Search This Blog

Monday, January 24, 2022

வினா - விடை வகை - பொருள்கோள்

இரண்டாம் பருவத் தேர்வு – 2021 – 2022 பத்தாம் வகுப்பு – CBSE மாணவர்களுக்கான புதிய வினாத்தாள் அமைப்பு முறையில் முதல் பகுதி – இலக்கணம் – DESCRIPTIVE PATTERN இயல் – 5 – வினா வகை இலக்கண வினாக்கள் – 2 மதிப்பெண்கள் – பயிற்சி – 1 (21.01.2022) __________________________________________________________________________________ 1. வினா எத்தனை வகைப்படும் அவை யாவை? • வினா ஆறு வகைப்படும் . அவை • அறி வினா • அறியா வினா • ஐய வினா • கொளல் வினா • கொடை வினா • ஏவல் வினா 2. அறிவினா என்றால் என்ன? எ.கா. தருக. • தான் அறிந்த ஒன்று பிறருக்கும் தெரியுமா என்பதை அறிவதற்காகக் வினவுவது. (கேட்பது) எ-கா: திருக்குறளை எழுதியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் கேட்பது. 3. அறியா வினா என்றால் என்ன? எ.கா. தருக. • தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது. எ-கா: திருக்குறளை எழுதியவர் யார்? என மாணவன் ஆசிரியரிடம் கேட்பது. 4. ஐயவினா என்றால் என்ன? எ.கா. தருக. • ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது. எ-கா: அங்கே கிடப்பது பாம்பா? கயிறா? 5. கொளல் வினா என்றால் என்ன? எ.கா. தருக. • தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது எ-கா: துவரம் பருப்பு உள்ளதா? எனக் கடைக்காரரிடம் கேட்பது. 6. கொடை வினா என்றால் என்ன? எ.கா. தருக. • பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது எ-கா: நண்பா, சாப்பிடுகிறாயா? என நண்பன் கேட்பது. 7. ஏவல் வினா என்றால் என்ன? எ.கா. தருக. • ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது. எ-கா: நீ படிக்கிறாயா? என்று அம்மா மகனிடம் கேட்பது. இரண்டாம் பருவத் தேர்வு – 2021 – 2022 பத்தாம் வகுப்பு – CBSE மாணவர்களுக்கான புதிய வினாத்தாள் அமைப்பு முறையில் முதல் பகுதி – இலக்கணம் – DESCRIPTIVE PATTERN இயல் – 5 – விடை வகை இலக்கண வினாக்கள் – 2 மதிப்பெண்கள் – பயிற்சி – 2 (22.01.2022) __________________________________________________________________________ 1. வினா என்றால் என்ன? ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவரை ஒருவர் வினவுவதே (கேட்பதே) ‘வினா’ எனப்படும். இதன் வேறு பெயர்கள்: கேள்வி,வினவு 2. விடை என்றால் என்ன? ஒருவர் கேட்கின்ற கேள்விக்குத் தகுந்த பதில்(விடை) அளிப்பது விடை எனப்படும்.. இதன் வேறு பெயர்கள்: இறை,செப்பு, பதில். 3. விடை எத்தனை வகைப்படும் ?அவை யாவை ? விடை எட்டு வகைப்படும் . அவை. சுட்டு விடை 2 . மறை விடை 3 .நேர் விடை 4. ஏவல் விடை 5. வினா எதிர் வினாதல் விடை 6. உற்றது உரைத்தல் விடை 7. உறுவது கூறல் விடை 8 . இனமொழி விடை 1 . சுட்டு விடை 2 . மறை விடை எதிர்மறுத்துக் கூறல் 3 .நேர் விடை உடன்பட்டுக் கூறுதல் 4. ஏவல் விடை 5. வினா எதிர் வினாதல் விடை 6. உற்றது உரைத்தல் விடை 7. உறுவது கூறல் விடை 8 . இனமொழி விடை 4. விடையின் இரு பிரிவுகள் யாவை? அவை யாவை? 1. வெளிப்படை விடைகள்(செவ்வன் இறை) 2. குறிப்பு விடைகள்(இறை பயப்பன) 5. வெளிப்படை விடைகள் அல்லது செவ்வன் இறை விடைகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?  