Search This Blog

Sunday, September 23, 2012

தீபாவளியே .....


தித்திக்கும் தீபாவளியே  தீ+ஆவளியே
தீங்கினை அழித்து தீபவரிசையுடன்
திகட்டாத பண்டங்களுடன்
தில்லைப் பெருமானின் திருமேருமலையில்
எரியும் மகரஜோதிபோல்
மக்களின் உள்ளங்களில் மன இருளை அகற்றி
மங்காப்புகழுடன் ஒளி விடும்
திருமகனின் தீப ஒளியான தீபாவளியே  - நீ
அகத்தினுள் ஒளிந்திருக்கும்
அகந்தையினை. ஒழிக்க வந்த தீப ஒளியே
ஆண்டாளின் மணாளனால் மண்னுலகைக் காத்து   
ஆனந்தக்களிப்பை அள்ளித்தந்த  தீப ஒளியே
இன்னல்களைக் களைந்து இனி ஒரு விதி செய்வோம்
இத்திருநாட்டில்  என்று  எழுந்த தீபஒளியே
ஈகைக்கு இலக்கணம் வகுக்கப் புறப்பட்ட
ஈடில்லா ஈசனின்  திருவடித் தீப ஒளியே
.உலகளந்தவனின் உத்வேகத்தால்  சூரனை அழித்து
உன்னத நிலையை உலகிற்கு வழங்கிய தீப ஒளியே
ஊராரும் உற்றாரும் மகிழும் வண்ணம்
ஊக்கத்தை உலகிற்கு அளித்த தீப ஒளியே
எண்ணிலடங்கா ஒளியுடன்
எம்பெருமான் உருவினில் வந்த தீப ஒளியே-
ஏகலைவன் அறிவினை ஏனையோரும் பெற
ஏழ்கடல் உலகினைத் தாண்டிவந்த தீப ஒளியே
ஐயரிக்கூட்டம் ஜய ஜய பேரிகை கொட்ட
ஐயன் என் கண்ணனாகப் பவனி வந்த தீப ஒளியே
ஒற்றுமையை வளர்க்க வந்த தீப ஒளியே
ஓம் காரனின் கரத்திலிருந்து வந்த தீப ஒளியே  -
உன்னை என்றும் போற்றுவோம் வணங்குவோம் தொழுவோம்

No comments:

Post a Comment

Translate