தன்னலம் கருதா,
தனக்கென வாழா,
தன்மானத் தலைவரே!!
விருதுநகர் பட்டிலே,
அன்னை சிவகாமி அம்மையாருக்கும்,
குமாரசாமி அவருக்கும் பிறந்த
மாபெரும் ஜோதியே!!
காந்தியின் வழி வந்த கர்மவீரரே!
தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் சீடரே!
உலகத் தலைவர்கள் வியந்து
பாராட்டிய பாரதத் தலைவரே!
உனது புகழை;
உனது தியாகத்தைச் சொல்ல
எனக்குத் தகுதி ஏது??
இந்திய நாட்டில் தமிழ் நாடு
தந்த தவப்புதல்வனே !
இந்திய நாட்டின் விடுதலைக்காகச்
சிறை சென்று சித்திரவதையடைந்து
சுதந்திரம் பெற்றுத் தந்த
பெரும் தியாகியே! - ஏழைப் பங்காளனே!
கல்விக்கு வித்திட்ட கர்மவீரர் காமராஜரே!
தமிழ் நாட்டின் முதலைமச்சராக பொறுப்பேற்று
பல அரிய சாதனை செய்து
புகழ் பெற்றவரே!
கல்விக்கே கண் திறந்த கருணைக் கடலே!.
ஏழை மாணவர்களுக்கே
முதன் முதலாய் மதிய உணவு தந்த
மாபெரும் தலைவரே!
குலக் கல்வித் திட்டத்தை
ஒழித்த கோமகனே!
பட்டி தொட்டி வாழ்ந்த
பாமரமக்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும்
ஏழைப்பங்காளனாய் வாழ்ந்த ஏகலைவனே!
உனது ஆட்சியில்
யாரும் செய்யாததையும், இனி
யாரும் செய்ய முடியாததையும்
செய்து காண்பித்த செம்மலே!
கறை படியாத காரூண்ணியரே!
பதவி வெறிபிடித்து அலையும்
தலைவர்களைப் போலில்லாமல்;
பதவியே வேண்டாமென தூக்கி எறிந்தவரே!
உனது தியாகத்தை என்னவென்று சொல்வேன்!
சொல்லின் செல்வமே!
பண வெறிபிடித்து அலையும் பித்தர்கள் மத்தியில்
பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை
மூவையும் வெறுத்த முத்தமிழே.....
உனது நாமம் என்றும் வாழ்க!! வாழ்க!!
------------------------------------------------------------------------------
Search This Blog
Friday, November 26, 2010
கண்ணில் கால்
கண்ணப்ப நாயனாருடைய இயற்பெயர் திண்ணன். திண்ணன் என்ற வேடன்தான் கண்ணப்பராக மாறினான். கண்ணப்பன் வழக்கமாக காட்டில் ஒரு சிவலிங்கத்தைப் பூஜை செய்து வந்தான். அந்தப் பூஜை கூட காய்கறி வைத்து நடத்திய பூஜை அல்ல. அசைவ உணவை வைத்துப் படைத்து நாள்தோறும் வழிபட்டான்.
ஒரு நாள் அந்த சிவலிங்கத்தின் கண்ணில் இரத்தம் வழிந்தது. அதற்கு சிகிச்சை செய்ய ஏதேதோ மூலிகைகளையெல்லாம் முயன்று பார்த்தும் முடியவில்லை. பிறகு தன் கண்ணை ஒரே அம்பால் பெயர்த்து சிவலிங்கத்தின் கண்ணிலே அப்பினான்.
ஆனால் அந்த சிவலிங்கம், ஒரு கண்ணை அப்பி விட்டாரே, ஆளுக்கு ஒரு கண்ணாக இருந்து விட்டு போகட்டும் என்று நினைக்காமல் அவனை சோதிக்க வேண்டி இன்னொரு கண்ணிலிருந்தும் இரத்தம் வருமாறு செய்தார். உடனே வேறு வழியில்லாமல் தன்னுடைய இரண்டாவது கண்ணையும் பிடுங்கி, சிவலிங்கத்திற்கு வைக்க முற்பட்ட கண்ணப்பன், அந்த கண்ணையும் பிடுங்கி விட்டால் எங்கே வைப்பது? என்று தெரியாது என்பத்ற்காக அடையாளத்திற்காக சிவனுடைய பழுதுபட்ட அந்தக் கண்ணில் தனது செருப்பணிந்த காலை வைத்துக் கொண்டு தனது மற்றொரு கண்ணைப் பிடுங்கி அப்பினான்.
அவனின் அளவில்லா பக்தியை அறிந்த ஆண்டவன் மகிழ்ச்சியடைந்து இரு கண்ணிலும் அவனுக்கு ஒளிதந்தான். அவன் தான் 63 நாயன்மார்களில் ஒருவனான, கண்ணப்ப நாயனார் ஆவார்.

