Search This Blog

Friday, September 4, 2020

SECRET - PART - 2

 இன்றைய பதிவில்  நாம் பார்க்கக் கூடியது,

இரகசியம் – PART – 2

ஒத்தவை ஒத்தவற்றையே ஈர்க்கும்!!!!

          இத்தலைப்பில், ஜான் அஸரப் – இவர் ஒரு தொழில் முனைவோர்.பாப் டாயில் – என்பவர் நூலாசிரியர் மற்றும் ஈர்ப்பு விதி வல்லுநர், மைக் டூலி – நூலாசிரியர் மற்றும் சர்வதேசப் பேச்சாளர், முனைவர். ஜோ விட்டலே இவர்களின் கருத்துக் குறிப்புகளை உள்வாங்கி வெளிப்படுத்தும் இரகசியமெனும் வெளிச்சமே இன்றைய பதிவு.  இதனைத் தொகுத்து வழங்குவது உங்கள் ஆசிரியை சித்ரகலா கலைச்செல்வன்.

எனதருமை மாணவச் செல்வங்களே!

       நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆளப்படுகிறீர்கள்! – இது விவேகானந்தர் கூற்று. ஆம்! மாணவச் செல்வங்களே! உங்களின் எண்ண அலைகள் எந்த அளவிற்கு அலையடிக்கிறதோ அதுவே ஆக்கிரமிக்கிறது. ஆக்கமாகிறது. இதற்கு நாம் வள்ளுவனின் குறளையே எடுத்துக் கொள்ளலாம்.

         வள்ளுவனின் குறளில் கூறப்படாத செய்திகள் என்று ஏதேனும் உண்டோ? இவர்  புவி ஈர்ப்பு விசையையும் விட்டு வைக்க வில்லை. ஈர்ப்பு விதி நுணுக்கள் பற்றியும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம்..

இந்த விதியைத்தான் வள்ளுவர்,

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

             எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

இதையே பாரதி,

"எண்ணிய முடிதல் வேண்டும்  நல்லவே எண்ணவேண்டும்
 
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த  நல்லறிவு வேண்டும்" – என்றான்.

       இதுதான், இன்று பார்க்கும் இரகசிய வரிகளின் சாம்ராஜ்ஜியம். “ஒத்தவை ஒத்தவற்றையே ஈர்க்குமென”

 நாம் வாழும் இவ்வுலகில் சக்தி வாய்ந்த , மாய சக்தி பெற்ற ஒரு பொருள் உண்டெனில் அது நம் மனனென்னும் காந்தம் தான். ,

      மனக்காந்தமானது நாம் எண்ணும் எண்ணங்களை ஈர்க்கும் ஆற்றல் பெற்றது.  இதனால்தான் ஒரு சில நேரங்களில் நம் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களும், அதிர்ச்சிகளும்  நம்மை விட்டு அழிந்து போவதுமில்லை. நாம் ஒவ்வொருவரும்  ஏதாவது ஒரு வகையில் உயர்வடைய வேண்டும் என்ற ஒரு வேகத்திலே நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு தொடர்ந்து தோன்றும் இயக்கம்  வேகம் பெற்று உயர்வு பெற்று நல்லனவற்றையே ஈட்டித் தந்திருக்கிறது ,ஈட்டித்தருகிறது.. இதே நேரம். தாழ்மை உணர்ச்சிக்கு எதிராக நம்மிடமுள்ள  எண்ண வேகம் தோன்றினால்,

என்ன நிகழும் ..  நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!.

         ஒத்தவை ஒத்தவற்றைத்தானே சாரும்.. மொத்தத்தில் எண்ணம்போல் வாழ்க்கைதானே. நம் மன எண்ணங்களை அளவிட முடியாத அளவிற்கு எண்ணங்கள் காந்த சக்திகளாக உருப்பெறுகின்றன.. அது ஒலி – ஒளிக் கற்றைகள்போல் ஊடுருவும் ஆற்றலும் வேகமும் மிக்கவை. இதனை உணர்ந்து, நம் எண்ணங்களை அதாவது எண்ணத் தளத்தை   அழகாக இயக்க, ஒத்த எண்ணங்களை இயக்க வேண்டும்.

எனதருமை மாணவச் செல்வங்களே!

       இயற்கை ஒழுங்கமைப்பை உணராதபோதும் இயற்கை எண்ணங்களை உணராத போதும்தான் நல்லது கெட்டது என மாறி மாறி இயங்குகிறதேயன்றி. வேறில்லை.

. நம்மைப் படைத்தவன், புவியின் ஈர்ப்பு வியையைப்போல்தான் நம் மன ஈர்ப்பையும் படைத்தான் . சுழல விட்டான். ஆனால், நாமோ, அந்தச் சுழல் ஓட்டத்தைச் சுண்டி இழுக்கிறோமோ, சுமூகமாய் சுழல விடுகிறோமா என்பது என் சுய விளம்பரமன்று.? சுயரூபம் எது என்பதே நான் உங்களிடம் முன்மொழியும் சுய விவரம்.? இதுதான் நிஜம். நிழலன்று. மனிதன் பண்பட வேண்டுமெனில் மனமும் பண்பட வேண்டும்.

ஒருசில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

              நம் பள்ளியில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டு விழாவாக அமையட்டும் இல்லை வெளியில் நடக்கும் பல்வேறு போட்டி நிகழ்வுகளாக இருக்கட்டும். எதுவாக இருப்பினும், பாடல் பாடுபவர்கள், இசை அமைப்பவர்கள், நடனம் ஆடுபவர்கள் இப்படி  நீங்கள் செய்யும் ஒவ்வொரு

விஷயங்களும் உங்கள் ஒவ்வொருவரின் ஒத்த சிந்தனைகளை நோக்கி வந்தடைவதை உணர்வீர்கள். பிடித்த ஒரு பாடலை நீங்கள் பயிற்சி செய்து

கொண்டிருக்கும்போதே அப்பாடல் மீண்டும் மீண்டும் வந்து ஒலித்துக் கொண்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள்..

இதற்குக் காரணம் அதில் நீங்கள் உங்கள் எண்ணத்தை ஒருமுகப்படுத்தியதே. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா  என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? அதைப்போல்தான் நமக்குப் பிடித்த நல்ல விஷயங்களை நாம் எண்ணும்போது அவை நல்லனவற்றையே ஈர்க்கின்றன. நம்முன் காட்சிப்படுத்துகின்றன. நாம் எண்ணும் எண்ணங்களே நமது வாழ்வாக அமைகிறது .நாம் இன்று வாழும் வாழ்க்கை நேற்றைய நமது எண்ணங்களின் தொகுப்பே !

விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா என்ன?.

எது விதைத்தோமோஅதைத் தான் அறுவடை செய்ய முடியும் 

நமது எண்ணங்களின் வலிமையும் அப்படித்தான்.
எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால்
எண்ணங்கள் செயல்களாகும் !

ஜான் அஸரப் கூறும்போது,

நாம் நினைக்கும் எண்ணத்தில் முதலில் வேண்டுவது,

Ø  விடாப்பிடியான எண்ணம்

Ø  முழுத் தெளிவு

Ø  இந்த இரண்டும் இருப்பின், உலகில்  நாம் ஆசைப்பட்டுக் கேட்கும் எதுவாயினும் கிடைக்கும் என்கிறார்.

           நம் மனம்  நம் பேச்சைக் கேட்க வேண்டுமெனில் தகுந்த வழிகாட்டுதலையும், வழிநடத்துதலையும்  நாம் ஒவ்வொருவரும் பின்பற்றியே ஆக வேண்டும். சென்ற நாட்கள் செழிப்பாக இருந்ததா? வரும் நாட்கள் வாழ்வு தருமா?.. இன்றைய நாள் , இந்த நொடிப்பொழுது இனிமையாக மலருமா? என்ற கேள்விக் கணைகளோடே நம் வாழ்க்கைப் பயணம் நடந்தால் நம் மனக்காந்தம் நம்மை  நடை பிணமாக்கும் காந்த சக்தியைப் பல மடங்கு உருவாக்குமேயன்றி வேறு என்ன சொல்ல.?

