Search This Blog

Monday, October 1, 2018

முதல் கவிதை


நான், உனக்கு எழுதும் முதல் கவிதை - ஆனால்
நான்  யாரென்ற முகவரி உனக்குத் தேவையில்லை.
நீ என் மனம் கவர்ந்தவன் - ஆனால்,
நீ என் காதலனா என்பது தெரியவில்லை.
நித்தம் உனை எண்ணுகிறது நித்திரையின்றி - ஆனால்,
நீ தான் என் நீள்வானமாக வெளுக்கவில்லை..
சித்திரம் உன்னைத் தூரிகையால் தீட்டவா என்றாய் - ஆனால்,
தூரிகை இன்னும் என் கண்களுக்குத் தென்படவில்லை.
அன்பும் பாசமும் நிறைந்துள்ளது என்றாய் - ஆனால்,
ஆகாய கங்கையா என்பதுதுதான்  தெரியவில்லை.
கோபம் கொள்ளும் கோமகள் என்றாய் - ஆனால்
காலத்தின் கோலமாக நீ தான் இன்னும் மாறவேயில்லை.
காலம் பதில் சொல்லும் என்றாய் - ஆனால்
கருதியதை உன் காலம் பதிலுரைக்கவுமில்லை.
கிறுக்கு பிடித்து விட்டது என்றாய் - ஆனால்
கின்னசில் இன்னும்தான்  நிழல்படவில்லை.
அன்புதனை விரும்புவது என் சுபாவம் என்றாய் - ஆனால்,
அலைமோதி நீ அதற்காக துவண்டதுமில்லை..
பற்றற்ற முனிவன் என்றாய்   - ஆனால்
பல நேரம் அவ்வாறு இருந்ததுமில்லை..
புரிதல் மேலோங்கும் என்றாய் - ஆனால்
புதிரா? புனிதமா? என ஆராய முடியவில்லை
இயல்பாய் வேண்டுமென்றாய் - ஆனால்
இக்கணம் வரை நீ இயல்பாய் இருந்ததில்லை..
பிரிவு நிரந்தரமென பேசாமல் நின்றாய்
பிள்ளைப் பிராட்டியாய் பேச முற்படவுமில்லை..
நீ என் பதி என்றேன் - ஆனால்,
நான் சதியாக ஒரு நாளும் தென்பட்டதில்லை.
வாழ வேண்டும்  என்றேன் - ஆனால்,
வாழ வழியில்லையா என்றாய்....
சிக்கலின்றி சிந்தனை செய்தேன்
செவ்வானம் வெளுக்கவுமில்லை..
என்னைக் கொல்லாமல் கொல்கிறாய் என்றேன் 
நான் உன்னை கொள்ளவில்லையே என்றாய்...
எத்தனையோ சுமைகள் சுகங்களாய் ...
என்றும் நீ தான் என் உயிர் சுரங்களாய்
மீண்டும் மீட்டுகிறது நரம்புகள்...
மீட்சி கொண்டு எழ முடியாமல்......????

No comments:

Post a Comment

Translate