காமராசர்
பிறந்த தின விழா – 113 (2015) வாழ்த்து மடல்.
காமராசரே
உம்மீது காதல் கொண்டேன்-
கரம்
பற்ற அல்ல;கவிதை பயில.
கர்மவீரரே உம்மீது கனிவு கொண்டேன்-
கரிசனத்திற்காக
அல்ல;கடமை ஆற்ற.
படிக்காத
மேதையே உம்மீது பரிவு கொண்டேன்-
பணத்திற்காக
அல்ல;படிப்பறிவினை ஊட்ட.
தென்னாட்டுக்காந்தியே
உம்மீது தீராக் காதல் கொண்டேன்-
திமிருக்காக
அல்ல;தென்தமிழ் பாட்டெழுத.
செயல்வீரரே
உம்மீது செந்தமிழ் தொடுத்தேன்-
செலவழுங்க
அல்ல;செவ்வியல் பண்பறிய.
கருப்புக்காந்தியே
உம்மீது கனவு கொண்டேன்-
கலைந்துபோக
அல்ல;கற்பனை ஊற்றாய்ப் பெருக்கெடுக்க.
கிங்மேக்கரே
உம்மீது கீதம் புனைந்தேன்-
கிறுக்கலுக்காக
அல்ல;கீதையின் வழி நடப்பதற்காக.
காட்சிக்கு
எளியோனே உம்மீது கானல் நீர் கொண்டேன்-
களைவதற்கு
அல்ல; களங்கமில்லா நெஞ்சோடு வாழ.
கடுஞ்சொல்
கூறோனே உம்மீது கோலம் கொண்டேன்-
நிழலாவதற்கு
அல்ல; நிஜமாவதற்கு.
கல்விக்கண்
திறந்தவரே உம்மீது களிப்பு கொண்டேன்-
கலங்க
வைக்க அல்ல-கலை பல பயில.
ஏழைப்பங்காளனே
உம்மீது ஏற்றம் கொண்டேன்-
ஏளனம்
செய்ய அல்ல;எளியோரைக்காக்க.
பதவியாசை
இல்லாதவரே உம்மீது பக்தி கொண்டேன்-
பசப்பலுக்காக
அல்ல;பாதைமாறி போகாமல் இருப்பதற்காக.
மதிய
உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தவரே உம்மீது மதிப்பு கொண்டேன்-
மையலுக்காக அல்ல; மகா சாதனைகள் புரிவதற்காக.
மையலுக்காக அல்ல; மகா சாதனைகள் புரிவதற்காக.
உன்னதத்
தலைவரே உம்மீது உயிர் கொண்டேன்-
உசுப்ப
அல்ல;உறவை மேம்படுத்த.
பிரச்சனையை
எதிர்கொள்பவரே உம்மீது பிணைப்பு கொண்டேன்-
புறம்
பேச அல்ல;பிறர் மதிப்பதற்காக.
சிவகாமியின்
மகனே உம்மீது சீரிய நட்பு கொண்டேன்-
சிறகடிக்க
அல்ல; சிந்தனை செய்ய.
பச்சைத்தமிழனே
உம்மீது பாவை நோன்பு கொண்டேன்-
பாடிக்களிப்பதற்கு
அல்ல; பண்பாட்டைக்காக்க.
தாயை
மறந்தவனே உம்மீது தயை கொண்டேன்-
தழைக்க
அல்ல;தாய் மண்ணைக் காக்க.
பெருந்தலைவரே
உம்மீது பேரன்பு கொண்டேன்-
பெருமைக்காக
அல்ல;போலச் செய்தலுக்காக.
ஒன்றா
? இரண்டா ? உம்மைப்பற்றி சொல்ல-
என்
சொல் மனதில் ஓராயிரமாயிரம் சொற்கள் சொற்கோபுரமாய் சொக்குகிறதே.
சொல்லின்
செல்வமே…. எத்தனைப் பட்டம்! எத்தனைத் திட்டம்!!
பட்டிதொட்டியெல்லாம்
உன் சட்டம்!!!
நானோ
உந்தன் வட்டம்….காந்தியவாதியே, கல்வித்தந்தையே…
உனையன்றி
வேறு யாருமில்லை…நீயே எந்தன் தஞ்சம்.
என்
வாழ் நாளே உந்தன் மன்றம்.
No comments:
Post a Comment