Search This Blog

Friday, September 4, 2020

SECRET - 1

 

எனதருமை மாணவச் செல்வங்களே!




          எப்பொழுதும் உங்களுடன் பாடம் தொடர்பான பதிவினை மட்டுமே இட்டு வந்த நான் சற்று சன்னமாக, திண்ணமாக,” தினம் ஒரு திண்ணம்” “திகட்டாது நம் எண்ணம்” என்ற தலைப்பில் நான் வாசித்தப் புத்தகத்திலிருந்து  நானறிந்த புத்தாக்கச் சிந்தனைப் பற்றி பகிர்ந்து கொள்ள உள்ளேன்.. இவ்வெண்ணம் என்னுள் எழக் காரணம். மாணவர்களே உம்பால் கொண்ட அன்பே. உங்களால் நான் வாழ்கிறேன்.  இந்த அன்பில் ஆயிரமாயிரம் அர்த்தங்களை உணர்த்த உங்களின் வாழ்விற்கு ஊன்றுகோலாய்

 நல்லெண்ணங்களை விதைக்க,  நினைவிலும்  நான் வாழ ஏதாவது ஒன்றைப் பாடம் தாண்டி செய்ய வேண்டும்,,மாணவர்கள்பால் வாசித்தல் திறனை ஊக்குவிக்க வேண்டும் என்ற பேரவா. இந்த உத்வேகம்.  இந்த உத்வேகத்திற்கான களம் இக்காலம்: இச்சூழல், சிந்திக்க நிறைய நேரத்தை எனக்கு ஈட்டித் தந்தது. உலகம் சூழலையும் சூழ்நிலையையும் அதன் இயக்கத்திலே இயக்குகின்றன. அதில், இயங்கிக் கொண்டிருப்பவர்கள்தான் நாமும்தான். .ஆனால் நாம் அதன் இயக்கத்திலே இயங்குகிறோமா? இயக்குகிறோமா? 

சரி செய்திக்கு வருவோம்!.

       மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது? எனக் கேட்டபோது சற்றும் யோசிக்காமல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன பதில்புத்தகம்.” புத்தக வாசிப்பு என்பது நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கு உதவும் ஒரு காரணி. படிப்பு என்பது வேறு. வாசிப்பு என்பது வேறு.  நம்  தேவைகளுக்காகப் படித்த நூல்களைத் தேடிப் படிக்கும்போது படிப்பது வாசிப்பாகி விடுகிறது. நம்மைப் புத்தாக்கம் செய்து கொள்வதற்கான அத்தனைச் சக்திகளும், அனுபவங்களும் புத்தகங்களில் மட்டுமே நிறைந்திருக்கின்றன.

 நானாக இருக்கட்டும் இல்லை மற்றவர்களாக இருக்கும் இல்லை மாணவர்களாகவே இருக்கட்டு. நம் துறை சார்ந்த, நம் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள, நம் படிப்பிற்கு வேண்டிய நூல்களை மட்டுமே   வாசிப்பது என்பது சென்று கொண்டிருக்கிறது .இதற்கு நானும் விதிவிலக்கல்ல. கூடாது என்பதையும் உணர்ந்தேன்.. அது வாசிப்பும் ஆகாது. வாங்கி வைத்த புத்தகங்களை வாசிக்க நேரமில்லை என அங்கலாய்ப்பவர்கள் அநேகரின் மத்தியில்தான் நம்முள் ஒரு சிலர் வாழ்கிறோம்.  உண்மையில் அதுவா காரணம்?  நமக்கு விருப்பமில்லை

 

என்பதே உண்மை!  . வாசிப்பதைத் தனி நேரம் ஒதுக்கித்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நம்முடைய அன்றாட செயல்கள் சார்ந்து வாசிப்பையும் செய்ய முடியும். உடற்பயிற்சி செய்து கொண்டே  நமக்குப் பிடித்தவர்களிடம் பேசுவது, பாடல் கேட்பதுபோல் புத்தகத்தின் சில பக்கங்களையாவது இன்று நாம் வாசித்து விட வேண்டும் என்ற உறுதியான முடிவுக்குள்  நாம் வருவோம்; வரவேண்டும்...

ஒருமுறை நேருவிடம்,

 

               இவ்வளவு புத்தகங்களையும் வாசிக்க உங்களுக்கு எப்படி நேரமிருக்கிறது? என  நேருவிடம் ஒரு சிலர் கேட்டனராம்.. அதற்கு அவர், நான் புத்தகங்கள் வாசிப்பதற்கான நேரத்தைக் களவாடுகிறேன் என்றாராம் .

இந்தியாவின் மனித சக்தியை தன் அசைவில் வைத்திருந்த காந்தியடிகள் ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் ஒரு நூலகம் கட்டுவேன் என்றாராம்..

நொந்து போய் புது வாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள் என்கிறார் இங்கர்சால்.

புத்தகங்கள் கைத்துப்பாக்கிகளை விட வலிமையான ஆயுதம் என்கிறார் லெனின். அந்த ஆயுதத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே நம்மை நாமே வலிமையாக்கிக் கொள்ள முடியும். அப்படி வலிமைப் படுத்திக் கொள்கிறோமா? என்றால் அதற்கான பதில் அத்தனை வலிமையாய் இல்லை நம்மிடம்  என்பதே நிஜம்.

 

     மழை நீரானது ஓடிக்கொண்டே இருந்தால்தான் அது சாக்கடையாகாது. ஒரே இடத்தில் அது தேங்கிவிட்டால்,கொசுக்களும் நாற்றமும் தலை தூக்கும்..  இது போன்றதுதான் நம் மனமும், எண்ணங்களும். கிணற்றுத் தவளையாய் இருப்பதை விடுப்போம். வாசிப்பு மட்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். அலட்சியங்களையும், அவமானங்களையும் கடத்திச் செல்லும் கடந்து சென்றால்தான் கடக்க முடியும் கடவுள் ஆக வழிபடும் வல்லமை வலுப்படும்.. நாமும் நம் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க

புத்தகங்கள் வாங்குவதோடு அவைகளை வாசிக்கவும் பழகுவோம் பழக்குவோம்!!. அதன் மூலம் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வோம். ஒரு கல் கருவறையில் வைத்துப் பூஜிக்கப்படுவம் கற்சிலையாக மாறுவதும், கடை ஓரத்தில் காட்சிப்பொருளாக நிற்பதும் உங்களிடம் உள்ள உளி என்ற உந்துதல் ஆயுதமே. உய்த்துணர்வோம். நமக்காக  நாம் வாழ!!! நம்மை நாமே வழி நடத்துவோம்!

இது ஒரு தொடர் பதிவு:

          இரண்டு வாரங்களுக்கும் மிகாமல் வரும்.

 

     நான் கூறும் இப்புத்தகத்தைப் பற்றி நிறைய பேர் படித்து அறிந்திருப்பீர்கள். தெரிந்திருப்பீர்கள்.. எனினும், என்னுள் ஏற்பட்டத் தாக்கத்தைத் தகர்த்தெறிவதே தளராமல் செய்வதே என் நோக்கம். ஒருவரை நாம் அளவுக்கதிகமாக நேசிக்க ஆரம்பித்து விட்டால் அவர்கள் நமக்குத் துரோகமே செய்திருந்தாலும் அவர்களின் அன்பை மட்டும் உண்மையாக நேசித்திருந்தால் அது ஆசிரிய மாணவ உறவாக இன்ன பிற எதுவாயினும் என்றும் நம் மனம் அவர்களின் அன்பைக் கொச்சைப்படுத்தாது. அவ்வாறு செயின் நேசமில்லை நேர்த்தியில்லை என்பதே என் எண்ணம்.

 

       சரி, புத்தகத்திற்கு வருகிறேன். என் வீட்டில் அலமாரியில் காட்சிப் பொருளாய்ப் புத்தகத்தை அடுக்கி வைத்தாலும் அது தவறு என்று இப்புத்தகத்தைப் படித்தப்பின் புரட்ட ஆரம்பித்தேன். அப்படி ஒரு அருமையான புத்தகம். அருமையான மனிதர் வழங்கியதால் அப்புத்தகம் எனக்கு மேலும் அழகாகவே காட்சியளிக்கிறது. அக்கருத்துகளும் என்னை வசீகரப் படுத்துகிறது.

