பிறப்பால் அனைவரும் சமம்; பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை.
அனாதையாய்ப் பிறந்து பார் !
தாய் தந்தையர் அருமை புரியும் !
அடிமையாய் இருந்து பார் !
சுதந்திரத்தின் சொர்க்கம் புரியும் !
கடுமையாய் உழைத்துப் பார் !
வெற்றியின் மகிமை புரியும் !
அட மனிதனே !
இன்னுமா புரியவில்லை ?
மனித நேயத்தோடு வாழ்ந்து பார் !
மனிதப் பிறப்பின் மகத்துவம் புரியும் !
ஒரு முறையாவது மனித நேயத்துடன் வாழ்ந்து பார் ! ஆம்! இது ஒரு கவிஞனின் ஆதங்கக் குரல்... உலகில் பிறந்த எந்த ஒரு ஜீவராசிகளும் அனாதைகள் அல்ல, அனாதையாய் ஆக்கப்பட்டவர்கள்.இருப்பினும், மனிதர்களாய் மனித உள்ளத்தோடு மக்கள் நடமாடும் வரை எவரும் அனாதைகள் அல்ல..என்பதை நிரூபிக்கும் பொருட்டு எமது சின்மயா பள்ளியின் சார்பாய் மாணவக் குழுக்கள், ஆசிரியப் பெருமக்கள் இணைய புதிய சக்தி எம்முள் புகுந்ததுபோல் சேவை செய்யப்புறப்பட்டோம்..அதற்கான அடிப்படைத் தேவைகளை ஆரய்ந்தோம்..அந்த ஆய்வின் பயன் எனது மாணவச் செல்வங்கள் அள்ளி இறைத்தார்கள் அவர்களால் முடிந்த உதவித்தொகை மற்றும் பொருள்களை...அள்ளி வாரினோம்..அழகாக வரிசையமைத்தோம்...முதன் முதலாக எனது கைகள் ஆசிரமத்தில் உள்ள மாணவச் செல்வங்களுக்காக கையேந்தியது.எனக்கு இது புது அனுபவமாக இருந்தாலும் புத்துணர்வை ஏற்படுத்தியது.இத்தாக்கத்தை எனக்கு ஏற்படுத்தியவன் என் புதல்வனே...முயன்றோம், பொருள்கள் பல பெற்றோம்.நிம்மதிப் பெருமூச்சுடன் ஆசிரமத்திலுள்ள மாணவர்களைச் சந்தித்தோம்.மனம் கணத்தது அன்று...இன்று இலகுவானதை உணர்ந்தேன்..ஏனென்றால் யார் யாருக்கோ வாரி இறைத்த இந்த கைகள் இன்று தகுதியறிந்து வந்து சேர்ந்ததை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு...மாணவர்களோடு அலாவளாவினோம்.பிரிய மனமின்றி பள்ளி திரும்பினோம்... நாள்: 23.10.2016... பாதை ஆசிரமம்.. வளசரவாக்கம்..சென்னை.
No comments:
Post a Comment