Search This Blog

Sunday, August 17, 2014

குழந்தைப் பாடல்கள்

மரம் நடுவோம்
மரம் நடுவோம் மரம் நடுவோம்
மழலைகள் நாமே
விண்ணின் துளி மண்ணில் விழ
மரம் நடுவோமே
தூய காற்று சுவாசிக்கவும்
துவண்டிடாமல் வாழ்வதற்கும்
மரம் நடுவோம் மரம் நடுவோம்
மழலைகள் நாமே
சுற்றுச்சூழலைப் பேணவும்
சுகாதாரமாய் வாழவும்
மரம் நடுவோம் மரம் நடுவோம்
மழலைகள் நாமே
விண்ணின் துளி மண்ணில் விழ
மரம் நடுவோமே…..


கல்வி
கல்வி என்ற கற்கண்டை
கனிவாய் நீயும் பயில்வாயே
வாழ்வின் வழிகாட்டி கல்வியை
கசடறக் கற்க முனைவாயே
கல்வி என்ற கலங்கரையை
கரை சேரக் கற்பாயே
பண்பை உயர்த்தும் கல்வியை – நல்ல
பாரதத்தில் சேர்ப்பாயே
வாழ்வில் முடிவில்லை கல்வியே
நம்மை வளம் சேர்க்கும் கல்வியே
என்றென்றும் வேண்டும் கல்வியே
என் ஒளி விளக்கே கல்வியே…..




No comments:

Post a Comment

Translate