Search This Blog

Showing posts with label Chinmaya 2015 -16. Show all posts
Showing posts with label Chinmaya 2015 -16. Show all posts

Tuesday, April 21, 2020

எனது வரிகள்! வசையின் அசைகள்!!!


எனது வரிகள்! வசையின் அசைகள்!!!




Monday, November 23, 2015

புறப்பொருள் – பயிற்சித் தாள் – 2(2015-16) பத்தாம் வகுப்பு.



புறப்பொருள் – பயிற்சித் தாள் – 2(2015-16)
இரண்டாம் தொகுநிலைத்தேர்வு – (SA-2)
1.      புறம் பற்றிய  நெறிகளைக் கூறுவது ___
2.      புறத்திணை மொத்தம் ___
3.      உலகியல் நிகழ்வுகளைக் கூறும் திணை ___
4.      வெட்சியின் புறத்திணை ____
5.      ஆநிரைகளைக் கவர்ந்து வருபவர்கள் _____ பூவைச் சூடிச் செல்வர்.
6.      ஆநிரைகளைக் கவர்ந்து சென்றவர்கள் ____ திணை வீரர்கள்.
7.      வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை _____ பூவைச் சூடி _____ வீரர்கள் மீட்பது வழக்கம்.
8.      காஞ்சிப்பூ சூடும் வீரர்களின் புறத்திணை _____
9.      நிரை கவர்தல் என்பது _______ ஐ குறிக்கும்.
10.  கவர்தல், மீட்டல் – பொருள்
11.  மண்ணாசை கொண்டு பகை நாட்டரசனோடு போருக்குச் செல்லும் திணை______
12.  பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடும் திணை ___
13.  மதிலைக் காத்தல் வேண்டி ______ பூவைச் சூடி போர் வீரர்கள் போருக்குச் செல்வார்கள்.
14.  பகை வேந்தர் இருவருமே வெற்றி ஒன்றனையேக் குறிக்கோளாய்க் கொண்டு போரிடும் திணை ______ அவர்கள் அச்சமயம் ______ பூவைச் சூடிச் செல்வார்கள்.
15.  வட்கார்மேற்செல்வது  என்பது_____ பொருள்.இது ______ திணைக்குரியன.
16.  காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடும் மன்னன் ____ திணைக்குரியவன்.அவன் _________ அரசனோடு போரிடுவான்.
17.  மதிலுக்கு உள்ளிருந்து வெளியே இருக்கும் மன்னனோடு போரிடும் திணை ______
18.  உட்காது எதிரூன்றல் என்பது _______ பொருள்..இது _______ திணை.
19.  எயில் காத்தல் என்பதன் பொருள் ______ ..இது _____ திணைக்குரியன. இவ்வீரர்கள் ______ பூவைச்சூடி போருக்குச் செல்வார்கள்.
20.  உழிஞையின் புறத்திணை ______இவர்கள் _____ பூவைச்சூடி போருக்குச் செல்வார்கள்.
21.  எதிரியின் கோட்டைக்குள் புகுந்து மதிலைச் சுற்றி வளைப்பது ____ திணை.இவர்கள் _____ பூவைச்சூடி போருக்குச் செல்வார்கள்.
22.  அது வளைத்தல் என்பது ____ திணை.
23.  அதிரப் பொருவது என்பதன் பொருள் ______அதிரப் பொருவதுவின் புறத்திணை ______
24.  வெற்றி பெற்ற மன்னன் வாகைப் பூ சூடிப் போருக்குச் செல்வது _____
25.  செருவென்றது என்பதன் பொருள் ______ இது _____ திணை.
26.  பாடாண் திணை = பிரித்து எழுது
27.  பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி,செல்வம்,வீரம் முதலியவற்றைப் போற்றிப் பாடும் திணை____
28.  12 புறத்திணைகளுள் முதல் ஒன்பதில் உள்ள பொதுவான செய்திகள் மற்றும் கூறப்படாதச் செய்திகளையும் பற்றிக் கூறுவது ____ திணை.
29.  கைக்கிளை என்பதன் பொருள் ______ இது ______ வகைப்படும்.அவை ________ மற்றும் _______.
30.  பெருந்திணை என்பதன் பொருள் ____இது ____ வகைப்படும்.அவை _____ மற்றும் _______.
31.  மதில்போர் பற்றிய புறத்திணைகள் மொத்தம் _____ அவை _____ மற்றும் _____.
32.  வாகைத் திணை என்பது போர்கலத்து மிக்கார் _____ ஆகும்.
33.  பொருந்தாக் காமம் என்பது ______
34.  நிரைகளைப் பற்றி கூறும் திணைகள் _______   ________

35.  வெட்சி ______ வஞ்சி ______ நொச்சி ______ தும்பை _____.

Sunday, November 22, 2015

சுழல் தேர்வு - மாதிரி பயிற்சி வினாத்தாள் - 1(SA2)





சின்மயா வித்யாலயா மேனிலைப் பள்ளி,சென்னை-92.
தமிழ் - சுழல் தேர்வு – 1 (SA -11)    [2015-2016]
மாதிரி பயிற்சித் தாள் – 1   மதிப்பெண்: 45           கால அளவு: 1.30 மணித்துளிகள்

I.            விடையளி (ஏதேனும் ஒன்று)                                                                                                         (4)
       1.          புலி வசனித்த படலத்தின் கருத்துகளைத் தொகுத்து எழுது?
       2.          பெரியாரைத் துணையாகக் கொள்வது குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுது?
II.            விடையளி (ஏதேனும் ஒன்று)                                                                                                         (5)
       1.          தமிழன் அறிவியல் முன்னோடி என்பதை விளக்குக?
       2.          அறவழி விடுதலைப்போர் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக?
III.            கடிதம்                         (ஏதேனும் ஒன்று)                                                                                                         (6)
       1.          தேர்வில் வெற்றி பெற்ற நண்பனைப் பாராட்டிக் கடிதம்
       2.          குடிநீர் வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம் வரை.
IV.            துணைப்பாடம்       (ஏதேனும் ஒன்று)                                                                                                         (7)
       1.          குறட்டை ஒலி கதையை கரு மாறாமல் சுருக்கி வரைக?
       2.          இலிண்ட்கிரன் பண்பு நலன்கள் குறித்துக் கட்டுரை வரைக?
V.            அறிக்கை                   (ஏதேனும் ஒன்று)                                                                                                         (4)
       1.          மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
       2.          குழந்தைகள் நாள் விழா
VI.            செய்யுள் பொருளுணர் திறன்                                                                                                        (4 X 1 = 4)
‘தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்..’
வினாக்கள்:
          1.          இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
அ) தமிழ்விடுதூது             ஆ) சீறாப்புராணம்  இ) குறள்            ஈ) தேவாரம்
          2.          ஆசிரியர் பிறந்த ஊர்?
அ) தாராசுரம்                 ஆ) தருமபுரி                      இ) திருவாரூர் ஈ) திருப்பூர்
                                               
          3.          ஆசிரியரின் காலம் ____________?
அ) கி.பி. 7                          ஆ) கி.பி. 8                                  இ) கி.பி. 5        ஈ) கி. பி. 6
          4.           நடலை - ________ பொருள் தருக?
அ) நினைக்காதே          ஆ) துன்பம்                      இ) நுதல்                            ஈ) குற்றம்


இலக்கணம்
VII.            நிரப்புக:                                                                                                                                                     (3 X 1 = 3)
          1.          மார்கழி,தை ______ காலத்திற்குரியன?
அ) பின்பனி                     ஆ) முன்பனி                   இ) கார்                               ஈ) குளிர்
          2.          மருதத்தின் சிறுபொழுது ________
அ) யாமம்                     ஆ) மாலை                       இ)  நண்பகல்            ஈ)வைகறை
          3.          அகம், புறம் என்பன _________
அ) சொல்லிலக்கணம்                                ஆ) அணியிலக்கனம்
இ) பொருளிலக்கணம்                              ஈ) எழுத்திலக்கணம்
VIII.            சான்று தருக:                                                                                                                                           (3 X 1 = 3)
          1.          மருத நிலத் தெய்வம்
அ) முருகன்                      ஆ) திருமால்                    இ) இந்திரன்          ஈ) வருணன்
          2.           நெய்தல் நில ஊர்
அ) பேரூர்                       ஆ) பட்டினம்     இ) பாக்கம்             ஈ) சிறுகுடி
          3.          முல்லை பூ
அ) தோன்றி                     ஆ) தாமரை               இ) தாழை            ஈ) குரவம்                            
IX.            கூறியவாறு மாற்றுக:                                                                                                                           (3 X 1 = 3)
          1.          மாற்றரசனோடு போரிடல்                     [வஞ்சியாக மாற்று]
அ) எதிரூன்றல்                                      ஆ) வட்கார் மேற்செல்வது
இ) அது வளைத்தல்                                     ஈ) அதிரப் பொருவது
          2.          புறத்திணை                      [ வகை ]
அ) பன்னிரண்டு            ஆ) பத்து                            இ) ஏழு              ஈ) ஐந்து
          3.          செரு வென்றது                              [எத்திணை]
அ) வெட்சி                        ஆ) கரந்தை                      இ) காஞ்சி            ஈ) வாகை
X.            இலக்கணக் குறிப்பு தருக:                                                                                                                (3 X 1 = 3)
          1.          வெட்சி
அ) நிரை மீட்டல்                          ஆ)  நிரை கவர்தல்
இ) எதிரூன்றல்                              ஈ) எயில் காத்தல்
          2.          மதில் போர் பற்றிய புறத்திணைகள்
அ) வெட்சி-கரந்தை                                     ஆ) வஞ்சி-காஞ்சி
இ)   நொச்சி-உழி ஞ                     ஈ) தும்பை-வாகை
          3.          கைக்கிளை
அ) பெருந்திணை                                   ஆ) பாடாண்திணை
இ) பொதுவியல் திணை                        ஈ) ஒருதலைக்காமம்
XI.            சரியான சொற்றொடரைத் தேர்வு செய்:                                                                  (3 X 1 = 3)
          1.          அ) உலகியல் கூறுகள் என்பன அகப்பொருள்
ஆ) உலகியல் கூறுகள் என்பன புறப்பொருள்
இ) உலகியல் கூறுகள் என்பன அக-புறப்பொருள்
ஈ) உலகியல் கூறுகள் என்பன எதுவுமில்லை
          2.          அ)பாலை நிலத்திற்குரிய பறவைகள் கிளி-மயில்
ஆ) பாலை நிலத்திற்குரிய பறவைகள்  நாரை-அன்னம்
இ) பாலை நிலத்திற்குரிய பறவைகள் புறா-பருந்து
ஈ) பாலை நிலத்திற்குரிய பறவைகள் மயில்-கோழி
          3.          அ) முதற்பொருள் என்பன நிலம்-பொழுது
ஆ) முதற்பொருள் என்பன அகம்-புறம்
இ) முதற்பொருள் என்பன கரு-உரி
ஈ) முதற்பொருள் என்பன அனைத்துமே.

சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 23.11.15 . 

சீறாப்புராணம் (2015-16)




 சீறாப்புராணம் – செய்யுள் பொருளுணர் திறன்.(SA2) 2015 -16
    I.     ஓரிரு வார்த்தைகளில் விடையளி:

1.   சீறாப்புராணத்தை இயற்றியவர் ____
2.   இந்நூலின் ஆசிரியர் யாருடைய மாணாக்கர்?
3.   யாருடைய வேண்டுகோளுக்கிணங்க இந்நூலை இயற்றினார்?
4.   வள்ளல் சீதக்காதியின் பெயர் என்ன?
5.   சீதக்காதிக்குப் பின் நூல் எழுத உதவியாக இருந்தவர்_____
6.   ஆசிரியர் எழுதிய வேறு நூல் ____ மற்றும் காலம்_____
7.   இறைவனின் திருத்தூதர் ______
8.   சீறாப்புராணம் ______ வரலாற்றை எழுத்தியம்புகிறது.
9.   சீறா, வாழ்க்கை – பொருள் தருக.
10. சீறாப்புராணம் ______ பிரிவுகளைக் கொண்ட காண்டம்.
11. இப்பாடலில் உள்ள மொத்த பாடல்கள்_______
12. நம் பாடப் பகுதியில் இடம்பெற்ற காண்டம்_____
13. காண்டம் என்றால் ______ பிரிவு.
14. வென்றி வாளரசே – இது ______ கூற்று.
15. வேறொரு காட்டினிற் புகுக. – இது யார், யாரிடம் கூறியது?
16. முகம்மது நபியை வணங்கியவன் _____
17. மடங்கல், உழுவை – பொருள் தருக.
18. முகம்மது நபி புலியை  நோக்கி, நீ இன்று முதல் ______  செய்வதை விடுத்து __________ புகுவாயாக.
19. உயிர்செகுத்திடுக, வேங்கை – பொருள் தருக.
20. மிகுந்த கொலைத் தொழிலையுடையது ____
21. முகம்மது நபியின் திருவடியில் வீழ்ந்து வணங்கியது ____
22. அதிசயம், உன்னி – பொருள் தருக.
23. சிங்கத்திற்கு ஒப்பாகக் குறிப்பிடப்படுபவர் ____
24. வெற்றி தரும் வாள் படை தாங்கிய வீரர் _____
25. மாதிரம், எழில், புயம், கேசரி, புளகிதம், பூதரம், கவின் – பொருள் தருக.
26. கூர்மை பொருந்திய நகத்தினையும்,திண்ணிய வலிமையினையும் உடையது _____
27. மந்திர மலைக்கு ஒப்பானவர் _____
28. வள்ளுகிர், புந்தி, சிரம்,கரம், சந்தம்- பொருள் தருக.
29. பெருவரி,பெருஞ்சிரம், திண்டிறல் – பிரித்து எழுது.
30. இடியைக் காட்டிலும் அதிகமாக முழங்கும் மிருகம் ___
31. பிளந்த பாதங்களைக் கொண்ட விலங்கு -___
32. கேழல், எண்கு,மரை,மேதி,கவை, நிணம் – பொருள் தருக.
33. பெருங்கோடு,வீழ்ந்துடல்,நெடுநீர்,உள்ளுரை – பொருள் தருக.
34. கொடிய வரிகளைக் கொண்ட புலி ______ காட்டில் உறைந்துள்ளது.
35. கனல், வனம்,புலால், எயிறு, தாரை, அடவி – பொருள் தருக.
36. வெண்பற்கள் ஒளிவிட, வாயில் புலால் வீச சினத்தோடு இருந்தது யார்?
37. இருவிழி,வெள்ளெயிறு,எண்கினங்கள் – பிரித்து எழுது.
38. அகமது என்னும் திருப்பெயர் பெற்றவர் ____
39. அடந்த காட்டில் வாழ்ந்த விலங்கு எது?
40. திரள்,கான், தடக்கரி, திரை – பொருள் தருக.
41. நம் பாடப் பகுதியில் இடம் பெற்ற படலம் ____
42. தரும்பெ ருங்கிரி பிதிர்ந்திட வுருமினும் அலறும் – இப்பாடலில் யாருடைய வெறிச்செயல் கூறப்பட்டுள்ளது?
43. உடைய வன்திருத் தூதரே உண்மையென் றுன்னித் – இதில் குறிப்பிடும் இறைத்தூதர்?
44. அபுல்காசிம் ஒரு _____ பெருமான்
45. படலம் – பொருள்
46. அகழி, காதவழி, கமழ – பொருள் தருக.
47. குருதி, கிரி, முறுவல் பொருள் தருக.
48. புலி தன் நீண்ட ______ தரையில் அடித்தது.
49. இரண்டு கண்களும் ____ பொறிகளைக் கக்கியது.
50. சீறாப்புராணம், தெண்டிரை – பிரித்து எழுது.


சின்மயா வித்யாலயா மேனிலைப் பள்ளி,சென்னை – 92. இரண்டாம் தொகுநிலைத்தேர்விற்கான இலக்கணப் பயிற்சித்தாள் – 1



சின்மயா வித்யாலயா மேனிலைப் பள்ளி,சென்னை – 92.
இரண்டாம் தொகுநிலைத்தேர்விற்கான இலக்கணப் பயிற்சித்தாள் – 1
        I.             நிரப்புக:
1.      குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் _______
2.      குறிஞ்சி நிலத்திற்குரிய மக்கள் _____ ______
3.      குறிஞ்சி நிலத்திற்குரிய உணவு ______ _____
4.      குறிஞ்சி நிலத்திற்குரிய விலங்கு _____
5.      குறிஞ்சி நிலத்திற்குரிய பூ ______
6.      முல்லை நிலத்திற்குரிய தெய்வம் _____
7.      முல்லை நிலத்திற்குரிய மக்கள் ______ _______
8.      முல்லை நிலத்திற்குரிய உணவு _____ _______
9.      முல்லை நிலத்திற்குரிய விலங்கு ________
10.  முல்லை நிலத்திற்குரிய பூ _________
11.  மருத நிலத்திற்குரிய தெய்வம் _____
12.  மருத நிலத்திற்குரிய மக்கள் ______ _______
13.  மருத நிலத்திற்குரிய உணவு _____
14.  மருத நிலத்திற்குரிய விலங்கு ______ _______
15.  மருத நிலத்திற்குரிய பூ ______ _______
16.  நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் _____
17.  நெய்தல் நிலத்திற்குரிய மக்கள் ______ _______
18.  நெய்தல் நிலத்திற்குரிய உணவு _____
19.  நெய்தல் நிலத்திற்குரிய விலங்கு ______ _______
20.  நெய்தல் நிலத்திற்குரிய பூ ______ _______
21.  பாலை நிலத்திற்குரிய தெய்வம் _____
22.  பாலை நிலத்திற்குரிய மக்கள் ______ _______
23.  பாலை நிலத்திற்குரிய உணவு _____
24.  பாலை நிலத்திற்குரிய விலங்கு ______ _______
25.  பாலை நிலத்திற்குரிய பூ ______ _______
26.  அகப்பொருள் மொத்தம் _____
27.  வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றி கூறும் இலக்கணம்____
28.  அகப்பொருள் (அ) அகத்திணையில் முதல் ஐந்து _____ எனப்படும்.
29.  வாழ்வியல் கூறுகளுக்கு வேண்டிய பொருட்கள் ____ ____ ____.
30.  அகத்திணை (அ) அகப்பொருள் என்பது ஒத்த அன்புடைய தலைவன்,தலைவி _________கூறுவதாகும்.
31.  இலக்கணம் _____ வகைப்படும். அதில் பொருள் இலக்கணம் ___ வகைப்படும்.
32.  தமிழ் மாதங்கள் மொத்தம் ___
33.  கார், வேனிற் பொருள் _______
34.  அல்,எல்,பாடு ___ பொருள்.
35.  கருப்பொருள் என்பன _____
36.  பொருள் என்பது ____
37.  பொழுது, நிலம் வகைகள் ______ _____
38.  பெரும்பொழுதின் காலவகைகள் _____
39.  சிறுபொழுதின் ஒரு நாள் வகைகள் _______
40.  அகம்,புறம் ஆகிய இரண்டும் ____ ___ இலக்கணம் ஆகும்.
41.  குறிஞ்சி, முல்லை ஆகிய ஐந்தும் ____ எனப்படும்.
42.  நெய்தல் நிலத்திற்குரிய நிலப்பகுதி ___
43.  யாமம் என்பது இரவு பத்து மணி முதல் ____ வரை ஆகும்.
44.  மருதம், நெய்தல் ஆகிய இரண்டனுக்கும் ____ பெரும்பொழுதுகளும் வரும்.
45.  திருமால் ___ நிலத்திற்குரிய தெய்வம்.
46.  மணமுழா, நெல்லரிகிணை ஆகிய இரண்டும் ____ திணைக்குரிய பறைகள்.
47.  நெய்தல் திணைக்குரிய தொழில் ____ ஆகும்.
48.  பொருள் இலக்கணம் ___ வகைப்படும்.
49.   சித்திரை, வைகாசி ஆகிய இரண்டும் ____ காலத்திற்குரியன.
50.  பாலை நிலத்திற்குரிய பறவைகள் ___
51.  வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர்கள் ____
52.  எற்பாடு என்பது ____மணி முதல் _____ வரை.
53.  மலையும் மலை சார்ந்த இடம் _____
54.  முல்லை _____  ­­­­______ சார்ந்த இடம்.
55.  வயலும் வயல் சார்ந்த இடம் _____
56.  பரதர், சேர்ப்பன் வாழுமிடம் _____
57.  நிரை கவர்தல், வழிப்பறி நடைபெறுமிடம் ____
58.  கைக்கிளை பெருந்திணை என்பது _____ ______ இலக்கணம்.
59.  ஆனி,ஆடி ____ காலத்திற்குரியன.
60.  பின்பனிக்காலம் என்பது ______ மாதத்திற்குரியன.
61.  பணி,பனி  _____ _____ பொருள்
62.  திணை என்றால் ____ என்பது பொருள்.
63.  இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள பொழுது____
64.  வைகறை, காலை, யாமம்,எற்பாடு, நண்பகல்,மாலை – வகைப்படுத்து.
65.  காலை 6 மணி முதல் பத்து மணி வரை           _ நண்பகல்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை     _ யாமம்
பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை      _ காலை
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை         _ வைகறை
இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை           _ எற்பாடு
இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை           _ மாலை
இவற்றைப் பொருத்துக.
66.  இளவேனில்,முதுவேனில்,பின்பனி இவற்றின் திணை ____ சிறுபொழுது _____.
67.  குறிஞ்சியின் சிறுபொழுது _____ பெரும்பொழுது முன்பனி ______
68.  குளிர் காலம் வேறு பெயர் _____
69.  முயல்,மான் ____ திணைக்குரிய விலங்குகள்
70.  முதலை சுறா என்பன முல்லை திணைக்குரியனவா? அல்லது மருதத் திணைக்குரியனவா?
71.  காட்டாறு  ____ திணைக்குரிய நீர் பகுதி.
72.  ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் ____ திணைக்குரிய ______ ஆகும்.
73.  பெரும்பொழுதில் முதல் மற்றும் மூன்றாவது பொழுதுகள் ________ _____
74.  ஓராண்டு என்பது  _____ மாதங்களைக் கொண்டது.
75.  ஓராண்டின் ஆறு கூறுகள்  ________ பொழுதுக்குப் பொருந்தும்.
76.  தமிழ் மாதங்களில் முதல் இரண்டு _______
77.  தமிழ் மாதங்களுள் ஒன்பது மற்றும் பத்து ____ ____
78.  பெரும்பொழுதில் ஐந்தாவது _____
79.  கார்காலத்தின் மாதங்கள் ________
80.  ஐந்திணைகளுள் மூன்றாவது ____
81.  புன்னை, ஞாழல் ____ திணைக்குரிய மரங்கள்.
82.  நெய்தல் நிலத்தின் நீர் நிலைகள் _______ ____
83.  முதற்பொருள் ____ வகைப்படும்.
84.  கருப்பொருள் ____ வகைப்படும்.
85.  பொருளிலக்கனம் _____ வகைப்படும்.
86.  அகப்பொருளிலக்கணம் ____ வகைப்படும்.
87.  அகப்பொருளிலக்கணத்துள் முதல் ஐந்து _____ எனப்படும்.
88.  பொழுது _____ வகைப்படும்.
89.  நிலம் ____ வகைப்படும்.
90.  பெரும்பொழுது ____ வகைப்படும்
91.  சிறுபொழுது ___ வகைப்படும்.
92.  மாதங்கள் மொத்தம் _____
93.  ஓராண்டின் கூறு ____
94.  ஓர் நாளின் கூறு ____
95.  தமிழ் மாதங்களை ஆறு கூறுகளாக வரிசை மாறாது வகைப்படுத்து.____ ______
96.  ஒரு நாள் என்பது ____ மணி  நேரம்.
97.  1, 2 .  5 என்ற எண்கள் எத்திணைக்கு உரிய _______ பெரும்பொழுது _____ சிறுபொழுது.
98.    எற்பாடு ____ திணைக்குரிய சிறுபொழுது.
99.  மாசி,பங்குனி ____  காலத்திற்குரிய _____ பொழுது.
100.          பேரூர், மூதூர் ____ திணைக்குரிய ஊர்கள்.






Translate