Search This Blog

Tuesday, October 25, 2016

பாதை ஷெல்டர்( ஒன்றாக)

பிறப்பால் அனைவரும் சமம்; பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை.

அனாதையாய்ப் பிறந்து பார் ! 

தாய் தந்தையர் அருமை புரியும் ! 
அடிமையாய் இருந்து பார் ! 
சுதந்திரத்தின் சொர்க்கம் புரியும் !
கடுமையாய் உழைத்துப் பார் ! 
வெற்றியின் மகிமை புரியும் ! 
அட மனிதனே ! 
இன்னுமா புரியவில்லை ? 
மனித நேயத்தோடு வாழ்ந்து பார் ! 
மனிதப் பிறப்பின் மகத்துவம் புரியும் ! 
ஒரு முறையாவது மனித நேயத்துடன் 
வாழ்ந்து பார் ! ஆம்! இது ஒரு கவிஞனின் ஆதங்கக் குரல்... உலகில் பிறந்த எந்த ஒரு ஜீவராசிகளும் அனாதைகள் அல்ல, அனாதையாய் ஆக்கப்பட்டவர்கள்.இருப்பினும், மனிதர்களாய் மனித உள்ளத்தோடு மக்கள் நடமாடும் வரை எவரும் அனாதைகள் அல்ல..என்பதை  நிரூபிக்கும் பொருட்டு எமது சின்மயா பள்ளியின் சார்பாய் மாணவக் குழுக்கள், ஆசிரியப் பெருமக்கள் இணைய புதிய சக்தி எம்முள் புகுந்ததுபோல் சேவை செய்யப்புறப்பட்டோம்..அதற்கான அடிப்படைத் தேவைகளை ஆரய்ந்தோம்..அந்த ஆய்வின் பயன் எனது மாணவச் செல்வங்கள் அள்ளி இறைத்தார்கள் அவர்களால் முடிந்த உதவித்தொகை மற்றும் பொருள்களை...அள்ளி வாரினோம்..அழகாக வரிசையமைத்தோம்...முதன் முதலாக எனது கைகள் ஆசிரமத்தில் உள்ள மாணவச் செல்வங்களுக்காக கையேந்தியது.எனக்கு இது புது அனுபவமாக இருந்தாலும் புத்துணர்வை ஏற்படுத்தியது.இத்தாக்கத்தை எனக்கு ஏற்படுத்தியவன் என் புதல்வனே...முயன்றோம், பொருள்கள் பல பெற்றோம்.நிம்மதிப் பெருமூச்சுடன் ஆசிரமத்திலுள்ள மாணவர்களைச் சந்தித்தோம்.மனம் கணத்தது அன்று...இன்று  இலகுவானதை உணர்ந்தேன்..ஏனென்றால் யார் யாருக்கோ வாரி இறைத்த இந்த கைகள் இன்று தகுதியறிந்து வந்து சேர்ந்ததை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு...மாணவர்களோடு அலாவளாவினோம்.பிரிய மனமின்றி பள்ளி திரும்பினோம்... நாள்: 23.10.2016... பாதை ஆசிரமம்.. வளசரவாக்கம்..சென்னை.

Saturday, October 8, 2016

காமராசர் 2016-17

பார்த்தா...சின்மயா வித்யாலயா,விருகம்பாக்கம்

தமிழ் உரை நூல் 2016-17

அனைவருக்கும் வணக்கம்.. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான தமிழ் உரை நூல் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை எங்களிடம் உள்ளது.தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444454351.

And also avaible ayyanar's CBSE SYLLABUS & QUESTION PAPERS CLASS ONE TO EIGHT. SA1&SA2, MODEL QUESTION PAPERS AND REVISION..FA1 TO FA4...

Monday, September 5, 2016

நாங்களும் - நீங்களும்.

 நாங்களும்  -   நீங்களும்.

ஆசிரியரே,
       நாங்கள் காகிதம் என்றால்
              நீங்கள் எழுதுகோல்
              நாங்கள் உடம்பு என்றால்
              நீங்கள் உயிர்….
              நாங்கள் பிம்பம் என்றால்
              நீங்கள் கண்ணாடி
              நாங்கள் ஆடை என்றால்
              நீங்கள் நூல்
              நாங்கள் பூ என்றால்
              நீங்கள் மணம்
              நாங்கள் கோவில் என்றால்
              நீங்கள் தெய்வம்
              நாங்கள் முடிவு என்றால்
              நீங்கள் துவக்கம்
              நாங்கள் கவிதை என்றால்
              நீங்கள் உவமை
              நாங்கள் வேர் என்றால்
              நீங்கள் விழுது
              நாங்கள் நண்பர்கள் என்றால்
              நீங்கள் நட்பு
              நாங்கள் அலை என்றால்
              நீங்கள் கடல்
              நாங்கள் நட்சத்திரங்கள் என்றால்
              நீங்கள் வானம்
              நாங்கள் விழி என்றால 
              நீங்கள் ஒளி
              நாங்கள் காற்றாடி என்றால்
              நீங்கள் காற்று
             
மொத்தத்தில் எங்களுக்கு இயற்கை தந்தவரம்! அப்படிப்பட்ட நீங்களும் நாங்களும் இணைந்து வியத்தகு இந்தியாவை உருவாக்குவோம்!!!!!

ஆசிரியர் தினம் -2016

ஆசிரியர் தினம் - 2016
கவிதை ஒரு கவிதை – அது
என்னால் எழுதிய சிறு கவிதை
தூக்கத்தில் வருவது கனவல்ல…..
துள்ளி எழ நினைப்பதே கனவு!!!!
நம்மை விட்டுப் பிரிந்த கனவை
நம்முடன் தொடர்ந்து வர
நினைப்பவர் நம் ஆசிரியர்
நினைக்க நினைக்க வருவது கவிதை
நிலை பெறச் செய்வதும் கவிதை
 நிலைத்தப் பின் வருவது சரிதம்
சரிதமே ஒருவரின் சகாப்தம்!!!!!
சரிதம் என்பது வெறும் எழுத்தல்ல – அது
வாழ்க்கை வரலாற்றின் தொடக்கம் – அவ்
வாழ்க்கை வரலாற்றை உருவாக்கும்
நாயகரே நம் ஆசிரியர்.!!!!
என்னவளே!!
    உம் பிரமிக்க வைக்கும் பணியைக் கண்டு
    நாங்கள் வியக்கிறோம்…உங்களால்
    எங்கள் வாழ்க்கை மலர்கிறது ஒரு பூவைப்போல்
    எங்களை மலர வைக்கும் பூவே நீங்களன்றோ!!!!
    உம்மை நாங்கள் எம்முடன் சூட – உங்களிடம்
    அனுமதி பெற……
    நாங்கள் மாணவர்களாய் வந்துள்ளோம்
    வந்தவர்களுக்கு கல்வி என்னும் பூவை - மேலும்
    அள்ளித் தர விரும்புகிறோம்…
    வாசமுள்ள மல்லியை
    வாசமில்லா நாருடன் சேர்த்து
    நாருக்கும் வாசத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுபோல்
    கல்வியோடு கரையையும் சேர, வழிகாட்டும்
    கலங்கரை விளக்கமாய் இருந்தும்
    கல்வி மழையாய் இருந்தும்
    கல்வி என்னும் அமுதத்தை வழங்கும் ஆசிரியர்களுக்கு
    என் கவிதை சமர்ப்பணம்….
    வாழ்க ஆசிரியர்…!!!!!...வளர்க அவர்கள் பணி!!!!!
   
Wednesday, August 31, 2016

பிறந்த நாள் வாழ்த்து மடல் - 2016

பிறந்த நாள் வாழ்த்து மடல் - 2016
என் கண்ணன் பிறந்த நாள்.
காவியம் படைத்த நாள்
கண்ணீருக்கு விடையளித்த நாள்
காவலனாய்க் கருதிய நாள்
      என் மனதில் ஆயிரமாயிரம் நினைவலைகள் கரை புரண்டோடியது, என் அழகிய மகனுக்குக் கவிதை தீட்ட வேண்டுமென்று.இதனை உரைக்கவும் செய்தேன் என் பதியிடம்.பேசா மடந்தையாய் இருக்கும் என் பதியோ வாய் திறந்து மொழிந்த மொழிகள்…. கவிதைக்குக் கவிதையா?
      எத்தனை நிதர்சனமான உண்மை.அதையே என் முதல் அடியாக எடுத்தேன்.என் முதல்வனுக்கு முத்தானத் தமிழால் தமிழிசை இசைக்கப் புறப்பட்டேன்.இதற்குப் புறப்படவும் வேண்டுமா? என்ற அங்கலாய்ப்பின் ஆழ்மனம்.ஆங்காங்கே, ஆய்ந்தறிந்த அருந்தமிழ் மொழியை அள்ளி அரசனுக்குச் சூட்டு என்றது.
விடியலாய் வந்தது.
விழி எழச் செய்தது.
தங்க மகன் அன்புக்கு
தார்மீகப் பொறுப்பேற்றது.
சிங்க நடைக் குருளைக்கு
சீரிளமைப் பாட முற்பட்டது.
வார்த்தை ஜாலம் அவனை வசை பாடும் என்பதால்,வண்ணத்தமிழ் கொண்டு வகைப்படுத்திப் பூஜித்தேன்.அகிலத்தை ஆள வேண்டுமென்று விரும்பியே அகிலன் என்று பெயர் வைத்தனர் எம் பெற்றோர்.அதற்கு இணங்க அன்னை – தந்தையே அகிலமாக நினைத்து வாழும் அவனுக்கு இதை விட வேறென்ன வேண்டும்.
பண்பைப் போற்று.
பாரதத்தைப் பற்று
என்று  நான் கூறுவதெல்லாம் என் பாலகனின் பார்வையில், வீண் பேச்சு ..நல்ல பண்பு கொண்ட பாரதத்திலும்,கலாச்சாரம் கொண்ட குடும்பத்திலும் இருக்கும்போது தேவையற்ற பேச்சு என்பதே என் செல்வனின் வாதம்.இதனை நானும் அறிவேன்.
அச்சு, நீ!
அகிலத்தை ஆள வேண்டுமென்பது எனது ஆசை அன்று.
ஆன்றோர்களின் வழி நடப்பதே எனது ஆசை இன்று.
அப்துல்கலாமாக வாழ வேண்டுமென்பது எனது ஆசை அன்று.
அகிலனாகவே வாழ் என்பதே எனது ஆசை இன்று.
கர்மவீரராக கடமையாற்ற வேண்டுமென்பது எனது ஆசை அன்று.
கண்கலங்காமல் பிறரையும் வாழ வை என்பதே எனது ஆசை இன்று.
       சமுதாயம் என்ற சிற்பியானவன், உன்னைச் சிலை வடிக்க என்றோ தொடங்கி விட்டான்.அச்சிற்பியின் பார்வையில் அழகிய சிலையாக,அறிவு தரும் கலையாக உருவெடு.சிற்பி வடிக்கும் எல்லா சிலைக்கும் மதிப்பில்லை என்பதை நான் அறிவேன்.மதிப்பைத் தேட வீண் முயற்சிகளும் தேவையில்லை என்பதே என் வாதம்.சிற்பி அழகிய சிலையை உருவாக்க சிலையாக உருவெடுக்கும் நீயும் விட்டுக்கொடுக்கக் கூடிய பண்பையும்,சகிப்புத்தன்மையையும்கொண்ட அழகிய சகோதரனாக மாறு.
சகோதரப் பாசமே சகலத்தையும் கட்டிப்போடும் மிகச் சிறந்த செங்கோல்.  
மொத்தத்தில், நீ நீயாக இரு!!!நினைத்ததை முடிக்க நீடுழி வாழ்க!!!என்றும் என்றென்றும் என் ஆசி உன் வசம்…வாழ்க பல்லாண்டு!!!!!!

Friday, July 15, 2016

என் கதாநாயகன்

       என் கதாநாயகன்
      
எத்தனையோ தலைவனுண்டு
ஏட்டினிலே அறிந்ததுண்டு
எண்ணத்திலே உதிக்காத
ஏகராசி பலவுமுண்டு

என்னைப் பெற்ற ஐயாவோ
எப்பொழுதும் உமைச் சொல்வதுண்டு
இவர்களைப் புறந்தள்ளி
இனியனே உனை உரைப்பதுண்டு

உன்னைப்போல் தலைவனுண்டோ
உள்ளத்தில் நிறைந்ததுண்டோ
உழைப்பே உன் மூச்சு
ஊக்கமே உன் அருமருந்து 

ஏட்டுக்கல்வி  எட்டவில்லை    
ஏற்றம் தர மறந்ததில்லை  
பகட்டைத் துறந்ததுண்டு           
பாமரனைப் போற்றியதுண்டு
மணத்தைத் துறந்ததுண்டு
மதிய உணவைத் திறந்ததுண்டு
தொலை நோக்குப் பார்வையுண்டு
தொழிற்கல்வி அமைத்ததுண்டு

படிக்காத மேதை இவர்
பாரதமே போற்றும் கதர்
அன்னையின் அரசன் இவர்
அணைகள் பல திறந்தவர்
தலைவர்களைத் தந்தவர்
தரணியெல்லாம் நிறைந்தவர்
நல்லாட்சி நடத்தியவர்
நாடு போற்ற வாழ்ந்தவர்

நெஞ்சில் நல் ஈரமுண்டு
நேர்கொண்ட பார்வையுண்டு
மண்ணிலே மலர்ந்ததுண்டு
மத இனங்களை வெறுத்ததுண்டு
எட்டுத்திக்கும் பெருமையுண்டு
ஏகலைவனாய் வாழ்ந்ததுண்டு
எழுத எழுத எழுத்துமுண்டு
எண்ணிலடங்கா கருத்துமுண்டு

காகிதத்தில் அதைத் தீட்ட
கரமும் இணைவதுண்டு
கர்ம வீரர் கலந்தனிலே
கரையேறும் எனது தொண்டு
வாழ்நாள் முழுவதுமே

வழி நடப்பேன் இவர் வழியே
இரவு பகல் பாராமல்
இயன்ற தொண்டு நானும் செய்வேன்
காமராசர் எனும் நாமம்
என் கலங்கரை விளக்காகும்

v  ப.சித்ரகலா.

Translate