப்பவர்கள்
              துயர் துடைக்கும் தூமணிகள்
              துள்ளியெழும் புள்ளி மான்கள்
              பாசத்தின் பசப்பல்கள்
              பெரியோரைப் போற்றும் பொன்மணிகள்
              பெருமையின் சிகரங்கள்
              பேரறிவாளர்கள்   
              புத்துணர்ச்சிப் புதல்வர்கள்
              பூமகளின் பூக்கள்
              ஒழுக்கத்தை ஓம்புபவர்கள்
              ஓம்காரனின் தமிழை ஓதுபவர்கள்
               நாட்டின் நவரசங்கள்
            ------- அவன்
              அப்துல்கலாம் கனவுக்கோட்டையின் 
                            அணையா தீபமாகிய என் மாணவச்செல்வங்கள்---------
      

Sunday, October 21, 2012

அன்பு


ன்னையின் வடிவம் அன்பு
அறுமுகன் வடிவமும் அன்பு
ஆனந்த வடிவம் அன்பு
ஆனைமுக வடிவமும் அன்பு
இன்னல் களையும் அன்பு
இயேசுவின் வடிவமும் அன்பு
ஈகையின் வடிவம் அன்பு
ஈசனின் வடிவமும் அன்பு
உயர்ந்தோர் வடிவம் அன்பு
உலகளந்தவன் வடிவமும் அன்பு
ஊக்கத்தின் வடிவம் அன்பு
ஊழ்வினை அறுக்கும் அன்பு
ஏழ்மையின் வடிவம் அன்பு
ஏகலைவனின் வடிவமும் அன்பு
நல் எண்ணத்தின் வடிவம் அன்பு
நாமகள் வடிவமும் அன்பு
புத்தரின் வடிவம் அன்பு
பூலோக காந்தியின் வடிவமும் அன்பு
சிறுநகை வடிவம் அன்பு
சிறு மழலையின் வடிவமும் அன்பு
தென்றலின் வடிவம் அன்பு
தெரசாவின் வடிவமும் அன்பு
அமைதியின் வடிவம் அன்பு
என் அல்லாவின் வடிவமும் அன்பு
வாழ்வின் வடிவம் அன்பு
வள்ளலாரின் வடிவமும் அன்பு
என்னைக் கவர்ந்தவரின் வடிவம் அன்பு
என் நட்பின் வடிவமும் அன்பு
என் மழலையின் வடிவம் அன்பு
என் மயக்கத்தின் வடிவமும் அன்பு
ஊடலின் வடிவம் அன்பு
கூடலின் வடிவமும் அன்பு
கருணையின் வடிவம் அன்பு
காமராசரின் வடிவமும் அன்பு
என் எழுத்தின் வடிவம் அன்பு -- இதனை
ஏற்றுக் கொள்பவரின் மனபலமும் அன்பே……………….!




கல்வி


கல்வி என்னும் கற்கண்டை – நீ
கசடறக் கற்றால் –வாழ்வில்
வளம் வந்து சேர்வது உண்மையப்பா!
ஏட்டுக் கல்வியுடன் நின்றிராமல்
எதிர் நீச்சல் போடும்
வாழ்க்கைக் கல்வியும் மேற்கொண்டால்-உன்
வாழ்வு வண்ணச்சிறகடித்துப் பறப்பது உண்மையப்பா!
கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான் – நீ
பற்பல நூல்களைத் தெரிந்துக் கற்றால்- உன்
வாழ்வு இடர்ப்படாது என்பது உண்மையப்பா!
தாம் பெற்றக் கல்வியை தாம் மட்டும்
அனுபவிப்போம் என்றிராமல் – நீ
தரணி எங்கும் பரப்ப வழிவகை செய்தால்- உன்
வாழ்வு தளரா நடைபோடும் நனி உண்மையப்பா!
நல் எண்ணங்களுடன் நாமகளின் கல்வியைக் கற்றறிந்தால்
வறுமையும் வந்து வாட்டுமோ உன் வாழ்நாளில்?
கல்வி என்னும் பயிரை கனிவுடனே நீ கற்றால்
கனத்த இதயமும் கனியுமே வாழ்நாளில்!
கல்வி எனும் அருங்கடலைக் கடக்க நீ முற்பட்டால்-
வாழ்வில் கரடு முரடான பாதைகளும் பரிதவித்துப் போகுமடா!
எப்பிறப்பிலும் கூடவே வரும் கல்வியை
இன்முகத்துடன் விரும்பிக் கற்றால்
எத்துளியிலும் எண்ணங்கள்
எதார்த்தம் என்பது உண்மையப்பா
                        இக்கல்வி-----------
ஈன்றவளை இன்வயப்படுத்தும் கல்வி
கேளிர் பலர் போற்றும் கல்வி
கலைமகள் உறையுமிடம் கல்வி
கல்லாதானைக் கல்வி புகட்ட வருவதும் கல்வி
கற்றவன் வரம்பு மீறி போகாதிருக்கக்
கற்றுத்தருவதும் கல்வி
எழுத்தறிவித்த இறைவனிடம் இருப்பதும் கல்வி
ஆங்கோர் ஓர் ஏழையிடம் இருப்பதும் கல்வி
தேமதுரத் தமிழில் உலவுவதும் கல்வி
கல்வி என்ற விசாலக் கல்வியை
நாளும் படி நனி விரும்பிப் படி
படிப்படியாய் புகழ் வந்து சேரும் உன் வாழ்நாளில்!!!!!!!!!!!!


Friday, October 19, 2012

கும்மிப் பாடல்


ன்னனனானினம் தன்னானம் 
தன தான தன்னினம் தன்னானம் (2)
கும்மியடிப்பெண்ணே கும்மியடி
உடல் வளைந்து  நெளிந்துக் கும்மியடி
நாம் பயிலும் பள்ளியை வாழ்த்திப் பாடி
தலை வணங்கி நிமிர்ந்து கும்மியடி ( தன்ன)
நம் பள்ளியின் மேலாண்மைக் குழுவை
வாழ்த்தி வணங்கிக் கும்மியடி
அழகுற அமைந்த ஆசிரியர் அணியை
ஆடிப் பாடி கும்மியடி
ஆசிரியர் பணியே உயர்ந்தது என்று
உறுமிக் கொட்டிக் கும்மியடி
மாணவன் என்போன் மாண்புடையோன்அவன்
மங்கா ஜோதியாய் ஒளிர்பவன்-இத்தகைய
மாணவ மணிகளை மணியாய் உருவாக்கும்
மதிப்பு மிக்கப் பள்ளியை………………….
கும்மியடிப்பெண்ணே கும்மியடி
மணல் தெரிக்கத் தெரிக்கக் கும்மியடி….
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற
கோட்பாட்டை உணர்த்தும் பள்ளியை
அசைந்து அசைந்து கும்மியடி---- நல்ல
அழகுத் தேராய் கும்மியடி

கல்வி சிறந்த தமிழ்நாடு
கல்வித் தரத்தில் சிறந்த நம் பள்ளியை
பயின்று பணிந்து கும்மியடி---பட்டு
பதம் வைத்து வைத்துக் கும்மியடி
ஒழுக்கம் என்னும் கோட்பாட்டை
உயர் குடியாய்க் கொண்ட நம் பள்ளியை
கோலெடுத்துக் கும்மியடி
நல்ல குலவை இட்டுக் கும்மியடி
வள்ளுவன் தந்த குறளினைப் போற்றி
வாழும் நம் தமிழ்நாடு --- இவ்
வள்ளுவன் பெயரில் மன்றம் வைத்தஇப்பள்ளியை
வளை குலுங்கக் குலுங்கக் கும்மியடி
விளையாட்டுத் துறையில் மேம்பட்டும்- பல
வீர்ர்களை உருவாக்கும் இப்பள்ளியை
மேனி குலுங்கக் கும்மியடி—மனம்
குளிரக் குளிரக் கும்மியடி
கலை வளர்க்கும் பள்ளிக்கூடம் – நல்ல
கருணை நிறைந்த பள்ளிக்கூடம்
கந்தனருள் பெற்ற பள்ளிக்கூடம் – நம்
கலைமகள் வாழும் பள்ளிக்கூடம்
மெய்யப்பன் பெயரில் அமைந்த பள்ளிக்கூடம் – பற்பல
மெஞ்ஞானம் வளர்க்கும் பள்ளிக்கூடம்
மேக வண்ணக் கூந்தலாட
கோல் சுழட்டிச் சுழட்டிக் கும்மியடி(தன்ன)
   

Translate