.       இன்னொன்று கூறுகிறார். நம் எண்ணங்களை அளவிட முடியும். அந்த எண்ணங்களை அளவிட அளவிட,அனைத்தும் வந்து சேரும் என்பதற்கு கீழ்க்காணும் பூசலார் புராணமே ஓர் எடுத்துக்காட்டு. இதில், பக்தியின் மாண்பைச் சுட்டி இருந்தாலும், ஒருமித்த எண்ணமிருந்தால்தான் இறைவனும் குடி கொள்வான் இதயத்தில் என்பதற்கு இது ஓரு சான்று.

           சிவபெருமானின் அருளைப்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான ஏழை சிவபக்தரான பூசலார் நாயனார் திருநின்றவூரில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்ப அயராது முயற்சி செய்தார். பொருளுதவி கிடைக்காததால்,பூசலார் மனதிலேயே இறைவனுக்கு ஆலயம் கட்ட நினைத்து ஆகமவிதிப்படி அதற்காக பணிகளை மேற்கொண்டார். மானசீகமாக மனதில் கட்டிய கோவில் மளமளவென முடிந்தது. கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார் நாயனார்

          இதே நேரத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவபெருமானுக்கு கருங்கல்லால் ஆன அழகிய ஆலயத்தை கட்டியிருந்தான். அவனும்  பூசலார் குறித்த அதே நாளில் குடமுழுக்கு செய்ய நாள் குறித்திருந்தான். இறைவன் மன்னனின் கனவில் தோன்றி நீ இன்னொரு நாள் குடமுழுக்கு வைத்துக்கொள்  நான் திருநின்றவூரில் உள்ள பக்தர் ஒருவர் கட்டிய ஆலயத்தில் எழுந்தருள இருப்பதாக மன்னனிடம் கூறினார். மன்னனையே வேறு ஒரு நாள் மாற்றச் சொல்லிருக்கிறார் இறைவன் எனில், பூசலாரின் எண்ணச் சிந்தனை எந்த அளவுக்கு வலுப்பெற்றிருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறதல்லவா? பூசலாரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன் அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயம் போலவே திருநின்றவூரில் ஒரு ஆலயம் எழுப்பினார். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த ஆலயம் தான் இன்றைக்கும் திருநின்றவூரில் கம்பீரமாக உள்ள இருதயாலீசுவரர் ஆலயம்.. இதற்காக மன்னனுக்கு ஒத்த எண்ணம் இல்லை என்பது பொருள் அன்று. உண்மையான ஒத்த எண்ணங்களே பொருள் வடிவமாகக் காட்சி தரும் என்பதே  நான் தரும் விளக்கம்.

முனைவர். ஜோ.விட்டாலே: கூறும் கருத்துகள் என்னவெனில்,

         பிரபஞ்சத்தில் எண்ணற்ற மனித மனங்கள் காந்த அலைக்கற்றைகளாகச் சுற்றித் திரிவது உண்மை என்றும்.எண்ணங்கள் நம்மிடமுள்ள காந்த சமிக்கைகளை வெளியே அனுப்பி, அவற்றிற்கு இணையானவற்றை நம்மிடம் ஈர்க்கின்றன என்றும் கூறுகின்றார்.

          இதே சிந்தனைகளைக் கொண்டதுதான் நம் முன்னோர்களின் வழிபாடுகள் அமைந்தன., கோவில் வழிபாடு, திருவிழாக்கள், பண்டிகைகள் எனவும் வகுத்தனர். உதாரணமாக, நாம் வீட்டில் நமக்குப் பிடித்த கடவுளரை வணங்குவது காட்டிலும் கோவிலுக்குச் சென்று வணங்கினால், ஓர் ஆத்ம திருப்தி கிடைப்பதாய் நாம் உணர்வோம். இதற்குக் காரணம் என்ன? நம் எண்ணங்கள், கோவிலுக்கு வரும் பிறரின் எண்ணங்கள் அனைத்துமே நல்லனவற்றையே எண்ணும் எண்ண அலைகள் அங்கு வெளிப்படுவதேயாகும். அந்நேரம் நம்மிடமுள்ள நல்லென்ணங்கள் பிறருக்கும் பிறரின் நல்லெண்ணங்கள் நமக்கும் வந்தடையும். நல்லனவையே பார்ப்போம், நல்லனவற்றையே கேட்போம், நல்லனவற்றையே நினைப்போம் அல்லவா? அதுதான், மாய சக்தி, நாம் ஈர்க்கும் இறைவன் எனும் ஈர்ப்பு சக்தி. நம் ஆன்மீக செயல்கள் அத்துணையிலுமே ஈர்ப்பு விதி உள்ளது என்பது நாம் அறிந்த உண்மை.

பாப் பிராக்டர் கூறுகையில், நம் மனக் கண்ணில் ஒன்றைப் பற்றி சிந்திக்க முடிந்ததென்றால், கண்டிப்பாக, அது நம் கைகளில் தவழ்வது உறுதி என்கிறார்  நம் எண்ணம்.பல மடங்கு நன்மையும் தீமையும் நம் மனக்கண்ணில் ஈர்க்கும் விதியில்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

      இதற்கு நான் இப்பொழுது கூறும் இந்த  நிகழ்வு தவிர வேறு என்ன வேண்டும்??, ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில்,  கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவர் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னைப் பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வாராம். அவர் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம் மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வுப் பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள்  நிழல் நிஜமாகக் காட்டப்படும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மைக் டூயி அவர்கள் குறிப்பிடும்போது

            நம் எண்ணங்கள் உலகில் பொருட்களாக பரிணமிக்கும் என்கிறார். அதற்கு நாம் செய்ய வேண்டியது நல்லவற்றையே நம் ஆழ்மனதில் நினைத்தால் நல்ல எண்ணங்களே நாம் நினைக்கும் பொருளாக மாறி  நம்மை வந்தடையும் என்கிறார். எ.கா.   நீங்கள் உங்கள் உழைப்பில் உங்களுக்குப் பிடித்த மகிழுந்து வாங்க

வேண்டும் என்று எண்ணினால், உலகில் பரிணமிக்கும் உங்கள் ஒத்த எண்ணக்கற்றைகள் நீங்கள் கேட்டறிந்த பொருளையே உள்ளங் கைக்குள் வந்தடையச் செய்யும் என்கிறார். இதற்காக, எண்ணங்கள் மட்டுமே முழு வெற்றியை ஈட்டாது அதனோடு தொடர் நல்லெண்ணச் செயல்பாடு என்பதை நாம் மறத்தல் கூடாது. அதுமட்டுமன்றி, முயற்சி, பயிற்சி எண்ணக் கற்றைகள் ஒருமித்த உணர்வோடு சங்கமித்தால் மட்டுமே இது சாத்தியமானது.

        மன மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமெனில்,  மனமென்னும் காந்தசக்தியை நல்லவற்றையே நாடும் சக்தியாக மாற்றுக. அவ்வாறின்றி, தீயவற்றைத் தேடும் சக்தியாக  வகைப்படுத்தி பிரித்தெடுப்பது உங்கள். உள்ளத்தின் ஈர்ப்பு விதி அன்றி வேறில்லை   என்பதை உணருங்கள்.

       தீங்கு செய்கின்ற ஒருவன் மேலும் மேலும் தீயவனாகிறான். அவனே நல்லது செய்யத் தொடங்கும் போது மேலும் மேலும் வலிமை யடைந்து எப்போதுமே நல்லதைச் செய்யக் கற்றுக் கொள்கிறான்

       இதற்குக் காரணம் என்ன? நம்மிடமிருந்துப் புறப்படும் எண்ணங்கள் மீண்டும் எதிராக நம்மையே வந்தடைகின்றன.  நாம்  வாழும் இப்பிரபஞ்சத்தில் எத்தனையோ மனித மனங்களுள் எத்தனையோ மன அலைகளும் உள்ளன. அவற்றில் நல்லன, தீயன போன்றவைகளும் பரவிக் கிடப்பது உண்மை.

அவ்வாறு இருப்பின்,

        நாம் நல்லது நினைத்தால் அந்த எண்ணம் பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும்போது அங்கு காணும் மனித மன அலைகளுள் உள்ள நல்லனவற்றையே ஈர்த்து வரும். இதனையே நாம் தீயதாக நினைத்தால் நம்மைப்போல் பிரபஞ்சத்தில் எவரேனும் தீயது  நினைத்திருந்தால், நம் எண்ணமும் பிரபஞ்சத்துள் அலைக்கற்றைகளாகச் சென்று தீயதையே நமக்கு ஈர்த்துத் தரும். இதுதான் ஒத்தவை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்பதாகும்.

 மனம் நலம் நனு உடையர் ஆயினும் சான்றொர்க்கு

இன நலம் ஏமாப்பு உடைத்து.

         மனத்தின் நன்மையால் இந்தப் பிறவியில் மட்டும் அல்ல இனி வரும் பிறவியிலும் நன்மை தரும். அதுவும் சார்ந்திருக்கும் இனத்தின் தன்மையால் மேலும் சிறப்பு உண்டாகும் என்பதே வள்ளுவன் வகுத்த விதி..உள்ளம் செம்மையோடு இருந்தால்தான், உடல் வலுப்பெறும். உடல்நலமோடு இருந்தால், உள்ளம் வளமோடு இருக்கும். இதையே 'உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்,' என திருமந்திரம் வலியுறுத்துகிறது. மனம் நல்லவற்றை நாடும் போதும் தடைகள் குறுக்கிடும். உங்களுக்குப்புரியும்படியாகச் சொல்ல வேண்டுமெனின்,

பருவ நிலை சூழல் காரணமாக, சூறாவளி, சுனாமி, இப்படிப் பல்வேறு சீற்றங்களின்போதும் ஒரு சில  உறுதியான வேருடைய மரங்கள் கூட சாய்ந்துவிடும். ஆனால், உயிரைச் சாய்க்காது. ஒரு சாண் வேரில் அம்மரம், சூழலைத் தக்கவைத்து, மீண்டும் துளிரிலிருந்து புறப்படும் விருட்சமாக எழும்.. இதற்கு ஈப்பு விதியைக் கற்றுக் கொடுத்தது யார்? யாருமில்லை என்பதே உண்மை. இயற்கையின் எண்ண அலையில் மட்டுமே இறுதிவரை ஒத்த உணர்வு இருந்ததால் மேலோங்க முடிந்தது. என்ன? எப்படி என உங்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?

         மரத்திற்கும் உணர்விற்கும் என்ன சம்பந்தம் என்பீர்கள்! உணர்வின் தொடக்கமே நமக்கு மரம் தானே..ஒருவன் உயர்ந்து நிற்கும் மலைகளைத் தகர்க்கும்போது, அவனுக்கு எப்படி உடைக்கப்போகிறோம் என்பதை விட அழகிய முருகன் ஆலயத்தைஉயர்ந்து நிற்கும் இம்மலையில் எப்படி காணப்போகிறோம், காண்பதற்கு வேண்டிய தளவாடங்களை எப்படி உருவாக்கப்போகிறோம்  என்ற காந்த அலைகள் மட்டுமே தொடர்ந்து ஒத்த எண்ணங்களாக அவனுக்குள் ஒரு தொலைத் தொடர்புக் காந்த அலைகள்போல் செயல்பட்டிருக்கும்.

          இந்த, உயர்ந்த குறிக்கோளுடைய வலிமையுள்ள மனம் மட்டும் என்றும் சிதைக்கப்படுவதில்லை. சிந்தை இழக்கப்படுவதுமில்லை. சீர்மிகு அறுபடைவீடு இன்றும் உலகோரின் உள்ளத்தில் பேசப்படுகிறதே எனில், அதற்குக் காரணம் ஒருவனின் ஒத்த சிந்தனையே.

           இன்னுமொரு  சிறந்த எடுத்து காட்டு ஆங்கிலேய ஆட்சியின் போது சுதந்திர வேட்கையுடன் விடாது இடையூறுகள் தொடரினும் வலிமையோடு,  நம்  நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட எண்ணற்ற வீரர்களின் எண்ணங்கள் ஒருமித்து இல்லையெனில், நாம் இன்று சுதந்திரமாக சுற்றி இருப்போமா? சுதந்திரக் கருத்தைத்தான் வெளியிட்டு இருப்போமா?

“அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்” என்று கூறிய ஏசுபிரானிடம் இருந்தது  ஒருமித்த நற்சிந்தனை

அனைத்து ஜீவராசிகளிடத்தும் அன்பு கூறுங்கள்” என்று கூறிய புத்தபிரானிடம் இருந்ததும் ஒருமித்த  நல்எண்ணமே

.“பகைவருக்கும் அன்பு அருளிய” ராமபிரானிடம் இருந்ததும் அதுவே

 “அன்பென்று கொட்டு முரசே” என்று விழிப்புணர்வுப்பாடலை ஒலிக்கச் செய்து, விடுதலை முழக்கத்தைத் தந்தவனிடம் இருந்ததும் ஒருமித்த உணர்வே.

       கரிகாலனுக்கு ஒத்த சிந்தனை இல்லையெனில் கல்லணை கிடைத்திருக்குமா? விக்ரம் சாராபாயின் ஒருமித்த சிந்தனையெனில் ஏவுகோள் இயக்கப்பட்டிருக்குமா?. 

       சுனாமியின்போதும்   இந்தக் கொரோனா என்னும் பேரிடர் காலத்திலும்  தன் உயிரைப் பணயம் வைத்து பல உயிர்களைக் காப்பாற்றியவர்களிடம் இருந்தது ஒருமித்த மனிதநேயமே. எப்படிக் கல்லுக்குள் சிலை மறைந்து இருக்கிறதோ அதுபோலவே மனிதனுக்குள்ளும் நல்லன, தீயன எண்ண அலைகள் மறைந்து இருக்கின்றன.

      கைகேயியின் மனம் மாற்றப்பட்டு ராமர் காட்டுக்கு சென்றது, கைகேயிக்குக் கூனியால் கிடைத்தது தீய ஒத்த சிந்தனை.. சகுனியால் கவுரவர்களின் மனம் மாற்றப்பட்டு பாண்டவர்கள் காட்டுக்குச் சென்றதும் இந்தத் தீய சிந்தனையே.. சகுனியும்,கூனியும், தீய சக்திகளாக தீய எண்ணங்களை விதைத்ததால் தீராப்பழி அவர்களை வந்தடைந்தது. மன ஆற்றலின் துடிப்புகள்தான் இருப்பதிலே மிகவும் சிறந்தவை எங்கிறார் சார்லஸ் ஹானஸ்.

       உங்கள் வாழ்க்கை மிகப் பிரகாசமாக உள்ளது என்பதை எப்பொழுதும் கற்பனை செய்து கொண்டே இருங்கள். கண்டிப்பாக ஒரு நாள் அது உங்களிடம் ஈர்த்து வரும் என்கிறார் பாப் பிராக்டர். இதனையே கனவு காணுங்கள் என்கிறார் அப்துல் கலாம். காணும் கனவெல்லாம் வாழ்க்கையாகி விடுவதில்லையே என்று உங்களின் அங்கலாய்ப்புகள் என் காதில் விழுந்த வண்ணம்? என்  காதில், விழுந்த உங்கள் எண்ணங்கள்போல் என் குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கும் உங்கள் காதுகளில் கனவு நனவாக! 

         இன்பம் துன்பம் நிறைந்ததுதான் வாழ்க்கை. இதில், மகிழ்ச்சியில் எழும் எண்ணக் கற்றைகளை சுண்டி இழுப்போம்...  நம்மை நாமே நமக்கு உரிமையாக்கி உறவாக்கி இருக்க ஈர்ப்பு விதி என்னும் இரண்டாவது தாரக மந்திரமான ஒத்தவை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்பதை நம் வசம் ஆக்குவோம்!.

அடுத்த ஈர்ப்பு விதியோடு, உங்களின் ஈர்ப்பு விதியில்…

நன்றி

           சிவபெருமனின் அருளைப்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான ஏழை சிவபக்தரான பூசலார் நாயனார் திருநின்றவூரில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்ப அயராது முயற்சி செய்தார். பொருளுதவி கிடைக்காததால்,பூசலார் மனதிலேயே இறைவனுக்கு ஆலயம் கட்ட நினைத்து ஆகமவிதிப்படி அதற்காக பணிகளை மேற்கொண்டார். மானசீகமாக மனதில் கட்டிய கோவில் மளமளவென முடிந்தது. கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார் நாயனார்

No comments:

Post a Comment

Translate