வெளிப்படை விடைகள்: 3 (செவ்வன் இறை) -3 1. சுட்டுவிடை , 2. மறை விடை , 3. நேர் விடை 6. குறிப்பு விடைகள் மொத்தம் எத்தனை அவை யாவை?  குறிப்பு விடைகள் – 5 (இறை பயப்பன) - 5 1.ஏவல் விடை ,2. வினா எதிர் வினாதல் விடை ,3. உற்றது உரைத்தல் விடை , 4. உறுவது கூறல் விடை , 5.இனமொழி 7.வெளிப்படை விடைகள் என்றால் என்ன?அதன் வேறு பெயர் என்ன? அவை யாவை ? விடைகள் நேரடியாக இருப்பின் வெளிப்படை விடைகள் எனப்படும். வேறு பெயர்: செவ்வன் இறை அவை : சுட்டுவிடை , மறை விடை ,நேர் விடை 8. குறிப்பு விடைகள் என்றால் என்ன ? அதன் வேறு பெயர் என்ன? அவை யாவை? விடைகள் குறிப்பாக இருப்பின் குறிப்பு விடைகள் எனப்படும். வேறு பெயர்: இறை பயப்பன. அவை: ஏவல் விடை , வினா எதிர் வினாதல் விடை , உற்றது உரைத்தல் விடை , உறுவது கூறல் விடை , இனமொழி விடை __________________________________________________ இரண்டாம் பருவத் தேர்வு – 2021 – 2022 பத்தாம் வகுப்பு – CBSE மாணவர்களுக்கான புதிய வினாத்தாள் அமைப்பு முறையில் முதல் பகுதி – இலக்கணம் – DESCRIPTIVE PATTERN இயல் – 5 – விடை வகை இலக்கண வினாக்கள் – 2 மதிப்பெண்கள் – பயிற்சி – 3 (22.01.2022) _____________________________________________________________________ 1. சுட்டு விடையை எடுத்துக்காட்டுடன் விளக்குக. சுட்டிக் கூறும் விடை சுட்டுவிடை எனப்படும். எ.கா: ' பள்ளி எங்கு உள்ளது ' என்ற வினாவிற்கு 'வலப்பக்கத்தில் உள்ளது ' எனக் கூறல். 2. மறை விடை என்றால் என்ன ? அல்லது எதிர் மறுத்துக் கூறும் விடை என்றால் என்ன? எ.கா. தருக. மறுத்துக் கூறும் விடை மறைவிடை அல்லது எதிர்மறுத்துக் கூறும் விடை எனப்படும் . எ.கா. ' பள்ளிக்கு வருவாயா ?' என்ற கேள்விக்கு ' வரமாட்டேன் ' என மறுத்துக் கூறுவது . 3. நேர் விடை என்றால் என்ன ? அல்லது உடன்பட்டுக் கூறும் விடை என்றால் என்ன? சான்று தருக. உடன்பட்டுக் கூறும் விடை நேர்விடை அல்லது உடன்பட்டுக் கூறும் விடை எனப்படும் . எ.கா. ' பள்ளிக்கு வருவாயா? ' என்ற கேள்விக்கு ' வருவேன் ' என்று கூறுவது. 4. ஏவல் விடையை சான்றுடன் விளக்குக. வினவியவரையே (கேட்டவரையே) ஏவுதல் ஏவல் விடை எனப்படும்.. எ.கா. ' இது செய்வாயா ?'என்று கூறும் பொழுது ' நீயே செய் ' என்று ஏவிக் கூறுவது . 5. வினா எதிர் வினாதல் விடை என்பது என்ன ? எ,கா, தருக வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது வினா எதிர் வினாதல் விடை எனப்படும் . எ.கா' பள்ளிக்கு வருவாயா ' என்ற வினாவிற்கு ' வராமல் இருப்பேனா ' என்று கூறுவது. 6. உற்றது உரைத்தல் விடை என்றால் என்ன? எ.கா. தருக. வினாவிற்கு விடையாக நடந்ததையும் நடப்பதையும் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும். எ.கா.' நீ விளையாட வருகிறாயா ?' என்ற வினாவிற்கு ' கால் வலித்தது அல்லது வலிக்கிறது என்று உற்றதை உரைப்பது . 7. உறுவது கூறல் விடை என்பது என்ன ? எ.கா. தருக. வினாவிற்கு விடையாக இனிமேல் நடப்பதை அல்லது நேர்வதைக் கூறல் உறுவது கூறல் விடை எனப்படும் . எ.கா. ' நீ விளையாட வரவில்லையா ?' என்ற வினாவிற்கு ' கால் வலிக்கும் ' என உறுவதை உரைப்பது . 