அந்தப் புத்தகத்தின் பெயர்,

THE SECRET, இரகசியம்.

 

        இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி?, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள்.

 

 

    உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள். வாழ்க்கையில் நாம் எல்லோரும் விரும்புவது ...அமைதிதான் ..அமைதி இருந்தால் மகிழ்ச்சி அனைத்தும் வந்தடையும். இத்தனையும் வந்தடைய நம் மனம் மட்டுமே காரணம். ஒரு சில நேரங்களில் நம் பெரியோர்கள். உன் மனசுதான் எல்லாத்துக்கும் காரணம் என்று அடிக்கடி கூறுவதுண்டு. அது எந்த அளவிற்கு உண்மை என்பதை இப்புத்தக்த்தை நான் படித்தப் பின் உணர்ந்தேன்

 இந்நூல் ரோண்டா பைர்ன் என்னும் எழுத்தாளருடையது.

              ரோண்டா பைர்ன் , குடியுரிமை ; ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய தொலைக்காட்சி எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரின் புத்தகமே தி சீக்ரெட்" அதில் அவர் பலரின் வார்த்தைகளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். சிறந்த வரலாற்று மக்களும் தற்போதைய வெற்றிகரமான மக்களும், அவருடைய வாழ்க்கையை அவர் விரும்பிய வழியில் மாற்றக்கூடிய "ரகசியத்தை" தெளிவுபடுத்தியுள்ளதை விளக்கியுள்ளார்.. இது 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . இதனைத் தமிழில் PSV குமாரசாமி என்பவர் மொழி பெயர்த்துள்ளார். அதிலிருந்துதான் நான் கூற உள்ளேன். “இரகசியம் திரை விலக்கப்படுகிறது” எது அந்த இரகசியம் – பாப் பிராக்டர். இவர் ஒரு தத்துவியலாளர், நூலாசிரியர்.இவர் கூறுவது. இரகசியம் நீங்கள் விரும்பும் எதையும் தரும் என்கிறார். அதாவது அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், படிப்பு, வேலை இப்படிப் பல. இரகசியம் பற்றி இவர் கூறும்போது, 

 

             நாம் எந்த நாட்டில் இருந்தாலும் எப்படி இருந்தாலும் அனைவரும் ஒரே சக்தியுடனும் ஒரே விதியுடனும்தான் இயங்குகிறோம்; செயல்படுகிறோம். எ.கா. அன்றாடப் பணிகள், சாதனைகள்,போதனைகள் இப்படிப்பல.. எல்லா இடங்களிலும் ஒரே மாதியே இயங்குகின்றன. ஆனால், மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றன. இயக்கம் ஒன்றே..ஈர்ப்பு விசை ஒன்றே. ஈர்ப்பு

 

 

 

விதியும் ஒன்றே. உலகில் இருக்கும் விதிகளில் அதிக சக்தி வாய்ந்தது இந்த ஈர்ப்பு விதிதான். புவி ஈர்ப்பு விசையைப்போல், நம்முடைய வாழ்க்கையில் நம்முடன் பயணித்து வருவதே ஈர்ப்பு விதி. நம் வாழ்க்கை பல்வேறு நிகழ்வுகளுடன் நடந்தேறிக் கொண்டிருப்பது உண்மை. இக்காலச் சக்கரத்தை உருட்ட, நிகழ்வுகளை நாம் உருவாக்கிக் கொள்ளத்தான் வேண்டும். எ.கா. பணம், பதவி, அன்பு, காதல், இப்படி எத்தனையோ. இதனை அடைய, இந்நிகழ்வுகள் நடந்தேற, நம்முடைய எண்ணங்களை நமக்குச் சாதகமாக்க  நேர்மறை முயற்சியே, அதனை முறையாகப் பயன்படுத்துவதே:, பயன்படுத்தாததே  என்ற நேர்மறை கொண்ட,  எதிர்மறை கொண்ட எண்ணமே ஈர்ப்பு விதி.