நினைவு கூர்தல்
நினைவு கூர்தலின் படி நிலைகள்
கற்றல் (learning)
¯
மனத்தில் இருத்தல்(retention)
¯
மீட்டறிதல்(recognition)
¯
மீட்டுக் கொணர்தல்(recall)
நினைவு கூர்தலை மேம்படுத்தும் உத்திகள்:-
© கற்பதில் ஆர்வம்
© பொருளுணர்ந்து கற்றல்.
© பலமுறை பாடப்பொருளை பயிலுதல்.
© இடைவெளி விட்டுப் பயிலுதல்.
© முழுமையாகக் கற்றல்.
© பல்புலன் வழிக் கற்றல்
(multi sensory learning i.e.,Through
multimedia)
© மகிழ்ச்சியான சூழ்நிலையில்
கற்றல்.
© கற்கும் பொருளைக் குறிக்கும் சில சுருக்கக்
குறிப்புகளைப் பயன்படுத்துதல் (eg, VIBGYOR)
© மன உறுதியுடன் கற்றல்

Saturday, November 20, 2010
Thursday, November 18, 2010
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை எனும் பூவெடுத்து
நாளெல்லாம் சூடிக்கொள்-
அது விரைவில் சூளுரைக்கும்
வெற்றி எனும் கோட்பாட்டை..
கோள்கள் ஒவ்வொன்றும்

சூரியனைச் சுற்றி வருவதைப்போல்- நீ
முயற்சி எனும் புள்ளியின் துணையோடு
வெற்றி என்ற வட்டத்தைச் சுற்றி வா!!
வளர வளர வெற்றியானது
உனது வாழ்வை வளமாக்கச் செய்யும்..
வளமுள்ள நம் தமிழைப் போன்று
தனியாப் புகழுடனும் -நீ
தரணினியிலே தனக்கென ஓர் இடத்தைத்
தயங்காமல் பிடிக்கவும்;
பீறு நடை கொண்டு எழவும்;
எயிறின் ஒளிபோல்
என்றென்றும் ஒளிரவும்;
ஓங்கவும் - நீ .........உன்
தன் என்று நம்பி - உன்
கை மேற்கொண்டு செயல்பட்டால்
இமயமும்; எரிமலையும்
உன் வசப்படும்.....
நாளெல்லாம் சூடிக்கொள்-
அது விரைவில் சூளுரைக்கும்
வெற்றி எனும் கோட்பாட்டை..
கோள்கள் ஒவ்வொன்றும்

சூரியனைச் சுற்றி வருவதைப்போல்- நீ
முயற்சி எனும் புள்ளியின் துணையோடு
வெற்றி என்ற வட்டத்தைச் சுற்றி வா!!
வளர வளர வெற்றியானது
உனது வாழ்வை வளமாக்கச் செய்யும்..
வளமுள்ள நம் தமிழைப் போன்று
தனியாப் புகழுடனும் -நீ
தரணினியிலே தனக்கென ஓர் இடத்தைத்
தயங்காமல் பிடிக்கவும்;
பீறு நடை கொண்டு எழவும்;
எயிறின் ஒளிபோல்
என்றென்றும் ஒளிரவும்;
ஓங்கவும் - நீ .........உன்
தன் என்று நம்பி - உன்
கை மேற்கொண்டு செயல்பட்டால்
இமயமும்; எரிமலையும்
உன் வசப்படும்.....
Tuesday, November 16, 2010
குறளோவியம்
அதிகாரம் - 53 சுற்றந்தழால் பாடல் - 527
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