8. இனமொழி விடை என்றால் என்ன ? வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறுவது இனமொழி விடை எனப்படும். எ.கா. ' உனக்கு ஆடத் தெரியுமா ?' என்ற வினாவிற்கு ' பாடத் தெரியும் ' என்று கூறுவது . ____________________________________________________________ இரண்டாம் பருவத் தேர்வு – 2021 – 2022 பத்தாம் வகுப்பு – CBSE மாணவர்களுக்கான புதிய வினாத்தாள் அமைப்பு முறையில் முதல் பகுதி – இலக்கணம் – DESCRIPTIVE PATTERN இயல் – 5 – விடை வகை இலக்கண வினாக்கள் – 2 மதிப்பெண்கள் – பயிற்சி – 3 (22.01.2022) _____________________________________________________________________ 1. பொருள்கோள் என்றால் என்ன? ஒரு செய்யுளில் சொற்களை அல்லது அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் சேர்த்தோ, மாற்றியோ பொருள்கொள்ளும் முறை பொருள்கோள் எனப்படும். 2. பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவையாவை? பொருள்கோள் எட்டு(8) வகைப்படும். அவை, 1.ஆற்றுநீர்ப் பொருள்கோள் 2. மொழிமாற்றுப் பொருள்கோள் 3.நிரல்நிறைப் பொருள்கோள் 4.பூட்டுவிற் பொருள்கோள் 5. தாப்பிசைப் பொருள்கோள் 6. அளைமறிபாப்புப் பொருள்கோள் 7. கொண்டு கூட்டுப் பொருள்கோள் 8. அடிமறிமாற்றுப் பொருள்கோள் 3. ஆற்று நீர்ப்பொருள்கோள் என்றால் என்ன? எ.கா. தருக பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீரின் போக்கைப்போல சொற்கள் முன் பின் மாறாது நேராகப் பொருள் கொள்வது ஆற்று நீர்ப் பொருள்கோள் ஆகும் . எ.கா. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் அல்லது ”சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே” ( சீவகசிந்தாமணி ) 4. நிரல் நிறைப்பொருள்கோள் என்றால் என்ன? ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக) அமைந்து வருவது ‘நிரல்நிறைப் பொருள்கோள்’ ஆகும். எ.கா. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது“ (திருக்குறள்) 5. நிரல் நிறைப்பொருள்கோள் வகை எத்தனை? அவை யாவை? வகை: 2 (அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள் (ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் 6. முறை நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எ.கா. தருக. செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்கள் அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் முறை நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும் எ.கா.. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது“ (திருக்குறள்) 7. எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும். எ.கா. “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்“ (திருக்குறள்) 8. கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்றால் என்ன? எ.கா. தருக. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று. கூட்டிப்பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும். எ.கா. ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு. 9.

No comments:

Post a Comment

Translate