Search This Blog
Friday, July 30, 2021
TENTH STD - GRAMMAR - PAYIRCHI VINAAKAL 2021 - 2022
சின்மயா வித்யாலயா நடுவண் மேனிலைப்பள்ளி,செ- 92
TERM – 1 TAMIL – பயிற்சித்தாள் – 4 – இலக்கணம் – 2021 – 2022
1. ________-அளபெடை செய்யுளின் இசையளவைக் கூட்டப் பயன்படும்.
2. ___________ அளபெடை-சொல்லின் (வினையெச்சம்) அளவை கூட்ட பயன்படும்.
3. ____________- அளபெடை இசையின் அளவை மேலும் கூட்டப் பயன்படும்.
4. அளபெடையில் ஒரு நெடில் தனக்கு இனமான______ உடன்சேர்த்துக் கொள்ளும்.
5. அளபெடையின்போது குறிலாக இருந்தால், அது நெடிலாக மாறித் தன்னினத்தை அளபெடுத்துக் கொள்ளும் அளபெடை _____
6. ஓர் ஒற்றெழுத்தும் தானே அளபெடுத்துக் (இரட்டித்துக்)
கொள்ளும் அளபெடை ____.
7. செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர் ___
8. ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை,
ஆஅதும் என்னு மவர். – இக்குறளில் பயின்று வந்துள்ள அளபெடை ____
9. உரனசைஇ உள்ளந் துணையாகச் சென்றார்;
வரனசைஇ நின்று முளேன்.". - இக்குறளில் பயின்று வந்துள்ள அளபெடை ____
10. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.". - இக்குறளில் பயின்று வந்துள்ள அளபெடை
11. உயிரளபெடையில் அளபெடுக்கும்போது, ஆ -வுக்கு 'அ'-வும்,ஈ - க்கு 'இ' -யும், ஊ- வுக்கு ____ ஏ க்கு ______ ஐ- க்கு ________, ஓ- வுக்கு 'ஒ' -வும், ஔ- க்கு ____ ம் அளபெடுக்கும்.
12. " எங்ங் கிறைவனுளன் என்பாய் மனனேயான்,
எங்ங் கெனத்திரிவா ரில்." – இதில் பயின்று வந்துள்ள அளபெடை ____
13. இலங்ங்கு வெண்பிறைசூ டீசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண்." – இதில் பயின்று வந்துள்ள ஒற்றளபெடை வகை _______
14. செய்யுளில் ஓசை குறையுமிடத்து மெய் எழுத்துகளும் அளபெடுக்கின்றன. இதனை _____ என்பர்.
15. ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ன் ஆகிய பத்து மெய்யெழுத்துகளும் _______ இரட்டித்து வருவதன்மூலம் ஒற்று அளபெடுக்கின்றன.
16. வல்லினமான க், ச், ட், த், ப், ற், ஆகிய ஆறுமெய்களும், இடையினத்தைச் சார்ந்த ர், ழ் மெய்களும் ________
17. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு” (திருக்குறள் 544) – இக்குறள்பாவில் இடம்பெற்ற அளபெடை ___
18. செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதை நிறைவிக்கவேண்டிப் பொருத்தமான நெட்டெழுத்து தன் மாத்திரையைவிட நீண்டொலிக்குமாயின் அது __________ அல்லது __________ எனப்படுகிறது.
19. மீன் விற்பவர் மீஇ..ன் எனவும் மரக்கறி விற்பவர் மரக்கறீஇ, மரவள்ளிக் கிழங்கு விற்பவர் மரவள்ளிக் கிழங்ங்கு எனவும் பஞ்சு விற்பவர் பஞ்ஞ்சு எனவும் அழுத்திக் குரல்தருவதும் _____ , ______ அளபெடையைச் சார்ந்தவையே.
20. அளபெடை உயிரளபெடை, ஒற்றளபெடை என இரு உயிர் அல்லது உயிர்மெய் நெடிலுக்கருகில் அதன் இனமான உயிர்க்குறில் அளபெடுத்தல் உயிரளபெடையாகும்.
21. ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
22. சொற்பொருள் அடிப்படையில் மொழி/சொல் _____ வகைப்படும்.
23. ஒரு சொல் தனித்து வந்து ஒரு பொருளைத் தந்தால் அது _____ எனப்படும்.
24. ________ பல தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது தொடர்மொழி எனப்படும்
25. அறம் செய விரும்பு, ஆறுவது சினம் – இவைகள் ___ மொழிகள்.