ஆனால், அவரவரின் எண்ணங்களுக்கு ஏற்றார்ப்போல், ஈர்ப்பு விதி நிர்ணயிக்கப்படுகின்றது.

  எ.கா. நம் வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்தையும் ஈர்ப்பது நாம்தான். ஏனெனில் நாம்தான் நம் மனதில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் காட்சிகள் மூலம் ஈர்க்கப்படுகிறோம். சிந்தித்த விஷயங்கள் நம் மனதில் ஓடிக் கொண்டிருப்பதைத்தான் நாம் ஈர்க்கிறோம்.. இந்த  ஈர்ப்பு விதிதான் நமக்கு நல்லதையும் தீயதையும் செயல்படுத்துகிறது. கனியன் பூங்குன்றனாரின் வரிகளை இங்குச் சுட்டினால் பொருத்தமாக அமையும். தீதும் நன்றும் பிறர்தர வாரா. இந்த இரகசியத்தை அறிந்திருந்தவர்கள் சாதனையாளராகின்றனர். நினைத்ததை நடத்தி முடித்துள்ளனர்.  என்பதே உண்மை. இந்த ஈர்ப்பு விதியை நாம் எப்படிக் கையாள வேண்டும் என்பதே இதில் குறிப்பிடும் இரகசியம்.

 

           ஒருவர் தங்களுடைய வாழ்வில், செல்வம் படைத்தவர்களைளோ, படிப்பில் உச்சம் தொட்டவரையோ இமாலய சாதனைப் படைத்தவரையோ இப்படி யார் வேண்டுமானாலும் எடுத்துப் பார்த்துமேயானால் அவர்கள் பின்பற்றியது “இரகசியம்” என்ற குறீயீடு ஒன்றே. ஏனெனில், அவர்களின் எண்ணங்கள் முழுவதும்  நேர்மறை என்ணங்களை மட்டுமே சார்ந்திருக்கின்றன. முரண்பாடான, அதாவது எதிர்மறை எண்ணங்களை முளைக்க விடாமல் பார்த்துக் கொண்டவர்களே!. எ.கா. நான் படிப்பில் முதல் மாணவனாகத் திகழ வேண்டும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் உலகளாவிய சாதனை நிகழ்த்த வேண்டும் என்று நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் தான் நமக்கு ஈர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். உங்களின் எண்ணங்கள்  குவி சிந்தனையாக இருப்பின், இந்த ஆதிக்க எண்ணங்களே உங்களுக்குச் சாதனைப் பட்டியலையும் கல்விச்செல்வத்தையும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் நாம் என்னவாக வேண்டுமென்ற ஈர்ப்பு விதியைக் கொண்டு வந்து கொடுக்கும்.

 

.   இதுதான் ஈர்ப்பு விதி.. அதாவது உங்கள் எண்ணங்களின் மூலதனம் முழுமுதற்காரணம்  நீங்களே.. நீங்களே உங்கள் மனதிலுள்ள எண்ணக் காட்சிகளை ஈர்க்கிறீர்கள். உங்கள் வசம் கொண்டு வருகிறீர்கள். அதுவே இறுதியாகப் பொருள் வடிவமாக உங்களின் வாழ்வில், இன்பமாகத் துன்பமாகப் பரிணாமம் அடைகிறது.

    

         இதுதான், இதுதான் இரகசியம். இதுதான் ஈர்ப்பு விதி, இயக்க விதி. ஈர்ப்பதும் நாம் தான். இயக்குவதும் நாம் தான் , இரகசியத்தை வெளிப்படுத்துவதும் நாம் தான்.நம் மனம் காந்தம். இந்தக் காந்தமானது நல்ல எண்ணங்களை மட்டுமே ஈர்க்கும் என்பதல்ல. இதற்கு நல்லது கெட்டது என்ற பாகுபாடு தெரியாது. நீங்கள் தான் மனம் என்னும் காந்தத்தை இயக்குகிறீர்கள்.. அப்படி இருக்கையில், நல்ல  காட்சிகள் நல்ல எண்ணங்களையே ஈர்க்கும் வகையில் ; இயக்கும் வகையில் மாற்றுங்கள். எ.கா. ஒரு மாணவன் தொடர்ந்து படிப்பில் படுசுட்டியாக இருப்பான். எல்லாவற்றிலும் முதல் மாணவனாகவே இருப்பான். திடீரென அவனது மதிப்பெண்கள் குறைந்து, முதல் மாணவன் வரிசையிலிருந்து படிப்படியாகத் தோல்வி நிலைக்குக் கூட ஒரு சில மாணவர்கள் நண்பர்கள் வந்திருப்பதை நாம் கண்டிருப்போம். மீண்டும், அவன், முதல் இடத்தைப் பிடித்திருப்பான். முதல் மாணவனாகத் தொடர்ந்து பயணம் செய்வான்.

