Search This Blog

Monday, August 2, 2021

பத்தாம் வகுப்பு - இயல் – 3 –இலக்கணப் பயிற்சி,செய்யுள் பயிற்சி வினாக்கள் & உரைநடை, செய்யுள் முக்கிய வினாக்கள்.

பத்தாம் வகுப்பு - இயல் – 3 –இலக்கணப் பயிற்சி,செய்யுள் பயிற்சி வினாக்கள் & உரைநடை, செய்யுள் முக்கிய வினாக்கள். I. கோடிட்ட இடங்களை நிரப்புக: 1. ஒரு சொல் முற்றுப் பெற்றால் அது ______ எனப்படும் 2. அடித்தான், நெய்கிறான், நிறைந்தது என்பது _____ வினைமுற்று. 3. செய்பவனை மட்டும் காட்டுவது. காலத்தை வெளிப்படையாகக் காட்டாது _____ 4. காலம் வெளிப்படையாகக் காட்டி நிற்பது ____ 5. பொன் என்னும் பொருளை உடையவன் _____ 6. ஒரு எச்ச வினை பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்தால் _____ எனப்படும் 7. ஓடிய என்ற எச்ச வினை மாணவன் என்ற பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது ____ 8. பெயரெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டும். 9. காலத்தை வெளிப்படையாகக் காட்டாத பெயரெச்சம் _____ 10. ஓர் எதிர்மறைப் பெயரெச்சத்தின் கடைசியில் ‘அ’ கெட்டு (மறைந்து) ‘ஆ’ என்ற இறுதி ஓசையுடன் முடிவது ___ 11. ஓர் எச்சவினை வினைச்சொல்லைக் கொண்டு முடிந்து பொருள் தருவது____ 12. காலத்தை வெளிப்படையாகக் காட்டி வினைக்காக எஞ்சி நிற்பது ____ 13. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை_____ 14. மெல்ல நடந்தான் என்பது ___ வினையெச்சம். 15. தொக்கி(மறைந்து) வந்து பொருள் தருவது_______ 16. ஒரே சொல் அடுத்தடுத்து வந்து, பிரித்தால் பொருள் தருமாயின் அது ________ எனப்படும். 17. அன்றே அன்றே – என்பது அசைநிலை பொருளில் வந்த ____ 18. வந்தேன் வந்தேன் என்பது ______ 19. போ போ போ – என்பது ____ பொருளில் வந்த அடுக்குத்தொடர். 20. அடி அடி கொல் கொல் கொல் – என்பது ___ பொருளில் வந்த அடுக்குத்தொடர். 21. வருக வருக வாழ்க, வாழ்க வாழ்க – என்பன ____ பொருளில் வந்த அடுக்குத்தொடர். 22. கெட்டேன் கெட்டேன் கெட்டேன் , வாழேன்,வாழேன் – என்பது ___பொருள் சார்ந்த அடுக்குத்தொடர். 23. பாம்பு பாம்பு பாம்பு – என்பது ____ முறை அடுக்கி வந்த அடுக்குத்தொடர். 24. அசைநிலை, பொருள்நிலை இசைநிறைக் கொரு சொல் இரண்டு, மூன்று, நான்கு எல்லைமுறை அடுக்கும் – இது ___ தொடர். 25. ஒரே சொல் அடுத்தடுத்து வந்து, பிரித்தால் பொருள் தராமல், வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி நிற்பது _____ 26. _______ இரட்டில் பிரிந்திசையா. 27. பெயர், வினைச்சொற்களைச் சார்ந்து, அவற்றின் குணத்தை உணர்த்தி வரும் சொற்கள் _____ 28. சாலச்சிறந்தது (மிகவும்) - சால உறுபொருள் (மிகுந்த பொருள்) - உறு தவச்சிறிது ( மிகவும் சிறிது) - தவ நனி பேசினான் (மிகுதியாகப் பேசினான்) - நனி இடும்பைகூர் வயிறு (துன்பம் மிக்க வயிறு) - கூர் கழி உவகை (மிகுந்த மகிழ்ச்சி) – கழி இவையனைத்தும் ஓரு குணம் தழுவிய ____ 29. சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய சொற்கள் அனைத்தும் ஒரே பொருளை உணர்த்தி நிற்பதால் ________உரிச்சொல் 30. ஒரே சொல் பல பொருள்களை உணர்த்த பயன்படுவது 31. கடி என்னும் சொல் கடிநகர்-காவல்நகர், கடிமணம்-நல்லமணம் என பல குணம் தழுவி வருவது ________சொல் 32. மாநெறி 33. மாமழை மாநகர் மாமலை – இவைகள் ஒரே சொல் பல பொருளை உணர்த்தி வரும் _____. 34. அணையா(த) விளக்கு, ஒன்றா(த)ப் புகழ் – எவ்வகைப் பெயர்? 35. ஒன்றா(த)ப் புகழ் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயராக்குக. 36. செய்து முடித்தாள் – இலக்கணக்குறிப்பு தருக. 37. படித்த ஓடிய விளையாடிய - வினையெச்சமாக்குக. 38. படித்தான் ஓடினான் விளையாடினான் – இலக்கணக் குறிப்பு தருக. 39. சொல் ஆழ் வா – பெயரெச்சமாக்குக. 40. சொல்லி ஆழ்ந்து வந்து - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சமாக்குக. 41. முதல் வேற்றுமை வேறு பெயர் ____ 42. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய ஆறு வேற்றுமை உருபுகளும் சொற்களுக்கு இடையில் மறையாமல் வருவது _____ 43. திருக்குறளைக் கற்றான், பாலை அருந்தினான் என்பன ____ தொடர். 44. அத்தைக்கு மகள்,பள்ளிக்குச் சென்றான்,கூலிக்கு வேலை – முதலியன ____ தொடர். 45. மாமன் வீடு – ஆறாம் வேற்றுமைத் தொகா நிலைத்தொடராக்குக. 46. ஹரி வந்தான் – எவ்வகைத் தொடர்? 47. அழுதது குழந்தை – இதில் எச்சம் எது? 48. மற்றொன்று – இதில் இடைசொல் எது? 49. பிரியா வந்தாள் – விளித்தொடராக்குக? 50. விளி என்றால் ___ என்பது பொருள். 51. ஓர் எழுவாய்த்தொடர் _____ _____ _____ என்ற பொருளில் அமையும். 52. தொகை நிலைத்தொடர்கள் _____மறைந்து வரும் தொடர்களாகும். 53. உருபுகள் வெளிப்படையாக வரும் தொடர் ___ 54. தொகை நிலைத்தொடர்கள் மொத்தம் ___ 55. தொகா நிலைத்தொடர்கள் மொத்தம் ___ 56. வேற்றுமையின் வகைகள் ___ 57. இரட்டைச் சொல்லாக வருவது ____ 58. கல கல என்பது ___ சொல். 59. வாழ்க வாழ்க, பட பட, குறு குறு – இதில் அடுக்குத்தொடர் எது? 60. மற்றுப்பிற என்பதில் “மற்று” என்பது __- 61. உறுமீன் என்பது ___ 62. உடைந்த நாற்காலி என்பது ___ தொடர். 63. இரண்டாம் வேற்றுமைக்குரிய உருபு___ 64. ஐந்தாம் வேற்றுமைக்குரிய உருபு __ 65. வந்த கண்ணன், வந்தான் ராமன்,யுவா வா – இவற்றில் விளித்தொடர் எது? 66. ஏழாம் வேற்றுமைக்குரிய உருபு ___ 67. உண்டான் சாத்தன்,உண்ட சாத்தன், உண்டு சென்றான், சாத்தா வா! சாத்தன் வந்தான். - இத்தொடர்களை வகைப்படுத்துக. 68. குடத்தை வனைந்தான், வாளால் வெட்டினான், புலவர்க்குக் கொடுத்தான், மலையின் இறங்கினான், சாத்தனது கால், சாத்தனிடம் உள்ளது. – இவைகள் எத்தொடர் வகைகள் என வரிசைப்படுத்துக. உருபுகளைக் குறிப்பிடுக. 69. தொடர் ___ வகைப்படும் 70. தொகை நிலைத்தொடர், தொகா நிலைத்தொடர் என்பது ____ வகைகள். 71. பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் வருவது _____தொடர். 72. முற்றுப்பெறாத வினைச்சொல்,பெயர்சொல்லைக் கொண்டு முடிவது _____ எனப்படும். 73. வினை முற்றுடன் ஒரு பெயர்ச்சொல் வருவது _____ தொடர் ஆகும். 74. பெயர்ச்சொல் ___ வகைப்படும். 75. முற்றுப்பெறாத வினைச்சொல் மற்றொரு வினையைக் கொண்டு முடிவது _____ 76. _______ உருபுகள் பயின்று வரும் தொடர்கள் வேற்றுமைத்தொடர்கள் ஆகும். 77. இடைச்சொல்லை தொடர்ந்து பெயரோ வினையோ வருவது _______தொடர் 78. விளியுடன் வினைச்சொல் வருவது _______ ஆகும். 79. உரிச்சொல்லைத் தொடர்ந்து பெயரோ வினையோ வருவது ______தொடர் ஆகும். 80. ஒன்றிற்கு மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது _______ பெயரெச்சங்கள் எனப்படும் . 81. கேட்க வேண்டிய பாடல் , சொல்லத் தக்க செய்தி .- இவைகள் ___ பெயரெச்சங்கள் 82. வேற்றுமை தொகா நிலைத்தொடர்கள் ___ வகைப்படும். 83. கதிரவா வா ! என்பதை எழுவாய்த்தொடராக மாற்றுக. 84. ______ வேற்றுமைகளுக்கு உருபு இல்லை. 85. படித்த இளைஞன், பார்த்த ஊர்,முறிந்த கால், சுவைத்த இனிப்பு, முடிந்த தேர்தல் - கொடுக்கப்பட்ட எச்சங்கள் எவ்வகை? வேறுபாடு கண்டறிந்து வகைப்படுத்துக. 86. பாரதிதாசன் பாடினார், பாரதி வாழ்க! – எவ்வகைத் தொடர்? 87. காந்தி தலைவர்,இவர் பெரியார் – இவைகள் எத்தொடர்? எப்பொருளில் அமைத்த தொடர்? 88. அவன் யார்? மலர் யாது? – எவ்வகைப்பொருளில் வந்த தொடர்? 89. கம்பனே, தம்பீ,நண்பீ,அம்மா,முருகா,கந்தா, செல்வா – எத்தொடரின் அடக்கம்? 90. வாழ்ந்த மனை, வாழ்கிற மனை, வாழும் மனை – எச்சங்களைக் காலங்களோடு வகைப்படுத்துக. 91. பாடத்தைப் படித்தான்,கத்தியால் குத்தினான்,மகளுக்குக் கொடுத்தான்,ஏணியில் இறங்கினான், நண்பனது வீடு, வாங்கண் நிலா- தொகை நிலைத்தொடராக்குக. 92. எச்சத்தொடர் ___ வகைப்படும். 93. முற்றுத் தொடர் ___ வகைப்படும். 94. ஐயோ ஐயோ; இழப்பு இழப்பு இழப்பு என்பன ___ பொருளில் வரும் ___ தொடர். 95. நல்குமே நல்குமே, பாடுகோ பாடுகோ ___ பொருளில் வந்த ___ அடுக்குத்தொடர். 96. சென்று வந்தான் – எதிர்கால வினையெச்சமாக மாற்றுக. 97. சிரிக்கின்ற நிகில் – இறந்தகாலமாக மாற்றுக. 98. பேசிய அஞ்சனா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக்குக. 99. சிபி நந்தன் வருவானா? – எழுவாய் வினையாக மாற்றுக. 100. நான் யார்? – எவ்வகைத்தொடர்? II. விடையளிக்க. ( செய்யுள் வினாக்கள்)(காசிக்காண்டம்,மலைபடுகடாம்) 1. ஆற்றுப்படுத்துதல் என்றால் என்ன? 2. முகமன் சொற்களை எழுதுக 3. காசிக்காண்டம் – குறிப்பு வரைக 4. மலைபடுகடாமில் குறிப்பிடப்படும் தினைச்சோற்று விருந்தினைக் குறிப்பிடுக. 5. ஆற்றுப்படை என்றால் என்ன? 6. “மன்னனின் கூத்தர்கள்” என்று கூறுங்கள்! என யார் யாரிடம் கூறியது? ஏன்? 7. மலைப்படுகடாம் – நூல் குறிப்பு வரைக. 8. காசிக்காண்டத்தின் ஆசிரியர் குறிப்பு வரைக. 9. உங்கள் வீட்டில் கடைப்பிடிக்கும் விருந்தோம்பல் முகமன் சொற்களை எழுதுக. 10. உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு நீங்கள் விருந்தளிக்கும் விருந்தோம்பல் முறையை விளக்குக. III. விடையளிக்க. (உரைநடை வினாக்கள்) (விருந்து போற்றுதும்) 1. விருந்தோம்பல் என்றால் என்ன? 2. இன்மையிலும் விருந்தோம்பலை விளக்குக. 3. பெரியபுராணத்தில் காணப்படும் விருந்தோம்பல் நிகழ்வை விளக்குக. 4. விருந்தோம்பல் குறித்து புறநானூறு குறிப்பிடும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக. 5. விருந்தோம்பலின் அடிப்படைப் பண்புகள் யாவை? 6. விருந்தோம்பலில் காணப்படும் அற உணர்வுக் கருத்துகளை எழுதுக. 7. தமிழர் மரபும் – விருந்தோம்பலும் குறித்த செய்திகளைக் குறிப்பிடுக. 8. விருந்தினரை எதிர்கொண்ட தன்மையாகவும் அவர்களின் பழக்கவழக்கமாகப் பின்பற்றிய முறையினை விளக்குக. 9. அல்லில் ஆயினும் – தனித்து உண்ணாமை – விளக்குக 10. விருந்தோம்பல் – அன்று – இன்று – குறிப்பிடுக. IV. செய்யுள் பொருளுணர்திறன்(காசிக்காண்டம், மலைபடுகடாம்) 1. ஆற்றுப்படுத்துதல் என்பது ___ என்பதாகும். 2. தினை என்பதன் பொருள் – 3. கிழவிர் போல – பொருள் தருக. 4. நும் இல்போல் – பொருள் தருக 5. கொற்கைத் துறைமுகம் அமைந்துள்ள இடம் ___ 6. கானவர்கள் செய்து வைத்த உணவுகள் _____ 7. லிங்கபுராணம், நைடதம், கூர்மபுராணம் என்பன ___ எழுதிய நூல்கள். 8. காசிக்காண்டம் எதன் பெருமையை எடுத்து இயம்புகிறது? 9. தன் அருகுற – என்பதன் பொருள்? 10. காசிக்காண்டத்தில் நமக்குப் பாடப்பகுதியாக வந்த பகுதி ___ 11. அதிவீர்ராம பாண்டியருக்கு வழங்கப்பட்டப் பட்டப்பெயர் ___ 12. கடினப்பாதை வழியில் இருக்கும் மரமாகக் கூத்தன் கூறியது? 13. எல்லாச் சமூகங்களிலும் போற்றப்படும் பண்பாடுகளுள் முதன்மையானது? 14. விருந்தினராக ஒருவர் வந்தால் முதலில் கூறும் முகமன் சொல் எது? 15. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்கள் மொத்தம் ___ 16. காசிக்காண்டத்தில் கூறப்பட்ட விருந்தோம்பல் பாடலுக்கு ஒப்பாகக் காட்டப்பட்ட நூல் ___ 17. வருக! – இலக்கணக் குறிப்பு தருக. 18. மகிழ்வன செப்பல் – பொருள் தருக. 19. நறுந்தொகையின் வேறுபெயர்___ 20. காசிக்காண்டத்தில் குறிப்பிடப்படும் பாடுபொருள் ? 21. அசைஇ – இலக்கணக் குறிப்பு தருக. 22. பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்’ – என்று கூறியவன்? 