Search This Blog

Saturday, November 21, 2015

வில்லிசைப் பாடல்...




வில்லிசைப் பாடல்...



தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாட ஆமாம் வில்லினில் பாட         
வந்தருள்வாய் கலை மகளே

தானதந்தத் தோடு ஏழு
சந்தங்களும் தாளத்தோடு
தாள பம்பை உருமி தக்கை
துந்துபியோடு (ஆமாம்) துந்திபியோடு அத்தனையும் மேளத்தோடு

(சபையில் கூடியுள்ள அனைவருக்கும் வணக்கம்)

பிள்ளைகள்: பாட்டி இன்னைக்கு நீங்க என்ன செய்தி சொல்லித் தரப் போறீங்கனு நாங்க எல்லாரும் ரொம்பவே ஆர்வமா இருக்கோம்.

பாட்டி: பிள்ளைகளா நா இன்னைக்கு உங்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களப் பத்தி செல்லித் தர போறேன் கேளுங்க.

பிள்ளைகள்: நல்ல பழக்க வழக்கங்களா??? பாட்டி நாங்க எல்லாரும் நல்ல பிள்ளைகள் தான்....

பாட்டி: பிள்ளைகளா நீங்க எல்லாரும் நல்ல பசங்க தான்!.. அது எனக்கு நல்லாவே தெரியும்.. இருந்தாலும் வாழ்க்கையில கடைபிக்கவேண்டியோய சில நல்ல விஷயங்கள சொல்றேன் கேளுங்க...

பாடல்:
உலகம் கையில் வரும் போது
உவந்து நாமும் வரவேற்போம்
உதவும் மனசு எல்லோர்க்கும் தான்........

உலகம் கையில் வரும்போது
உவந்து நாமும் வரவேற்போம்
உலகை நாமும் வெல்வோமே தான்.....

பிள்ளைகள்: உலகத்தை வெல்வதா?? அது எப்படி பாட்டி???

பாட்டி: உலகத்தை வெல்லவது ரொம்ப கஷ்டமான விஷயம் இல்ல பிள்ளைகளா... சரியான பழக்க வழக்கங்கள கடைபிடிச்சா இந்த உலகத்த வெல்லலாம்...ஒவ்வொன்னா சொல்றேன் கேளுங்க.....

கறைகள்  நீங்க பல்துலக்கி
கண்களையும் தலைமுடி சுத்தம் தான் செய்திடுவோமே நாம!
குளிர்ந்த நீரிலே குளித்திடுவோமே!!!!!!!!

பிள்ளைகள்: என்ன பாட்டி!!!!!!!! நாங்க எல்லாரும் காலையில குளிச்சிட்டு தான் வந்திருக்கோம்!!!!!

பாட்டி: அது மட்டும் இல்ல பிள்ளைகளா.......இன்னும் சொல்றேன் கேளுங்க...

பாடல்:

கடவுளையே வணங்கிட்டு கால வேள உணவுண்டு
பள்ளிக் கூடம் சென்றிடுவோமே! நாம பக்கிவமா படித்திடுவோமே!!!!!!!(

பிள்ளைகள்: சரி பாட்டி நீங்க சொன்ன மாதிரியே நல்ல படிக்கிறோம்...
இன்னும் சொல்லுங்க பாட்டி.......

பாடல்:

மதியம் உணவு உண்ணும் முன்னே ..
கைகளை நாமும் சுத்தம் செய்து
தரமான உணவை உண்போம்....

பாட்டி:
இது மட்டும் இல்ல பிள்ளைகளா இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன் கேளுங்க...... உணவை தேர்ந்தெடுக்கும் போது தரமான உணவையே தேர்ந்தெடுக்கனும்......... நீங்க சாப்பிடுற பீசா, பர்கர் எல்லாம் உடலை கெடுக்கக் கூடியது, அதனால அது அனைத்தையும் தவிர்க்கனும்,

பிள்ளைகள்: அப்போ என்ன தான் சாப்பிடனும் பாட்டி?

பாடல்:
கம்பு,சோளம் கேழ்வரகு, கீரைகள், பயறுகள்
சேர்த்தால் தானே.. உடலுக்கு நல்லதுங்கா!!!!!!!!!!!
அன்றாடம் அத சேருங்க!!!!!!!!
நீங்க சேர்த்தா  அமினோ அமிலங்கள் இரும்பு,சுண்ணாம்பு  கிடைத்திடுமே!!!!!!!!!!

பிள்ளைகள்:
பாட்டி இப்போவே.. எங்களுக்கு சத்து கிடைச்ச மாதிரி இருக்கு....

பாட்டி: இது மட்டும் இல்ல கண்ணுங்களா!!!!!!!!! உடை உடுத்தும் போதும் தேர்ந்தெடுத்து உடுத்தனும்............

பிள்ளைகள்: உடை உடுத்தும் போதா???????

பாட்டி: ஆமாம் சொல்றேன்..

பாடல்:

ஏப்ரல் மாதம் வந்தது கோடை காலம் ஆனது
உடுத்தலாமா?? பருத்தி ஆடை???

இந்த கோடை காலத்துல பருத்தி ஆடைகளையே உடுத்தனும் அது தான் உடலுக்கு நல்லது...

இது மாதிரி சுத்தமா குளிச்சு,டகடவுளை வணங்கி,சத்தான உணவு உண்டு,நல்லா படிச்சு அனைவரையும் மரியாதையா நடத்தி எல்லாரிடமும் நல்ல பெயர் எடுக்கனும்...

பாடல்:
பயிலுமிடம் கோயில் என்போம்.கோயில் என்போம். கோயில் என்போம்...
பள்ளிதூய்மை காத்திடுவோம்..காத்திடுவோம்...காத்திடுவோம்...
பள்ளி குழந்தைகள் நலம் காத்து.. நலம் காத்து... நலம் காத்து....
பண்பாய் நாமும் வளர்ந்திடுவோம் வளர்ந்திடுவோம் வளர்ந்திடுவோம்..

பாட்டி நீங்க சொன்ன மாதிரியே எல்லா நல்ல பழக்க வழக்கங்களையும் கடபிடிச்சு நல்ல பெயர் எடுப்போம்!!!!!!

நம்ம மகாத்மா காந்தியடிகளுடைய குறிக்கோளான சுத்தமான இந்தியாவ கொண்டுவர வேண்டியது நம்ம கையில தான் இருக்கு என்ன பிள்ளைகளா??? வெய்வீங்களா???????


வாழ்க நிரந்தரம்

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான வளந்த தனைத்தும் அளந்திடும்
வாண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந்தமைணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்த் தமிழ் நாடே!
வாழ்க தமிழ்மொழி!வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ் மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!

                           16








2 comments:

Translate