பிள்ளையார் கோவில் வாசலில் ஐந்தாறு இளைஞர்கள் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஒரு பக்தர் தேங்காயுடன் வந்தார். விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்; அவர் கையில் இருக்கிற தேங்காய் சூறைத் தேங்காய் என்பதை புரிந்து கொண்டு!
பக்தர் பிள்ளையாரை வணங்கிவிட்டு, அந்தத் தேங்காயை அங்கிருந்த கருங்கல்லின் மீது ஓங்கி அடித்தார். அது சுக்கல் சுக்கலாகச் சிதறிற்று. இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்து சிதறிய தேங்காய்த் துண்டுகளை பொறுக்கிட முற்பட்டனர். சிலருக்கு தேங்காய்த் துண்டுகள்; ஓரிருவருக்கு உடைந்து போன ஓடுகள்! ஓரு இளைஞன் கையிலே மட்டும் பெரிய மூடி சிக்கியது! அதை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி தொலைவில் உள்ள பாழ்மண்டபத்தில் ஏறி நின்று முழுவதும் அவனே தின்று தீர்த்தான். ஒரு சிறு தேங்காய்த் துண்டு கூட கிடைக்காத இளைஞர்கள் ஏமாந்து போய் நின்றனர். எல்லோருமே ஏழை வீட்டு இளந்தளிர்கள்தான். வறுமையில் வதங்கிப் போனவர்கள்தான். பெரிய தேங்காய் மூடியைத் தின்றுவிட்டு; எதுவும் கிடைக்காதவர்களைப் பார்த்து பழிப்புக் காட்டிக் கொண்டிருந்த இளைஞனிடம் அந்த பக்தர் சென்றார்.
"தம்பி! நீ இப்படிச் செய்யலாமா? எவ்வளவு பிள்ளைகள் ஏங்கிப்போய் விட்டார்கள் பார்த்தாயா?"
என்று பரிவுடன் கேட்டார்.
"என் திறமை எனக்குக் கிடைத்தது! அவர்கள் கையாலாகாததனத்திற்கு நானா பொறுப்பு?" என்று அந்த இளைஞன் பதில் சொன்னான்.
அப்போது அருகில் உள்ள ஒரு பெரிய வீட்டு வாயிற்புறத்தில் நாலைந்து எச்சில் இலைகளை வேலைக்காரி வீசி எறிந்து விட்டுச் சென்றாள். ஒவ்வொரு இலையிலும் சில பண்டங்கள் எஞ்சியிருந்தன. அந்த இலைகள் தெருவில் விழுந்ததை பசியோடிருந்த ஒரு காக்கை பார்த்து விட்டது. பறந்து வந்து இலையிடம் அமர்ந்தது. அடுத்த வினாடியே அது "கா! கா!" என்று கரையத் தொடங்கியது. கூட்டமாகப் பத்துப் பதினைந்துக் காக்கைகள் வந்து சேர்ந்தன. அவை ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாமல் நிதானமாகவும் கட்டுப்பாடாகவும் அந்த இலைகளில் இருந்த பண்டங்களைத் தின்றன.
பக்தர் அந்த இளைஞனைப் பார்த்து சொன்னார், "தம்பி பார்த்தாயா? ஒரு சாதாரணப் பறவை இந்தக் காக்கை! இது கூடத் தனக்குக் கிடைத்த உணவை, அருந்தவேண்டுமென்ற எண்ணமில்லாமல் தன் இனத்தையே கூவியழைத்துப் பகிர்ந்துண்ணும் பண்பை பெற்றிருக்கிறது! இத்தகைய இயல்பு படைத்தவர்களுக்கே இந்த உலகில் உயர்வு உண்டு! எல்லாம் தனக்கே என்பவருக்கு ஆக்கமில்லை; அழிவேதான்! இதனை அறிந்து கொள்க தம்பி!" இப்படிக் கூறிவிட்டுப் பக்தர் சென்றதும் , அந்த இளைஞன்; தனது செயலுக்கு வருந்தி நாணித் தலை கவிழ்ந்து நின்றான்.
கதையின் நீதி:
"தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவியழைத்துக் காக்கை உண்ணும். அந்த இயல்புடையவர்க்கே உயர்வு உண்டு உலகில்." என்கிறது குறள்.
_________________________________________________________________
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

பிள்ளையார் கோவில் வாசலில் ஐந்தாறு இளைஞர்கள் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஒரு பக்தர் தேங்காயுடன் வந்தார். விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்; அவர் கையில் இருக்கிற தேங்காய் சூறைத் தேங்காய் என்பதை புரிந்து கொண்டு!