23. வயிரியம்,வேவை,பொம்மல் – பொருள் தருக. 24. மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் ___ 25. சேட் புலம்பு அகல – பொருள் தருக. 26. மான விறல்வேள் – யார்? 27. குரூஉக்குறை, பரூஉக்குறை – பொருள் & இலக்கணக்குறிப்பு தருக. 28. ஆரிப்படுகர் – யார்? 29. சிலம்பு, இறடி – பொருள் தருக. 30. எரியும் நெருப்பைப்போல் ஒளிரும் பூங்கொத்துகளைக் கொண்ட மரம் ___ 31. மானமும் வெற்றியும் உடைய மன்னன்? 32. கலைத்திறன்களை நிகழ்த்திக் காட்டி மக்களையும் மன்னனையும் மகிழ்வித்தவர்கள் ____ ? 33. பகைவரைப் பெறாமல் போர் செய்யும் வலிய முயற்சியை உடையவன்? 34. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பன ___ நூல்கள். 35. மலைபடுகடாம் __ நூல்களுள் ஒன்று. 36. மலைபடுகடாமின் வேறு பெயர்___ 37. மலைபடுகடாமின் ஆசிரியர்? 38. மலைபடுகடாம் ஆசிரியரின் பெயர்? 39. வளம் நிறைந்த புது வருவாயினை உடைய ஊராகக் கூத்தன் கூறியது? 40. ஒப்புடன் முகமலர்ந்தே – இப்பாடல் வரிகல் இடம்பெற்ற நூல்? 41. ஏழுதல் முன் மகிழ்வன செப்பல் – இப்பாடல் வரி இடம்பெற்ற நூல்? 42. வியத்தல், நோக்கல், செப்பல், இருத்தல் – இலக்கனக் குறிப்பு தருக. 43. நன்மொழி – இலக்கணக் குறிப்பு தருக. 44. உரைத்தல், இருத்தல் – எதிர்மறைத் தொழிற்பெயராக்குக. 45. இவ்வொன்பான் – பொருள்? 46. விருந்தோம்பலில் குறிப்பிடப்படும் எட்டாவது முகமன் சொல்லை எழுதுக. 47. துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் முதலிய பாடுபொருள்களைக் கூறும் நூல்? 48. மலைபடுகடாமில் இடம் பெற்ற மொத்தப் பாடல் அடிகள்? 49. பொழிந்த, மலைந்து – இலக்கணக் குறிப்பு தருக. 50. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துவது ___ V. திருக்குறள் (இயல் – 3) 1 – 10 திருக்குறள்கள். 1. நாள்தொறும் நாடி _____ மன்னவன் நாள்தொறும் ___ கெடும். 2. ___ எல்லாம் அரிதே பெரியாரைப் _____ தமராக் கொளல் 3. இடிப்பாரை இல்லாத ஏமரா ___ கெடுப்பார் ___ கெடும். 4. காமம் வெகுளி மயக்கம் ___ நாமம் _____ நோய். 5. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் _____ அறிவிலா தார். 6. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் ___ _____ காண்பது அறிவு. 7. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ___ ___ ஓம்பப் படும். 8. வேலொடு நின்றான் ____ றதுபோலும் _____ நின்றான் இரவு. 9. பல்லார் பகைகொளலிற் ___ தீமைத்தே நல்லார் ____ விடல். 10. ஒழுக்கத்தின் ___ மேன்மை இழுக்கத்தின் ____ எய்தாப் பழி. VI. “பசித்தவருக்கு உணவிடுதல் ஓர் அறச்செயல்” என்ற கூற்று விளக்கும் கரிசல் கதையை நும் பாடப்பகுதி கொண்டு நிறுவுக.

No comments:

Post a Comment

Translate