Search This Blog

Saturday, April 25, 2020

தமிழ் விடுதூது1.தமிழ் விடுதூது
கவிதைப்பேழை

}96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.

}வேறுபெயர்கள்: வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்.
}கலிவெண்பாவால் ஆனது.
}96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
}வேறுபெயர்கள்: வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்.
}கலிவெண்பாவால் ஆனது.

2.கலிவெண்பா

}இன்னிசைக் கலிவெண்பாவிற்குச் சிவபுராணமும்
நேரிசைக்கலிவெண்பாவிற்குத் தமிழ்விடுதூதும் சான்றுகளாகும்.
}13 அடி முதல் பல அடிகளில் வரும். தனிச்சொல் பெறாமல் வரும்.
} இரண்டிரண்டு அடிகள் ஒவ்வோர்
      எதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக்
}கண்ணி’ என்னும் பெயரில் பலவாக வரும்.}

          3.தமிழ்விடுதூது

மதுரையில் கோவில் கொண்டுள்ளவர் சொக்கநாதர்.
}இவர் மீது பென்ணொருத்தி காதல் கொள்கிறாள்.
}தன் காதலைக் கூறி வரத் தமிழைத
தேர்ந்தெடுக்கிறாள்.
}இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டது.
}பதிப்பித்தவர்: உ.வே.சா. (1930)
}எழுதிய ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.
                          4. கண்ணி
}ரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர்.
}அதுபோல், தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையில் தொடங்கப்படும் செய்யுள் வகை கன்ணி எனப்படும்.
                            5. பாடல்
}தித்திக்கும் தெள்ளமுதாய்த தெள்ளமுதின் மேலான 
}முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்க
}உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துரைக்கு
}விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்
                                                            மண்ணில
}குறம்என்றும்   பள்ளுஎன்றும்    கொள்வார்
    கொடுப்பாய்க்கு
}உறவுஎன்று மூன்றுஇனத்தும்
                              உண்டோதிறமெல்லாம்
}வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்த
                                                          உனைச்
    }சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே
                                                        அந்தரமேல்
}முற்றும் உணர்ந்த தேவர்களும்
                            முக்குணமே பெற்றார் நீ
}குற்றமிலாப் பத்துக் குணம்பெற்றாய்
                                                  மற்றொருவர் 
}ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல்
                                                        உண்டோநீ
} நோக்கிய வண்ணங்கள்
                 நூறூஉடையாய் - நாக்குலவும்
}ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ
                                           செவிகள் உணவு
}ஆன நவரசம் உண் டாயினாய்
                                                  ஏனோர்க்கு
                                                                  
}அழியா வனப்பு ஒன்று அலது
                                         அதிகம் உண்டோ
}ஒழியா வனப்புஎட்டு உடையாய்....
6.விளக்கம்
தமிழின் இனிமை
1.இனிக்கும் தெளிந்த அமுதமாய் உள்ள தமிழே!
2.அமிழ்தினும் மேலான வீடு பேற்றைத் தரும் கனியே.
3.இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் விளங்கும் தமிழே!
}அறிவினால் உன்ணப்படும் தேனே!
}உன்னிடம் உவந்துரைக்கும்
விண்ணப்பம் ஒன்றுள்ளது கேட்பாயாக!
இலக்கிய வளம்:
தமிழே என்னிடம்,
1.குறவஞ்சி,பள்ளு போன்ற நூல்கள் உள்ளன.
2. பாவினங்கள் உள்ளன.(துறை, தாழிசை, விருத்தம்)
3.சிந்தாமணியாய் உள்ளாய்.
4.சிந்து என்று கூறிய நா இற்று விழும்.
முற்றும் துறந்த முனிவர்கள் பெற்ற குணங்கள்:3சத்துவம்இராசசம்
 தாமசம்.
 }தமிழே நீயோ! பத்து குணங்கள்         பெற்றுள்ளாய்.
}சமநிலை
}சமாதி
}செறிவு
}தெளிவு
}இன்பம்
}காந்தம்
}உதாரம்
}வலி
}உய்த்தலில் பொருண்மை
}ஒழுகிச
}வண்ணங்கள்
(மனிதர்கள் உண்டாக்கியது)
1.வெள்ளை
2.கருப்பு
3.சிவப்பு
4.மஞ்சள்
5.பச்சை
}தமிழே நீயோ!
}குறில்,அகவல்,தூங்கிசை,
  குறில்,அகவல்,தூங்கிசை
,வண்ணம் முதலான நூறு வண்ணங்கள்.
} நாவிற்கு விருந்தளிக்கும் அறுசுவைகள்:
இனிப்பு,கசப்பு,கார்ப்பு,புளிப்பு, உவர்ப்புதுவர்ப்பு.
 தமிழே நீயோ,
1.செவிகளுக்கு விருந்தளிக்கும்ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.
}ஒன்பது சுவைகள்:
1. வீரம், அச்சம்
2. இழிப்பு, வியப்பு
3. காமம், அவலம்
4. கோபம், நகை
5. சமநிலை
}அழியாத குணம் ஒன்று.
}தமிழே நீ!
}எண்வகை அழகைப் பெற்றுள்ளாய்.
1.அம்மை,அழகு
2.தொன்மை, தோல்
3.விருந்து, இயைபு
4.புலன்,இயைபு
}இனிமை
}இலக்கிய வளம்
}பா சிறப்பு
}சுவை
}அழகு
}திறம்
}தகுதி முதலியவை பெற்று
விளங்கும் தமிழே,
தலைவனிடம் தூது செல்!

இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டது.
திப்பித்தவர்: உ.வே.சா. (1930)
எழுதிய ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.
ண்பாவால் ஆனது.

இளந்தமிழே!! கவிதைப்பேழை பன்னிரெண்டாம் வகுப்பு

இளந்தமிழே!!
கவிதைப்பேழை
பன்னிரெண்டாம் வகுப்பு 
Friday, April 24, 2020

இயல் - 1 தமிழோவியம் கவிதைப்பேழை

இயல் - 1

தமிழோவியம்
கவிதைப்பேழை
பொருண்மை : மொழி
 நூல் வெளி
}ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

}புதுக்கவிதை, சிறுகதை
          முதலான பல படைப்புகள்.
}ஹைக்கூ, சென்ரியு,லிமரைக்கூ போன்ற கவிதை வடிவங்களில் கவிதை நூல் தந்தவர்.
ஹைக்கூ
}ஜப்பானியக் கவிதை வடிவம்
}மூன்று வரிகள்
}பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்

நா. முத்துக்குமார்
லிமரைக்கூ
}மூன்று வரிகள்..
}இயைபுடன் காணப்படும்.
}ஊது வத்திச் சின்னம்கட்சி வென்று கோட்டை பிடித்தும்நாற்றம் போகலை இன்னும்
சென்ரியு
}ஜப்பானிய மொழிக்கவிதை.
} 3 அடிகள் கொண்டது
}நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டது
விருது
}வணக்கம் வள்ளுவகவிதை நூல்சாகித்திய அகாதமி விருது.
}ஆண்டு : 2004
}தமிழன்பன் கவிதைகள்தமிழக அரசின்  பரிசு பெற்ற நூல்.
மொழிபெயர்ப்பு: இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம்
பாடல்
}காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே எந்தக்
}காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே
}அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள்அவை
}அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்
}நிகரிலாக் காப்பியப் பூவனங்கள்உன்
}நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்
ஏனிவ் விருட்டெனக் கேட்டு வரும் நீதி
}ஏந்திய தீபமாய்ப் பாட்டு வரும்
}மானிட மேன்மையைச் சாதித்திடக்
மட்டுமே போதுமே ஓதி நட  -  குறள்
எத்தனை எத்தனை சமயங்கள் தமிழ்             
}ஏந்தி வளர்த்தது தாயெனவ
சித்தர் மரபிலே தீதறுக்கும்
 புதுச் சிந்தனை வரிகள் பாய்ந்தனவே
}விரலை மடக்கியவன் இசையில்லைஎழில்
}வீணையில் என்று சொல்வதுபோல்
}குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக
}கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்
விளக்கம்
}காலம் பிறக்கும் முன் பிறந்த தமிழே
}எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் தமிழே
}உன்னுள்,
}அக புற இலக்கியங்கள் உள்ளன.
}இலக்கியங்கள் அமைந்த காரணத்தைக் கூறும்
இலக்கணங்கள்
}காப்பியங்கள் உள்ளன.
}அதனால், உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்
}ஏன் இந்த இருட்டு எனக் கேட்டு வரும் நீதிப்பாடல்கள்
}மனித மேன்மையை உயர்த்த வரும் குறள்கள்
}தமிழே உன்னுள்,
}எத்தனை சமயங்கள்
}சித்தர் வழியில் தீமைகளை அறுத்தெடுக்கும் புதுப்புதுச் சிந்தனைகள்
}விரலை மடக்கியவன் வீணையில் இசை இல்லை என்று கூறுவதுபோல்
}குறைகள் சொல்வதை விடுத்து புதிய
சிந்தனையோடு, புது அழகு கொடுத்து தமிழ்
வளர்ப்போம்
Translate