Search This Blog
Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts
Friday, June 5, 2020
Sunday, September 30, 2012
எனக்குப் பிடித்த கதை
"நாம் வெற்றி பெற"
இரு குட்டித் தவளைகள் ..குதித்து விளையாடிக்கொண்டிருந்தன...அவற்றிற்கு அருகே ..ஒரு ஆழம் அதிகமான பாத்திரத்தில் பால் பாதி அளவு இருந்தது.
தாவிக் குதித்த இரண்டு தவளைகளும் பாலில் விழுந்தன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்க முடியாது என்று நம்பியது ஒரு தவளை...இது மிகவும் அவநம்பிக்கை கொண்டது. ஆதலால்..தப்பிக்க முயற்சி ஏதும் செய்யாது ..பாலிற்கு அடியில் போய் உயிரை விட்டது...
மற்ற குட்டித் தவளையோ நம்பிக்கை உள்ளது. பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும் அடித்து உதைத்தது.நீச்சல் போட்டது...உந்தி..உந்தி கலக்கியது. பால் கலங்க ஆரம்பித்து அதில் ஆடை படர்ந்தது...மேலும்..மேலும் .. அதை தவளை உதைக்க..சிறிது..சிறிதாக வெண்ணைய் பந்து போல உருண்டு பாலில் மிதந்தது.
நம்பிக்கை கொண்ட தவளை வெண்ணைய் மீது சற்று அமர்ந்து இளைப்பாறி...பின் வெளியே தாவிப் பாய்ந்தது...
எந்த சந்தர்ப்பத்திலும்
நம்பிக்கையை இழக்காதவன் தோல்வியை சந்திக்கமாட்டான்...
நாம் ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமானால் நம்பிக்கையுடன் அக்காரியத்தில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்
Wednesday, January 5, 2011
கலைஞரின் குறளோவியம்
வீதியில் பசு ஒன்று, தனது கன்றுடன் போய்க்கொண்டிருந்தது. கன்றுக் குட்டி தாயைச் சுற்றி சுற்றி ஓடியும், தாயுடன் நடந்தும் அந்த வீதியில் சென்ற அனைவரையும் கவர்ந்தது; தன்னை விட்டு விலகி அந்த கன்று தொலைவில் போய்விடக் கூடாது என்பதிலே தாய்ப் பசு கண்ணும் கருத்துமாய் இருந்தது, கன்றுக்குட்டி மான் போல துள்ளி வீதிக்கு நடுவே ஓடும், பசுவோ அப்படியே நின்று அதையே உற்றுப் பார்த்துக்கொண்டு தனது கூரிய கொம்புகளைக் காட்டி முட்டுவது போல பயமுறுத்தும், தாயின் கோபத்தைப் புரிந்து கொண்ட இளங்கன்று உடனே அதன் அருகே துள்ளி வரும். பசு, தனது நாவினால் கன்றின் உடலைத் தடவிக் கொடுக்கும்.Tuesday, December 21, 2010
கலைஞரின் குறளோவியம்
ஒருநாள் மாலைப்பொழுது! ஏரிக்கரை ஓரமாக வள்ளுவர் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். ஆழ்ந்த சிந்தனை. சற்று நிற்பார். மீண்டும் நடப்பார். அவரைக் கடந்து இருவர் ஏதோ வாயாடிக்கொண்டு போயினர்.
"யாரப்பா இந்த ஆள்? எப்போது பார்த்தாலும் ஏரிக்கரை, குளக்கரை, மலைப்பாறை என்று அலைந்து கொண்டேயிருக்கிறான்; வானைப் பார்க்கிறான்; பூமியைப் பார்க்கிறான்; நெற்றியைச் சுருக்குகிறான், யார் இது?” இப்படி ஒருவன் கேட்க, மற்றொருவன் ஏளனமாக விளக்கமளித்தான், “வள்ளுவனாம்! அதிலும் சாதாரண வள்ளுவன் இல்லையாம்! திருவள்ளுவனாம்! சிந்திக்கிறானாம், அறநூல் எழுதுகிறானாம் கிறுக்கன்! எத்தனையோ பித்தர்களில் இவனும் ஒரு பித்தன்”.
Friday, November 26, 2010
கண்ணில் கால்
கண்ணப்ப நாயனாருடைய இயற்பெயர் திண்ணன். திண்ணன் என்ற வேடன்தான் கண்ணப்பராக மாறினான். கண்ணப்பன் வழக்கமாக காட்டில் ஒரு சிவலிங்கத்தைப் பூஜை செய்து வந்தான். அந்தப் பூஜை கூட காய்கறி வைத்து நடத்திய பூஜை அல்ல. அசைவ உணவை வைத்துப் படைத்து நாள்தோறும் வழிபட்டான்.
ஒரு நாள் அந்த சிவலிங்கத்தின் கண்ணில் இரத்தம் வழிந்தது. அதற்கு சிகிச்சை செய்ய ஏதேதோ மூலிகைகளையெல்லாம் முயன்று பார்த்தும் முடியவில்லை. பிறகு தன் கண்ணை ஒரே அம்பால் பெயர்த்து சிவலிங்கத்தின் கண்ணிலே அப்பினான்.
ஆனால் அந்த சிவலிங்கம், ஒரு கண்ணை அப்பி விட்டாரே, ஆளுக்கு ஒரு கண்ணாக இருந்து விட்டு போகட்டும் என்று நினைக்காமல் அவனை சோதிக்க வேண்டி இன்னொரு கண்ணிலிருந்தும் இரத்தம் வருமாறு செய்தார். உடனே வேறு வழியில்லாமல் தன்னுடைய இரண்டாவது கண்ணையும் பிடுங்கி, சிவலிங்கத்திற்கு வைக்க முற்பட்ட கண்ணப்பன், அந்த கண்ணையும் பிடுங்கி விட்டால் எங்கே வைப்பது? என்று தெரியாது என்பத்ற்காக அடையாளத்திற்காக சிவனுடைய பழுதுபட்ட அந்தக் கண்ணில் தனது செருப்பணிந்த காலை வைத்துக் கொண்டு தனது மற்றொரு கண்ணைப் பிடுங்கி அப்பினான்.
அவனின் அளவில்லா பக்தியை அறிந்த ஆண்டவன் மகிழ்ச்சியடைந்து இரு கண்ணிலும் அவனுக்கு ஒளிதந்தான். அவன் தான் 63 நாயன்மார்களில் ஒருவனான, கண்ணப்ப நாயனார் ஆவார்.

Tuesday, November 16, 2010
குறளோவியம்
அதிகாரம் - 53 சுற்றந்தழால் பாடல் - 527
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

பிள்ளையார் கோவில் வாசலில் ஐந்தாறு இளைஞர்கள் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஒரு பக்தர் தேங்காயுடன் வந்தார். விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்; அவர் கையில் இருக்கிற தேங்காய் சூறைத் தேங்காய் என்பதை புரிந்து கொண்டு!
பக்தர் பிள்ளையாரை வணங்கிவிட்டு, அந்தத் தேங்காயை அங்கிருந்த கருங்கல்லின் மீது ஓங்கி அடித்தார். அது சுக்கல் சுக்கலாகச் சிதறிற்று. இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்து சிதறிய தேங்காய்த் துண்டுகளை பொறுக்கிட முற்பட்டனர். சிலருக்கு தேங்காய்த் துண்டுகள்; ஓரிருவருக்கு உடைந்து போன ஓடுகள்! ஓரு இளைஞன் கையிலே மட்டும் பெரிய மூடி சிக்கியது! அதை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி தொலைவில் உள்ள பாழ்மண்டபத்தில் ஏறி நின்று முழுவதும் அவனே தின்று தீர்த்தான். ஒரு சிறு தேங்காய்த் துண்டு கூட கிடைக்காத இளைஞர்கள் ஏமாந்து போய் நின்றனர். எல்லோருமே ஏழை வீட்டு இளந்தளிர்கள்தான். வறுமையில் வதங்கிப் போனவர்கள்தான். பெரிய தேங்காய் மூடியைத் தின்றுவிட்டு; எதுவும் கிடைக்காதவர்களைப் பார்த்து பழிப்புக் காட்டிக் கொண்டிருந்த இளைஞனிடம் அந்த பக்தர் சென்றார்.
"தம்பி! நீ இப்படிச் செய்யலாமா? எவ்வளவு பிள்ளைகள் ஏங்கிப்போய் விட்டார்கள் பார்த்தாயா?"
என்று பரிவுடன் கேட்டார்.
"என் திறமை எனக்குக் கிடைத்தது! அவர்கள் கையாலாகாததனத்திற்கு நானா பொறுப்பு?" என்று அந்த இளைஞன் பதில் சொன்னான்.
அப்போது அருகில் உள்ள ஒரு பெரிய வீட்டு வாயிற்புறத்தில் நாலைந்து எச்சில் இலைகளை வேலைக்காரி வீசி எறிந்து விட்டுச் சென்றாள். ஒவ்வொரு இலையிலும் சில பண்டங்கள் எஞ்சியிருந்தன. அந்த இலைகள் தெருவில் விழுந்ததை பசியோடிருந்த ஒரு காக்கை பார்த்து விட்டது. பறந்து வந்து இலையிடம் அமர்ந்தது. அடுத்த வினாடியே அது "கா! கா!" என்று கரையத் தொடங்கியது. கூட்டமாகப் பத்துப் பதினைந்துக் காக்கைகள் வந்து சேர்ந்தன. அவை ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாமல் நிதானமாகவும் கட்டுப்பாடாகவும் அந்த இலைகளில் இருந்த பண்டங்களைத் தின்றன.
பக்தர் அந்த இளைஞனைப் பார்த்து சொன்னார், "தம்பி பார்த்தாயா? ஒரு சாதாரணப் பறவை இந்தக் காக்கை! இது கூடத் தனக்குக் கிடைத்த உணவை, அருந்தவேண்டுமென்ற எண்ணமில்லாமல் தன் இனத்தையே கூவியழைத்துப் பகிர்ந்துண்ணும் பண்பை பெற்றிருக்கிறது! இத்தகைய இயல்பு படைத்தவர்களுக்கே இந்த உலகில் உயர்வு உண்டு! எல்லாம் தனக்கே என்பவருக்கு ஆக்கமில்லை; அழிவேதான்! இதனை அறிந்து கொள்க தம்பி!" இப்படிக் கூறிவிட்டுப் பக்தர் சென்றதும் , அந்த இளைஞன்; தனது செயலுக்கு வருந்தி நாணித் தலை கவிழ்ந்து நின்றான்.
கதையின் நீதி:
"தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவியழைத்துக் காக்கை உண்ணும். அந்த இயல்புடையவர்க்கே உயர்வு உண்டு உலகில்." என்கிறது குறள்.
_________________________________________________________________
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

பிள்ளையார் கோவில் வாசலில் ஐந்தாறு இளைஞர்கள் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஒரு பக்தர் தேங்காயுடன் வந்தார். விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்; அவர் கையில் இருக்கிற தேங்காய் சூறைத் தேங்காய் என்பதை புரிந்து கொண்டு!
பக்தர் பிள்ளையாரை வணங்கிவிட்டு, அந்தத் தேங்காயை அங்கிருந்த கருங்கல்லின் மீது ஓங்கி அடித்தார். அது சுக்கல் சுக்கலாகச் சிதறிற்று. இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்து சிதறிய தேங்காய்த் துண்டுகளை பொறுக்கிட முற்பட்டனர். சிலருக்கு தேங்காய்த் துண்டுகள்; ஓரிருவருக்கு உடைந்து போன ஓடுகள்! ஓரு இளைஞன் கையிலே மட்டும் பெரிய மூடி சிக்கியது! அதை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி தொலைவில் உள்ள பாழ்மண்டபத்தில் ஏறி நின்று முழுவதும் அவனே தின்று தீர்த்தான். ஒரு சிறு தேங்காய்த் துண்டு கூட கிடைக்காத இளைஞர்கள் ஏமாந்து போய் நின்றனர். எல்லோருமே ஏழை வீட்டு இளந்தளிர்கள்தான். வறுமையில் வதங்கிப் போனவர்கள்தான். பெரிய தேங்காய் மூடியைத் தின்றுவிட்டு; எதுவும் கிடைக்காதவர்களைப் பார்த்து பழிப்புக் காட்டிக் கொண்டிருந்த இளைஞனிடம் அந்த பக்தர் சென்றார்."தம்பி! நீ இப்படிச் செய்யலாமா? எவ்வளவு பிள்ளைகள் ஏங்கிப்போய் விட்டார்கள் பார்த்தாயா?"
என்று பரிவுடன் கேட்டார்.
"என் திறமை எனக்குக் கிடைத்தது! அவர்கள் கையாலாகாததனத்திற்கு நானா பொறுப்பு?" என்று அந்த இளைஞன் பதில் சொன்னான்.
அப்போது அருகில் உள்ள ஒரு பெரிய வீட்டு வாயிற்புறத்தில் நாலைந்து எச்சில் இலைகளை வேலைக்காரி வீசி எறிந்து விட்டுச் சென்றாள். ஒவ்வொரு இலையிலும் சில பண்டங்கள் எஞ்சியிருந்தன. அந்த இலைகள் தெருவில் விழுந்ததை பசியோடிருந்த ஒரு காக்கை பார்த்து விட்டது. பறந்து வந்து இலையிடம் அமர்ந்தது. அடுத்த வினாடியே அது "கா! கா!" என்று கரையத் தொடங்கியது. கூட்டமாகப் பத்துப் பதினைந்துக் காக்கைகள் வந்து சேர்ந்தன. அவை ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாமல் நிதானமாகவும் கட்டுப்பாடாகவும் அந்த இலைகளில் இருந்த பண்டங்களைத் தின்றன.பக்தர் அந்த இளைஞனைப் பார்த்து சொன்னார், "தம்பி பார்த்தாயா? ஒரு சாதாரணப் பறவை இந்தக் காக்கை! இது கூடத் தனக்குக் கிடைத்த உணவை, அருந்தவேண்டுமென்ற எண்ணமில்லாமல் தன் இனத்தையே கூவியழைத்துப் பகிர்ந்துண்ணும் பண்பை பெற்றிருக்கிறது! இத்தகைய இயல்பு படைத்தவர்களுக்கே இந்த உலகில் உயர்வு உண்டு! எல்லாம் தனக்கே என்பவருக்கு ஆக்கமில்லை; அழிவேதான்! இதனை அறிந்து கொள்க தம்பி!" இப்படிக் கூறிவிட்டுப் பக்தர் சென்றதும் , அந்த இளைஞன்; தனது செயலுக்கு வருந்தி நாணித் தலை கவிழ்ந்து நின்றான்.
கதையின் நீதி:
"தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவியழைத்துக் காக்கை உண்ணும். அந்த இயல்புடையவர்க்கே உயர்வு உண்டு உலகில்." என்கிறது குறள்.
_________________________________________________________________
Friday, November 12, 2010
பொறுமைக்கு சான்று
நபிகள் நாயகம் மிக சாதாரணமான எளிய மனிதராகத்
திகழ்வார்.அவர் பெரிய மேதை என்றாலும்- பெருமகனார் என்றாலும்
கூட எளிய வாழ்க்கையில் பற்றும் பாசமும் கொண்டவர் என்ற
காரணத்தால் ஒரு குறிப்பிட்ட தெருவிலே ஒரு நாள் நடந்து
செல்லும்போது அவர் மீது வெறுப்புற்ற ஒரு மங்கை
மாடியிலேயிருந்து அவர் தலையிலே குப்பையைக் கொட்டுவது
வழக்கம்.ஒவ்வொரு நாளும் நாயகம் அங்கு வரும்போது
கூடையிலேயிருந்து குப்பை விழும்.அதை உதறிவிட்டு
நபிகள் நாயகம் தன்னுடைய பாதையிலே நடந்து
செல்வார்.
ஒரு நாள் அப்படி வரும்போது குறிப்பிட்ட அந்த
வீட்டுமாடியிலேயிருந்து குப்பை கொட்டப்படவில்லை.
நபிகள் நாயகத்திற்கு ஒரே ஆச்சரியம். திகைத்து நின்றார்.
அங்கே உள்ளவர்களைப் பார்த்து "தினந்தோறும் ஒரு அம்மையார்
என் மீது குப்பை கொட்டுவார்களே! அவர்கள் எங்கே ?" என்று
கேட்டார். "அவருக்கு உடல் நலமில்லை . அதனால்தான் அந்தக்
காரியத்தை அவர் இன்றைக்கு செய்யவில்லை" என்றனர்.
உடனடியாக மாடிப்படியிலே ஏறிச்சென்று அந்த அம்மையாரிடம்
உடல்நலம் விசாரித்து அவருடைய உடல் நலிவு தீர மருந்து
கொடுத்தார் .
இக்கதையின் நீதி:
நபிகள் நாயகம் போல் பொறுமை, அன்பு, அறவழி
நிலை கொண்டு நாமும் விளங்குவோமாக!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, November 1, 2010
...........கலைஞர் சொன்ன கதை........
சீற வேண்டாமா??????

ஒரு முனிவரிடத்தில் நல்ல பாம்பு ஒன்று சென்று முறையிட்டுக் கொண்டதாம். "என்னைக் கண்டால் எல்லோரும் பயப்படுகிறார்கள். எனக்குப் பெயர் 'நல்ல பாம்பு' என்று இருக்கிறது. ஆனாலும் என்னைக் கண்டு மக்கள் நடுங்குகிறார்கள். ஏன்?" என்று கேட்டதாம். முனிவர் சொன்னார், " நீ எல்லோரையும் கடித்து விடுகிறாய், நீ கடிக்கிற காரணத்தால் தான் 'நல்ல பாம்பு' என்று பெயர் இருந்தும் உன்னைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆகவே இனி நீ யாரையும் கடிக்காதே" என்று முனிவர் எடுத்துச் சொன்னார். பாம்பு போய் விட்டது.
சில மாதங்கள் கழித்து அந்த பாம்பு முனிவரைக் காண வந்தது. பாம்பின் உடல் எல்லாம் காயங்கள். "ஏன் இவ்வளவு காயப்பட்டு வந்திருக்கிறாய்?" என்று கேட்டார். பாம்பு சொன்னது "உங்கள் சொற்படி நான் யாரையும் கடிக்காமல் இருந்தேன். அதனால் என்னைப் பார்த்தவர்களெல்லாம் அடி அடி என்று அடித்தார்கள். அதனால் ஏற்பட்ட காயங்கள்தான் இவை" என்று கண்ணீர் வடித்தது.

முனிவர் சொன்னாராம்: "உன்னைக் கடிக்கக் கூடாது என்றுதான் சொன்னேனே தவிர, ஒரு சீறு சீறி காட்டக்கூடாது என்றா சொன்னேன். கடிக்க வேண்டாம், அதற்காக உன்னை அடிக்க வந்தவர்களைப் பார்த்து ஒரு சீறு சீறி இருந்தால் உன்னை அடிக்காமல் இருந்திருப்பார்கள் அல்லவா, நீ கடிப்பதை மறந்து விடு. ஆனால் சீறுவதை மறந்து விடாதே" என்று முனிவர் சொன்னாராம்.
இக்கதையின் நீதி:-
நல்லவனாக இருக்கலாம். ஆனால் கோழைகளாக இருந்து விடக் கூடாது. சாதுவாக இருக்கலாம்; பரம சாதுக்களாக இருந்துவிடக் கூடாது. தீமைகளைக் கண்டு பொங்குகிற இதயம் நிச்சயமாகத் தேவை.

Subscribe to:
Posts (Atom)