26. ஒரு சொல்லே தனிமொழியாக நின்று ஒரு பொருளையும், தொடர்மொழியாகப் பிரிந்து நின்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருளையும் தந்தால் அது _____ எனப்படும். 27. தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக ஒரு சொல் வருவது ____ எனப்படும்.
28. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண் , இடம் , காலம் , பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது _____ எனப்படும் .
29. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ________ ஆகும்.
30. விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் ______ ஆகும் .
31. விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர் _______ ஆகும்
34. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும் . காலம் காட்டும் . மூவிடத்திற்கும் உரியது - இது ____ பெயர்.
32. வந்தவர் அவர்தான் .பொறுத்தார் பூமி ஆள்வார் – இலக்கணக் குறிப்பு தருக.
33. கெடுதல் - சுடுதல் - இதனை முதனிலைத் தொழில் பெயராகவும் முதனிலைத் திரிந்த தொழிற்பெயராகவும் மாற்றுக.
34. தட்டு , உரை , அடி - இச் சொற்கள் முறையே தட்டுதல் , உரைத்தல் , அடித்தல் என்று பொருள்படும் போது முதனிலைத் தொழிற்பெயர்கள் ஆகின்றன .
35. நடவாமை , கொல்லாமை என்பன ___ பெயர்கள்.
36. 'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக .
37. பூ , தை , தீ , ஆ என்பன ____ மொழிகள்.
38. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லை பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது ________ எனப்படும் .
39. ‘தொகை’ _______ வகைப்படும். தொகா __ வகைப்படும்.
40. சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை, முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’ வரும். (மறைந்து வரும்) அவ்வாறு வருதலைத் _____ என்பர்
40. ‘மரக்கிளி’ என்பது ____ தொகை நிலைத்தொடர்
41. ‘உற்றார் உறவினர்’ என்பது ___ தொகை.
42. கண்ணா ! வா! - இது, ______ தொடர்.
43. ‘சிரித்த குழந்தை’ - இதில், ‘சிரித்த’ என்னும் எச்சவினை ‘குழந்தை’ என்னும் பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்ததால் இது, ______ தொடர்.
44. கடி நகர்’ - இத்தொடரில், ‘கடி’ என்பது_______. அதைத் தொடர்ந்து ‘நகர்’ என்னும் சொல் வந்து கடி நகர் என்று வந்தால் அது ______.
45. ‘வாழ்க! வாழ்க!’ என ஒரே சொல், பலமுறை அடுக்கி வருவது, அடுக்குத் தொடர்.
46. ‘இளங்கோ வந்தார்’ - இதில், இளங்கோ என்னும் எழுவாயைத் தொடர்ந்து ‘வந்தார்’ என்னும் பயனிலை வந்துள்ளது. இவ்வாறு, வரும் தொடர் _____
47.‘தேன்மொழி’ என்பது ____
48. வெண்ணிலவு என்பது _____
49. உண்கலம் என்பது _____
50. தொடர்களைத் _____ தொடர் _____ தொடர் என இரண்டாகப் பகுக்கலாம்.
51. ‘பொற்றொடி வந்தாள்’ என்பது
52. ‘கண்டு மகிழ்ந்தான்’ என்பது ____
53. வேற்கண் என்பது ____
54. ஆடுபாம்பு என்பது ____
55. செஞ்ஞாயிறு என்பது __-
56. உயிர்மெய் என்பது ___
57. கரந்த என்றால் _____ என்பது பொருள்.
58. பொன்னும் மணியும் என்பது ___
59. தெய்வ வணக்கம் என்பது ___
60. முத்தமிழ் என்பது ___
61. தலைவர் அப்துல்கலாம் என்பது ___
62. ‘ஆகிய’ என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ ஒரு பொருள் குறித்து வருவது ______.
63. _____என்பது வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியனவாகும்.
64. நண்பன் வீடு என்பது ___
65. தாழ்குழல் பேசினாள் என்பது ____
66. அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய உருபு மறைந்து நிற்பது ______ எனப்படும்.
67. எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கும் ____ பெயர்கள் ஆகும்.
68. ஆல், ஆன், ஒடு, ஓடு என்பன ___ வேற்றுமை உருபுகள்.
69. மலைக் கோயில் என்பன ___-
70. வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடரும் தொடர் ______
71. அளபெடுத்தல் என்பது ___ ஒலித்தல் என்பது பொருள்.
72. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது __ பெயர்.
73. ஒரே வினையடி ___ விகுதிகளையும் ஏற்கும்.
74. வினையடி என்பது ___ நிற்கும் சொல்.அதனை ___ என்றும் கூறுவர்.
75. தொழிற்பெயர் ____ காட்டாது.
76. எதிர்மறைப் பொருளில் வரும் பெயர் ___
77. செய்யக் கூடிய செயல், பார்க்க வேண்டிய இடம் என்பன ___ பெயரெச்சங்கள்.
78. களிமண்ணால் செய்தார் என்பது ___
79. இடைச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ___
80. உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ___
81. ஓடிக் களைத்தனர், தேடி அலைந்தனர் என்பன ___
82. பெண்ணே செல்! குழந்தையே கேள்! என்பன ____
83. வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக அமையும் தொடர் ___
84. ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வருவது ___
85. எழுவாயுடன் பெயர்,வினா,வினை ஆகிய பயனிலைகள் தொடர்வது ___
86. விஜய் நடிகர், சினேகன் கவிஞர் – இவைகள் ___ தொடர்.
87. தேர்வு நடக்குமா? மழை வருமா? கொரோனா ஒழியுமா? – இவைகள் ___ தொடர்கள்.
88. நண்பா அழாதே!, நாராயணா பேசாதே, சுவாதி கவனி, முருகா வா – என்பன ___ தொடர்கள்.
89. முற்றுப்பெறாத வினை பெயரைக் கொண்டு முடிவது _____ முற்றுப்பெறாத வினை வினையைக் கொண்டு முடிவது ____
90. சிரித்தனர் மாணவர்கள், கத்தின ஆடுகள் – இவைகள் __-
91. சாலச்சிறந்தது, நனி மகிழ்ந்தேன்,தவச்சிறிது என்பன ___
92. வாழ்க்கை என்னும் சொல்லுக்குரிய விகுதி?
93. வெண் பொங்கல் என்பது __
94. தொடுதிரை, மோர்ப்பானை – இலக்கணக் குறிப்பு தருக.
95. வெண்டைக்காய், மோர்க்குழம்பு – இலக்கணக் குறிப்பு தருக.
96. செங்காந்தள்,இன்மொழி,மலர்க்கை – இலக்கணக் குறிப்பு தருக.
97. பெரிய மீசை சிரித்தார், கரும்பு தின்றான் – இலக்கணக் குறிப்பு தருக.
98. அன்பும் அறனும்,பண்பும் பயனும் – இலக்கணக் குறிப்பு தருக.
99. பேசும் கிளி – இறந்தகாலப் பெயரெச்சமாக்குக.
100. உண்ணா தோழி – இலக்கணக் குறிப்பு தருக.
101. ஒழுக்கம் ___ தரலான் ஒழுக்கம்
உயிரினும் ___ படும்.
102. ___ நின்றான் இடுவென்றது போலும்
___ நின்றான் இரவு.
103. அரியவற்றுள் எல்லாம் அரிதே ___
பேணித் ___ கொளல்.
104. இடிப்பாரை இல்லா ___ மன்னன்
____ இலானுங் கெடும்.
105. ஒழுக்கத்தின் ___ மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் ___ பழி.
106. நாள்தொறும் நாடி ___ மன்னவன்
நாள்தொறும் __ கெடும்.
107. பல்லார் ___ பத்தடுத்த தீமைத்தே
____ தொடர்கை விடல்.
108. காமம் ____ ____ இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
109. எப்பொருள் எத்தன்மைத்தாயினும்___
_____ காண்ப தறிவு.
110. உலகத்தோ டொட்ட ___ _____
கல்லார் அறிவிலா தார்
ஆக்கம்: சித்ரகலா கலைச்செல்வன்.
பத்தாம் வகுப்பு - தமிழ் - 2021 - 2022
Term – 1 இயல் – 1,2&3 - தமிழ் – 2021 -2022
செய்யுள் பொருளுணர் திறன் – பயிற்சித்தாள் – 4
1. காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல் __
2. காசிக்காண்டத்தின் ஆசிரியர் __
3. காசிக்காண்டத்தில் ____ பகுதியிலுள்ள 17 வது பாடப்பகுதியாக வந்துள்ளது.
4. முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் __
5. கொற்கைத் துறைமுகம் அமைந்தது ___ நாடு.
