Search This Blog

Showing posts with label 9 th Study Materials & Model Q. Papers. Show all posts
Showing posts with label 9 th Study Materials & Model Q. Papers. Show all posts

Sunday, May 24, 2020

ஒன்பதாம் வகுப்பு இயல் - 2 புற நானுறு

ஒன்பதாம் வகுப்பு

இயல் - 2

புற நானுறு


ஒன்பதாம் வகுப்பு இயல் - 1 தமிழ் வரிவடிவ வளர்ச்சி



ஒன்பதாம் வகுப்பு

இயல் - 1

தமிழ் வரிவடிவ வளர்ச்சி


Friday, May 22, 2020

இயல் – 6 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


இயல் – 6

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


ஆசிரியர்: குமர குருபரர்
செங்கீரைப்பருவம்எட்டாவது பாடல்
பிள்ளைத் தமிழ்:
இறைவனையோ……..
தலைவனையோ …….
அரசனையோ……….
பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, குழந்தையாகக் கருதி………
செயற்கரிய  செயல்களை எடுத்தியம்புதல்.
2. பிள்ளைத்தமிழ்

   •96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
   •பத்து பருவம்பத்து பாடல் = 100
   •இரு வகைப்படும்.
   ஆண்பால் பிள்ளைத்தமிழ்
    பெண்பால் பிள்ளைத் தமிழ்
3.ஆண்பால் பிள்ளைத் தமிழ்
ஆண்பால் – 10
1.காப்பு             

2.செங்கீரை          8. சிற்றில்
3.தால்                        9. சிறுதேர்
4.சப்பாணி            10. சிறுபறை
5.முத்தம்
6.வருகை
7.அம்புலி
                      4.பெண்பால் பிள்ளைத் தமிழ
                                    பெண்பால் – 10
காப்பு                              கழங்கு
செங்கீரை                   அம்மானை
தால்                               ஊசல்
சப்பாணி
முத்தம்
வருகை
அம்புலி
                 ஆண்பெண்(ருபாலார்)
காப்பு
தால்
செங்கீரை
சப்பாணி
முத்தம்
வருகை
அம்புலி
                      காப்பு
              •காப்புமூன்றாம் மாதம்
பாட்டுடைத் தலைவனை
(அல்லது)
தலைவியைக் காத்தருளுமாறு
இறைவனைவேண்டிப்பாடுவது
                                   செங்கீரை
                      •செங்கீரை – 5 – 7 ஆம் மாதம்
ஒரு காலை மடித்து
ஒரு காலை நீட்டி
இரு கைகளையும் ஊன்றிக்
கீரை அசைவது போலக் குழந்தையை,
செங்கீரை ஆடுமாறு வேண்டுவது..
                                                தால்
தால் எட்டாம் மாதம்
தால் - நாக்கு,
குழந்தையின் ஐந்தாம் மாதத்திற்குரியது.
குழந்தையை நாவசைத்து
ஒலி எழுப்புமாறு வேண்டுதல்.
                                        சப்பாணி
சப்பாணி _ 9ஆம் மாதத்திற்குரியது.
இது குழந்தையை இரு   கைகளைம்
கொட்டுதல்.
                                        முத்தம
முத்தம் -  11ஆம் மாதத்திற்குரியது.
குழந்தையை முத்தம கொடுக்கும்படியாகத்
   தாயும் பிறரும் வேண்டுவது.
                                       வருகை
வருகை  - 13 ஆம் மாதம்
குழந்தையைத் தளர்நடையிட்டு
வருக என அழைப்பது.
                           அம்புலி
அம்புலி - 15ஆம் மாதத்திற்குரியது.
இப்பருவத்தில்நிலவைப்
பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பது.
இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் என்னும்
நான்கு வழிகளில் அமைத்துப் பாடுவர்.
இப்பருவம் பாடுவதற்குக் கடினமான பருவம் என்பர்.
                                           சிற்றில்
சிற்றில் - 17ஆம் மாதத்திற்குரியது.
இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை
ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும்.
(சிற்றில் = சிறு வீடு)
                                     சிறுபறை
சிறுபறை -19ஆம் மாதத்திற்குரியது.
இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி
  விளையாடுதலைக் குறிக்கும்.
                                                         சிறுதேர்
சிறு தேர் - 21ஆம் மாதத்திற்குரியது.
இதில் குழந்தை சிறுதேர் உருட்டி
 விளையாடுதல் குறிப்பிடப்படும்.
                                  கழங்கு
கழங்கினை மேலை வீசி 
ஆடும்படி வேண்டுதல்.
                    அம்மானை
மகளிர் மூவர் கூடி
தம் தலைவனைக் குறித்து
மூவரில் ஒருத்தி வினா எழுப்ப,
மற்றொருத்தி அதற்கு விளக்கம் சொல்ல, வேறொருத்தி
இவ்விருவருக்கும் விடை கூறி
அம்மானைக் காய்களை எறிந்து ஆடி மகிழ்வர்.
                                                  ஊசல்
ஊஞ்சலில் ஆடும்படி குழந்தையை வேண்டுதல்.
செம்பொன டிச்சிறு கிண்கிணி யோடு சிலம்பு  கலந்தாடத்                            
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி                                                    
 திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தியொ டுஞ்சிறு பண்டி
 சரிந்தாடப்  பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது                       
 மசைந்தாடக்     கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத்
தொடுமாட அம்பவ ழத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
 ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை  


இயல் – 2 புற நானூறு

இயல் – 2
புற நானூறு

ஆசிரியர்
குடபுலவியனார்
சங்க இலக்கியங்கள்

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை -8
நற்றிணை……
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை…..
                                         புறநானூறு
புறம் + நான்கு + நூறு
புறப்பொருள் பற்றிய  நானூறு பாடல்கள்.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
வேறு பெயர்கள்: புறம், புறப்பாட்டு.
பண்டைத்தமிழர்களின் வீரம், வெற்றி, கொடை பல்வேறு புறம்
  சார்ந்த செய்திகள்.
பண்டைத் தமிழரின் கருவூலம்.
                                  குடபுலவியனார்
சங்ககாலப் புலவர்களில் ஒருவர்
18 – 19 எண் கொண்ட பாடல்.
பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றிய செய்தி.
குடபுலவியனார்குடபுலம் +இயனார்.
குடபுலம்சேர நாடு
இயனார்இசைக்கருவி
குடபுலவியனார் : சேர நாட்டு இசைக் கலைஞர்.
வானுட்கும் வடிநீண்மதில்
மல்லன்மூதூர் வயவேந்தே
செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த 
வான் உட்கும் வடி நீண் மதில் – வானம் அஞ்சும் அளவு உயர்ந்த அழகிய
 அரண்களையும்,
மல்லன் மூதூர் வய வேந்தே – வளமும் பொலிவும் உள்ள பழமையான
  ஊரினையுடைய வலிமையான அரசனே!
செல்லும் உலகத்துச் செல்வம்
   வேண்டினும் – உன் இறப்பிற்குப்
  பின் நீ போக விரும்பும் மறுமைப்
  பேறாகிய சொர்க்க உலகத்தை    
     நுகரும் செல்வம் விரும்பினும்,
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி ஒரு நீ ஆகல் வேண்டினும்
உலகத்தைக் காக்கும் பிற வேந்தர் தோள் வலிமையைக் கெடுத்து நீ ஒருவனே தலைவனாவதை விரும்பினும்,
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி ஒரு நீ ஆகல் வேண்டினும்
உலகத்தைக் காக்கும் பிற வேந்தர் தோள் வலிமையைக் கெடுத்து நீ ஒருவனே தலைவனாவதை விரும்பினும்,
நல்லிசை நிறுத்தல் வேண்டினு  மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக்  கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத்தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம் 
சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும்
 மிக்க நல்ல புகழை இவ்வுலகத்தே
நிறுத்துதலை விரும்பினும்
மற்று அதன் தகுதி கேள் இனி மிகுதியாள –
அத்தகைய விருப்பத்தை நிறைவேற்ற நீ
 செய்ய வேண்டிய தகுந்த செயல்களை
இப்பொழுது கேட்பாயாக பெரியோனே
!சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும் –
நிறுத்துதலை விரும்பினும்
மற்று அதன் தகுதி கேள் இனி மிகுதியாள –
அத்தகைய விருப்பத்தை நிறைவேற்ற நீ
 செய்ய வேண்டிய தகுந்த செயல்களை
இப்பொழுது கேட்பாயாக பெரியோனே!
நீர் இன்று அமையா யாக்கைக் கெல்லாம்
நீர் இன்றி அமையாத இவ்வுலகில் வாழும்
உடம்பிற்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே –
உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தோர் ஆவர்
உண்டி முதற்று உணவின் பிண்டம்
 உணவை முதலாக வைத்து அவ்வுணவால்  வளர்க்கப்பட்ட உடம்பு
உணவெனப் படுவது நிலத்தொடு  நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங்  கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும் 25
உணவெனப் படுவது நிலத்தொடு நீர் –
ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்
நீரும் நிலனும் புணரியோர் –
நீரில்லா இடத்தில் அந்நீரையும், நிலத்தையும் ஒன்றாக இணைத்துச் செயல் படுத்தியவர்கள்
வித்தி வான் நோக்கும் புன்புலம் – நெல் முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய் ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலம்
கண்ணகன் வைப்பிற்று ஆயினும் – இடம் அகன்ற நிலப்பரப்பாயினு
இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே. 30
நண்ணி யாளும் இறைவன் தாட்கு உதவாதே - பொருந்தியாளும்
 அரசனது முயற்சிக்குப் பயன்படாது
அதனால் அடுபோர்ச் செழிய – ஆதலால் கொல்லும் போர்த்தொழிலை
உடைய செழியனே!
இகழாது வல்லே – இதனை அலட்சியப்படுத்தாது, விரைவில்நிலன் நெளி 
– நிலம் பள்ளமாக உள்ள குழிந்த இடங்களில்
நீர்நிலை பெருகத் தட்டோர் – நெடிய நீண்ட கரையெடுத்து, நீர்நிலை
    அமைத்து நீரைத் தேக்கி வேண்டுமளவு பயன்படுமாறு பெருகச் செய்தோர்இவண் தட்டோர் – தாம் செல்லும் உலகத்து அறம், பொருள், இன்பம் மூன்றினையும் இவ்வுலகத்து தம் பேரோடு   
    தளைக்கச் செய்தோர் ஆவர்
    தள்ளாதோர் – அந்நீரைப் பெருகச் செய்யாதோர்இவண் தள்ளாதோரே - இவ்வுலகத்து தம் பெயரைத் தளைக்கச் செய்யாதோர் ஆவர்.
விளக்கம்
வான் வரை உயர்ந்த மதிலைக் கொண்ட பழமையான ஊரின் தலைவனே!
வலிமை மிக்க வேந்தனே!
நீ மறுமை இன்பத்தை அடைய விரும்பினாலோ அல்லது உலகம் முழுவதும் வெல்ல விரும்பினாலோ அல்லது நிலையான புகழைப் பெற விரும்பினாலோ .. நீ செய்ய வேண்டியது என்னவென்று கூறுகிறேன் கேட்பாயாக!
பாண்டிய நெடுஞ்செழியனே!
நீரீன்றி அமையாது உடல்
உடல் உணவால் அமையும்.
முதன்மையானதும் கூட
எனவே, உணவைத் தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.
உணவு என்பது நிலம், நீர் ஆகும்.
ஆதலால், நிலத்தையும் நீரையும் சேர்த்தவர் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர் ஆவார்.
வலிமை மிக்க வேந்தனே!
நெல் முதலிய தானியங்களை விதைத்து மழையை நம்பிப் பார்த்திருக்கும் நிலமாக இருந்தாலும் சரி அல்லது அதனைச் சார்ந்து வாழும் அரசனின் முயற்சியாக இருந்தாலும் சரி ..இதில் எதுவும் உதவாது.
ஆதலால்,
நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர் நிலையைப் பெருகச் செய்யும்.
நிலத்துடன் நீரையும் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் நிலைத்தப் புகழையும் பெறுவர்.
செய்யாதவர், புகழ் பெறாது வீணாக மடிவர்.
அதனால், நான் கூறிய மொழிகளைக் இகழாது விரைவாகக் கடைப்பிடிப்பாயாக! என குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலைத்தப் புகழைப்பெற வழிமுறைகளைக் கூறுகிறார்.

Translate