Search This Blog
Monday, August 2, 2021
ஆண்டு இறுதித் தேர்வு – (2021)இலக்கணப் பயிற்சி வினாக்கள் இயல் – 2,தொகை நிலைத் தொடர்
ஆண்டு இறுதித் தேர்வு – (2021)இலக்கணப் பயிற்சி வினாக்கள்
இயல் – 2,தொகை நிலைத் தொடர்
ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.
தொடர்களைத் 1. தொகைநிலைத் தொடர் - Elliptical Expressions, 2. தொகாநிலைத் தொடர் - Unlliptical Expressions என இரண்டாகப் பகுக்கலாம்
சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை, முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’ வரும். (மறைந்து வரும்) அவ்வாறு வருதலைத் ‘தொகை’ என்பர்
தொக்கு – தொகை – பொருள்? மறைந்து வருதல்
தொகை’ ஆறு வகைப்படும். அவை, 1. வேற்றுமைத் தொகை 2. வினைத் தொகை 3. பண்புத் தொகை 4. உவமைத் தொகை 5. உம்மைத் தொகை 6. அன்மொழித் தொகை
வேற்றுமை உருபு மறைந்து வந்தால் அது வேற்றுமைத் தொகை எனப்படும்.
‘நூல் படித்தான்’ என்னும் தொடர்,____ இதில் மறைந்து வந்துள்ள உருபு __ஐ- 2-ம் வே.உருபு
நூலைப் படித்தான்’என்பது 2-ம் வே.உருபு வெளிப்படை
ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு
தலை வணங்கினான்’ என்பது மூன்றாம் வே.தொகை
‘தலையால் வணங்கினான்’மூன்றாம் வேற்றுமை தொகா நிலைத் தொடர்(ஆல்)
மூன்றாம் வேற்றுமை உருபுகள் __ ஆல்,ஆன்,ஒடு,ஓடு
மங்கை மகள்’ என்பது’ – நான்காம் வே. தொகை
மங்கைக்கு மகள் என்பது ___ நான் காம் வே.விரி(தொகா)
நான்காம் வேற்றுமை உருபு ___கு
‘நாடு நீங்கினான்’ என்பது – 5-ம் வே,தொகை
‘நாட்டின் நீங்கினான் –ஐந்தாம் வே.தொகா நிலைத்தொடர்(இல்,இன்)
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் –இல்,இன்
வேலன் சட்டை என்பது __ ஆறாம் வே.தொகை
வேலனது சட்டை என்பது __ ஆறாம் வே.தொகா நிலைத் தொடர்
ஆறாம் வேற்றுமை உருபு __ அது
மரக்கிளி என்பது ___ ஏழாம் வே.தொகை
மரத்தின் கண் கிளி என்பது __ ஏழாம் வே.தொகா நிலை.தொடர்
ஏழாம் வேற்றுமை உருபு __ கண்
முதல் வேற்றுமையின் வேறுபெயர் __ எழுவாய் வே.
எட்டாம் வேற்றுமையின் வேறுபெயர் __-விளி வேற்றுமை(அழைத்தல்)
வேற்றுமை என்பது ____ பொருளை வேறுபடுத்த வருவதாகும்.பெயர்ச்சொல்லின்
முதல் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை ____ தொடர்கள் ஆகும். தொகா நிலைத்தொடர்கள்
வளைக்கை என்பது ___ வளையை உடைய கை(2-ம் வே,உருபும் பயன் உடன் தொ.தொகை
தொகை நிலைத்தொடரில் வராத இரு வேற்றுமைகள் ___ எழுவாய்(முதல்) எட்டாம்
காலம் காட்டும் இடைநிலை மறைந்து வருவது வினைத்தொகை. இவ்வாறு, காலம் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.
‘குடி நீர்’சேர்மதி, ஓங்கு நீர், கொய்மலர்,திருந்துமொழி என்னும் தொடர். - வினைத்தொகை
குடித்த நீர், குடிக்கும் நீர், குடிக்கின்ற நீர் என முக்காலத்திற்கும் ஏற்பப் பொருள் தந்து காலம் காட்டும் இடை நிலைகள் மறைந்து வினை தொக்கி நிற்பது ___ வினைத்தொகை
அலைகடல், பாய்புலி, உண்கலம், ஆடுகொடி, ஊறுகாய்.. வினைத்தொகை
ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை
நிறத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புப்பெயர்கள் பசுமை,நீலம்,வெண்மை
குணத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புச் சொற்கள்: நன்மை, தீமை,கொடுமை,பொறாமை.
