மது குடிக்கும்
மாக்கனே !
மங்கை ஒன்று சொல்கிறேன்
கேள் !
மதுவைத் தேடி நீ
அலைந்தால் ..
மரணம் உன்னைத்
தேடி விரைவில் வரும்.
மதுவை நீ மாதுளஞ்
ஜுஸ் என்றாயோ ? – அது
மனத்தை அழிக்கும்
மது பானமல்லவா…..
கள்ளச் சாராயமென்று
கடைவீதியே நீ அலைந்தால்
உன் உள்ளச் சரிரத்தை
உருக்குருக்கி
கள்ளனே, உனக்கு
கல்லணைக் கட்ட
கடும் வெயிலிலும்
காத்திருக்கிறான் வெட்டியான்…
No comments:
Post a Comment