 

     இந்த ஏற்றத் தாழ்வு அந்த மாணவனிடம் நிகழக் காரணம் விதி வலியது என்பது இல்லை. ஈர்ப்பு விதியை அறியாததே.இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமென்றால், முதலில் முதல் மாணவனாக, முதல் மதிப்பெண்கள் எடுத்து, முதல் தர வரிசையில் அவன் தொடர்ந்து இருந்தான் என்றால் அவனின் ஆக்கிரமித்த எண்ணங்கள் அனைத்தும் எப்பொழுதும் நல்லனவையே.. முதல் மாணவன், முதல் மதிப்பெண், முதல் தர வரிசை என்ற சிந்தனையைத் தவிர வேறொன்றும் அவனிடம் அந்நேரம் இருந்திருக்காது.. ஆதலால், அவனின் மனக் காந்தம் நல்லனவற்றையே ஈர்த்து வந்துள்ளன.அவனுக்கு நல்லனவையே நடந்துள்ளன. அதே எண்ணத்தில், ஒரு துளி விஷம்போல் ஒரு துளி சந்தேகம் வந்தாலும்,? புவியின் ஈர்ப்பு விசைபோல் நம் மனம் எதிர்மறையை ஈர்த்து விடும்.

 எ.கா. நான் முதல் மாணவனாகவே தொடர்வேனா? தோற்று விடுவேனா? முதல் தரவரிசை கிடைக்காதா? என்று நீங்கள் எண்ணும் எண்ணமே, அங்கு நீங்கள் ஈர்ப்பு விதியாக உங்கள் விதியை மாற்றி அமைத்து விடுகிறது.  நல்ல எண்ணம் அனைத்தையும் இழக்க வைத்து விடுகிறது.

    இழந்த பிறகு இழப்பு குறித்த எண்ணம் மறையும். மறுபடியும் நான் முதல் மாணவனாக விளங்க வேண்டும் என்ற எண்ணம் துளிர்க்கும்.. மீண்டும் முதல் வரிசையில் இடம் பிடிப்பான்  .இதுதான் ஈர்ப்பு விதி… இதுதான் இன்று நான் படித்தறிந்த முதல் இரகசியம்.

 

          இந்தப் புத்தகத்தின் மையக்கரு  நேர்மறை எண்ணங்கள் நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும்  நேர்மறையோடு இருக்க எப்படிப் பழகிக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை  வெற்றிப் பாதையாக்கும் வித்தையை எப்படிச் சாத்தியமாக்கிக் கொள்ள வேண்டும்  என்பதுதான் ‘தி சீக்ரெட்’ சொல்லும் சீக்ரெட். அதாவது  நாம் விரும்பும் விஷயத்தை அடைய  நாம் அடைய நாம் பழக்கும் வித்தை. நாம்  எதை நம் மனதில்  கொடுக்கிறோமோ, அதுவே நம்மை வந்தடையும

,         மேலும்  பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த விதி ஈர்ப்பு விதி என்று மறைந்த மாபெரும் ஆசான்கள் கூறியுள்ளதையும். இந்த ஈர்ப்பு விதியானது காலத்தின் மூலத்தோடேயே. உதித்தது. தொடர்ந்து வருகின்றது வரும். இதுதான் உண்மை.என்பதையும் தொடர்ந்து காண்போம்

           தொடரும்…..

 

 

No comments:

Post a Comment

Translate