சுவையைக்குறிக்கும் சொற்கள்: காரம்,புளிப்பு,கசப்பு
வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்:
சதுரம்,வட்டம்,நாற்கரம்
பண்புப்பெயர்கள், நிறம்,சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும்.
பண்பை விளக்கும் உருபு மறைந்து (தொக்கு) வருவது பண்புத் தொகை.
செந்தாமரை’ என்பது ‘செம்மையாகிய தாமரை’ என விரியும். இடையில், ‘மை’ என்னும் பண்புப் பெயர் விகுதியும் ‘ஆகிய’,ஆன என்னும் பண்பு உருபும் மறைந்து வருவது பண்புத்தொகை
வெண்ணிலவு, இன்சுவை, வட்டக்கல்,உவர் நீர்,முத்தமிழ்,வட்டப்பாறை, தொன்மக்கள், பழந்தமிழ். - பண்புத்தொகை
உவமானம் உவமேயங்களுக்கு இடையில் உவம உருபு மறைந்து வருவது __ உவமைத்தொகை
தேன்மொழி’ என்பது உவமைத்தொகை
‘தேன்போன்ற மொழி’ என விரிவது ___ விரி உவமை
உவமானம் உவமேயங்களுக்கு இடையில், ‘போலும்’புரைய,அன்ன,இன்ன,மான,கடுப்ப போன்ற _____மறைந்து வருவது உவமைத்தொகை. உவம உருபுகள்
‘மலர்ப்பாதம்’ ‘கயல்விழி’ போல்வன ____ உவமைத்தொகை
உவமை வேறு உவமேயம் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்று ஒற்றுமைப்படுத்த வருவது ___உருவகம்
____________________________________________________________________________
ஆண்டு இறுதித் தேர்வு – 2021 இலக்கணம் – இயல் – 2 தொடர்ச்சி-2
உருவகத்தில் முதலில் நிற்கும் சொல் ____ இரண்டாவது நிற்கும் சொல் __ உவமேயம்,உவமை
உவமைத்தொகையில் முதலில் நிற்கும் சொல் ___ இரண்டாவது நிற்கும் சொல் ___ இரண்டிற்கும் இடையில் மறைந்து வருவது __
உவமைத்தொகையின் வேறு பெயர்கள் __ உவமை, உவமேயம்…போன்ற
புலிக் கொற்றன், மழைக்கை, துடியிடை, கிளிமொழி,
கற்பக வள்ளல், மதிமுகம்", மலரடி, கமலக்கண், கனிவாய்,தேன்மொழி, மான்விழி,வாள் மீசை, கயல்விழி ___ இவற்றில் உவமைச்சொற்கள், உவமேயச் சொற்களைச் சுட்டிக் காட்டுக.
உவமை ___ வகைப்படும்.அவை ___, ___
தொகை உவமை, உவமைத்தொகையில் ___ உருபு மறைந்து வரும்.
விரிஉவமையில் ___ வெளிப்படையாக வரும்.
உவமைத்தொகை, வினை,பயன், மெய், உரு என்ற பொருளில் வரும்.
மலர்முகம்,மலர்க்கை,தாய்மொழி,கயல்விழி,அன்னைத்தமிழ், முத்துப்பல்,
உவமைத்தொகை - உருவகம்
மலர்முகம் - முகமலர்
மலர்க்கை - கைமலர்
தாய்மொழி - மொழித்தாய்
கயல்விழி - விழிகயல்
அன்னைத்தமிழ் - தமிழன்னை
மலர்விழி - விழிமலர் .
இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று கூறுவது
ஒரு பெண்ணின் முகத்தை பார்த்து. மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுவது ___.
