Search This Blog

Tuesday, November 16, 2021

|I TERM - TAMIL - TENTH -CBSE|MCQ-2021|NOVEMBER-DECEMBER|

Monday, August 2, 2021

ABIMAANAM - AUTHOR. N.DEIVA SIGAMANI

AMMA MANASU - AUTHOR . N.DEIVA SIKGAMANI

பத்தாம் வகுப்பு - இயல் – 3 –இலக்கணப் பயிற்சி,செய்யுள் பயிற்சி வினாக்கள் & உரைநடை, செய்யுள் முக்கிய வினாக்கள்.

பத்தாம் வகுப்பு - இயல் – 3 –இலக்கணப் பயிற்சி,செய்யுள் பயிற்சி வினாக்கள் & உரைநடை, செய்யுள் முக்கிய வினாக்கள். I. கோடிட்ட இடங்களை நிரப்புக: 1. ஒரு சொல் முற்றுப் பெற்றால் அது ______ எனப்படும் 2. அடித்தான், நெய்கிறான், நிறைந்தது என்பது _____ வினைமுற்று. 3. செய்பவனை மட்டும் காட்டுவது. காலத்தை வெளிப்படையாகக் காட்டாது _____ 4. காலம் வெளிப்படையாகக் காட்டி நிற்பது ____ 5. பொன் என்னும் பொருளை உடையவன் _____ 6. ஒரு எச்ச வினை பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்தால் _____ எனப்படும் 7. ஓடிய என்ற எச்ச வினை மாணவன் என்ற பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது ____ 8. பெயரெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டும். 9. காலத்தை வெளிப்படையாகக் காட்டாத பெயரெச்சம் _____ 10. ஓர் எதிர்மறைப் பெயரெச்சத்தின் கடைசியில் ‘அ’ கெட்டு (மறைந்து) ‘ஆ’ என்ற இறுதி ஓசையுடன் முடிவது ___ 11. ஓர் எச்சவினை வினைச்சொல்லைக் கொண்டு முடிந்து பொருள் தருவது____ 12. காலத்தை வெளிப்படையாகக் காட்டி வினைக்காக எஞ்சி நிற்பது ____ 13. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை_____ 14. மெல்ல நடந்தான் என்பது ___ வினையெச்சம். 15. தொக்கி(மறைந்து) வந்து பொருள் தருவது_______ 16. ஒரே சொல் அடுத்தடுத்து வந்து, பிரித்தால் பொருள் தருமாயின் அது ________ எனப்படும். 17. அன்றே அன்றே – என்பது அசைநிலை பொருளில் வந்த ____ 18. வந்தேன் வந்தேன் என்பது ______ 19. போ போ போ – என்பது ____ பொருளில் வந்த அடுக்குத்தொடர். 20. அடி அடி கொல் கொல் கொல் – என்பது ___ பொருளில் வந்த அடுக்குத்தொடர். 21. வருக வருக வாழ்க, வாழ்க வாழ்க – என்பன ____ பொருளில் வந்த அடுக்குத்தொடர். 22. கெட்டேன் கெட்டேன் கெட்டேன் , வாழேன்,வாழேன் – என்பது ___பொருள் சார்ந்த அடுக்குத்தொடர். 23. பாம்பு பாம்பு பாம்பு – என்பது ____ முறை அடுக்கி வந்த அடுக்குத்தொடர். 24. அசைநிலை, பொருள்நிலை இசைநிறைக் கொரு சொல் இரண்டு, மூன்று, நான்கு எல்லைமுறை அடுக்கும் – இது ___ தொடர். 25. ஒரே சொல் அடுத்தடுத்து வந்து, பிரித்தால் பொருள் தராமல், வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி நிற்பது _____ 26. _______ இரட்டில் பிரிந்திசையா. 27. பெயர், வினைச்சொற்களைச் சார்ந்து, அவற்றின் குணத்தை உணர்த்தி வரும் சொற்கள் _____ 28. சாலச்சிறந்தது (மிகவும்) - சால உறுபொருள் (மிகுந்த பொருள்) - உறு தவச்சிறிது ( மிகவும் சிறிது) - தவ நனி பேசினான் (மிகுதியாகப் பேசினான்) - நனி இடும்பைகூர் வயிறு (துன்பம் மிக்க வயிறு) - கூர் கழி உவகை (மிகுந்த மகிழ்ச்சி) – கழி இவையனைத்தும் ஓரு குணம் தழுவிய ____ 29. சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய சொற்கள் அனைத்தும் ஒரே பொருளை உணர்த்தி நிற்பதால் ________உரிச்சொல் 30. ஒரே சொல் பல பொருள்களை உணர்த்த பயன்படுவது 31. கடி என்னும் சொல் கடிநகர்-காவல்நகர், கடிமணம்-நல்லமணம் என பல குணம் தழுவி வருவது ________சொல் 32. மாநெறி 33. மாமழை மாநகர் மாமலை – இவைகள் ஒரே சொல் பல பொருளை உணர்த்தி வரும் _____. 34. அணையா(த) விளக்கு, ஒன்றா(த)ப் புகழ் – எவ்வகைப் பெயர்? 35. ஒன்றா(த)ப் புகழ் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயராக்குக. 36. செய்து முடித்தாள் – இலக்கணக்குறிப்பு தருக. 37. படித்த ஓடிய விளையாடிய - வினையெச்சமாக்குக. 38. படித்தான் ஓடினான் விளையாடினான் – இலக்கணக் குறிப்பு தருக. 39. சொல் ஆழ் வா – பெயரெச்சமாக்குக. 40. சொல்லி ஆழ்ந்து வந்து - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சமாக்குக. 41. முதல் வேற்றுமை வேறு பெயர் ____ 42. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய ஆறு வேற்றுமை உருபுகளும் சொற்களுக்கு இடையில் மறையாமல் வருவது _____ 43. திருக்குறளைக் கற்றான், பாலை அருந்தினான் என்பன ____ தொடர். 44. அத்தைக்கு மகள்,பள்ளிக்குச் சென்றான்,கூலிக்கு வேலை – முதலியன ____ தொடர். 45. மாமன் வீடு – ஆறாம் வேற்றுமைத் தொகா நிலைத்தொடராக்குக. 46. ஹரி வந்தான் – எவ்வகைத் தொடர்? 47. அழுதது குழந்தை – இதில் எச்சம் எது? 48. மற்றொன்று – இதில் இடைசொல் எது? 49. பிரியா வந்தாள் – விளித்தொடராக்குக? 50. விளி என்றால் ___ என்பது பொருள். 51. ஓர் எழுவாய்த்தொடர் _____ _____ _____ என்ற பொருளில் அமையும். 52. தொகை நிலைத்தொடர்கள் _____மறைந்து வரும் தொடர்களாகும். 53. உருபுகள் வெளிப்படையாக வரும் தொடர் ___ 54. தொகை நிலைத்தொடர்கள் மொத்தம் ___ 55. தொகா நிலைத்தொடர்கள் மொத்தம் ___ 56. வேற்றுமையின் வகைகள் ___ 57. இரட்டைச் சொல்லாக வருவது ____ 58. கல கல என்பது ___ சொல். 59. வாழ்க வாழ்க, பட பட, குறு குறு – இதில் அடுக்குத்தொடர் எது? 60. மற்றுப்பிற என்பதில் “மற்று” என்பது __- 61. உறுமீன் என்பது ___ 62. உடைந்த நாற்காலி என்பது ___ தொடர். 63. இரண்டாம் வேற்றுமைக்குரிய உருபு___ 64. ஐந்தாம் வேற்றுமைக்குரிய உருபு __ 65. வந்த கண்ணன், வந்தான் ராமன்,யுவா வா – இவற்றில் விளித்தொடர் எது? 66. ஏழாம் வேற்றுமைக்குரிய உருபு ___ 67. உண்டான் சாத்தன்,உண்ட சாத்தன், உண்டு சென்றான், சாத்தா வா! சாத்தன் வந்தான். - இத்தொடர்களை வகைப்படுத்துக. 68. குடத்தை வனைந்தான், வாளால் வெட்டினான், புலவர்க்குக் கொடுத்தான், மலையின் இறங்கினான், சாத்தனது கால், சாத்தனிடம் உள்ளது. – இவைகள் எத்தொடர் வகைகள் என வரிசைப்படுத்துக. உருபுகளைக் குறிப்பிடுக. 69. தொடர் ___ வகைப்படும் 70. தொகை நிலைத்தொடர், தொகா நிலைத்தொடர் என்பது ____ வகைகள். 71. பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் வருவது _____தொடர். 72. முற்றுப்பெறாத வினைச்சொல்,பெயர்சொல்லைக் கொண்டு முடிவது _____ எனப்படும். 73. வினை முற்றுடன் ஒரு பெயர்ச்சொல் வருவது _____ தொடர் ஆகும். 74. பெயர்ச்சொல் ___ வகைப்படும். 75. முற்றுப்பெறாத வினைச்சொல் மற்றொரு வினையைக் கொண்டு முடிவது _____ 76. _______ உருபுகள் பயின்று வரும் தொடர்கள் வேற்றுமைத்தொடர்கள் ஆகும். 77. இடைச்சொல்லை தொடர்ந்து பெயரோ வினையோ வருவது _______தொடர் 78. விளியுடன் வினைச்சொல் வருவது _______ ஆகும். 79. உரிச்சொல்லைத் தொடர்ந்து பெயரோ வினையோ வருவது ______தொடர் ஆகும். 80. ஒன்றிற்கு மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது _______ பெயரெச்சங்கள் எனப்படும் . 81. கேட்க வேண்டிய பாடல் , சொல்லத் தக்க செய்தி .- இவைகள் ___ பெயரெச்சங்கள் 82. வேற்றுமை தொகா நிலைத்தொடர்கள் ___ வகைப்படும். 83. கதிரவா வா ! என்பதை எழுவாய்த்தொடராக மாற்றுக. 84. ______ வேற்றுமைகளுக்கு உருபு இல்லை. 85. படித்த இளைஞன், பார்த்த ஊர்,முறிந்த கால், சுவைத்த இனிப்பு, முடிந்த தேர்தல் - கொடுக்கப்பட்ட எச்சங்கள் எவ்வகை? வேறுபாடு கண்டறிந்து வகைப்படுத்துக. 86. பாரதிதாசன் பாடினார், பாரதி வாழ்க! – எவ்வகைத் தொடர்? 87. காந்தி தலைவர்,இவர் பெரியார் – இவைகள் எத்தொடர்? எப்பொருளில் அமைத்த தொடர்? 88. அவன் யார்? மலர் யாது? – எவ்வகைப்பொருளில் வந்த தொடர்? 89. கம்பனே, தம்பீ,நண்பீ,அம்மா,முருகா,கந்தா, செல்வா – எத்தொடரின் அடக்கம்? 90. வாழ்ந்த மனை, வாழ்கிற மனை, வாழும் மனை – எச்சங்களைக் காலங்களோடு வகைப்படுத்துக. 91. பாடத்தைப் படித்தான்,கத்தியால் குத்தினான்,மகளுக்குக் கொடுத்தான்,ஏணியில் இறங்கினான், நண்பனது வீடு, வாங்கண் நிலா- தொகை நிலைத்தொடராக்குக. 92. எச்சத்தொடர் ___ வகைப்படும். 93. முற்றுத் தொடர் ___ வகைப்படும். 94. ஐயோ ஐயோ; இழப்பு இழப்பு இழப்பு என்பன ___ பொருளில் வரும் ___ தொடர். 95. நல்குமே நல்குமே, பாடுகோ பாடுகோ ___ பொருளில் வந்த ___ அடுக்குத்தொடர். 96. சென்று வந்தான் – எதிர்கால வினையெச்சமாக மாற்றுக. 97. சிரிக்கின்ற நிகில் – இறந்தகாலமாக மாற்றுக. 98. பேசிய அஞ்சனா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக்குக. 99. சிபி நந்தன் வருவானா? – எழுவாய் வினையாக மாற்றுக. 100. நான் யார்? – எவ்வகைத்தொடர்? II. விடையளிக்க. ( செய்யுள் வினாக்கள்)(காசிக்காண்டம்,மலைபடுகடாம்) 1. ஆற்றுப்படுத்துதல் என்றால் என்ன? 2. முகமன் சொற்களை எழுதுக 3. காசிக்காண்டம் – குறிப்பு வரைக 4. மலைபடுகடாமில் குறிப்பிடப்படும் தினைச்சோற்று விருந்தினைக் குறிப்பிடுக. 5. ஆற்றுப்படை என்றால் என்ன? 6. “மன்னனின் கூத்தர்கள்” என்று கூறுங்கள்! என யார் யாரிடம் கூறியது? ஏன்? 7. மலைப்படுகடாம் – நூல் குறிப்பு வரைக. 8. காசிக்காண்டத்தின் ஆசிரியர் குறிப்பு வரைக. 9. உங்கள் வீட்டில் கடைப்பிடிக்கும் விருந்தோம்பல் முகமன் சொற்களை எழுதுக. 10. உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு நீங்கள் விருந்தளிக்கும் விருந்தோம்பல் முறையை விளக்குக. III. விடையளிக்க. (உரைநடை வினாக்கள்) (விருந்து போற்றுதும்) 1. விருந்தோம்பல் என்றால் என்ன? 2. இன்மையிலும் விருந்தோம்பலை விளக்குக. 3. பெரியபுராணத்தில் காணப்படும் விருந்தோம்பல் நிகழ்வை விளக்குக. 4. விருந்தோம்பல் குறித்து புறநானூறு குறிப்பிடும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக. 5. விருந்தோம்பலின் அடிப்படைப் பண்புகள் யாவை? 6. விருந்தோம்பலில் காணப்படும் அற உணர்வுக் கருத்துகளை எழுதுக. 7. தமிழர் மரபும் – விருந்தோம்பலும் குறித்த செய்திகளைக் குறிப்பிடுக. 8. விருந்தினரை எதிர்கொண்ட தன்மையாகவும் அவர்களின் பழக்கவழக்கமாகப் பின்பற்றிய முறையினை விளக்குக. 9. அல்லில் ஆயினும் – தனித்து உண்ணாமை – விளக்குக 10. விருந்தோம்பல் – அன்று – இன்று – குறிப்பிடுக. IV. செய்யுள் பொருளுணர்திறன்(காசிக்காண்டம், மலைபடுகடாம்) 1. ஆற்றுப்படுத்துதல் என்பது ___ என்பதாகும். 2. தினை என்பதன் பொருள் – 3. கிழவிர் போல – பொருள் தருக. 4. நும் இல்போல் – பொருள் தருக 5. கொற்கைத் துறைமுகம் அமைந்துள்ள இடம் ___ 6. கானவர்கள் செய்து வைத்த உணவுகள் _____ 7. லிங்கபுராணம், நைடதம், கூர்மபுராணம் என்பன ___ எழுதிய நூல்கள். 8. காசிக்காண்டம் எதன் பெருமையை எடுத்து இயம்புகிறது? 9. தன் அருகுற – என்பதன் பொருள்? 10. காசிக்காண்டத்தில் நமக்குப் பாடப்பகுதியாக வந்த பகுதி ___ 11. அதிவீர்ராம பாண்டியருக்கு வழங்கப்பட்டப் பட்டப்பெயர் ___ 12. கடினப்பாதை வழியில் இருக்கும் மரமாகக் கூத்தன் கூறியது? 13. எல்லாச் சமூகங்களிலும் போற்றப்படும் பண்பாடுகளுள் முதன்மையானது? 14. விருந்தினராக ஒருவர் வந்தால் முதலில் கூறும் முகமன் சொல் எது? 15. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்கள் மொத்தம் ___ 16. காசிக்காண்டத்தில் கூறப்பட்ட விருந்தோம்பல் பாடலுக்கு ஒப்பாகக் காட்டப்பட்ட நூல் ___ 17. வருக! – இலக்கணக் குறிப்பு தருக. 18. மகிழ்வன செப்பல் – பொருள் தருக. 19. நறுந்தொகையின் வேறுபெயர்___ 20. காசிக்காண்டத்தில் குறிப்பிடப்படும் பாடுபொருள் ? 21. அசைஇ – இலக்கணக் குறிப்பு தருக. 22. பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்’ – என்று கூறியவன்? 23. வயிரியம்,வேவை,பொம்மல் – பொருள் தருக. 24. மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் ___ 25. சேட் புலம்பு அகல – பொருள் தருக. 26. மான விறல்வேள் – யார்? 27. குரூஉக்குறை, பரூஉக்குறை – பொருள் & இலக்கணக்குறிப்பு தருக. 28. ஆரிப்படுகர் – யார்? 29. சிலம்பு, இறடி – பொருள் தருக. 30. எரியும் நெருப்பைப்போல் ஒளிரும் பூங்கொத்துகளைக் கொண்ட மரம் ___ 31. மானமும் வெற்றியும் உடைய மன்னன்? 32. கலைத்திறன்களை நிகழ்த்திக் காட்டி மக்களையும் மன்னனையும் மகிழ்வித்தவர்கள் ____ ? 33. பகைவரைப் பெறாமல் போர் செய்யும் வலிய முயற்சியை உடையவன்? 34. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பன ___ நூல்கள். 35. மலைபடுகடாம் __ நூல்களுள் ஒன்று. 36. மலைபடுகடாமின் வேறு பெயர்___ 37. மலைபடுகடாமின் ஆசிரியர்? 38. மலைபடுகடாம் ஆசிரியரின் பெயர்? 39. வளம் நிறைந்த புது வருவாயினை உடைய ஊராகக் கூத்தன் கூறியது? 40. ஒப்புடன் முகமலர்ந்தே – இப்பாடல் வரிகல் இடம்பெற்ற நூல்? 41. ஏழுதல் முன் மகிழ்வன செப்பல் – இப்பாடல் வரி இடம்பெற்ற நூல்? 42. வியத்தல், நோக்கல், செப்பல், இருத்தல் – இலக்கனக் குறிப்பு தருக. 43. நன்மொழி – இலக்கணக் குறிப்பு தருக. 44. உரைத்தல், இருத்தல் – எதிர்மறைத் தொழிற்பெயராக்குக. 45. இவ்வொன்பான் – பொருள்? 46. விருந்தோம்பலில் குறிப்பிடப்படும் எட்டாவது முகமன் சொல்லை எழுதுக. 47. துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் முதலிய பாடுபொருள்களைக் கூறும் நூல்? 48. மலைபடுகடாமில் இடம் பெற்ற மொத்தப் பாடல் அடிகள்? 49. பொழிந்த, மலைந்து – இலக்கணக் குறிப்பு தருக. 50. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துவது ___ V. திருக்குறள் (இயல் – 3) 1 – 10 திருக்குறள்கள். 1. நாள்தொறும் நாடி _____ மன்னவன் நாள்தொறும் ___ கெடும். 2. ___ எல்லாம் அரிதே பெரியாரைப் _____ தமராக் கொளல் 3. இடிப்பாரை இல்லாத ஏமரா ___ கெடுப்பார் ___ கெடும். 4. காமம் வெகுளி மயக்கம் ___ நாமம் _____ நோய். 5. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் _____ அறிவிலா தார். 6. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் ___ _____ காண்பது அறிவு. 7. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ___ ___ ஓம்பப் படும். 8. வேலொடு நின்றான் ____ றதுபோலும் _____ நின்றான் இரவு. 9. பல்லார் பகைகொளலிற் ___ தீமைத்தே நல்லார் ____ விடல். 10. ஒழுக்கத்தின் ___ மேன்மை இழுக்கத்தின் ____ எய்தாப் பழி. VI. “பசித்தவருக்கு உணவிடுதல் ஓர் அறச்செயல்” என்ற கூற்று விளக்கும் கரிசல் கதையை நும் பாடப்பகுதி கொண்டு நிறுவுக.

ஆண்டு இறுதித் தேர்வு – (2021)இலக்கணப் பயிற்சி வினாக்கள் இயல் – 2,தொகை நிலைத் தொடர்

ஆண்டு இறுதித் தேர்வு – (2021)இலக்கணப் பயிற்சி வினாக்கள் இயல் – 2,தொகை நிலைத் தொடர்  ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.  சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.  தொடர்களைத் 1. தொகைநிலைத் தொடர் - Elliptical Expressions, 2. தொகாநிலைத் தொடர் - Unlliptical Expressions என இரண்டாகப் பகுக்கலாம்  சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை, முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’ வரும். (மறைந்து வரும்) அவ்வாறு வருதலைத் ‘தொகை’ என்பர்  தொக்கு – தொகை – பொருள்? மறைந்து வருதல்  தொகை’ ஆறு வகைப்படும். அவை, 1. வேற்றுமைத் தொகை 2. வினைத் தொகை 3. பண்புத் தொகை 4. உவமைத் தொகை 5. உம்மைத் தொகை 6. அன்மொழித் தொகை  வேற்றுமை உருபு மறைந்து வந்தால் அது வேற்றுமைத் தொகை எனப்படும்.  ‘நூல் படித்தான்’ என்னும் தொடர்,____ இதில் மறைந்து வந்துள்ள உருபு __ஐ- 2-ம் வே.உருபு  நூலைப் படித்தான்’என்பது 2-ம் வே.உருபு வெளிப்படை  ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு  தலை வணங்கினான்’ என்பது மூன்றாம் வே.தொகை  ‘தலையால் வணங்கினான்’மூன்றாம் வேற்றுமை தொகா நிலைத் தொடர்(ஆல்)  மூன்றாம் வேற்றுமை உருபுகள் __ ஆல்,ஆன்,ஒடு,ஓடு  மங்கை மகள்’ என்பது’ – நான்காம் வே. தொகை  மங்கைக்கு மகள் என்பது ___ நான் காம் வே.விரி(தொகா)  நான்காம் வேற்றுமை உருபு ___கு  ‘நாடு நீங்கினான்’ என்பது – 5-ம் வே,தொகை  ‘நாட்டின் நீங்கினான் –ஐந்தாம் வே.தொகா நிலைத்தொடர்(இல்,இன்)  ஐந்தாம் வேற்றுமை உருபுகள் –இல்,இன்  வேலன் சட்டை என்பது __ ஆறாம் வே.தொகை  வேலனது சட்டை என்பது __ ஆறாம் வே.தொகா நிலைத் தொடர்  ஆறாம் வேற்றுமை உருபு __ அது  மரக்கிளி என்பது ___ ஏழாம் வே.தொகை  மரத்தின் கண் கிளி என்பது __ ஏழாம் வே.தொகா நிலை.தொடர்  ஏழாம் வேற்றுமை உருபு __ கண்  முதல் வேற்றுமையின் வேறுபெயர் __ எழுவாய் வே.  எட்டாம் வேற்றுமையின் வேறுபெயர் __-விளி வேற்றுமை(அழைத்தல்)  வேற்றுமை என்பது ____ பொருளை வேறுபடுத்த வருவதாகும்.பெயர்ச்சொல்லின்  முதல் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை ____ தொடர்கள் ஆகும். தொகா நிலைத்தொடர்கள்  வளைக்கை என்பது ___ வளையை உடைய கை(2-ம் வே,உருபும் பயன் உடன் தொ.தொகை  தொகை நிலைத்தொடரில் வராத இரு வேற்றுமைகள் ___ எழுவாய்(முதல்) எட்டாம்  காலம் காட்டும் இடைநிலை மறைந்து வருவது வினைத்தொகை. இவ்வாறு, காலம் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.  ‘குடி நீர்’சேர்மதி, ஓங்கு நீர், கொய்மலர்,திருந்துமொழி என்னும் தொடர். - வினைத்தொகை  குடித்த நீர், குடிக்கும் நீர், குடிக்கின்ற நீர் என முக்காலத்திற்கும் ஏற்பப் பொருள் தந்து காலம் காட்டும் இடை நிலைகள் மறைந்து வினை தொக்கி நிற்பது ___ வினைத்தொகை  அலைகடல், பாய்புலி, உண்கலம், ஆடுகொடி, ஊறுகாய்.. வினைத்தொகை  ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை  நிறத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புப்பெயர்கள் பசுமை,நீலம்,வெண்மை  குணத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புச் சொற்கள்: நன்மை, தீமை,கொடுமை,பொறாமை.  சுவையைக்குறிக்கும் சொற்கள்: காரம்,புளிப்பு,கசப்பு  வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்: சதுரம்,வட்டம்,நாற்கரம்  பண்புப்பெயர்கள், நிறம்,சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும்.  பண்பை விளக்கும் உருபு மறைந்து (தொக்கு) வருவது பண்புத் தொகை.  செந்தாமரை’ என்பது ‘செம்மையாகிய தாமரை’ என விரியும். இடையில், ‘மை’ என்னும் பண்புப் பெயர் விகுதியும் ‘ஆகிய’,ஆன என்னும் பண்பு உருபும் மறைந்து வருவது பண்புத்தொகை  வெண்ணிலவு, இன்சுவை, வட்டக்கல்,உவர் நீர்,முத்தமிழ்,வட்டப்பாறை, தொன்மக்கள், பழந்தமிழ். - பண்புத்தொகை  உவமானம் உவமேயங்களுக்கு இடையில் உவம உருபு மறைந்து வருவது __ உவமைத்தொகை  தேன்மொழி’ என்பது உவமைத்தொகை  ‘தேன்போன்ற மொழி’ என விரிவது ___ விரி உவமை  உவமானம் உவமேயங்களுக்கு இடையில், ‘போலும்’புரைய,அன்ன,இன்ன,மான,கடுப்ப போன்ற _____மறைந்து வருவது உவமைத்தொகை. உவம உருபுகள்  ‘மலர்ப்பாதம்’ ‘கயல்விழி’ போல்வன ____ உவமைத்தொகை  உவமை வேறு உவமேயம் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்று ஒற்றுமைப்படுத்த வருவது ___உருவகம் ____________________________________________________________________________ ஆண்டு இறுதித் தேர்வு – 2021 இலக்கணம் – இயல் – 2 தொடர்ச்சி-2  உருவகத்தில் முதலில் நிற்கும் சொல் ____ இரண்டாவது நிற்கும் சொல் __ உவமேயம்,உவமை  உவமைத்தொகையில் முதலில் நிற்கும் சொல் ___ இரண்டாவது நிற்கும் சொல் ___ இரண்டிற்கும் இடையில் மறைந்து வருவது __  உவமைத்தொகையின் வேறு பெயர்கள் __ உவமை, உவமேயம்…போன்ற  புலிக் கொற்றன், மழைக்கை, துடியிடை, கிளிமொழி, கற்பக வள்ளல், மதிமுகம்", மலரடி, கமலக்கண், கனிவாய்,தேன்மொழி, மான்விழி,வாள் மீசை, கயல்விழி ___ இவற்றில் உவமைச்சொற்கள், உவமேயச் சொற்களைச் சுட்டிக் காட்டுக.  உவமை ___ வகைப்படும்.அவை ___, ___  தொகை உவமை, உவமைத்தொகையில் ___ உருபு மறைந்து வரும்.  விரிஉவமையில் ___ வெளிப்படையாக வரும்.  உவமைத்தொகை, வினை,பயன், மெய், உரு என்ற பொருளில் வரும்.  மலர்முகம்,மலர்க்கை,தாய்மொழி,கயல்விழி,அன்னைத்தமிழ், முத்துப்பல், உவமைத்தொகை - உருவகம்  மலர்முகம் - முகமலர்  மலர்க்கை - கைமலர்  தாய்மொழி - மொழித்தாய்  கயல்விழி - விழிகயல்  அன்னைத்தமிழ் - தமிழன்னை  மலர்விழி - விழிமலர் .  இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று கூறுவது  ஒரு பெண்ணின் முகத்தை பார்த்து. மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுவது ___.  தார் வேந்தன், நீர்த்தடம்,போர்க்குகன்  ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை  நிறத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புப்பெயர்கள் பசுமை,நீலம்,வெண்மை  குணத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புச் சொற்கள்: நன்மை, தீமை,கொடுமை,பொறாமை.  சுவையைக்குறிக்கும் சொற்கள்: காரம்,புளிப்பு,கசப்பு  வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்: சதுரம்,வட்டம்,நாற்கரம்  பண்புப்பெயர்கள், நிறம்,சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றை  இருபெயரொட்டுப் பண்புத்தொகை - இது பண்புத் தொகையின் ஒரு வகையாகும்.  மூவேந்தர் = மூன்று + வேந்தர், சேவடி", "செங்கண்", "நெடுங்கடல்", "மூதூர்", "தண்தயிர்", "பைந்தொடி", "வெண்சிலை", "நாற்படை"  இரு பெயரொட்டுப் பண்புத்தொகை இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருக்கும்.  இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் முதல்சொல் சிறப்பு பெயர்ச்சொல்லாக இருக்கும்.  இருபெயரொட்டுப் பன்புத்தொகையில் இரண்டாவது சொல் பொதுப் பெயர்ச்சொல்லாக இருக்கும்.  பனைமரம் என்னும் சொல்லில் பனை என்பது சிறப்புப்பெயர். மரம் என்பது பொதுப்பெயர். சிறப்புப் பெயர், பொதுப்பெயர் இரண்டுக்கும் இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்  செண்பகப்பூ: செண்பகம் சிறப்புப் பெயர். பூ பொதுப்பெயர்  பச்சைப் பட்டு – இருபெயரொட்டு பண்புத் தொகை  வண்ணத்துப்பூச்சி, மின்மினிப்பூச்சி.என்பன __  சாரைப்பாம்பு, தமிழ்மொழி, கோரைப்புல், தைத்திங்கள், அவியுணவு, தவத்தொழில், அரிமான், அந்திமாலை, உரைக்கல், அறவினை, மாமரம், மடித்தலம், பாரதநாடு, வேற்படை, கற்புக்கடம், மல்லிகை மலர், செருக்களம், அவைக்களம்,  பால் குடித்தான் - இரண்டாம் வேற்றுமைத் தொகை  பால் குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை  தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை  பொன் வளையல் - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை  என் மகள் - நான்காம் வேற்றுமைத் தொகை  குழந்தைப் பால் - நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை  ஊர் நீங்கினான் - ஐந்தாம் வேற்றுமைத் தொகை  வாய்ப்பாட்டு - ஐந்தாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன்தொக்க தொகை  நண்பன் வீடு - ஆறாம் வேற்றுமைத் தொகை  மலைக் கோயில் - ஏழாம் வேற்றுமை  தண்ணீர்ப் பாம்பு - ஏழாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன் தொக்க தொகை  ஆறாம் வேற்றுமை, உருபு தொக்க தொகையாக மட்டுமே வரும்; உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாக வருவதில்லை.  அன்மொழி என்பது அல் + மொழி எனப் பிரியும். அல் என்பதற்கு அல்லாத என்பது பொருள்.  தொகைநிலைத் தொடரிலே இடம் பெறாத (அல்லாத) சொற்களைச் சேர்த்துப் பொருள் கொள்வதால் இத்தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பட்டது.  தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பட்டது.  அன்மொழித்தொகை என்பது, வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத் தொடர்மொழிகளுக்கு உரிய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிறசொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தும்.  பூங்குழல் வந்தாள், பொற்றொடி வந்தாள், "ஆயிழை வந்தாள், சுடுகதிர் எழுந்தான்,தேன்மொழி நகைத்தாள், இன்மொழி பேசினான் – என்பது ___  எண்ணல்,எடுத்தல், முகத்தல்,நீட்டல் எனும் அளவுப்பெயர்களைத் தொடர்ந்து வருவது எண்ணும்மை.  இரவு பகல்’ என்பது ‘இரவும் பகலும்’ என விரியும். இடையில் ‘உம்’ என்னும் இடைச் சொல் மறைந்து வருவது, உம்மைத் தொகை எனப்படும்.  கபிலபரணர்’, ‘உற்றார் உறவினர்’  நாழி ஆழாக்கு, சாண்,அரை, ஆடல்,பாடல் – எண்ணும்மையாக்குக.  கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.  கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்

Friday, July 30, 2021

TENTH STD - GRAMMAR - PAYIRCHI VINAAKAL 2021 - 2022

சின்மயா வித்யாலயா நடுவண் மேனிலைப்பள்ளி,செ- 92 TERM – 1 TAMIL – பயிற்சித்தாள் – 4 – இலக்கணம் – 2021 – 2022 1. ________-அளபெடை செய்யுளின் இசையளவைக் கூட்டப் பயன்படும். 2. ___________ அளபெடை-சொல்லின் (வினையெச்சம்) அளவை கூட்ட பயன்படும். 3. ____________- அளபெடை இசையின் அளவை மேலும் கூட்டப் பயன்படும். 4. அளபெடையில் ஒரு நெடில் தனக்கு இனமான______ உடன்சேர்த்துக் கொள்ளும். 5. அளபெடையின்போது குறிலாக இருந்தால், அது நெடிலாக மாறித் தன்னினத்தை அளபெடுத்துக் கொள்ளும் அளபெடை _____ 6. ஓர் ஒற்றெழுத்தும் தானே அளபெடுத்துக் (இரட்டித்துக்) கொள்ளும் அளபெடை ____. 7. செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர் ___ 8. ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை, ஆஅதும் என்னு மவர். – இக்குறளில் பயின்று வந்துள்ள அளபெடை ____ 9. உரனசைஇ உள்ளந் துணையாகச் சென்றார்; வரனசைஇ நின்று முளேன்.". - இக்குறளில் பயின்று வந்துள்ள அளபெடை ____ 10. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.". - இக்குறளில் பயின்று வந்துள்ள அளபெடை 11. உயிரளபெடையில் அளபெடுக்கும்போது, ஆ -வுக்கு 'அ'-வும்,ஈ - க்கு 'இ' -யும், ஊ- வுக்கு ____ ஏ க்கு ______ ஐ- க்கு ________, ஓ- வுக்கு 'ஒ' -வும், ஔ- க்கு ____ ம் அளபெடுக்கும். 12. " எங்ங் கிறைவனுளன் என்பாய் மனனேயான், எங்ங் கெனத்திரிவா ரில்." – இதில் பயின்று வந்துள்ள அளபெடை ____ 13. இலங்ங்கு வெண்பிறைசூ டீசனடி யார்க்குக் கலங்ங்கு நெஞ்சமிலை காண்." – இதில் பயின்று வந்துள்ள ஒற்றளபெடை வகை _______ 14. செய்யுளில் ஓசை குறையுமிடத்து மெய் எழுத்துகளும் அளபெடுக்கின்றன. இதனை _____ என்பர். 15. ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ன் ஆகிய பத்து மெய்யெழுத்துகளும் _______ இரட்டித்து வருவதன்மூலம் ஒற்று அளபெடுக்கின்றன. 16. வல்லினமான க், ச், ட், த், ப், ற், ஆகிய ஆறுமெய்களும், இடையினத்தைச் சார்ந்த ர், ழ் மெய்களும் ________ 17. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு” (திருக்குறள் 544) – இக்குறள்பாவில் இடம்பெற்ற அளபெடை ___ 18. செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதை நிறைவிக்கவேண்டிப் பொருத்தமான நெட்டெழுத்து தன் மாத்திரையைவிட நீண்டொலிக்குமாயின் அது __________ அல்லது __________ எனப்படுகிறது. 19. மீன் விற்பவர் மீஇ..ன் எனவும் மரக்கறி விற்பவர் மரக்கறீஇ, மரவள்ளிக் கிழங்கு விற்பவர் மரவள்ளிக் கிழங்ங்கு எனவும் பஞ்சு விற்பவர் பஞ்ஞ்சு எனவும் அழுத்திக் குரல்தருவதும் _____ , ______ அளபெடையைச் சார்ந்தவையே. 20. அளபெடை உயிரளபெடை, ஒற்றளபெடை என இரு உயிர் அல்லது உயிர்மெய் நெடிலுக்கருகில் அதன் இனமான உயிர்க்குறில் அளபெடுத்தல் உயிரளபெடையாகும். 21. ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. 22. சொற்பொருள் அடிப்படையில் மொழி/சொல் _____ வகைப்படும். 23. ஒரு சொல் தனித்து வந்து ஒரு பொருளைத் தந்தால் அது _____ எனப்படும். 24. ________ பல தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது தொடர்மொழி எனப்படும் 25. அறம் செய விரும்பு, ஆறுவது சினம் – இவைகள் ___ மொழிகள். 26. ஒரு சொல்லே தனிமொழியாக நின்று ஒரு பொருளையும், தொடர்மொழியாகப் பிரிந்து நின்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருளையும் தந்தால் அது _____ எனப்படும். 27. தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக ஒரு சொல் வருவது ____ எனப்படும். 28. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண் , இடம் , காலம் , பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது _____ எனப்படும் . 29. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ________ ஆகும். 30. விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் ______ ஆகும் . 31. விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர் _______ ஆகும் 34. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும் . காலம் காட்டும் . மூவிடத்திற்கும் உரியது - இது ____ பெயர். 32. வந்தவர் அவர்தான் .பொறுத்தார் பூமி ஆள்வார் – இலக்கணக் குறிப்பு தருக. 33. கெடுதல் - சுடுதல் - இதனை முதனிலைத் தொழில் பெயராகவும் முதனிலைத் திரிந்த தொழிற்பெயராகவும் மாற்றுக. 34. தட்டு , உரை , அடி - இச் சொற்கள் முறையே தட்டுதல் , உரைத்தல் , அடித்தல் என்று பொருள்படும் போது முதனிலைத் தொழிற்பெயர்கள் ஆகின்றன . 35. நடவாமை , கொல்லாமை என்பன ___ பெயர்கள். 36. 'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக . 37. பூ , தை , தீ , ஆ என்பன ____ மொழிகள். 38. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லை பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது ________ எனப்படும் . 39. ‘தொகை’ _______ வகைப்படும். தொகா __ வகைப்படும். 40. சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை, முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’ வரும். (மறைந்து வரும்) அவ்வாறு வருதலைத் _____ என்பர் 40. ‘மரக்கிளி’ என்பது ____ தொகை நிலைத்தொடர் 41. ‘உற்றார் உறவினர்’ என்பது ___ தொகை. 42. கண்ணா ! வா! - இது, ______ தொடர். 43. ‘சிரித்த குழந்தை’ - இதில், ‘சிரித்த’ என்னும் எச்சவினை ‘குழந்தை’ என்னும் பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்ததால் இது, ______ தொடர். 44. கடி நகர்’ - இத்தொடரில், ‘கடி’ என்பது_______. அதைத் தொடர்ந்து ‘நகர்’ என்னும் சொல் வந்து கடி நகர் என்று வந்தால் அது ______. 45. ‘வாழ்க! வாழ்க!’ என ஒரே சொல், பலமுறை அடுக்கி வருவது, அடுக்குத் தொடர். 46. ‘இளங்கோ வந்தார்’ - இதில், இளங்கோ என்னும் எழுவாயைத் தொடர்ந்து ‘வந்தார்’ என்னும் பயனிலை வந்துள்ளது. இவ்வாறு, வரும் தொடர் _____ 47.‘தேன்மொழி’ என்பது ____ 48. வெண்ணிலவு என்பது _____ 49. உண்கலம் என்பது _____ 50. தொடர்களைத் _____ தொடர் _____ தொடர் என இரண்டாகப் பகுக்கலாம். 51. ‘பொற்றொடி வந்தாள்’ என்பது 52. ‘கண்டு மகிழ்ந்தான்’ என்பது ____ 53. வேற்கண் என்பது ____ 54. ஆடுபாம்பு என்பது ____ 55. செஞ்ஞாயிறு என்பது __- 56. உயிர்மெய் என்பது ___ 57. கரந்த என்றால் _____ என்பது பொருள். 58. பொன்னும் மணியும் என்பது ___ 59. தெய்வ வணக்கம் என்பது ___ 60. முத்தமிழ் என்பது ___ 61. தலைவர் அப்துல்கலாம் என்பது ___ 62. ‘ஆகிய’ என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ ஒரு பொருள் குறித்து வருவது ______. 63. _____என்பது வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியனவாகும். 64. நண்பன் வீடு என்பது ___ 65. தாழ்குழல் பேசினாள் என்பது ____ 66. அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய உருபு மறைந்து நிற்பது ______ எனப்படும். 67. எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கும் ____ பெயர்கள் ஆகும். 68. ஆல், ஆன், ஒடு, ஓடு என்பன ___ வேற்றுமை உருபுகள். 69. மலைக் கோயில் என்பன ___- 70. வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடரும் தொடர் ______ 71. அளபெடுத்தல் என்பது ___ ஒலித்தல் என்பது பொருள். 72. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது __ பெயர். 73. ஒரே வினையடி ___ விகுதிகளையும் ஏற்கும். 74. வினையடி என்பது ___ நிற்கும் சொல்.அதனை ___ என்றும் கூறுவர். 75. தொழிற்பெயர் ____ காட்டாது. 76. எதிர்மறைப் பொருளில் வரும் பெயர் ___ 77. செய்யக் கூடிய செயல், பார்க்க வேண்டிய இடம் என்பன ___ பெயரெச்சங்கள். 78. களிமண்ணால் செய்தார் என்பது ___ 79. இடைச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ___ 80. உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ___ 81. ஓடிக் களைத்தனர், தேடி அலைந்தனர் என்பன ___ 82. பெண்ணே செல்! குழந்தையே கேள்! என்பன ____ 83. வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக அமையும் தொடர் ___ 84. ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வருவது ___ 85. எழுவாயுடன் பெயர்,வினா,வினை ஆகிய பயனிலைகள் தொடர்வது ___ 86. விஜய் நடிகர், சினேகன் கவிஞர் – இவைகள் ___ தொடர். 87. தேர்வு நடக்குமா? மழை வருமா? கொரோனா ஒழியுமா? – இவைகள் ___ தொடர்கள். 88. நண்பா அழாதே!, நாராயணா பேசாதே, சுவாதி கவனி, முருகா வா – என்பன ___ தொடர்கள். 89. முற்றுப்பெறாத வினை பெயரைக் கொண்டு முடிவது _____ முற்றுப்பெறாத வினை வினையைக் கொண்டு முடிவது ____ 90. சிரித்தனர் மாணவர்கள், கத்தின ஆடுகள் – இவைகள் __- 91. சாலச்சிறந்தது, நனி மகிழ்ந்தேன்,தவச்சிறிது என்பன ___ 92. வாழ்க்கை என்னும் சொல்லுக்குரிய விகுதி? 93. வெண் பொங்கல் என்பது __ 94. தொடுதிரை, மோர்ப்பானை – இலக்கணக் குறிப்பு தருக. 95. வெண்டைக்காய், மோர்க்குழம்பு – இலக்கணக் குறிப்பு தருக. 96. செங்காந்தள்,இன்மொழி,மலர்க்கை – இலக்கணக் குறிப்பு தருக. 97. பெரிய மீசை சிரித்தார், கரும்பு தின்றான் – இலக்கணக் குறிப்பு தருக. 98. அன்பும் அறனும்,பண்பும் பயனும் – இலக்கணக் குறிப்பு தருக. 99. பேசும் கிளி – இறந்தகாலப் பெயரெச்சமாக்குக. 100. உண்ணா தோழி – இலக்கணக் குறிப்பு தருக. 101. ஒழுக்கம் ___ தரலான் ஒழுக்கம் உயிரினும் ___ படும். 102. ___ நின்றான் இடுவென்றது போலும் ___ நின்றான் இரவு. 103. அரியவற்றுள் எல்லாம் அரிதே ___ பேணித் ___ கொளல். 104. இடிப்பாரை இல்லா ___ மன்னன் ____ இலானுங் கெடும். 105. ஒழுக்கத்தின் ___ மேன்மை இழுக்கத்தின் எய்துவர் ___ பழி. 106. நாள்தொறும் நாடி ___ மன்னவன் நாள்தொறும் __ கெடும். 107. பல்லார் ___ பத்தடுத்த தீமைத்தே ____ தொடர்கை விடல். 108. காமம் ____ ____ இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் 109. எப்பொருள் எத்தன்மைத்தாயினும்___ _____ காண்ப தறிவு. 110. உலகத்தோ டொட்ட ___ _____ கல்லார் அறிவிலா தார் ஆக்கம்: சித்ரகலா கலைச்செல்வன்.

பத்தாம் வகுப்பு - தமிழ் - 2021 - 2022

Term – 1 இயல் – 1,2&3 - தமிழ் – 2021 -2022 செய்யுள் பொருளுணர் திறன் – பயிற்சித்தாள் – 4 1. காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல் __ 2. காசிக்காண்டத்தின் ஆசிரியர் __ 3. காசிக்காண்டத்தில் ____ பகுதியிலுள்ள 17 வது பாடப்பகுதியாக வந்துள்ளது. 4. முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் __ 5. கொற்கைத் துறைமுகம் அமைந்தது ___ நாடு. 6. அதிவீரராம பாண்டியர் ___ ___ திகழ்ந்தவர். 7. வெற்றி வேற்கை __ எனவும் வழங்கப்படுகிறது. 8. அதிவீரராம பாண்டியர் குறிப்பிடும் விருந்தோம்பல் முறை மொத்தம் __ 9. அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்களுள் இரண்டு ___ ___ 10. பண்டையத் தமிழர்கள் பண்பிலும் ___ சிறந்து விளங்கினர். 11. சிவந்தப் பூக்களைக் கொண்ட மரம் __ 12. மலைபடுகடாம் ___ நூல்களுள் ஒன்று. 13. மலைபடுகடாமில் மலையை ___ அதில் எழும் ஓசைகளை அதன் ____ உருவகம் செய்யப்பட்டுள்ளது. 14. கூத்தன் மற்றொரு கூத்தனை ஆற்றுப்படுத்துவது ____ 15. பாக்கம் என்பது ஒரு ___ 16. பெருங்கௌசிகனாரின் ஊர் ____ 17. மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் ___ 18. மலைபடுகடாமில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___ 19. மலைபடுகடாமின் வேறு பெயர் ___ 20. கலைஞர்களுக்கு விருந்தும் பரிசும் கொடுத்து மன்னர்கள் போற்றியதைக் காட்சிப்படுத்துவது ____ விருந்து. 21. ஆழிக்கு இணையாகப் பேசப்படுவது ___ 22. கடல் மூன்று ___ தருகிறது. 23. ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது ____ அணியாகும். 24. இரட்டுற மொழிதல் ___ என்று அழைக்கப்படும். 25. தமிழழகனாரின் இயற்பெயர் ___ 26. இரட்டுற மொழிதல் பாடல் _____ என்னும் தொகுப்பு நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 27. சந்தக்கவிமணி என்று போற்றப்படுபவர் ___ 28. ஐம்பெருங்காப்பியங்கள் தமிழின் ____ உள்ளன. 29. குமரிக்கண்டத்தில் அரசாண்ட மொழி __ 30. பாண்டிய மன்னனின் மகள் __ 31. சாகும்போது தமிழ்ப் படித்துச் சாக வேண்டும் என்றவர் ____ 32. அன்னை மொழியே பாடல் ___ என்னும் தொகுப்பு நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 33. கடும்பு,இறடி,பொம்மல் – பொருள் தருக 34. அல்கி,அல்சேஎந்து,வயிரியம் – பொருள் தருக. 35. மலைபடுகடாம் பாடலில் இடம்பெற்ற மரங்கள்? 36. பரிசு பெற்றக் கூத்தன் பரிசு பெறப்போகும் கூத்தனை ஆற்றுப்படுத்துவது ___ 37. பாவலரேறு எழுதிய இதழ்கள்? 38. துரை மாணிக்கம் என்பது யாருடைய இயற்பெயர்? 39. தென்னவன் என்பது யாரைக் குறிக்கிறது? 40. இன்னறும் பாப்பத்தே எண்தொகையே என்பதில் பாப்பத்தே,எண்தொகை என்பன ____ ____ நூல்கள். 41. பழுத்த நரையின் பட்டறிவு ஆனவள்? 42. அன்னை மொழியானவள் _____ சிரிப்பும் ஆனவள். 43. _____ மெய்ப்பொருளுரை தமிழுக்குக் கருவூலம் என்று போற்றப்படுகிறது.இதனை எழுதியவர் ___ 44. பாவலரேறு நூல்களுள் இரண்டு? 45. முகமன் சொற்கள் மொத்தம் ___ 46. காசிக்காண்டத்தில் அமைந்துள்ள பாடுபொருள்? 47. அன்னைமொழியே என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்? 48. எந்தமிழ் நா – இச்சொல்லைப் பிரித்து எழுதுக. 49. முன்னும் நினைவால் முடி தாழ வாழ்த்துவமே என்று கூறியவர்? 50. நற்கணக்கே – என்பதில் சுட்டப்படும் நூல்கள் மொத்தம்? 51. மன்னும் சிலம்பே!மணிமேகலை வடிவே! எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை? 52. பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்? 53. பெருஞ்சித்திரனாரின் ‘முந்துற்றோம் யாண்டும்’,தமிழ்த்தாய் வாழ்த்து’ என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பெற்றன? 54. செந்தாமரை – இலக்கணக் குறிப்பும் பிரித்து எழுதுக. 55. உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்? 56. கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்துகிறது? 57. முத்தையும் அமிழ்தையும் தருவதாக ஆசிரியர் குறிப்பிடுவது யாது? 58. தமிழழகனார் எத்தனைச் சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்? 59. முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம்பெற்றத் தொகுப்பு நூல்? 60. மயலுறுத்து,சுவல்,பெண்டீர் – பொருள் தருக. 61. உறுதுயர், நன்மொழி – இலக்கணக் குறிப்பு தருக. 62. முல்லைப்பாட்டு __ அடிகளைக் கொண்டது. 63. திருக்குறளின் பெருமைக்குரியவள்? 64. பழமைக்கும் பழமையாய் தோன்றிய நறுங்கனி? 65. முத்தமிழ், நாற்கரம் - இலக்கணக் குறிப்பு வரைக. 66. முல்லைப்பாட்டின் ஆசிரியர்? 67. முல்லைப்பாட்டு ___ நூல்களுள் ஒன்று. 68. முல்லைப்பாட்டில் இடம்பெற்ற முதல் பொருள்கள்? 69. முதுபெண்டீர் விரிச்சி கேட்க சென்ற ஊர்? 70. இளங்கன்று எதனால் கட்டப்பட்டிருந்தது? 71. இரு கைகளையும் கட்டிக்கொண்டு குளிர் தாங்க முடியாமல் நின்றவர்? 72. முதுபெண்கள் இறைவனை வழிபடக் கொண்டு சென்றப் பொருள்கள்? 73. துன்பத்தைத் தந்த பொழுதாக முல்லைப்பாட்டில் குறிப்பிடுவது? 74. வலம்புரிச்சங்கை கையில் ஏந்தியவர்? 75. நீர் பெற்றதும் விண்ணுக்கும் மண்னுக்குமாக உயர்ந்து காணப்பட்டவர்? 76. யார், யாருக்கு, எதற்காக நீர் வார்த்துக் கொடுக்கப்பட்டது? 77. பசலைக் கன்று – பொருள் தருக. 78. மேகம் எதனையெல்லாம் சுற்றி வந்து மழை பொழிந்தது? 79. முல்லைப்பாட்டில் இடம்பெற்ற பாடுபொருள்? 80. நனந்தலை உலகம், மாஅல் – பொருள் தருக 81. வளைஇ,தடக்கை,மாஅல,அருங்கடி – இலக்கணக் குறிப்பு தருக 82. நறுவீ, அலரி,அலமரல் – பொருள் தருக. 83. நன்மொழி,பெருமுது,கைதொழுது,உறுதுயர் – இலக்கணக் குறிப்பு தருக. 84. தூஉய்,நேமி,கோடு,சுவல் – பொருள் தருக. 85. முல்லை நிலப்பூக்கள்? 86. முல்லிய நில மரங்கள்? 87. ‘நின் தலைவன் பகைவரை வென்று திரைப்பொருளோடு வருவது உறுதி’ – என்று கூறியவர்? 88. பரூஉக்,குரூஉக்கண் – பொருள் மற்றும் இலக்கணக் குறிப்பு தருக. 89. ஊர் ஊராககச் சென்று தம் கலைத்திறமைகளை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்தவர்கள்? 90. ஆசிரியர் தம் நூலுக்குக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டி கவிதைப்பேழையாகத் தந்த நூலின் பெயர் ? 91. உற்றார் உறவினர்களோடு எதனை அணிந்து கொள்ளுமாறு கூத்தன் வலியுறுத்தினான்? 92. கடினப்பாதை வழி என்று கூத்தன் கூறியது? 93. மானமும் வெற்றியும் உடைய மன்னன்? 94. நும்இல் போல் நில்லாது புக்கு – இவ்வடியில் உள்ள நும்இல் – பொருள் தருக. 95. விருந்தோம்பும் நெறியை வரிசைப்படுத்திக் காட்டும் நூல்? 96. நோக்கல்,வியத்தல்,இருத்தல்,உரைத்தல்,எழுதல்,செப்பல்,வழங்கல் – இலக்கணக் குறிப்பும் பொருளும் தருக. 97. வருக!, வருக! வருக!! – இலக்கணக் குறிப்பு தருக. 98. இந்தியா, சுதேசமித்திரன் ஆசிரியர்? 99. யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு எழுதப்படும் கவிதை வடிவம்? 100. பாரதியாருக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள்?

Translate