6. அதிவீரராம பாண்டியர் ___ ___ திகழ்ந்தவர்.
7. வெற்றி வேற்கை __ எனவும் வழங்கப்படுகிறது.
8. அதிவீரராம பாண்டியர் குறிப்பிடும் விருந்தோம்பல் முறை மொத்தம் __
9. அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்களுள் இரண்டு ___ ___
10. பண்டையத் தமிழர்கள் பண்பிலும் ___ சிறந்து விளங்கினர்.
11. சிவந்தப் பூக்களைக் கொண்ட மரம் __
12. மலைபடுகடாம் ___ நூல்களுள் ஒன்று.
13. மலைபடுகடாமில் மலையை ___ அதில் எழும் ஓசைகளை அதன் ____ உருவகம் செய்யப்பட்டுள்ளது.
14. கூத்தன் மற்றொரு கூத்தனை ஆற்றுப்படுத்துவது ____
15. பாக்கம் என்பது ஒரு ___
16. பெருங்கௌசிகனாரின் ஊர் ____
17. மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் ___
18. மலைபடுகடாமில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___
19. மலைபடுகடாமின் வேறு பெயர் ___
20. கலைஞர்களுக்கு விருந்தும் பரிசும் கொடுத்து மன்னர்கள் போற்றியதைக் காட்சிப்படுத்துவது ____ விருந்து.
21. ஆழிக்கு இணையாகப் பேசப்படுவது ___
22. கடல் மூன்று ___ தருகிறது.
23. ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது ____ அணியாகும்.
24. இரட்டுற மொழிதல் ___ என்று அழைக்கப்படும்.
25. தமிழழகனாரின் இயற்பெயர் ___
26. இரட்டுற மொழிதல் பாடல் _____ என்னும் தொகுப்பு நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
27. சந்தக்கவிமணி என்று போற்றப்படுபவர் ___
28. ஐம்பெருங்காப்பியங்கள் தமிழின் ____ உள்ளன.
29. குமரிக்கண்டத்தில் அரசாண்ட மொழி __
30. பாண்டிய மன்னனின் மகள் __
31. சாகும்போது தமிழ்ப் படித்துச் சாக வேண்டும் என்றவர் ____
32. அன்னை மொழியே பாடல் ___ என்னும் தொகுப்பு நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
33. கடும்பு,இறடி,பொம்மல் – பொருள் தருக
34. அல்கி,அல்சேஎந்து,வயிரியம் – பொருள் தருக.
35. மலைபடுகடாம் பாடலில் இடம்பெற்ற மரங்கள்?
36. பரிசு பெற்றக் கூத்தன் பரிசு பெறப்போகும் கூத்தனை ஆற்றுப்படுத்துவது ___
37. பாவலரேறு எழுதிய இதழ்கள்?
38. துரை மாணிக்கம் என்பது யாருடைய இயற்பெயர்?
39. தென்னவன் என்பது யாரைக் குறிக்கிறது?
40. இன்னறும் பாப்பத்தே எண்தொகையே என்பதில் பாப்பத்தே,எண்தொகை என்பன ____ ____ நூல்கள்.
41. பழுத்த நரையின் பட்டறிவு ஆனவள்?
42. அன்னை மொழியானவள் _____ சிரிப்பும் ஆனவள்.
43. _____ மெய்ப்பொருளுரை தமிழுக்குக் கருவூலம் என்று போற்றப்படுகிறது.இதனை எழுதியவர் ___
44. பாவலரேறு நூல்களுள் இரண்டு?
45. முகமன் சொற்கள் மொத்தம் ___
46. காசிக்காண்டத்தில் அமைந்துள்ள பாடுபொருள்?
47. அன்னைமொழியே என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்?
48. எந்தமிழ் நா – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
49. முன்னும் நினைவால் முடி தாழ வாழ்த்துவமே என்று கூறியவர்?
50. நற்கணக்கே – என்பதில் சுட்டப்படும் நூல்கள் மொத்தம்?
51. மன்னும் சிலம்பே!மணிமேகலை வடிவே! எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?
52. பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்?
53. பெருஞ்சித்திரனாரின் ‘முந்துற்றோம் யாண்டும்’,தமிழ்த்தாய் வாழ்த்து’ என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பெற்றன?
54. செந்தாமரை – இலக்கணக் குறிப்பும் பிரித்து எழுதுக.
55. உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்?
56. கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்துகிறது?
