வரிகள், வனப்புகள்!!!!!
Search This Blog
Showing posts with label கவிதைகள. Show all posts
Showing posts with label கவிதைகள. Show all posts
Sunday, May 31, 2020
Monday, October 1, 2018
தமிழ்த்தாயே!!!!
தாய்க்குத்
தாலாட்டுப் பாடுவது
ஒரு
சிலரின் தனிச் சிறப்பு….
தாய்த்
தமிழுக்குத் தாலாட்டுப் பாடுவது
பண்டிதர்களின் பழஞ்சிறப்பு
தாய்நாட்டிற்கு வாழ்த்துப்
பாடுவது
விஞ்சியோரின்
பெருஞ்சிறப்பு.
– இதைவிட
என்
தமிழ்த் தாய்க்கு நான் எழுதும்
இக்கவிதையே
என் சிறப்பு!
தமிழே!
தாயே!
கருவறையில்
எமை பள்ளி கொள்ளச் செய்ததும் நீயே!
கார்மேகமாய்
கவிதை மழை அளிப்பவளும் நீயே!
குமரிக்
கண்டத்தின் முதல் தோற்றமும் நீயே!
கூடலழகரின்
முதன்மைத் தாயும் நீயே!
முத்துக்
குளித்த தென்மதுரையில்
வளர்ந்தவளும்
நீயே!
மூதாதையரின்
வழித் தோன்றலுக்குத்
தாயானவளும்
நீயே!
நக்கீரனின்
நாவினில் உழன்றவளும் நீயே!
பிறப்பு
முதல் இறப்பு வரை
பரிணாம
வளர்ச்சியாய்
பவனி
வந்தவளும் நீயே!
பல
நாடுகள் கடந்து பயணிப்பவளும் நீயே! நீயே!!
தாயே!!!
என் தமிழ்த்தாயே!!! – என்னை
காதல்
மொழி பாட வைத்தவளும் நீயே!
காதலுக்குத்
தூது சென்றவளும் நீயே!
கவிதை
எழுத வைத்தவளும் நீயே!
என்
காதலன் நாவினில் தமிழ்த்தாய்
என
நவின்றவளும் நீயே!
உம்மேல்
பித்தன்போல்
அலைய
வைத்தவளும் நீயே!
பிதாமகனை
எனக்கு
அறிமுகம்
செய்தவளும் நீயே!!
உடல்,
பொருள் ஆவியாய்
உழல்பவளும்
நீயே!
உணர்வாய்,
உறவாய் என்னுள்
உறைந்திருப்பவளும்
நீயே!
உனக்கு
அரியாசனம் அமைக்க எம்மை
இணைத்தவளும்
நீயே!
ஊழ்வினைப்
பாராது உதவ
எங்களுக்கு
உந்துதலாய்
இருப்பவளும்
நீயே!
உண்மையின்
உருவத்தை
அடையாளம்
காட்டியவளும் நீயே!
தரணியில்
நான் வாழ
தலைவனை
எனக்குத் தந்தவளும் நீயே!
என்
உயிரே!! உடலே!!!
நீயே!!! நீயே!!
– என்றும் என்றென்றும்
என்
தாகத்தைத் தணிக்கும் தமிழ்த்தாயே!!!!
சித்ரா K ஆகாஷ்.
முதல் கவிதை
நான், உனக்கு எழுதும் முதல் கவிதை - ஆனால்
நான் யாரென்ற முகவரி உனக்குத் தேவையில்லை.
நீ என் மனம் கவர்ந்தவன் - ஆனால்,
நீ என் காதலனா என்பது தெரியவில்லை.
நித்தம் உனை எண்ணுகிறது நித்திரையின்றி - ஆனால்,
நீ தான் என் நீள்வானமாக வெளுக்கவில்லை..
சித்திரம் உன்னைத் தூரிகையால் தீட்டவா என்றாய் - ஆனால்,
தூரிகை இன்னும் என் கண்களுக்குத் தென்படவில்லை.
அன்பும் பாசமும் நிறைந்துள்ளது என்றாய் - ஆனால்,
ஆகாய கங்கையா என்பதுதுதான் தெரியவில்லை.
கோபம் கொள்ளும் கோமகள் என்றாய் - ஆனால்
காலத்தின் கோலமாக நீ தான் இன்னும் மாறவேயில்லை.
காலம் பதில் சொல்லும் என்றாய் - ஆனால்
கருதியதை உன் காலம் பதிலுரைக்கவுமில்லை.
கிறுக்கு பிடித்து விட்டது என்றாய் - ஆனால்
கின்னசில் இன்னும்தான் நிழல்படவில்லை.
அன்புதனை விரும்புவது என் சுபாவம் என்றாய் - ஆனால்,
அலைமோதி நீ அதற்காக துவண்டதுமில்லை..
பற்றற்ற முனிவன் என்றாய் - ஆனால்
பல நேரம் அவ்வாறு இருந்ததுமில்லை..
புரிதல் மேலோங்கும் என்றாய் - ஆனால்
புதிரா? புனிதமா? என ஆராய முடியவில்லை
இயல்பாய் வேண்டுமென்றாய் - ஆனால்
இக்கணம் வரை நீ இயல்பாய் இருந்ததில்லை..
பிரிவு நிரந்தரமென பேசாமல் நின்றாய்
பிள்ளைப் பிராட்டியாய் பேச முற்படவுமில்லை..
நீ என் பதி என்றேன் - ஆனால்,
நான் சதியாக ஒரு நாளும் தென்பட்டதில்லை.
வாழ வேண்டும் என்றேன் - ஆனால்,
வாழ வழியில்லையா என்றாய்....
சிக்கலின்றி சிந்தனை செய்தேன்
செவ்வானம் வெளுக்கவுமில்லை..
என்னைக் கொல்லாமல் கொல்கிறாய் என்றேன்
நான் உன்னை கொள்ளவில்லையே என்றாய்...
எத்தனையோ சுமைகள் சுகங்களாய் ...
என்றும் நீ தான் என் உயிர் சுரங்களாய்
மீண்டும் மீட்டுகிறது நரம்புகள்...
மீட்சி கொண்டு எழ முடியாமல்......????
Subscribe to:
Posts (Atom)