"தம்பி! நீ இப்படிச் செய்யலாமா? எவ்வளவு பிள்ளைகள் ஏங்கிப்போய் விட்டார்கள் பார்த்தாயா?"
என்று பரிவுடன் கேட்டார்.
"என் திறமை எனக்குக் கிடைத்தது! அவர்கள் கையாலாகாததனத்திற்கு நானா பொறுப்பு?" என்று அந்த இளைஞன் பதில் சொன்னான்.

பக்தர் அந்த இளைஞனைப் பார்த்து சொன்னார், "தம்பி பார்த்தாயா? ஒரு சாதாரணப் பறவை இந்தக் காக்கை! இது கூடத் தனக்குக் கிடைத்த உணவை, அருந்தவேண்டுமென்ற எண்ணமில்லாமல் தன் இனத்தையே கூவியழைத்துப் பகிர்ந்துண்ணும் பண்பை பெற்றிருக்கிறது! இத்தகைய இயல்பு படைத்தவர்களுக்கே இந்த உலகில் உயர்வு உண்டு! எல்லாம் தனக்கே என்பவருக்கு ஆக்கமில்லை; அழிவேதான்! இதனை அறிந்து கொள்க தம்பி!" இப்படிக் கூறிவிட்டுப் பக்தர் சென்றதும் , அந்த இளைஞன்; தனது செயலுக்கு வருந்தி நாணித் தலை கவிழ்ந்து நின்றான்.
கதையின் நீதி:
"தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவியழைத்துக் காக்கை உண்ணும். அந்த இயல்புடையவர்க்கே உயர்வு உண்டு உலகில்." என்கிறது குறள்.
_________________________________________________________________
வாழ்(ழை)
வாழ்க்கை என்பது ஓர் வாழைப்பழம் மாதிரி
வாழைப்பழத்தில் நாம் எவ்வாறு தோலை நீக்கி
பழத்தை மட்டும் சாப்பிடுகிறோமோ, அது போல -
நாம் வாழ்க்கையில் துன்பங்களை நீக்கி
நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

------------------------------------------------------------------------------------------------------
**அருட்தந்தை வேதாந்திரி மகரிஷியின் பொன் மொழிகள்**
- நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள் .
- எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
- சில நேரங்களில் சில கஷ்டங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
- நீங்கள் சொன்னதே சரி என்று வாதிடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
- மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
- அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
- எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
- கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் உடனே நம்பி விடாதீர்கள்.
- உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
- மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
- மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
- புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
- பேச்சிலும், நடத்தையிலும், பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
- பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.
Monday, November 15, 2010
ஆசான் (வாணி வித்யாலயா)
அன்பெனும் மழையாய்
கல்வியெனும் கரும்பாய்
கார்மேகக் கவிதையாய்
இரக்கமுள்ள இறைவியாய்
கிளர்ந்தெழும் தருவாய்
ஈசனின் புதல்வியாய்
கீதத்தின் சாரமாய்
உன்னதத்தின் ஜோதியாய்
குலம் வளர்க்கும் கோபுரமாய்
ஊழ்வினையறுக்கும் விடியலாய்
கூடிவாழ் பண்பை வளர்க்கும் பாரதத்தாயாய்
எள்ளளவும் தளராத தாமரையாய்
கெட்ட எண்ணத்தை நீக்கும் கெஜவல்லியாய்
ஏட்டைப் புகட்டும் பொற்பதமாய்
கேள்வி ஞானம் வளர்க்கும் வளர்பிறையாய்
ஐயங்களை அகற்றும் பஞ்சரசமாய்
கைத்தலம் பற்றுவோருக்கு ஐயாய்
ஒன்றென்று முழங்கும் முத்தமிழாய்
கொள்கையைப் போற்றும் பிராட்டியாய்
ஓம் எனும் மந்திரத்தின் மகளாய்
கோ போன்று கலை பயிற்றும் கோமகளாய்
ஔடதத்தை போக்கும் ஔவையாய்
விளங்குபவர்களே......
எனதருமை வாணி
வித்யாலயாவின்
ஆசான்கள்.
எங்கள் நேரு மாமா

