
என்னவள் எனதருகில் வந்து
எதிரும் புதிருமாய்ப் பிதற்ற
என்னவென புரியாமல்
“புரியும்படி கூறு” என்றேன்
“விதியை மதியால் வெல்ல முடியுமோ?”
-
என்று கூற ,
வியந்து அவளை உற்று நோக்கி
“முடியும்” என முற்றுப்புள்ளி
வைத்தேன்.
யான் உடன் - அவளின் விவரமில்லா
வினாவிற்கு விடை தேட விடாமுயற்சியுடன்
எனது குழுவுடன் பணியைத் தொடங்கினேன்
என்னவளோடு யானும் களத்தில்
இறங்கி எண்ணற்ற ஊக்கத்தை
இடைவிடாது மாணவர்களிடம் ஊட்டி
மனமகிழ்வோடு உடல்வலிமையை அமைத்து
களத்தில் இறங்கினேன்.
என்னவளும் விடாமுயற்சியை விடாத
– எம்
மாணவச்செல்வங்களுடன் கைகோர்த்து
பவனி வர பாலகர்களின் பலே முயற்சி
பளிச்சென்று கண்ணுக்கெட்டியது.
இறங்கி வந்தது !!
அந்த இறைவனின் கருணை போல்
கணக்கிலடங்கா கனியமுதுகள்.
எமது மாணவச் செல்வங்களின்
அயராத உழைப்பின் பயனும் கிட்டியது.
“முயன்றால் வெற்றி உன்னைத் தேடி
வரும்”
என்பதை மீண்டும் நிரூபித்தார்கள்….
ஆம்,
என்னே ஆனந்தம்!! .
இறுதியில் எனதருகில் என்னவள்(வெற்றி)
!!
(வெற்றியே என்னவள்….)
இந்த அளவிலா ஆனந்தக் களிப்பை
எங்களுக்குஅளித்த எமது
மாணவச்செல்வங்களுக்கு நன்றிகள்
பல….
நன்றி, நன்றி, நன்றி
No comments:
Post a Comment