புகை பிடிக்கும் பீமனே !
பீதியுடன் புகை பிடிப்பதை விட்டு விட்டால்
பிணமாகாமல் பிழைப்பாய்.
பீமன் என்ற பிரமிப்போடு
புகையைப் பற்ற வைத்தால்..
பிணி என்னும் சாக்காடு
சடுதியில் வந்தடையும்.
மூர்க்கனே! நீ என்ன தற்காலப் புகைவண்டியா?
தயங்காமல் தம்மடிக்க..
முதலே முடிவு என்பதை அறியாமல்
உனக்கே நீ கொள்ளி வைக்க
வாயில் கொள்ளியை வைத்துப் புகைக்கிறாயோ ?
நீ புகைக்க புகைக்க உடலும்
புகைந்து கொண்டே இருக்கிறது…
பற்ற வைத்தால் புற்று உருவாகும்
என்பதை உடனே அறிந்து......
தற்காலப் புகைவண்டியைத் தயங்காமல் நிறுத்து…
No comments:
Post a Comment