57. முத்தையும் அமிழ்தையும் தருவதாக ஆசிரியர் குறிப்பிடுவது யாது?
58. தமிழழகனார் எத்தனைச் சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
59. முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம்பெற்றத் தொகுப்பு நூல்?
60. மயலுறுத்து,சுவல்,பெண்டீர் – பொருள் தருக.
61. உறுதுயர், நன்மொழி – இலக்கணக் குறிப்பு தருக.
62. முல்லைப்பாட்டு __ அடிகளைக் கொண்டது.
63. திருக்குறளின் பெருமைக்குரியவள்?
64. பழமைக்கும் பழமையாய் தோன்றிய நறுங்கனி?
65. முத்தமிழ், நாற்கரம் - இலக்கணக் குறிப்பு வரைக.
66. முல்லைப்பாட்டின் ஆசிரியர்?
67. முல்லைப்பாட்டு ___ நூல்களுள் ஒன்று.
68. முல்லைப்பாட்டில் இடம்பெற்ற முதல் பொருள்கள்?
69. முதுபெண்டீர் விரிச்சி கேட்க சென்ற ஊர்?
70. இளங்கன்று எதனால் கட்டப்பட்டிருந்தது?
71. இரு கைகளையும் கட்டிக்கொண்டு குளிர் தாங்க முடியாமல் நின்றவர்?
72. முதுபெண்கள் இறைவனை வழிபடக் கொண்டு சென்றப் பொருள்கள்?
73. துன்பத்தைத் தந்த பொழுதாக முல்லைப்பாட்டில் குறிப்பிடுவது?
74. வலம்புரிச்சங்கை கையில் ஏந்தியவர்?
75. நீர் பெற்றதும் விண்ணுக்கும் மண்னுக்குமாக உயர்ந்து காணப்பட்டவர்?
76. யார், யாருக்கு, எதற்காக நீர் வார்த்துக் கொடுக்கப்பட்டது?
77. பசலைக் கன்று – பொருள் தருக.
78. மேகம் எதனையெல்லாம் சுற்றி வந்து மழை பொழிந்தது?
79. முல்லைப்பாட்டில் இடம்பெற்ற பாடுபொருள்?
80. நனந்தலை உலகம், மாஅல் – பொருள் தருக
81. வளைஇ,தடக்கை,மாஅல,அருங்கடி – இலக்கணக் குறிப்பு தருக
82. நறுவீ, அலரி,அலமரல் – பொருள் தருக.
83. நன்மொழி,பெருமுது,கைதொழுது,உறுதுயர் – இலக்கணக் குறிப்பு தருக.
84. தூஉய்,நேமி,கோடு,சுவல் – பொருள் தருக.
85. முல்லை நிலப்பூக்கள்?
86. முல்லிய நில மரங்கள்?
87. ‘நின் தலைவன் பகைவரை வென்று திரைப்பொருளோடு வருவது உறுதி’ – என்று கூறியவர்?
88. பரூஉக்,குரூஉக்கண் – பொருள் மற்றும் இலக்கணக் குறிப்பு தருக.
89. ஊர் ஊராககச் சென்று தம் கலைத்திறமைகளை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்தவர்கள்?
90. ஆசிரியர் தம் நூலுக்குக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டி கவிதைப்பேழையாகத் தந்த நூலின் பெயர் ?
91. உற்றார் உறவினர்களோடு எதனை அணிந்து கொள்ளுமாறு கூத்தன் வலியுறுத்தினான்?
92. கடினப்பாதை வழி என்று கூத்தன் கூறியது?
93. மானமும் வெற்றியும் உடைய மன்னன்?
94. நும்இல் போல் நில்லாது புக்கு – இவ்வடியில் உள்ள நும்இல் – பொருள் தருக.
95. விருந்தோம்பும் நெறியை வரிசைப்படுத்திக் காட்டும் நூல்?
96. நோக்கல்,வியத்தல்,இருத்தல்,உரைத்தல்,எழுதல்,செப்பல்,வழங்கல் – இலக்கணக் குறிப்பும் பொருளும் தருக.
97. வருக!, வருக! வருக!! – இலக்கணக் குறிப்பு தருக.
98. இந்தியா, சுதேசமித்திரன் ஆசிரியர்?
99. யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு எழுதப்படும் கவிதை வடிவம்?
100. பாரதியாருக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள்?
Thursday, July 15, 2021
Tuesday, July 13, 2021
Sunday, July 11, 2021
Subscribe to:
Posts (Atom)