Search This Blog
Monday, July 18, 2022
இலக்கணம் அறிவோம்!!
இன்சொல் – பண்புத்தொகை
இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு
2. எழுகதிர் – வினைத்தொகை
கடலின் நடுவே தோன்றும் எழுகதிரின் அழகே அழகு
3. கீரிபாம்பு – உம்மைத்தொகை
பகைவர்கள் எப்போதும் கீரியும் பாம்பும் போல இருப்பார்கள்
4. பூங்குழல் வந்தாள் – அன்மொழித் தொகை
பூப் போன்ற கூந்தலையுடைய பெண்
மலை வாழ்வார் – ஏழாம் வேற்றுமைத் தொகை
பழங்குடியினர் மலையின் கண் வாழ்பவர்
6. முத்துப் பல் – உவமைத் தொகை
வெண்மதியின் முத்துப் பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது
அன்புச்செல்வன் திறன்பேசியின் தாெடுதிரையில் படித்துக் காெண்டிருந்தார்.
அன்புச்செல்வன் – இருபெயரொட்டு பண்புத்தொகை
தாெடுதிரை – வினைத்தொகை
2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் காெடுக்கவும்.
மோர்ப்பானை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
மோர் காெடுக்கவும் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
3. வெண்டக்காய்ப் பாெரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.
வெண்டக்காய்ப் – இருபெயரொட்டு பண்புத்தொகை
மோர்க்குழம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
4. தங்கமீன்கள் தண்ணீர்த் தாெட்டியில் விளையாடுகின்றன.
தங்கமீன்கள் – உவமைத்தொகை
தண்ணீர்த் தாெட்டி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
தொடர்(சொற்றொடர்)
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது “சொற்றொடர்” அல்லது “தொடர்” எனப்படும்.
எ.கா.:- நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான்.
2. தொகைநிலைத் தொடர்:
பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர்.
எ.கா.:- கரும்பு தின்றான்.
3. தொகைநிலைத் தொடர் :
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.
அவை
வேற்றுமைத்தொகை
வினைத்தொகை,
பண்புத்தொகை
உவமைத்தொகை ,
உம்மைத்தொகை
அன்மொழித்தொகை என்பன ஆகும்.
4. வேற்றுமைத்தொகை:
ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவ ற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
5. பண்புத்தொகை:
நிறம், வடிவம், சுவை , அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் “மை” என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
6. இருபெயரொட்டுப் பண்புத்தொகை:
சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ’ஆகிய’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
7. உவமைத்தொகை:
உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா.:- மலர்க்கை (மலர் போன்ற கை)
உருவகம்:உவமானம் வேறு உவமேயம் வேறு என்றில்லாமல் இரண்டும் ஒன்றே என்று ஒற்றுமைப்படுத்த வருவது உருவகம்.
இதில், உவமேயம் முதலிலும் உவமை இரண்டாவதாகவும் வரும்.
எ.கா.கை மலர்
8. உம்மைத்தொகை:
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ’உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும்.
இது,
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.
9. அன்மொழித்தொகை :
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும்.
உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை
ஒரு தொடரில் வேற்றுமை உருபும், அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது ‘உருபும் பயனும் உடன்தொக்க தொகையும்’ என்பர்.
1.தேர்ப்பாகன்- தேரை ஓட்டும் பாகன்
2.நீர்க்குடம்- நீரை உடைய குடம்
இவை இரண்டும், இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை.
3. பொன்வளையல்
4. மட்பானை
பொன்னால் ஆன வளையல்
மண்ணால் ஆன பானை
இவை இரண்டும், மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை.
5. தலைவலி மருந்து
6. கூலி வேலை
தலைவலிக்குத் தரும் மருந்து
கூலிக்குத் தரும் வேலை
இவை இரண்டும், நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை.
7. குழாய்த் தண்ணீர்
8. தொட்டித் தண்ணீர்
குழாயிலிருந்து கிடைக்கும் தண்ணீர் தொட்டியிலிருந்து கிடைக்கும் தண்ணீர்
இவை இரண்டும், ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
காட்டுப் புலி
வீட்டுப் பூனை
காட்டின் கண் வாழும் புலி
வீட்டின் கண் வாழும் பூனை
இவை இரண்டும், ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
வினைத்தொகை:
காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்சவிகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் ‘வினைத்தொகை’ எனப்படும்.
(அல்லது)
காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகை ஆகும்.
(அல்லது)
வினைப்பகுதியும் அடுத்த பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலே வினைத்தொகை அமையும்
பண்புத்தொகை
(எ.கா)
செங்கல் – செம்மையாகிய கல்
கருங்குவளை – கருமையான குவளை
இவை இரண்டும் நிறத்தைக் குறித்து வந்த பண்புத்தொகை
(எகா) -2
வட்டப்பாறை – வட்டமான பாறை
வட்டத்தட்டு - வட்டமான தட்டு
(எ.கா)
முத்தமிழ் – மூன்று + தமிழ் –
மும்மையாகிய தமிழ்
முச்சங்கம்,முக்கனி
இவை இரண்டும் அளவைக் குறித்து வந்த பண்புத்தொகை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment