Search This Blog
Thursday, September 21, 2017
ஆசிரியர் தினம் (2017)
ஆசிரியர் தினம் –
(2017)
புத்தம் புது
விடியலாய்
பொங்கி வரும்
அருவியாய்
என்றும்
என்றென்றும்
மாணவர்களின்
மனதில்
நீங்காது
கொலுவிருக்கும்
குறிஞ்சி
மலர்களே!
என் மனதில்
நிறைந்த
சிம்ம
சொப்பனங்களே!!
நீரே எம்
வாழ்வின்
முதல் வசந்தமே!!!
வாழ்க்கையின்
முதல் அடித்தளமே!!
உம்மைக் கண்ட
இக்கண்கள்
மறுவார்த்தைப்
பேச மறுக்கிறது
மாயை உலகைக்
கணிக்க வைக்கிறது
கற்பிப்பது
மட்டும் உன் கனவல்ல
கற்றவர் வாழ கரை
சேர்க்க
கலைமகளாய்
உறைபவளும் நீ
விடியலை
உணர்த்தும் பூபாள ராகம் நீ
வெம்மையைக்
களையும்
இளந்தென்றலும் நீ
வகுப்பறை வாசலின்
வாழ்வியலும் நீ
வானோரும்
போற்றும்
வையை நாடனும் நீ
உம்மை நினைத்தல்
பொங்குகிறது
பொங்கு தமிழ்
பொறுப்பை
உணர்ந்து செயலாற்றும் உன் அரிய பணி
ஆயிரமாயிரம்
நட்சத்திரங்கள்
வானில்
சஞ்சரித்தாலும்
அழகிய விண்மீனாய்
அரங்கேறும்
அண்ணலே..
உம்மை உன் பணியை
உள்ளம் உணர்கிறது
உரிமையோடு உறவை
ஏற்படுத்துகிறது
உன்னையன்றி பிற
துறை இல்லை
உன்னாலன்றோ நான்
நானாக உள்ளேன்
காவியமாகலாம்
ஓவியமாகலாம்
நீர் ஒருவரே
கடவுளாகலாம்!!!!
தமிழ்த் தாய்(2017
தாய்க்குத்
தாலாட்டுப் பாடுவது
ஒரு
சிலரின் தனிச் சிறப்பு….
தாய்த்
தமிழுக்குத் தொண்டு செய்வது
பண்டிதர்களின்
பழஞ்சிறப்பு
தாய்நாட்டிற்கு
வாழ்த்துப் பாடுவது
விஞ்சியோரின்
பெருஞ்சிறப்பு. – இதைவிட
என்
தமிழ்த் தாய்க்கு நான் எழுதும்
இக்கவிதையே
என் சிறப்பு!
தமிழே!
தாயே!
கருவறையில்
எமை பள்ளி கொள்ளச் செய்ததும் நீயே!
கார்மேகமாய்
கவிதை மழை அளிப்பவளும் நீயே!
குமரிக்
கண்டத்தின் முதல் தோற்றமும் நீயே!
கூடலழகரின்
முதன்மைத் தாயும் நீயே!
முத்துக்
குளித்த தென்மதுரையில்
வளர்ந்தவளும்
நீயே!
மூதாதையரின்
வழித் தோன்றலுக்குத்
தாயானவளும்
நீயே!
நக்கீரனின் நாவினில் உழன்றவளும் நீயே!
பிறப்பு
முதல் இறப்பு வரை
பரிணாம
வளர்ச்சியாய்
பவனி வந்தவளும் நீயே!
பல
நாடுகள் கடந்து பயணிப்பவளும் நீயே! நீயே!!
தாயே!!!
என் தமிழ்த்தாயே!!! – என்னை
காதல்
மொழி பாட வைத்தவளும் நீயே!
காதலுக்குத்
தூது சென்றவளும் நீயே!
கவிதை
எழுத வைத்தவளும் நீயே!
என்
காதலன் நாவினில் தமிழ்த்தாய்
என
நவின்றவளும் நீயே!
உம்மேல்
பித்தன்போல்
அலைய
வைத்தவளும் நீயே!
பிதாமகனை
எனக்கு
அறிமுகம்
செய்தவளும் நீயே!!
உடல்,
பொருள் ஆவியாய்
உழல்பவளும்
நீயே!
உணர்வாய்,
உறவாய் என்னுள்
உறைந்திருப்பவளும் நீயே!
உனக்கு
அரியாசனம் அமைக்க எம்மை
இணைத்தவளும்
நீயே!
ஊழ்வினைப்
பாராது உதவ
எங்களுக்கு
உந்துதலாய்
இருப்பவளும் நீயே!
உண்மையின்
உருவத்தை
அடையாளம்
காட்டியவளும் நீயே!
தரணியில்
நான் வாழ
தலைவனை
எனக்குத் தந்தவளும் நீயே!
என்
உயிரே!! உடலே!!!
நீயே!!! நீயே!! – என்றும் என்றென்றும்
என்
தாகத்தைத் தணிக்கும் தமிழ்த்தாயே!!!!
சித்ரா K ஆகாஷ்.
அச்சு குட்டி (2017) பிறந்த நாள் பாடல்
பாடியது: யுக பிரியா ... என் அருமை மாணவி(ஒன்பதாம் வகுப்பு)
இசை: என் அன்பு மாணவன் சந்தோஷ் (ஒன்பதாம் வகுப்பு)
எழுதியது : என் கை வண்ணம்
அச்சு குட்டி பிறந்த நாள்(2017)
பாடியது எனது அருமை மாணவி யுக பிரியா(ஒன்பதாம் வகுப்பு)
இசை: என் அன்பு மாணவன் சந்தோஷ்(ஒன்பதாம் வகுப்பு)
Sunday, June 25, 2017
Friday, March 10, 2017
Thursday, March 9, 2017
Wednesday, March 8, 2017
Tuesday, March 7, 2017
Monday, March 6, 2017
Sunday, March 5, 2017
ஒன்பதாம் வகுப்பு - இலக்கணம் மற்றும் செய்யுள் (2017)
அன்பு மாணவச் செல்வங்களே ...
அனைத்து இயலுக்குமான பயிற்சி அமைந்துள்ளது... இதில், தங்களுக்கு தற்பொழுது இருக்கும் இயல் வாரியாக தேர்ந்தெடுத்து பயிற்சி மேற்கொள்ளவும்... கீழ்க்காணும் link ஐ கிளிக் செய்து நகல் எடுத்து பயிற்சி மேற்கொள்ளவும்.
https://drive.google.com/drive/my-drive
Friday, March 3, 2017
வழியனுப்பு விழா மடல்(2016-2017)
என் வாழ்வில்
வசந்தமாய் வந்த வசந்தங்களுக்கு வழியனுப்பு விழா மடல்(2016-2017)
வழிகாட்டியாய்
வந்தேன் …
வசமாக்கி விட்டீர்.
தவறாமல் தந்தீர்.
கற்பாறையாய் இருந்த
என் மனதை…
கனிய வைத்தது இந்தக்
கருவறை!
காவியம் படைக்க
வேண்டுமென்று நினைக்கையில்….
ஓவியமாய் ஒளிர்
விட்டீர்!!!
ஒவ்வொன்றாய் நினைக்கையில்
…
ஓராயிரம் நினைவலைகள்….
கண்முன்னே கசிந்துருகையில்…
காரணமில்லாமல்
உம்மை நோக்கினேன்.
கள்ளம் கபடமில்லா
காதலர்களை – இன்று
என் கரங்கள் நழுவ
விடுகிறதென்று….
நழுவலின் காரணத்தைக்
கண்டறிந்தபோதுதான்
தெரிந்தது - அன்று
விண்ணை வெற்றி
கொள்ள இன்று புறப்பட்டது என்று…. அதுமட்டுமின்றி
விருட்சம் கொள்ளத்தானே
விரைகிறார்கள்
விசாலமான மனதோடு
என்று எண்ணியது. ….மீண்டும்
விதைத்த வித்து
என்னுடையதாக இருந்தாலும்
விருப்பம் என்ற
விரி இதழ்கள் அவர்களுடையது என்பதை
உணர்ந்தேன் … உறவாய்
.. உணர்வால் கலந்தேன்..
என் வசந்தங்களே!!!
நான் உம்மை விட்டு விலகிச் செல்லவுமில்லை....
நீங்கள் என்னை விட்டு விலகிச் செல்லவுமில்லை....
வெற்றி
பெறவே என் விழிநீர் வழியாய் அனுப்புகிறது.
நான் அனுப்பும் இவ்வழி அனுப்பு விழாவானது…
என் வழியைப் பின்பற்ற வேண்டுமென்றோ? அல்லது
என் வலியை உணர வேண்டுமென்பதோ அன்று….
அதனையும் தாண்டி,
என் விழியே நீர்தான்!!!!
உனக்குள் நான்தான்!!!!!
என்பதை உணர்த்தவே வழி அனுப்புகிறேன்.
நான் உன்னுள் இருப்பதால்….
உன் விழிக்கு விந்தைகளும்,
வியத்தகு சாதனைகளும்
ஆற்றத் தெரியுமே
தவிர, புரியாத புதிராக அன்று….
புத்திமான் பலமானைப்
பெற்ற என் மனமும்
உங்கள் வசமே சென்று
கொண்டிருக்குமே அன்றி
அதைவிட வேறு வசம்
ஒன்றுமில்லை..
இதுதான் அருள்
கடவுள் எனக்களித்த அருட்கொடை..
அதைவிட, வகுப்பில்
இந்த ஆண்டு,
என் குரலுக்குச் செவி சாய்த்த மாணவர்களும் உண்டு…
செவிடர்களாய்ச்
செம்மையாய்
வகுப்பை முடித்தவர்களும் உண்டு
உறவு பலப்பட்டதும்
உண்டு..
உண்டு இல்லை என்று
ஒரு கை பார்த்ததும் உண்டு…
அம்மா என்று அழைத்ததும்
உண்டு…
அங்கலாய்ப்பு செய்து
என் அரியணையில் அமர்ந்ததும் உண்டு..
அழகிய செஞ்சொற்களால்
பேசியதும் உண்டு…
அதே அழகிய செஞ்சொற்களால்
என்னை வசை பாடியதும் உண்டு.
ஆறுதல் கூறிய அழகிய
தோழிகளும்
இவ்வகுப்பில் இருந்ததுண்டு..
ஆற்றுப்படுத்த
முடியாத
வானரப்படைகளும் இங்கு இருந்ததை
என் இதயம் அறிந்ததுண்டு…-
இருப்பினும்
கணையாழி கொடுத்து
கலங்காது இருக்கச் செய்த
கடவுள் போன்று ......
எனக்குக் கருத்துச் சொன்னதுமுண்டு..
என்ன இருப்பினும்,
அவர்கள் மனதை விட்டு நான் பிரிந்ததுமில்லை..
என் மனதை விட்டு
அவர்கள் பிரிந்ததுமில்லை..
அதுதானே உறவு!
அதுதானே நட்பு!!
நாம் இன்று ஒருவரை
ஒருவர் பார்த்து
கண்ணீர் விடும்
காட்சியை இரசிப்பதற்குப் பதில்….
பஞ்சு போண்ற உங்களின்
பரமபத பாதையில்
சறுக்கலின்றி சரியானப்
பாதையைத் தேர்ந்தெடுத்து
வெற்றி கொள்க!!!
சாலை இளந்திரையன்
கூறியதுபோல்,
எத்தகைய இன்னல்கள்
வந்தாலும்
இன்முகத்தோடுஎதிர்கொள்!!!!
எந்த வேலையினும்
துணிந்து செய்க!!
எண்ணித் துணிக
கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது
இழுக்கு. .. என்பதை கவனத்தில் கொள்க!!
நாம் அனைவருமே
ஒரு சூழ்நிலைக் கைதிகள்தான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின்
நம்பிக்கையைக்
காப்பாற்ற வேண்டும்
என்று எண்ணியே…
நாட்களை நகர்த்திக்
கொண்டு இருக்கிறோம்..
அவ்வாறின்றி,
நீ நீயாக இரு!
பிறருக்கு நிழலாய் இரு!!
நிர்பந்தம் செய்யாதே!!!
நிற்கதியாய் செல்லாதே!!
நித்திரையில் நாட்களைக் கடத்தாதே!!!
நடுநிசி பாராது நற்காரியங்களைச் செய்ய முற்படு!!!
முந்தானையில் தூளி
கட்டியும்,
முத்தத்திலே தாலாட்டிய
உன் தாய்க்குப் பாரமாக இராதே!
பண்போடு வாழவும்
பார்போற்ற உன்னை ஆளாக்க நினைக்கும்
தந்தையையும் மறவாதே!!!
கடவுள் என்பவன்
கடந்து நிற்பவன்.
கருவறையில் உன்னைச்
சுமந்தவர்களோ
கரிசணையிலே வாழ்பவர்கள்!!
– இதில்
எது கடவுள் என்பதை
உணர்ந்து செயல்படு!!
இக்கரிசணைக் கடவுளுக்கு,
முளைப்பாறி வைத்தும், முழு பத்தியம் இருந்தும்
வணங்க வேண்டும் என்பதில்லை…
முத்தான உன் நம்பிக்கை வரிகளையும்
செயல்களையும் அவர்களுக்குச்
சொந்தமாக்கு!!!.
அதுவே நீ முழு
நிலவாய் ஒளிர் விட வழி வகுக்கும்…
உன்னை உணர்!!!
உலகத்தை உணரலாம்!!
எனக்கு, ஆலயம்,
கடவுள், எல்லாமே நீங்கள்தான்!!!
ஆதலால், உம்மிடமே
என் பிரார்த்தனை…
என் மாணவக் கண்மணிகளே…….
இருகரம் கூப்பி
வேண்டுகிறேன்…
நம்பிக்கை முத்துகளை
அள்ளித் தாருங்கள்!!!
தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு ……….
தங்கங்களுக்கு
விடை தருகிறேன்…..
.
Wednesday, February 22, 2017
பத்தாம் வகுப்பு - தமிழ் வினா வங்கி
அன்பு மாணவச் செல்வங்களே!!
இரண்டாம் தொகுநிலைத் தேர்விற்குப் பயன்படும் வகையில் வினா வங்கி கொடுக்கப்பட்டுள்ளது... நகல் எடுத்துப் பயிற்சி செய்து கொள்ளவும். ⬳Ҝ
https://drive.google.com/drive/my-drive
Wednesday, February 8, 2017
SA - 2 REVISION (2017)
அன்பு மாணவச் செல்வங்களுக்கு, இரண்டாம் தொகுநிலைத் தேர்விற்கான திருப்புதல் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. நகல் எடுத்து பயிற்சி செய்து கொள்ளவும்.
https://docs.google.com/document/d/1XGmha5xeDRVWQvQy6YxdhLwa_vOqQDquNaWsBk0Tps8/edit
https://docs.google.com/document/d/1XGmha5xeDRVWQvQy6YxdhLwa_vOqQDquNaWsBk0Tps8/edit
Saturday, January 14, 2017
பொங்கல் மடல்-2017
பொங்கல்
வாழ்த்து – 2017
தைத்திங்கள் முதல் நாளாம்
தரணியெல்லாம் செழித்து வந்த
தங்க மகள் தளிர் நாளாம் (திருநாளாம்)
மார்கழியின் மகளானாய் – நீ
மங்கலத்தின் உறவானாய்
மும்மாரியில் வளர்ந்த நீ
மூவுலகின் வசமானாய் (திருநாளாம்)
தை தை ஓசையோடு
வைகறையில் பிறக்கக் கண்டு
மனதில் நின்ற மார்கழியும்
முடிவு எடுத்ததன்றோ (திருநாளாம்)
புத்தாக்கச் சிந்தனையை
மண்ணில் விதைத்ததன்றோ
பூப்போன்ற புன்னகையுடன்
புதுப்பாவை படைத்ததன்றோ
தையல் நாயகியாய்…
தைப்பாவை பிறந்ததன்றோ (திருநாளாம்)
புதுப்பானை கொண்டேத்தி
புத்தரிசி அதிலே இட்டு
மஞ்சளும் இஞ்சியும் அதன் கழுத்தை அலங்கரிக்க
மாங்கல்யம் பூண்டது போல் மங்கலமாய் மலந்து
நின்றாள் (திருநாளாம்)
இயற்கையின்பால் வந்ததனை
இரவிக்கே படைத்தருள்ந்து
இயற்கையைக் காப்போம் என்று
இரவியை வணங்கினரே (திருநாளாம்)
திரு நாளாம் திருநாளாம்... பொங்கல் பாடல்
இப்பாடலின் கை வண்ணம் சித்ர கலா( நானே) இதற்கு அழகிய இசை அமைத்துக் கொடுத்தவர்.. பாட்டு ஆசிரியர் திருமதி, லலிதா கண்ணன்.
Subscribe to:
Posts (Atom)