நேரு எங்கள் நேரு
நெஞ்சில் நிறை நேரு
ஊரும் உலகம் போற்றும்
ஒப்பில்லா நேரு
குழந்தைகள் மனதிலே

கொஞ்சும் மழலைகளின் உள்ளத்தில்
கோபுரமாய் வாழ்ந்த நேரு
அழகிய மலர்ந்த ரோஜாவைத்
தன் சட்டையிலே அணிந்த நேரு

அன்பு பரிவு இரக்கமதை
அனைவரிடமும் காட்டிய நேரு
புத்தரின் கொள்கையைப்
பின்பற்றி வாழ்ந்த நேரு
மகான்களின் மனதிலும்
மனித நேயமாய் வாழ்ந்த நேரு

கள்ளம் கபடமற்ற
கருணை உள்ளம் கொண்ட நேரு
விடுதலைக்காகப் பாடுபட்ட
வீரராஜா நேரு
சிறையிலிருந்த போதும்
சிந்தனைச் சிற்பியாய் நின்ற நேரு

பாலகரிடமும் பரப்பிய நேரு
பாசமுள்ள நெஞ்சினில்
பாரியாய் வாழ்ந்த நேரு
கவிஞர்களின் நெஞ்சினில்
காவியமாய் வாழ்ந்த நேரு

அக்காவியத்தின் பிறந்த நாள்
நவம்பர் 14 - அதுவே
நேருவின் நெஞ்சில் நிறைந்த
நிகரில்லா குழந்தைகள் தினம்
Saturday, November 13, 2010
*-*-*-*-*-*-*-*-*-*-TEENU*-*-*-*-*-*-*-*-*-*-
எங்கள் வீட்டு குட்டி
அவன் தங்கமானக் குட்டி
வாலை ஆட்டும் குட்டி
வாலுத் தனக் குட்டி
அழகானக் குட்டி
ஆணவக் குட்டி
அறிவானக் குட்டி
அங்குமிங்கும் அலையும் குட்டி
ஓடியாடும் குட்டி
ஒய்யாரமாய் தூங்கும் குட்டி

பாசக்காரக் குட்டி
பயப்படாதக் குட்டி
ஊர் சுற்றும் குட்டி
நல்ல உதை வாங்கும் குட்டி
சொன்ன பேச்சுக் கேட்காதக் குட்டி
சொகுசு மெத்தையில் தூங்கும் குட்டி
கண்டபடி கத்தும் குட்டி
கண்களால் மயக்கும் குட்டி
கட்டுக்கடங்காதக் குட்டி
வெள்ளை அழகுக் குட்டி
பட்டு போன்ற குட்டி
பாலைக் குடிக்கும் குட்டி

பேப்பரைத் தின்னும் குட்டி
பேச முடியாதக் குட்டி

தங்க குணம் குட்டி
தவறுகள் செய்யும் குட்டி
ஒப்பிலாக் குட்டி
வா என்று அழைக்கும் குட்டி
வம்புக்காரக் குட்டி
காதை மடக்கும் குட்டி
காததூரம் போகும் குட்டி
பெண்னை நாடும் குட்டி
பெருமைக்காரக் குட்டி
நட்பை நாடும் குட்டி
நன்றியுள்ள குட்டி
அழகாய் குளிக்கும் குட்டி -உடன்
அழுக்காகும் குட்டி

வந்தவரை விரட்டும் குட்டி
கால் நடை போகும் குட்டி

மழலைகளைக் கொஞ்சும் குட்டி
மழுப்பி அலையும் குட்டி

துணியைத் தின்னும் குட்டி
துணிச்சலானக் குட்டி

நாக்கை நீட்டும் குட்டி
மடியில் படுக்கும் குட்டி
தேங்காய் தின்னும் குட்டி

எலும்பைத் தின்னும் குட்டி -அவனே
என்னுயிர் பட்டி பட்டி................
Subscribe to:
Posts (Atom)