Search This Blog

Friday, July 30, 2021

பத்தாம் வகுப்பு - தமிழ் - 2021 - 2022

Term – 1 இயல் – 1,2&3 - தமிழ் – 2021 -2022 செய்யுள் பொருளுணர் திறன் – பயிற்சித்தாள் – 4 1. காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல் __ 2. காசிக்காண்டத்தின் ஆசிரியர் __ 3. காசிக்காண்டத்தில் ____ பகுதியிலுள்ள 17 வது பாடப்பகுதியாக வந்துள்ளது. 4. முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் __ 5. கொற்கைத் துறைமுகம் அமைந்தது ___ நாடு. 6. அதிவீரராம பாண்டியர் ___ ___ திகழ்ந்தவர். 7. வெற்றி வேற்கை __ எனவும் வழங்கப்படுகிறது. 8. அதிவீரராம பாண்டியர் குறிப்பிடும் விருந்தோம்பல் முறை மொத்தம் __ 9. அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்களுள் இரண்டு ___ ___ 10. பண்டையத் தமிழர்கள் பண்பிலும் ___ சிறந்து விளங்கினர். 11. சிவந்தப் பூக்களைக் கொண்ட மரம் __ 12. மலைபடுகடாம் ___ நூல்களுள் ஒன்று. 13. மலைபடுகடாமில் மலையை ___ அதில் எழும் ஓசைகளை அதன் ____ உருவகம் செய்யப்பட்டுள்ளது. 14. கூத்தன் மற்றொரு கூத்தனை ஆற்றுப்படுத்துவது ____ 15. பாக்கம் என்பது ஒரு ___ 16. பெருங்கௌசிகனாரின் ஊர் ____ 17. மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் ___ 18. மலைபடுகடாமில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___ 19. மலைபடுகடாமின் வேறு பெயர் ___ 20. கலைஞர்களுக்கு விருந்தும் பரிசும் கொடுத்து மன்னர்கள் போற்றியதைக் காட்சிப்படுத்துவது ____ விருந்து. 21. ஆழிக்கு இணையாகப் பேசப்படுவது ___ 22. கடல் மூன்று ___ தருகிறது. 23. ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது ____ அணியாகும். 24. இரட்டுற மொழிதல் ___ என்று அழைக்கப்படும். 25. தமிழழகனாரின் இயற்பெயர் ___ 26. இரட்டுற மொழிதல் பாடல் _____ என்னும் தொகுப்பு நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 27. சந்தக்கவிமணி என்று போற்றப்படுபவர் ___ 28. ஐம்பெருங்காப்பியங்கள் தமிழின் ____ உள்ளன. 29. குமரிக்கண்டத்தில் அரசாண்ட மொழி __ 30. பாண்டிய மன்னனின் மகள் __ 31. சாகும்போது தமிழ்ப் படித்துச் சாக வேண்டும் என்றவர் ____ 32. அன்னை மொழியே பாடல் ___ என்னும் தொகுப்பு நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 33. கடும்பு,இறடி,பொம்மல் – பொருள் தருக 34. அல்கி,அல்சேஎந்து,வயிரியம் – பொருள் தருக. 35. மலைபடுகடாம் பாடலில் இடம்பெற்ற மரங்கள்? 36. பரிசு பெற்றக் கூத்தன் பரிசு பெறப்போகும் கூத்தனை ஆற்றுப்படுத்துவது ___ 37. பாவலரேறு எழுதிய இதழ்கள்? 38. துரை மாணிக்கம் என்பது யாருடைய இயற்பெயர்? 39. தென்னவன் என்பது யாரைக் குறிக்கிறது? 40. இன்னறும் பாப்பத்தே எண்தொகையே என்பதில் பாப்பத்தே,எண்தொகை என்பன ____ ____ நூல்கள். 41. பழுத்த நரையின் பட்டறிவு ஆனவள்? 42. அன்னை மொழியானவள் _____ சிரிப்பும் ஆனவள். 43. _____ மெய்ப்பொருளுரை தமிழுக்குக் கருவூலம் என்று போற்றப்படுகிறது.இதனை எழுதியவர் ___ 44. பாவலரேறு நூல்களுள் இரண்டு? 45. முகமன் சொற்கள் மொத்தம் ___ 46. காசிக்காண்டத்தில் அமைந்துள்ள பாடுபொருள்? 47. அன்னைமொழியே என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்? 48. எந்தமிழ் நா – இச்சொல்லைப் பிரித்து எழுதுக. 49. முன்னும் நினைவால் முடி தாழ வாழ்த்துவமே என்று கூறியவர்? 50. நற்கணக்கே – என்பதில் சுட்டப்படும் நூல்கள் மொத்தம்? 51. மன்னும் சிலம்பே!மணிமேகலை வடிவே! எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை? 52. பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்? 53. பெருஞ்சித்திரனாரின் ‘முந்துற்றோம் யாண்டும்’,தமிழ்த்தாய் வாழ்த்து’ என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பெற்றன? 54. செந்தாமரை – இலக்கணக் குறிப்பும் பிரித்து எழுதுக. 55. உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்? 56. கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்துகிறது? 57. முத்தையும் அமிழ்தையும் தருவதாக ஆசிரியர் குறிப்பிடுவது யாது? 58. தமிழழகனார் எத்தனைச் சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்? 59. முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம்பெற்றத் தொகுப்பு நூல்? 60. மயலுறுத்து,சுவல்,பெண்டீர் – பொருள் தருக. 61. உறுதுயர், நன்மொழி – இலக்கணக் குறிப்பு தருக. 62. முல்லைப்பாட்டு __ அடிகளைக் கொண்டது. 63. திருக்குறளின் பெருமைக்குரியவள்? 64. பழமைக்கும் பழமையாய் தோன்றிய நறுங்கனி? 65. முத்தமிழ், நாற்கரம் - இலக்கணக் குறிப்பு வரைக. 66. முல்லைப்பாட்டின் ஆசிரியர்? 67. முல்லைப்பாட்டு ___ நூல்களுள் ஒன்று. 68. முல்லைப்பாட்டில் இடம்பெற்ற முதல் பொருள்கள்? 69. முதுபெண்டீர் விரிச்சி கேட்க சென்ற ஊர்? 70. இளங்கன்று எதனால் கட்டப்பட்டிருந்தது? 71. இரு கைகளையும் கட்டிக்கொண்டு குளிர் தாங்க முடியாமல் நின்றவர்? 72. முதுபெண்கள் இறைவனை வழிபடக் கொண்டு சென்றப் பொருள்கள்? 73. துன்பத்தைத் தந்த பொழுதாக முல்லைப்பாட்டில் குறிப்பிடுவது? 74. வலம்புரிச்சங்கை கையில் ஏந்தியவர்? 75. நீர் பெற்றதும் விண்ணுக்கும் மண்னுக்குமாக உயர்ந்து காணப்பட்டவர்? 76. யார், யாருக்கு, எதற்காக நீர் வார்த்துக் கொடுக்கப்பட்டது? 77. பசலைக் கன்று – பொருள் தருக. 78. மேகம் எதனையெல்லாம் சுற்றி வந்து மழை பொழிந்தது? 79. முல்லைப்பாட்டில் இடம்பெற்ற பாடுபொருள்? 80. நனந்தலை உலகம், மாஅல் – பொருள் தருக 81. வளைஇ,தடக்கை,மாஅல,அருங்கடி – இலக்கணக் குறிப்பு தருக 82. நறுவீ, அலரி,அலமரல் – பொருள் தருக. 83. நன்மொழி,பெருமுது,கைதொழுது,உறுதுயர் – இலக்கணக் குறிப்பு தருக. 84. தூஉய்,நேமி,கோடு,சுவல் – பொருள் தருக. 85. முல்லை நிலப்பூக்கள்? 86. முல்லிய நில மரங்கள்? 87. ‘நின் தலைவன் பகைவரை வென்று திரைப்பொருளோடு வருவது உறுதி’ – என்று கூறியவர்? 88. பரூஉக்,குரூஉக்கண் – பொருள் மற்றும் இலக்கணக் குறிப்பு தருக. 89. ஊர் ஊராககச் சென்று தம் கலைத்திறமைகளை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்தவர்கள்? 90. ஆசிரியர் தம் நூலுக்குக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டி கவிதைப்பேழையாகத் தந்த நூலின் பெயர் ? 91. உற்றார் உறவினர்களோடு எதனை அணிந்து கொள்ளுமாறு கூத்தன் வலியுறுத்தினான்? 92. கடினப்பாதை வழி என்று கூத்தன் கூறியது? 93. மானமும் வெற்றியும் உடைய மன்னன்? 94. நும்இல் போல் நில்லாது புக்கு – இவ்வடியில் உள்ள நும்இல் – பொருள் தருக. 95. விருந்தோம்பும் நெறியை வரிசைப்படுத்திக் காட்டும் நூல்? 96. நோக்கல்,வியத்தல்,இருத்தல்,உரைத்தல்,எழுதல்,செப்பல்,வழங்கல் – இலக்கணக் குறிப்பும் பொருளும் தருக. 97. வருக!, வருக! வருக!! – இலக்கணக் குறிப்பு தருக. 98. இந்தியா, சுதேசமித்திரன் ஆசிரியர்? 99. யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு எழுதப்படும் கவிதை வடிவம்? 100. பாரதியாருக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள்?

No comments:

Post a Comment

Translate