Search This Blog

Friday, July 30, 2021

TENTH STD - GRAMMAR - PAYIRCHI VINAAKAL 2021 - 2022

சின்மயா வித்யாலயா நடுவண் மேனிலைப்பள்ளி,செ- 92 TERM – 1 TAMIL – பயிற்சித்தாள் – 4 – இலக்கணம் – 2021 – 2022 1. ________-அளபெடை செய்யுளின் இசையளவைக் கூட்டப் பயன்படும். 2. ___________ அளபெடை-சொல்லின் (வினையெச்சம்) அளவை கூட்ட பயன்படும். 3. ____________- அளபெடை இசையின் அளவை மேலும் கூட்டப் பயன்படும். 4. அளபெடையில் ஒரு நெடில் தனக்கு இனமான______ உடன்சேர்த்துக் கொள்ளும். 5. அளபெடையின்போது குறிலாக இருந்தால், அது நெடிலாக மாறித் தன்னினத்தை அளபெடுத்துக் கொள்ளும் அளபெடை _____ 6. ஓர் ஒற்றெழுத்தும் தானே அளபெடுத்துக் (இரட்டித்துக்) கொள்ளும் அளபெடை ____. 7. செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர் ___ 8. ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை, ஆஅதும் என்னு மவர். – இக்குறளில் பயின்று வந்துள்ள அளபெடை ____ 9. உரனசைஇ உள்ளந் துணையாகச் சென்றார்; வரனசைஇ நின்று முளேன்.". - இக்குறளில் பயின்று வந்துள்ள அளபெடை ____ 10. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.". - இக்குறளில் பயின்று வந்துள்ள அளபெடை 11. உயிரளபெடையில் அளபெடுக்கும்போது, ஆ -வுக்கு 'அ'-வும்,ஈ - க்கு 'இ' -யும், ஊ- வுக்கு ____ ஏ க்கு ______ ஐ- க்கு ________, ஓ- வுக்கு 'ஒ' -வும், ஔ- க்கு ____ ம் அளபெடுக்கும். 12. " எங்ங் கிறைவனுளன் என்பாய் மனனேயான், எங்ங் கெனத்திரிவா ரில்." – இதில் பயின்று வந்துள்ள அளபெடை ____ 13. இலங்ங்கு வெண்பிறைசூ டீசனடி யார்க்குக் கலங்ங்கு நெஞ்சமிலை காண்." – இதில் பயின்று வந்துள்ள ஒற்றளபெடை வகை _______ 14. செய்யுளில் ஓசை குறையுமிடத்து மெய் எழுத்துகளும் அளபெடுக்கின்றன. இதனை _____ என்பர். 15. ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ன் ஆகிய பத்து மெய்யெழுத்துகளும் _______ இரட்டித்து வருவதன்மூலம் ஒற்று அளபெடுக்கின்றன. 16. வல்லினமான க், ச், ட், த், ப், ற், ஆகிய ஆறுமெய்களும், இடையினத்தைச் சார்ந்த ர், ழ் மெய்களும் ________ 17. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு” (திருக்குறள் 544) – இக்குறள்பாவில் இடம்பெற்ற அளபெடை ___ 18. செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதை நிறைவிக்கவேண்டிப் பொருத்தமான நெட்டெழுத்து தன் மாத்திரையைவிட நீண்டொலிக்குமாயின் அது __________ அல்லது __________ எனப்படுகிறது. 19. மீன் விற்பவர் மீஇ..ன் எனவும் மரக்கறி விற்பவர் மரக்கறீஇ, மரவள்ளிக் கிழங்கு விற்பவர் மரவள்ளிக் கிழங்ங்கு எனவும் பஞ்சு விற்பவர் பஞ்ஞ்சு எனவும் அழுத்திக் குரல்தருவதும் _____ , ______ அளபெடையைச் சார்ந்தவையே. 20. அளபெடை உயிரளபெடை, ஒற்றளபெடை என இரு உயிர் அல்லது உயிர்மெய் நெடிலுக்கருகில் அதன் இனமான உயிர்க்குறில் அளபெடுத்தல் உயிரளபெடையாகும். 21. ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. 22. சொற்பொருள் அடிப்படையில் மொழி/சொல் _____ வகைப்படும். 23. ஒரு சொல் தனித்து வந்து ஒரு பொருளைத் தந்தால் அது _____ எனப்படும். 24. ________ பல தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது தொடர்மொழி எனப்படும் 25. அறம் செய விரும்பு, ஆறுவது சினம் – இவைகள் ___ மொழிகள். 26. ஒரு சொல்லே தனிமொழியாக நின்று ஒரு பொருளையும், தொடர்மொழியாகப் பிரிந்து நின்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருளையும் தந்தால் அது _____ எனப்படும். 27. தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக ஒரு சொல் வருவது ____ எனப்படும். 28. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண் , இடம் , காலம் , பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது _____ எனப்படும் . 29. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ________ ஆகும். 30. விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் ______ ஆகும் . 31. விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர் _______ ஆகும் 34. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும் . காலம் காட்டும் . மூவிடத்திற்கும் உரியது - இது ____ பெயர். 32. வந்தவர் அவர்தான் .பொறுத்தார் பூமி ஆள்வார் – இலக்கணக் குறிப்பு தருக. 33. கெடுதல் - சுடுதல் - இதனை முதனிலைத் தொழில் பெயராகவும் முதனிலைத் திரிந்த தொழிற்பெயராகவும் மாற்றுக. 34. தட்டு , உரை , அடி - இச் சொற்கள் முறையே தட்டுதல் , உரைத்தல் , அடித்தல் என்று பொருள்படும் போது முதனிலைத் தொழிற்பெயர்கள் ஆகின்றன . 35. நடவாமை , கொல்லாமை என்பன ___ பெயர்கள். 36. 'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக . 37. பூ , தை , தீ , ஆ என்பன ____ மொழிகள். 38. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லை பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது ________ எனப்படும் . 39. ‘தொகை’ _______ வகைப்படும். தொகா __ வகைப்படும். 40. சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை, முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’ வரும். (மறைந்து வரும்) அவ்வாறு வருதலைத் _____ என்பர் 40. ‘மரக்கிளி’ என்பது ____ தொகை நிலைத்தொடர் 41. ‘உற்றார் உறவினர்’ என்பது ___ தொகை. 42. கண்ணா ! வா! - இது, ______ தொடர். 43. ‘சிரித்த குழந்தை’ - இதில், ‘சிரித்த’ என்னும் எச்சவினை ‘குழந்தை’ என்னும் பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்ததால் இது, ______ தொடர். 44. கடி நகர்’ - இத்தொடரில், ‘கடி’ என்பது_______. அதைத் தொடர்ந்து ‘நகர்’ என்னும் சொல் வந்து கடி நகர் என்று வந்தால் அது ______. 45. ‘வாழ்க! வாழ்க!’ என ஒரே சொல், பலமுறை அடுக்கி வருவது, அடுக்குத் தொடர். 46. ‘இளங்கோ வந்தார்’ - இதில், இளங்கோ என்னும் எழுவாயைத் தொடர்ந்து ‘வந்தார்’ என்னும் பயனிலை வந்துள்ளது. இவ்வாறு, வரும் தொடர் _____ 47.‘தேன்மொழி’ என்பது ____ 48. வெண்ணிலவு என்பது _____ 49. உண்கலம் என்பது _____ 50. தொடர்களைத் _____ தொடர் _____ தொடர் என இரண்டாகப் பகுக்கலாம். 51. ‘பொற்றொடி வந்தாள்’ என்பது 52. ‘கண்டு மகிழ்ந்தான்’ என்பது ____ 53. வேற்கண் என்பது ____ 54. ஆடுபாம்பு என்பது ____ 55. செஞ்ஞாயிறு என்பது __- 56. உயிர்மெய் என்பது ___ 57. கரந்த என்றால் _____ என்பது பொருள். 58. பொன்னும் மணியும் என்பது ___ 59. தெய்வ வணக்கம் என்பது ___ 60. முத்தமிழ் என்பது ___ 61. தலைவர் அப்துல்கலாம் என்பது ___ 62. ‘ஆகிய’ என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ ஒரு பொருள் குறித்து வருவது ______. 63. _____என்பது வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியனவாகும். 64. நண்பன் வீடு என்பது ___ 65. தாழ்குழல் பேசினாள் என்பது ____ 66. அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய உருபு மறைந்து நிற்பது ______ எனப்படும். 67. எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கும் ____ பெயர்கள் ஆகும். 68. ஆல், ஆன், ஒடு, ஓடு என்பன ___ வேற்றுமை உருபுகள். 69. மலைக் கோயில் என்பன ___- 70. வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடரும் தொடர் ______ 71. அளபெடுத்தல் என்பது ___ ஒலித்தல் என்பது பொருள். 72. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது __ பெயர். 73. ஒரே வினையடி ___ விகுதிகளையும் ஏற்கும். 74. வினையடி என்பது ___ நிற்கும் சொல்.அதனை ___ என்றும் கூறுவர். 75. தொழிற்பெயர் ____ காட்டாது. 76. எதிர்மறைப் பொருளில் வரும் பெயர் ___ 77. செய்யக் கூடிய செயல், பார்க்க வேண்டிய இடம் என்பன ___ பெயரெச்சங்கள். 78. களிமண்ணால் செய்தார் என்பது ___ 79. இடைச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ___ 80. உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ___ 81. ஓடிக் களைத்தனர், தேடி அலைந்தனர் என்பன ___ 82. பெண்ணே செல்! குழந்தையே கேள்! என்பன ____ 83. வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக அமையும் தொடர் ___ 84. ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வருவது ___ 85. எழுவாயுடன் பெயர்,வினா,வினை ஆகிய பயனிலைகள் தொடர்வது ___ 86. விஜய் நடிகர், சினேகன் கவிஞர் – இவைகள் ___ தொடர். 87. தேர்வு நடக்குமா? மழை வருமா? கொரோனா ஒழியுமா? – இவைகள் ___ தொடர்கள். 88. நண்பா அழாதே!, நாராயணா பேசாதே, சுவாதி கவனி, முருகா வா – என்பன ___ தொடர்கள். 89. முற்றுப்பெறாத வினை பெயரைக் கொண்டு முடிவது _____ முற்றுப்பெறாத வினை வினையைக் கொண்டு முடிவது ____ 90. சிரித்தனர் மாணவர்கள், கத்தின ஆடுகள் – இவைகள் __- 91. சாலச்சிறந்தது, நனி மகிழ்ந்தேன்,தவச்சிறிது என்பன ___ 92. வாழ்க்கை என்னும் சொல்லுக்குரிய விகுதி? 93. வெண் பொங்கல் என்பது __ 94. தொடுதிரை, மோர்ப்பானை – இலக்கணக் குறிப்பு தருக. 95. வெண்டைக்காய், மோர்க்குழம்பு – இலக்கணக் குறிப்பு தருக. 96. செங்காந்தள்,இன்மொழி,மலர்க்கை – இலக்கணக் குறிப்பு தருக. 97. பெரிய மீசை சிரித்தார், கரும்பு தின்றான் – இலக்கணக் குறிப்பு தருக. 98. அன்பும் அறனும்,பண்பும் பயனும் – இலக்கணக் குறிப்பு தருக. 99. பேசும் கிளி – இறந்தகாலப் பெயரெச்சமாக்குக. 100. உண்ணா தோழி – இலக்கணக் குறிப்பு தருக. 101. ஒழுக்கம் ___ தரலான் ஒழுக்கம் உயிரினும் ___ படும். 102. ___ நின்றான் இடுவென்றது போலும் ___ நின்றான் இரவு. 103. அரியவற்றுள் எல்லாம் அரிதே ___ பேணித் ___ கொளல். 104. இடிப்பாரை இல்லா ___ மன்னன் ____ இலானுங் கெடும். 105. ஒழுக்கத்தின் ___ மேன்மை இழுக்கத்தின் எய்துவர் ___ பழி. 106. நாள்தொறும் நாடி ___ மன்னவன் நாள்தொறும் __ கெடும். 107. பல்லார் ___ பத்தடுத்த தீமைத்தே ____ தொடர்கை விடல். 108. காமம் ____ ____ இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் 109. எப்பொருள் எத்தன்மைத்தாயினும்___ _____ காண்ப தறிவு. 110. உலகத்தோ டொட்ட ___ _____ கல்லார் அறிவிலா தார் ஆக்கம்: சித்ரகலா கலைச்செல்வன்.

No comments:

Post a Comment

Translate