Search This Blog

Sunday, February 25, 2018

சாலை பாதுகாப்பு


அபி





குடியரசு தினம்


அபர்ணா





தட்டாங்கல்







கன்னிக்கொடி



காமராசர்










அபர்ணா




பாஞ்சாலி சபதம்







அபி - அபர்ணா மற்றும் குழு





பாரதியார்

அபி





சிவன் பார்வதி உரையாடல்

   



அபி/அபர்ணா




திருவருட்செல்வன்


பிரியா விடை 24.02.2018






Thursday, February 22, 2018

அகில் பார்த்திபன்(பாரதி)





கும்மி





உலக தாய்மொழி தினம்



லக்க்ஷனா.ர.ஹே.
ஒன்பதாம் வகுப்பு

உலக தாய்மொழி தினம்(21.02.18)




உலக தாய்மொழி தினம்(21.02.18)

அமுதெனத் தித்திக்கும் எங்கள் தமிழ்
ஆதிகால மனிதனின் மொழியாம் தமிழ்
இறைவனை சொற்களால் அழகுபடுத்தும் தமிழ்
ஈவிரக்கம் கொள்ளக் கற்றுத் தரும் தமிழ்
உரக்கச் சொல் இது உலகின் முதல்மொழி என்று
ஊற்றாய்ப் பொழியும் எங்கள் மொழியின் வளங்கள் யாவும்
எட்டுத் திக்கும் பரந்து விரிந்த உலக மொழியாம் தமிழ்
ஏற்றத் தாழ்வை சமமாக எடுத்துக்கொள் என்று
சொற்கள் மூலம் உணர்த்தும் தமிழ்
ஐயம் வேண்டாம் இதுவே உலகின் தாய்மொழி
ஒற்றுமையை உண்டாக்கிய மொழி
ஓம்காரத் தத்துவனின் பிரியமான மொழி
ஔவை பாடிய திருமொழி
அஃதெங்கள் உயிர்மூச்சானத் தமிழ்மொழி!!!!
ர.ஹே.லக்க்ஷனா
ஒன்பதாம் வகுப்பு “அ” பிரிவு


Sunday, February 11, 2018

பிரிவுரை மடல் 2016-17



பிரிவுரை மடல் – 2016 – 17 ( வாசித்தவர் . செல்வன். கீர்த்திவாசன்.

 நம் வாழ்க்கை என்ற வழித்தடத்தில்
எத்தனை எத்தனையோ பயணங்கள்
எண்ணிலடங்கா கற்பனைகள் காவியங்கள்....
ஒவ்வொருவரின் காலங்களிலும்
பருவங்களிலும் வந்து சென்றாலும்
இன்று நாம் கூடும் இக்காலமானாலும் சரி..
 நம் பருவமானாலும் சரி....
மறக்க முடியாத மண்ணில் உள்ளவரை
மாண்படையச் செய்யும்
ஒரு மகத்தான உறவே இக்கல்வி உறவு..
தொப்புள் கொடி வேறாயினும்
வேற்றுமை பாராது தோழனாய் தோள் கொடுத்து
தொல்லைகள் களைந்து…..
தொடுவானம் நோக்கிப் பயணிக்கும் இத்தருணத்தை
நாம் மறக்கத்தான் முடியுமா? இல்லை மறந்துதான் இருப்போமா??/
இல்லை இல்லை என்று ஆயிரமாயிரம் வார்த்தைகள்
அடுக்கடுக்காக வந்தாலும் வலிக்கிறது ….
வழியின்றி விழுகிறது என் விழி நீர் உம்மைப் பார்த்ததும்...
ஏன் இன்று மட்டும் என் விழிகளுக்கு அதிக நீர் வரத்து ???
காவிரி கரைபுரண்டோடி புத்துயிர் பெற்ற நம் பள்ளிக்கு
 விரைந்துள்ளதா?  என்றாலும் இல்லையே! என்கிறது என் மனம்.
அவ்வாறெனில், ஏன் இன்று என் விழிகளில் நீர் பெருகுகிறது என்று
ஒரு கணம் யோசிக்கும்போதுதான் அலர்ந்தது என் அகம் ... ஆம்!!
இன்று எம்முடன் உறவாடிய , உறுதுணையாய் இருந்த என் உறவை
ஆற்றுப்படுத்துதல் நிகழ்ச்சி என்பதை அறிந்தே என் விழி ஆறாய்க் கொட்டுகிறது இன்று...
இந்நீரானது உம்மை விளைவிக்க, பக்குவப்படுத்த, பாதை தடுமாறாமல் இருக்க தடுக்கும் தடுப்பணை என்பதை மீண்டும் ஒருமுறை
தலைவராக அமர்ந்திருக்கும் தாளாளர்,முதல்வர், ஆசிரியப் பெருமக்களைக் கண்டு வியந்தேன்!!!
விண்மீன்களாய் விண்ணிலே சிறகடித்துப் பறக்கத் துடிக்கும்
விட்டில் பூச்சியாய் உம்மை மிஞ்சிட யாருமில்லை இந்த உலகத்தில்
என்று பெருமாப்பும் இறுமாப்பும் கொள்ளும் ஆசிரியப் பெருமக்களுக்கு
நாம் கூறும் பாராட்டும் நன்றி நவிலலுமே!!
எத்தனைப் பாடுகள்! எத்தனைப் பிரிவுகள்... அப்பப்பா!!! என்று சொல்லும் அளவிற்கு பந்தத்தில் உறைந்துள்ளோம் பாரதத்தில் பண்போடு வாழ வேண்டுமென்று...
இப்படி ஒவ்வொரு கணமும் கல்வியின்பால் ஆசிரியர்கள் கொண்ட கணங்கள்....எத்தனை எத்தனை சொல்லவும் வேண்டுமோ?
இன்று கணத்த இதயத்தோடு, ,ஆனால், இன்முகம் காட்டி இங்கு
அமர்ந்திருக்கும் ஆசிரியப்பெருமக்களாக இருந்தாலும் சரி இல்லை நாங்களும் சரி ... அலட்டிக் கொள்ளாமல் அல்லும் பகலும் அகிலத்தின் சமர்ப்பணமே!!!
அதேபோல், பிரிவுகளும் கூடல்களும் வாழ்க்கையின் தத்துவங்களே
என்பதை நாம் உணர்ந்து கூடியுள்ளோம்....
பிரிவு என்னும் சொல்லில் துணை எழுத்தை நீக்கிவிட்டால் பரிவு ஆகிவிடும் ஆம்!! நமக்குத் துணை ஆசிரியர்கள் இருக்கும்போது எதனையும் நிந்தனை செய்யாது செயல்படுக! செயலாற்றிடுக!!!!
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை..
பயிற்சி மாறினாலும் முயற்சி மாறுவதில்லை எம் தோழர்களிடம் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.. கடந்த காலத்தைக் கருத்தில் கொண்டு கலங்காது இக்கனிந்த காலத்தை கருத்தினில் விதைத்து விருட்சமாக எழ முற்படுங்கள்...
எங்கெங்கு காணினும் சக்தியடா!!! என்றான் நம் புலவன்...அதேபோல்
எட்டுத்திக்கும், நம் பள்ளியே சிறந்தது என்று முரசு ஒலிக்கட்டும்...   
ஊர் கூடி தேர் இழுத்தால்தான் ஊர் வந்து சேரும் ... அதுபோல, ஆசிரியரும் மாணவர்களும் முனைந்து செயல்படுவோம்...
உறவு உலகில் மிக இனிமையானது.. அது பரிவு என்னும் பிரிவை உணரும் வரை.. நட்பு என்ற சொல்லும் நற்சொல்லே... இன்று நாம் கூடியிருக்கும் காலத்தைக் கடக்காதவரை...
ஒவ்வொரு பருவத்திற்கும் வந்து செல்லும் பறவைகள்போல் நாமும் ஒரு பறவைகளே!!! நம் பள்ளியும் ஒரு வேடந்தாங்களே!!!
அதனை உணர்ந்து, உள்ளங்களே அமைதி கொள்ளுங்கள்...நட்பின் அடையாளத்தை அமைதி வழியிலும், அறிவு வழியிலும் நாட்டுங்கள்...
இறுதியாக , ஒரு குறளைக் கூடி முடித்து விடுகிறேன்...
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
அதாவது, தாழ்த்திச் செய்ய வேண்டிய செயல்;ஐ காலம் தாழ்த்தியும்
விரைந்து செய்ய வேண்டிய வேலையை விரைந்தும் செய்யவேண்டும் என்பதாகும். நான் எதைக் கூற விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்..என்ற நம்பிக்கைக் கொண்டு.... விடை பெறுகிறேன்...




யாழ்ப்பாண கவர்னர் உரை..





முளைப்பாரி விழா அணி வகுப்பு






உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்.. யாழ்ப்பாணம்


முதல்வர் விக்னேஷ்வரன் உரை வீச்சு


குடியரசு தினம் 2018 தர்ஷிணி - மூன்றாம் வகுப்பு





Translate