தார் வேந்தன், நீர்த்தடம்,போர்க்குகன்
ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை
நிறத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புப்பெயர்கள் பசுமை,நீலம்,வெண்மை
குணத்தைக் குறிக்கும் மை ஈற்றுப் பண்புச் சொற்கள்: நன்மை, தீமை,கொடுமை,பொறாமை.
சுவையைக்குறிக்கும் சொற்கள்: காரம்,புளிப்பு,கசப்பு
வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்:
சதுரம்,வட்டம்,நாற்கரம்
பண்புப்பெயர்கள், நிறம்,சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை - இது பண்புத் தொகையின் ஒரு வகையாகும்.
மூவேந்தர் = மூன்று + வேந்தர், சேவடி", "செங்கண்", "நெடுங்கடல்", "மூதூர்", "தண்தயிர்", "பைந்தொடி", "வெண்சிலை", "நாற்படை"
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருக்கும்.
இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் முதல்சொல் சிறப்பு பெயர்ச்சொல்லாக இருக்கும்.
இருபெயரொட்டுப் பன்புத்தொகையில் இரண்டாவது சொல் பொதுப் பெயர்ச்சொல்லாக இருக்கும்.
பனைமரம் என்னும் சொல்லில்
பனை என்பது சிறப்புப்பெயர். மரம் என்பது
பொதுப்பெயர்.
சிறப்புப் பெயர், பொதுப்பெயர் இரண்டுக்கும் இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்
செண்பகப்பூ: செண்பகம் சிறப்புப் பெயர். பூ பொதுப்பெயர்
பச்சைப் பட்டு – இருபெயரொட்டு பண்புத் தொகை
வண்ணத்துப்பூச்சி, மின்மினிப்பூச்சி.என்பன __
சாரைப்பாம்பு, தமிழ்மொழி, கோரைப்புல், தைத்திங்கள், அவியுணவு, தவத்தொழில், அரிமான், அந்திமாலை, உரைக்கல், அறவினை, மாமரம், மடித்தலம், பாரதநாடு, வேற்படை, கற்புக்கடம், மல்லிகை மலர், செருக்களம், அவைக்களம்,
பால் குடித்தான் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
பால் குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை
பொன் வளையல் - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
என் மகள் - நான்காம் வேற்றுமைத் தொகை
குழந்தைப் பால் - நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஊர் நீங்கினான் - ஐந்தாம் வேற்றுமைத் தொகை
வாய்ப்பாட்டு - ஐந்தாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன்தொக்க தொகை
நண்பன் வீடு - ஆறாம் வேற்றுமைத் தொகை
மலைக் கோயில் - ஏழாம் வேற்றுமை
தண்ணீர்ப் பாம்பு - ஏழாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன் தொக்க தொகை
ஆறாம் வேற்றுமை, உருபு தொக்க தொகையாக மட்டுமே வரும்; உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாக வருவதில்லை.
அன்மொழி என்பது அல் + மொழி எனப் பிரியும். அல் என்பதற்கு அல்லாத என்பது பொருள்.
தொகைநிலைத் தொடரிலே இடம் பெறாத (அல்லாத) சொற்களைச் சேர்த்துப் பொருள் கொள்வதால் இத்தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பட்டது.
தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பட்டது.
அன்மொழித்தொகை என்பது, வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத் தொடர்மொழிகளுக்கு உரிய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிறசொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தும்.
பூங்குழல் வந்தாள், பொற்றொடி வந்தாள், "ஆயிழை வந்தாள், சுடுகதிர் எழுந்தான்,தேன்மொழி நகைத்தாள், இன்மொழி பேசினான் – என்பது ___
எண்ணல்,எடுத்தல், முகத்தல்,நீட்டல் எனும் அளவுப்பெயர்களைத் தொடர்ந்து வருவது எண்ணும்மை.
இரவு பகல்’ என்பது ‘இரவும் பகலும்’ என விரியும். இடையில் ‘உம்’ என்னும் இடைச் சொல் மறைந்து வருவது, உம்மைத் தொகை எனப்படும்.
கபிலபரணர்’, ‘உற்றார் உறவினர்’
நாழி ஆழாக்கு, சாண்,அரை, ஆடல்,பாடல் – எண்ணும்மையாக்குக.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment