உலக தாய்மொழி தினம்(21.02.18)
ஆதிகால மனிதனின்
மொழியாம் தமிழ்
இறைவனை சொற்களால்
அழகுபடுத்தும் தமிழ்
ஈவிரக்கம் கொள்ளக்
கற்றுத் தரும் தமிழ்
உரக்கச் சொல் இது
உலகின் முதல்மொழி என்று
ஊற்றாய்ப் பொழியும்
எங்கள் மொழியின் வளங்கள் யாவும்
எட்டுத் திக்கும்
பரந்து விரிந்த உலக மொழியாம் தமிழ்
ஏற்றத் தாழ்வை சமமாக
எடுத்துக்கொள் என்று
சொற்கள் மூலம்
உணர்த்தும் தமிழ்
ஐயம் வேண்டாம் இதுவே
உலகின் தாய்மொழி
ஒற்றுமையை உண்டாக்கிய
மொழி
ஓம்காரத் தத்துவனின்
பிரியமான மொழி
ஔவை பாடிய திருமொழி
அஃதெங்கள் உயிர்மூச்சானத்
தமிழ்மொழி!!!!
ர.ஹே.லக்க்ஷனா
ஒன்பதாம் வகுப்பு “அ” பிரிவு
No comments:
Post a Comment