Search This Blog

Wednesday, November 25, 2015

வள்ளலார் ..( இராமலிங்க அடிகள் )






கம்பராமாயணம் - விடுநனி கடிது






தமிழ் வளர்ச்சி





 

வாழ்த்து . மாணிக்கவாசகர்







செய்யுள் பொருளுணர் திறன்...







குறுக்கங்கள்






புறத்திணைகள் - பத்தாம் வகுப்பு






சிலப்பதிகாரம்.மதுரைக் காண்டம்








பெரிய புராணம் - பத்தாம் வகுப்பு






 

பத்தாம் வகுப்பு ( இயல் 1 முதல் 6 வரை ) பயிற்சி வினாக்கள்






கடிதம் எழுதும் முறை (2015-16)







அலகிடுதல் - யாப்பு






கம்பராமாயணம் ... குகப் படலம்






நாலாயிரத்திவ்யப் பிரபந்தம்






கட்டுரைகள் (பொது)






அணி இலக்கணம்







சிலப்பதிகாரம் - வழக்குரைக் காதை





பொருள் இலக்கணம் - அகப்பொருள்






நிற்க நேரமில்லை .பாடல்








பா வகைகள்






அயோத்திதாசப் பண்டிதர்












Tuesday, November 24, 2015

மழையே !!!! என் மனமே!!!!!(2015-16)



மழையே !!!! என் மனமே!!!!!




மழையே …என் மனமே…!!!!!
சில நாட்களாக  உன்னைப் பற்றிய அங்கலாய்ப்புகளும்,
ஆதங்கங்களும் அரங்கேறிக் கொண்டும் .....
பவனியானது பல பரிணாம வளர்ச்சியில்
 வலம் வந்தும் கொண்டிருக்கிறது….
எனக்கு ஒரு ஐயப்பாடு என்பதை விட 
ஆதங்கமே மேலோங்கி இருக்கிறது…ஏனென்றால்,
நீ உனது பணியைச் செவ்வனே செய்கிறாய்.!!
இதற்கு நீ மட்டும் தார்மீகப்  பொறுப்பேற்க முடியாது….
நீ உன்னை அண்டியவரையும் 
உன் அருகாமையில் இருப்பவரையும் 
சார்ந்துதானே செயல்படுகிறாய்...
.மழையை மண்ணிற்குத் தருகிறாய்…
அப்படியிருக்கையில் இவர்களின் கேலிக்கூத்துக்கு
 நீ எவ்வாறு பொறுப்பாக முடியும்..!
நல்லது செய்தாலும் நாடு தூற்றும்.
செய்யவில்லை என்றாலும் செயலற்றுப் பேசும்.
இவ்விரண்டுக் கலப்பும் நிறைந்ததுதானே
நீயும் நானும் நிறைந்துள்ள .....
இப்பேரண்டத்தின் அடக்கம்.
அதற்கு   நீயும் நானும் விதிவிலக்கன்று…
இதே மானிடர்கள்தான்.....
 உனை வேண்டி வரமிருந்து
வருண பகவானாக நினைத்து 
யாக பூசைகள் செய்தும்...
வேள்விகள் செய்தும் வேண்டியவர்கள்
 இம்மானிடர்கள்தானே….
இவ்வாறு இவர்கள் வேண்டும்பொழுதெல்லாம்,
 நினைக்கும்பொழுதெல்லாம் 
வரம் கொடுக்க நீ ஒன்றும்
கர்ணனின் குலக்கொழுந்தன்று….
 வாரி வாரி வழங்கும் வள்ளல் பரம்பரையுமன்று…..
கைம்மாறு கருதாது… 
மாரி மும்மாரிப் பொழியும் என்று உன்னை 
ஆய்ந்து வகுத்தவர்களும்..
இதே முன்னோர்களன்றோ!!!!
அப்படியிருக்கையில், மழையே செல் என்றும்...
செல்வங்களெல்லாம் தத்தளிக்கிறது; 
தாங்காது பூமி எனக் கூக்குரலிடுவதால் 
என்ன பயன் விளையப் போகிறது??
மூட நம்பிக்கை கொண்டு உன்னை வரவழைக்க
யாக யோக தரிசனங்களைத் தவிர்த்து
தரிசான பூமியைத் தரம் பார்த்து 
தாரை வார்த்திருந்தால்....
மானிடர் வாழும் மண் கொழிக்கும்; 
மனித மனம் மணக்கும்... 
பூமியும்,சொர்க்க பூமியாகவுமல்லவா செழித்திருக்கும்!
நீயும் செழுமையடைந்த திருப்தியும் அடைந்திருப்பாய்..
மானிடனே! 
இப்பூமியை விட்டுச் செல்லும்போது 
எதைக் கொண்டு கோபுரம் கட்டப் போகிறாய்?
இறுதியில், கட்டெறும்புக்கும் 
கரையான்களுக்கும் அல்லவா இரையாகிறோம்?
அப்படியிருக்கையில், 
நான்கடி நிலத்துக்கு நாற்சந்தி யுத்தம்!!
இதனை நீ மட்டும் செய்யவில்லை மானிடனே –
உன்னை ஆளும்  அரசும் அதே கதிதானே????
‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’
‘தாயைப்போல பிள்ளை; நூலைப்போல சேலை…..
அதைப்போல்தான் இருக்கும் காலம் வரை 
ஒருவரை ஒருவர்...
முந்தியடித்து ஏய்த்துப் பிழைக்கும் உலகத்தில் 
ஏவலாளிகளாக.... ஏமாளிகளாக...
ஏவப்படுகின்றீர்கள்…. பல்வேறு தவறைச் செய்ய…
அத்தவறினால், பாடுபட்டு தேடிய செல்வமெல்லாம் 
பாழாய்ப் போகிறது பாழ் பூமியில் 
எனப் புலம்புவதால் என்ன பயன்???
விண்ணை வெற்றி கொள்ள விவசாயம் செய் என்றால் விரயம் பேசுகிறாய்!
விருட்சம் வேண்டுமென்றால் வீண்வம்பு பேசுகிறாய்…
வேண்டாத இடத்தில் வேண்டுமென்றே வீடு கட்டி
வேள்வி நடத்துகிறாய்!அதற்கு முன்…
முன்யோசனை உனக்கு அரசாங்கம் வழங்கியதா?
இல்லை அதைத்தான் கேட்டாயா?
இருவருமே அலட்சியப்போக்கின் 
உச்சக் கட்டத்தில் இருக்கும்போது ,
உச்சத்தில் இருக்கும் நீ உன் உன்னதப் பணியைத்தான் 
ஆற்றிக் கொண்டிருக்கிறாயே தவிர,….
மானிடனே! உன்னைப்போன்று 
ஆசை நோக்கோடு ஆர்ப்பரிக்கவில்லையே…..
மழையே …. என் மனதை….. 
அன்பு கொண்டு அழைக்க
அணைகள் கட்டவில்லை,
ஆறு,ஏரி,குளங்கள் அமைக்கவில்லை…
ஓடி ஒதுங்கும் ஓடு பள்ளங்களைக் காணவில்லை…
படுகுழிகளையும் காணடித்து 
பங்களாக்களையும்,பளிங்கு அறைகளையும்
பல அடுக்கு மாடமாளிகைகளையும்,
 கோபுரங்களையும் கட்டிய
கணவான்களே!!!
என் மழையின் இருப்பிடம் எங்கே???
பிறரின் பந்தத்திற்கும்,பாசத்திற்கும் அடிபணியாதவன்,
மதியாரைத் துற்றமென தூக்கி எறிபவன் …
.என் மனம் என்ற மழை…
மானிடனே! என் மனதை வருந்தி அழைத்தலும்,
வா என்று அழைத்தலும் 
உனது சுகபோகங்களுக்கு மட்டுமே…
பக்குவமில்லாத பச்சோந்தித்  தனமாகத் திரியும் உனது பேச்சை
பால்மனம் மாறா என் மழை
 எவ்வாறு மனம் கொடுக்கும் ....செவி மடுக்கும்……
வா என்றால் வரவும்; 
போ என்று கூற நீ ஒன்றும் புத்திமான் அல்ல..
என் மனம்(மழை) பலமான் என்பதை
 பாவிகளே புரிந்துகொள்ளுங்கள்!!!!
செய்வன திருந்தச் செய்!
 பின் சென்று செய்வதை உரைக்கச் சொல்!!!
அதை விடுத்து, புலம்பித் திரிவதும், 
புழுங்கி அழுவதும்….வீண் செயல்.
புல்லர் இன மானிடனே !! 
மனம் திற!மாயையை மற!! இதனை மற!!
என் மனமே! நீ என் மனமே!! 
காலத்தின் கோலத்தை.....
நீ கச்சிதமாகச் செய்!!!! ஆனால் ஒன்று…
ஏழையின் வீட்டிலும் அடுப்பெரிய வேண்டுமன்றோ!!!!!
ஏணியாய் இன்றியும், ஏகலைவனாய் இருந்து போதி….
போதும் இப்பொழுது உன் நீதி..!!!!!
என்றும் வாழும் உன் சேதி…..
மீண்டும் வருவாய்….என் மனமே !!! 
அமைதி கொள் !!! ஆன்றோர்கள் போன்று….
இன்னும் கனியும் காலம் வரும்…. காத்திரு … மீண்டும் வர…
என் மனதோடு உறவாட…………

                                                                                    ப. சித்ரகலா கலைச்செல்வன்.
 



Monday, November 23, 2015

புறப்பொருள் – பயிற்சித் தாள் – 2(2015-16) பத்தாம் வகுப்பு.



புறப்பொருள் – பயிற்சித் தாள் – 2(2015-16)
இரண்டாம் தொகுநிலைத்தேர்வு – (SA-2)
1.      புறம் பற்றிய  நெறிகளைக் கூறுவது ___
2.      புறத்திணை மொத்தம் ___
3.      உலகியல் நிகழ்வுகளைக் கூறும் திணை ___
4.      வெட்சியின் புறத்திணை ____
5.      ஆநிரைகளைக் கவர்ந்து வருபவர்கள் _____ பூவைச் சூடிச் செல்வர்.
6.      ஆநிரைகளைக் கவர்ந்து சென்றவர்கள் ____ திணை வீரர்கள்.
7.      வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை _____ பூவைச் சூடி _____ வீரர்கள் மீட்பது வழக்கம்.
8.      காஞ்சிப்பூ சூடும் வீரர்களின் புறத்திணை _____
9.      நிரை கவர்தல் என்பது _______ ஐ குறிக்கும்.
10.  கவர்தல், மீட்டல் – பொருள்
11.  மண்ணாசை கொண்டு பகை நாட்டரசனோடு போருக்குச் செல்லும் திணை______
12.  பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடும் திணை ___
13.  மதிலைக் காத்தல் வேண்டி ______ பூவைச் சூடி போர் வீரர்கள் போருக்குச் செல்வார்கள்.
14.  பகை வேந்தர் இருவருமே வெற்றி ஒன்றனையேக் குறிக்கோளாய்க் கொண்டு போரிடும் திணை ______ அவர்கள் அச்சமயம் ______ பூவைச் சூடிச் செல்வார்கள்.
15.  வட்கார்மேற்செல்வது  என்பது_____ பொருள்.இது ______ திணைக்குரியன.
16.  காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடும் மன்னன் ____ திணைக்குரியவன்.அவன் _________ அரசனோடு போரிடுவான்.
17.  மதிலுக்கு உள்ளிருந்து வெளியே இருக்கும் மன்னனோடு போரிடும் திணை ______
18.  உட்காது எதிரூன்றல் என்பது _______ பொருள்..இது _______ திணை.
19.  எயில் காத்தல் என்பதன் பொருள் ______ ..இது _____ திணைக்குரியன. இவ்வீரர்கள் ______ பூவைச்சூடி போருக்குச் செல்வார்கள்.
20.  உழிஞையின் புறத்திணை ______இவர்கள் _____ பூவைச்சூடி போருக்குச் செல்வார்கள்.
21.  எதிரியின் கோட்டைக்குள் புகுந்து மதிலைச் சுற்றி வளைப்பது ____ திணை.இவர்கள் _____ பூவைச்சூடி போருக்குச் செல்வார்கள்.
22.  அது வளைத்தல் என்பது ____ திணை.
23.  அதிரப் பொருவது என்பதன் பொருள் ______அதிரப் பொருவதுவின் புறத்திணை ______
24.  வெற்றி பெற்ற மன்னன் வாகைப் பூ சூடிப் போருக்குச் செல்வது _____
25.  செருவென்றது என்பதன் பொருள் ______ இது _____ திணை.
26.  பாடாண் திணை = பிரித்து எழுது
27.  பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி,செல்வம்,வீரம் முதலியவற்றைப் போற்றிப் பாடும் திணை____
28.  12 புறத்திணைகளுள் முதல் ஒன்பதில் உள்ள பொதுவான செய்திகள் மற்றும் கூறப்படாதச் செய்திகளையும் பற்றிக் கூறுவது ____ திணை.
29.  கைக்கிளை என்பதன் பொருள் ______ இது ______ வகைப்படும்.அவை ________ மற்றும் _______.
30.  பெருந்திணை என்பதன் பொருள் ____இது ____ வகைப்படும்.அவை _____ மற்றும் _______.
31.  மதில்போர் பற்றிய புறத்திணைகள் மொத்தம் _____ அவை _____ மற்றும் _____.
32.  வாகைத் திணை என்பது போர்கலத்து மிக்கார் _____ ஆகும்.
33.  பொருந்தாக் காமம் என்பது ______
34.  நிரைகளைப் பற்றி கூறும் திணைகள் _______   ________

35.  வெட்சி ______ வஞ்சி ______ நொச்சி ______ தும்பை _____.

கலாம் காண விழையும் கதா நாயகர்கள்- (2015-16)

கலாம் காண விழையும் கதா நாயகர்கள்- (2015-16)




கலாம் காண விழையும் கதாநாயகர்கள்
எனது பத்தாம் வகுப்பு மாணவர்கள் கலாமின் பிறந்த நாள் முன்னிட்டு எழுதிய கவிதைத் தொகுப்புகள்(2015-16)



  
நான் இருக்கும் இந்நாடு
முழுக்க முழுக்கப் பண்பாடு
இந்நாட்டிலுள்ள மாணவர்களே
நீங்கள்தான் எங்கள் கண்களே
வல்லரசு வல்லரசு என்றார் கலாம்
அதை நாம் இளைஞர்களால் அடையலாம்
கலாமின் இறப்பு நமக்கு சோகம்
அதனால் அது இளைஞர்களுக்குக் கொடுத்தது வேகம்
அப்துல்கலாமிற்குப் பிடித்தது பண்புள்ள பார்த்தா
இளைஞர்களுக்குப் பிடித்தது அவரின் கர்த்தா.
                                --கார்த்திக்(K.B.)


இளைஞர்களின் விடிவெள்ளி
நாளைய இந்தியர்களின் வழிகாட்டி
கலாமின் கனவில் இளைஞர்கள்
என்றும் அவரின் கதாநாயகர்கள்
இதோ உனக்காகத் தந்துள்ளார் சில துளிகள்
அரசு பள்ளியில் படித்து இந்தியாவின் குடிமகனானது
ஒரு தன்னம்பிக்கைப் பாடம்
பொக்ரானில் அவர் நடத்திய அணுகுண்டு சோதனை
நம்மாலும் சாதிக்க முடியும் என்ற போதனை
ஜனாதிபதியானாலும் தோற்றத்தில் எளிமை
பார்வையில் விஞ்ஞானம் – அதுவே
இளைஞர்களை ஈர்த்த வெகுமானம்
சொல்லால் மட்டுமே அவர் முன்னால் குடியரசுத் தலைவர்
செயலால் இளைஞர்கள் இதயத்தில் என்றும் அவர் ஆசிரியர்.
கலாமின் கதாநாயகர்களே நதிகள் இணையட்டும்
மின்சாரம் மலிவாகட்டும்
தகவல் தொடர்பு விரிவாகட்டும்
நவீன வசதிகள் எட்டுத்திக்கும் கிடைக்கட்டும்
தூங்காமல் செய்வதுதான் கனவு
அது பலமுறை வந்தால் நனவு.
                           ---- க.ரித்திகா


ஒரு நாள் கடவுள் கேட்டார்
உலகில் உயர்ந்தவர் யார்?
உரைகள் கொண்டு கவர்ந்தவர் யார்?
இந்த பெரும்புகழ் கொண்ட இந்தியாவைப் பார்!!
இத்தகைய வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் யார்?
பாலினம் மாறாத குழந்தைகள் பூத்துக் குலுங்கும் தமிழ்நாட்டைப் பார்!
மழலை பொங்கும் சிறுவர்களை தன் வசம் இழுத்தவர் யார்?
என்றும் மாணவர்களை சிந்திக்க வைத்தவர் யார்?? - அவரே
குணமிக்க அறிவுச் செல்வங்களைக் காண விழைந்தவர்
பண்புமிக்க பள்ளிக்கூடம் அமைக்க விரும்பியவர்
நல்லெண்ணமிக்க ஆசிரியர் வர குரல் கொடுத்தவர்
என்றும் சமத்துவத்தைப் பயின்றவர்
இலஞ்சம் இல்லா இந்தியாவை உருவாக்கும் எண்ணம் உடையவர்.
தொழிற்கல்வியும், கலைக்கல்வியும் ஒன்றுசேர வளர உழைத்தவர்
மாணவர்களின் நலனையும் கல்வியையும் விரும்பியவர்
அஞ்சா நெஞ்சம் கொண்ட பந்தயக் குதிரைகளைக் காணத் துடித்தவர்.
என்றும் பெற்றோர் சொல் மதிக்கும் பிள்ளைகள் வேண்டுமென எண்ணியவர்
இந்தியாவின் புகழ் உயரப் பாடுபட்டவர்
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை துணிந்து உரைத்தவர்.
புறநானூற்றின் பாடல் பாடி தமிழின் புகழை நிலை நாட்டியவர்
இவ்வாறு கனியன் பூங்குன்றனாரின் புகழை உலகமெங்கும் பரப்பியவர்.
ஏழைகளுக்காக ஆராய்ச்சி செய்து மகிழ்ந்தவர்
திருக்குறளே தம் வாழ்க்கை தர்மமாக வாழ்ந்தவர்
எம்மதமும் சம்மதம் என வகுத்துக் கொண்டவர்
மீண்டும் கடவுள் என்னிடம் கேட்டார் – இவர் யார் என்று சொல் பார்க்கலாம்????
கணம் யோசிக்காமல் கூறினேன் அப்துல் கலாம்
ஆனால், வேடிக்கை… ஆண்டவன் நினைத்தான்
சொல்லப்போவது தன் பெயர் என்று….
இதனால் ஏற்பட்டது தகராறு
நான் கூறினேன் கலாமின் வரலாறு
உண்மை உணர்ந்த நாயகன்
தலை வணங்கினான் ஏவுகனை நாயகன் முன்…….
                                ----- கீர்த்தி வாசன்.   



கலாம் காண விழையும் கதா நாயகர்கள்- (2015-16)



கலாம் காண விழையும் கதாநாயகர்கள்
எனது பத்தாம் வகுப்பு மாணவர்கள் கலாமின் பிறந்த நாள் முன்னிட்டு எழுதிய கவிதைத் தொகுப்புகள்(2015-16)

கனவே கனவே கலையாதே
கலாமின் கனவை கலைக்காதே
இந்தியாவின் அனைத்து கைகளும் சேர்க்கை
இதுவே எங்களது ஒரே கொள்கை
பணபலத்தினால் நாட்டில் நடக்கிறது கொள்ளை
பட்டி தொட்டியெங்கும் நெஞ்சில் நிறுத்தினாய் உனது சொல்லை
கண்டதைக் கற்கும் பண்டிதர்கள்
கலாமின் தொழில் நுட்ப வல்லுனர்கள்
தரமிக்கக் கல்வியைப் படிக்க வைத்தாய்
தார்மீகக் கல்வியைப் புரிய வைத்தாய்
இளைஞர்கள் ஒவ்வொருவரும் உனக்குள் ஒருவன்
இளைஞர் நெஞ்சில் நீ என்றும் தனி ஒருவன்.
                        ---- நவமோகன கிருஷ்ணன்.

மாணவர்கள்  இந்த உலகின் மிகப் பெரிய சக்தி
நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவது மாணவர்களின் புத்தி
அவர்கள்தான் எதிர்கால கதாநாயகர் என்பது யுக்தி.
நமது  நாடு விதை போன்றது
அதனை வளர்த்து பாதுகாப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
மாணவர்களே சிறந்த கல்வி பெற வேண்டும்
உங்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்
நீ கனவு கண்டாய் நேற்று
அதனை நிறைவு செய்ய வேண்டும் இன்று
இந்தியா ஒரே குடும்பம் என்று நினையுங்கள்
உங்கள் கடமையை ஆற்றுங்கள்.
                                ---- அதிதிப்ரியா

காலத்தை வென்ற கலாம்
உமக்கு நாங்கள் சொல்கிறோம் சலாம்
நீ கனவு கண்டதோ எங்களைப் பற்றி
நாங்கள் எடுத்துச் செல்வோம் உன் பெயரை உயர்த்தி
 நாங்கள் வைத்தோம் உன்னை முன் மாதிரியாக
உங்கள் கருத்தை ஏற்று நடப்போம் உறுதிமொழியாக
நீ தழ்வாய் இந்தியாவின் பொக்கிசமாக
உன் ஆசையை நிறைவேற்றுவோம் நிச்சயமாக
நீ கூறியதோ எங்களைக் கனவு காணுங்கள் என்று
அந்தக் கனவை செயல்படுத்துவோம் இன்று
கலாம் காண விழையும் கதாநாயகர்கள்
நாம் உருவாக்குவோம் நாளைய சாதனையாளர்கள்.
                           பி.வி.யாமினி

இந்தியாவின் விதைகளே !!!!
நாம் கலாம் காணும் கதாநாயகர்களே
நாம் னாட்டின் முத்தாக இருக்க வேண்டும்
சமுதாயத்தின் நினைவாக இருக்க வேண்டும்
அறிவியல்,கணிதம்,ஆங்கிலம்,விளையாட்டு என
அனைத்திலும் அனைவரும் செய்திட நீ மாறு
நாட்டின் திருமூலமாகப் படையேறு நீ
உலகத்தின் வைரமாக விலையேறு
இதுவே கலாமின் ஆசை - அதில்
நீ  நிற்க வேண்டும் முதல் வரிசை
அவர் சொல்லை பின்பற்று முன்னேற்ற
நீ நம் நாட்டை அடுத்த படியில் ஏற்ற….
n  க. அர்ஜுன் பரத்

மாணவர்கள் நம் நாட்டின் கண்கள்
அவர்களிடம் இருக்க வேண்டும் நல்ல பண்புகள்
இதனால் வகுக்கப்படும் நல்ல பாதைகள்
அதனால் வராது கொடுமையான சோதனைகள்
உழைக்கலாம்,மதிக்கலாம்,படிக்கலாம்
இதுபோன்ற வார்த்தைகளில் நீங்காமல் வாழலாம்
இதனை நமக்குப் போதித்தவர் அப்துல்கலாம்
கலாம் நம்மிடம் காட்டினார்  நேசம்
கைமாறாக நாம் உருவாக்க வேண்டும் தேசம்.
                                --- அம்ருதா.மு

கலாம் காண விழையும்  தேசம் – அதை
நிறைவேற்ற தேவை நம்  நேசம்
அவர் கனவை நிறைவேற்றுவது நமது கடமை
தவறினால் அது உன் மடமை
குழந்தைகளை  நேசிப்பதில்
இவர் நேருக்கு நிகரானவர்
இளைஞர்களைக் கவர்வதில்
இவருக்கு நிகர் இவரானவர்
கலாம் கண்ட கனவை நிஜமாக்குவோம்
கதாநாயகர்களாய் உருவாகுவோம்.
                                ___ ஆ.பிரித்தி

கனவு கனவு என்பதோ உனது கொள்கை
அதை நிறைவேற்றுவதே எமது கொள்கை
2020-ல் இந்தியா மாறும் வல்லரசு
மாணவர்களாகிய நாம் கொட்டுவோம் முரசு
அக்னிச் சிறகுகளாய்ப் பறக்கிறோம் நாங்கள்
உங்கள் கனவை நினைவாக்குவோம் நம்புங்கள்
கனவுகளைப் புயல் அடிக்கும்போதுப் பிறக்க விடாமல்
மழைச்சாரலின்போது விதைக்க விடுவோம்
கதாநாயகர்களாய் மட்டும் இல்லாமல் கனவு கலையும் முன்
அக்கனவை நனவாக்கும் நாயகர்களாயும் வாழ்வோம்
கலாமின் வாழ்க்கையோ ஒரு சரித்திரம்
மாணவர்களுக்கு என்றும் ஒரு உதாரணம்
                                     ----தி.வி.தேஜஸ்வி


  

  

Sunday, November 22, 2015

சுழல் தேர்வு - மாதிரி பயிற்சி வினாத்தாள் - 1(SA2)





சின்மயா வித்யாலயா மேனிலைப் பள்ளி,சென்னை-92.
தமிழ் - சுழல் தேர்வு – 1 (SA -11)    [2015-2016]
மாதிரி பயிற்சித் தாள் – 1   மதிப்பெண்: 45           கால அளவு: 1.30 மணித்துளிகள்

I.            விடையளி (ஏதேனும் ஒன்று)                                                                                                         (4)
       1.          புலி வசனித்த படலத்தின் கருத்துகளைத் தொகுத்து எழுது?
       2.          பெரியாரைத் துணையாகக் கொள்வது குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுது?
II.            விடையளி (ஏதேனும் ஒன்று)                                                                                                         (5)
       1.          தமிழன் அறிவியல் முன்னோடி என்பதை விளக்குக?
       2.          அறவழி விடுதலைப்போர் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக?
III.            கடிதம்                         (ஏதேனும் ஒன்று)                                                                                                         (6)
       1.          தேர்வில் வெற்றி பெற்ற நண்பனைப் பாராட்டிக் கடிதம்
       2.          குடிநீர் வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம் வரை.
IV.            துணைப்பாடம்       (ஏதேனும் ஒன்று)                                                                                                         (7)
       1.          குறட்டை ஒலி கதையை கரு மாறாமல் சுருக்கி வரைக?
       2.          இலிண்ட்கிரன் பண்பு நலன்கள் குறித்துக் கட்டுரை வரைக?
V.            அறிக்கை                   (ஏதேனும் ஒன்று)                                                                                                         (4)
       1.          மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
       2.          குழந்தைகள் நாள் விழா
VI.            செய்யுள் பொருளுணர் திறன்                                                                                                        (4 X 1 = 4)
‘தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்..’
வினாக்கள்:
          1.          இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
அ) தமிழ்விடுதூது             ஆ) சீறாப்புராணம்  இ) குறள்            ஈ) தேவாரம்
          2.          ஆசிரியர் பிறந்த ஊர்?
அ) தாராசுரம்                 ஆ) தருமபுரி                      இ) திருவாரூர் ஈ) திருப்பூர்
                                               
          3.          ஆசிரியரின் காலம் ____________?
அ) கி.பி. 7                          ஆ) கி.பி. 8                                  இ) கி.பி. 5        ஈ) கி. பி. 6
          4.           நடலை - ________ பொருள் தருக?
அ) நினைக்காதே          ஆ) துன்பம்                      இ) நுதல்                            ஈ) குற்றம்


