செல்லக் குழந்தைகளே
பூக்களின் ராஜா
ரோஜா—நம்
மாமாவோ ரோஜாவின்
ராஜா
ரோஜாவை ராஜா என்றும்
தம் சட்டையிலே
வைத்திருப்பார்- ஆனால்
நம் நேரு மாமா உங்களை
சட்டைப்போட்டு
மறைத்துக்கொள்ளும்
உள்ளத்தில் அல்லவா
இதமாய்
இதயமாய் வைத்திருந்தார்---
அப்படிப்பட்ட
அந்த நேரு மாமாவின்
செல்லக் குழந்தைகளாய்
சிறகை விரித்தாடும்
சின்னஞ்சிறு வண்ணத்துப் பூச்சிகளாய்
மெல்ல வருடி இன்பம்
தரும் தென்றல் காற்றாய்
இனிய யாழினிலிருந்து
வரும் இன்ப கீதமாய்
கொஞ்சிப் பேசும்
கொஞ்சும் புறாவாய்
அணி அணியாய் வீற்றிருக்கும்
அழகிய சொரூபமாய்
கலைமகள் உறையும்
கல்வியியே
கருத்தூன்றி கலைகள்
பயிலும் பகலவனாய்
பண்பினில் பாரதியாய்
கனவு காண்பதில்
கலாமாய்
உண்மையில் காந்தியாய்
கொள்கையில் காமராசராய்
தொண்டில் தெரசாவாய்
சாதி மதங்களைப்
பாராத
பாரதத் தாயின்
குழந்தைகளாய்
உயர்வாய் உவந்து
வைத்திருக்கும்
உள்ளக் கோயிலாய்
பண்டிட் மாமாவின்
மனம் கமழும்
பன்னீர் புஷ்பங்களாய்
புவியினை ஆளப்போகும்
பொற்பதங்களே……………
உம்மை நான் என்னவென்று
போற்றுவேன்
தங்கங்களே!! நாளைத் தலைவர்களே!!!சிறாரே!!!!!
உமக்குள் இருப்பது
நானன்றோ – அதனால்
என் நா இங்கு நடனமாட
மறுக்கிறது.
உமது நாவினில்
நடனமாடுகின்றேனோ??????—யான் அறியேன்
என் எண்ணமெல்லாம்
நிறைந்திருக்கும் நித்தியக்கல்யாணியே----------- நீவிர்!
கலைமகளின் பெயரைக்
கொண்ட இக் கல்விக்கூடத்திலே
பல கலைகள் பயின்று
, பலர் போற்றும்
பண்டிட் குழந்தைகளாய்
இக்குழலிப் பருவத்தில்
குதூகலூட்ட
என் மனம் அடிக்கடி
குழந்தாய் குழந்தாய் என குதூகலிக்கிறது
குதூகலிக்கும்
என் மனம் போல்
உங்கள் மனமும்
வாழ்வும் என்றும் குதூகலிக்க வாழ்த்தும்---------
உங்கள் அன்பு ஆசிரியை-----------
ப.சித்ர கலா
No comments:
Post a Comment