இலக்கணம்
VII.            நிரப்புக:                                                                                                                                                     (3 X 1 = 3)
          1.          மார்கழி,தை ______ காலத்திற்குரியன?
அ) பின்பனி                     ஆ) முன்பனி                   இ) கார்                               ஈ) குளிர்
          2.          மருதத்தின் சிறுபொழுது ________
அ) யாமம்                     ஆ) மாலை                       இ)  நண்பகல்            ஈ)வைகறை
          3.          அகம், புறம் என்பன _________
அ) சொல்லிலக்கணம்                                ஆ) அணியிலக்கனம்
இ) பொருளிலக்கணம்                              ஈ) எழுத்திலக்கணம்
VIII.            சான்று தருக:                                                                                                                                           (3 X 1 = 3)
          1.          மருத நிலத் தெய்வம்
அ) முருகன்                      ஆ) திருமால்                    இ) இந்திரன்          ஈ) வருணன்
          2.           நெய்தல் நில ஊர்
அ) பேரூர்                       ஆ) பட்டினம்     இ) பாக்கம்             ஈ) சிறுகுடி
          3.          முல்லை பூ
அ) தோன்றி                     ஆ) தாமரை               இ) தாழை            ஈ) குரவம்                            
IX.            கூறியவாறு மாற்றுக:                                                                                                                           (3 X 1 = 3)
          1.          மாற்றரசனோடு போரிடல்                     [வஞ்சியாக மாற்று]
அ) எதிரூன்றல்                                      ஆ) வட்கார் மேற்செல்வது
இ) அது வளைத்தல்                                     ஈ) அதிரப் பொருவது
          2.          புறத்திணை                      [ வகை ]
அ) பன்னிரண்டு            ஆ) பத்து                            இ) ஏழு              ஈ) ஐந்து
          3.          செரு வென்றது                              [எத்திணை]
அ) வெட்சி                        ஆ) கரந்தை                      இ) காஞ்சி            ஈ) வாகை
X.            இலக்கணக் குறிப்பு தருக:                                                                                                                (3 X 1 = 3)
          1.          வெட்சி
அ) நிரை மீட்டல்                          ஆ)  நிரை கவர்தல்
இ) எதிரூன்றல்                              ஈ) எயில் காத்தல்
          2.          மதில் போர் பற்றிய புறத்திணைகள்
அ) வெட்சி-கரந்தை                                     ஆ) வஞ்சி-காஞ்சி
இ)   நொச்சி-உழி ஞ                     ஈ) தும்பை-வாகை
          3.          கைக்கிளை
அ) பெருந்திணை                                   ஆ) பாடாண்திணை
இ) பொதுவியல் திணை                        ஈ) ஒருதலைக்காமம்
XI.            சரியான சொற்றொடரைத் தேர்வு செய்:                                                                  (3 X 1 = 3)
          1.          அ) உலகியல் கூறுகள் என்பன அகப்பொருள்
ஆ) உலகியல் கூறுகள் என்பன புறப்பொருள்
இ) உலகியல் கூறுகள் என்பன அக-புறப்பொருள்
ஈ) உலகியல் கூறுகள் என்பன எதுவுமில்லை
          2.          அ)பாலை நிலத்திற்குரிய பறவைகள் கிளி-மயில்
ஆ) பாலை நிலத்திற்குரிய பறவைகள்  நாரை-அன்னம்
இ) பாலை நிலத்திற்குரிய பறவைகள் புறா-பருந்து
ஈ) பாலை நிலத்திற்குரிய பறவைகள் மயில்-கோழி
          3.          அ) முதற்பொருள் என்பன நிலம்-பொழுது
ஆ) முதற்பொருள் என்பன அகம்-புறம்
இ) முதற்பொருள் என்பன கரு-உரி
ஈ) முதற்பொருள் என்பன அனைத்துமே.

சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 23.11.15 . 

Translate