Search This Blog

Friday, May 22, 2020

இயல் – 2 புற நானூறு

இயல் – 2
புற நானூறு

ஆசிரியர்
குடபுலவியனார்
சங்க இலக்கியங்கள்

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை -8
நற்றிணை……
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை…..
                                         புறநானூறு
புறம் + நான்கு + நூறு
புறப்பொருள் பற்றிய  நானூறு பாடல்கள்.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
வேறு பெயர்கள்: புறம், புறப்பாட்டு.
பண்டைத்தமிழர்களின் வீரம், வெற்றி, கொடை பல்வேறு புறம்
  சார்ந்த செய்திகள்.
பண்டைத் தமிழரின் கருவூலம்.
                                  குடபுலவியனார்
சங்ககாலப் புலவர்களில் ஒருவர்
18 – 19 எண் கொண்ட பாடல்.
பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றிய செய்தி.
குடபுலவியனார்குடபுலம் +இயனார்.
குடபுலம்சேர நாடு
இயனார்இசைக்கருவி
குடபுலவியனார் : சேர நாட்டு இசைக் கலைஞர்.
வானுட்கும் வடிநீண்மதில்
மல்லன்மூதூர் வயவேந்தே
செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த 
வான் உட்கும் வடி நீண் மதில் – வானம் அஞ்சும் அளவு உயர்ந்த அழகிய
 அரண்களையும்,
மல்லன் மூதூர் வய வேந்தே – வளமும் பொலிவும் உள்ள பழமையான
  ஊரினையுடைய வலிமையான அரசனே!
செல்லும் உலகத்துச் செல்வம்
   வேண்டினும் – உன் இறப்பிற்குப்
  பின் நீ போக விரும்பும் மறுமைப்
  பேறாகிய சொர்க்க உலகத்தை    
     நுகரும் செல்வம் விரும்பினும்,
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி ஒரு நீ ஆகல் வேண்டினும்
உலகத்தைக் காக்கும் பிற வேந்தர் தோள் வலிமையைக் கெடுத்து நீ ஒருவனே தலைவனாவதை விரும்பினும்,
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி ஒரு நீ ஆகல் வேண்டினும்
உலகத்தைக் காக்கும் பிற வேந்தர் தோள் வலிமையைக் கெடுத்து நீ ஒருவனே தலைவனாவதை விரும்பினும்,
நல்லிசை நிறுத்தல் வேண்டினு  மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக்  கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத்தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம் 
சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும்
 மிக்க நல்ல புகழை இவ்வுலகத்தே
நிறுத்துதலை விரும்பினும்
மற்று அதன் தகுதி கேள் இனி மிகுதியாள –
அத்தகைய விருப்பத்தை நிறைவேற்ற நீ
 செய்ய வேண்டிய தகுந்த செயல்களை
இப்பொழுது கேட்பாயாக பெரியோனே
!சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும் –
நிறுத்துதலை விரும்பினும்
மற்று அதன் தகுதி கேள் இனி மிகுதியாள –
அத்தகைய விருப்பத்தை நிறைவேற்ற நீ
 செய்ய வேண்டிய தகுந்த செயல்களை
இப்பொழுது கேட்பாயாக பெரியோனே!
நீர் இன்று அமையா யாக்கைக் கெல்லாம்
நீர் இன்றி அமையாத இவ்வுலகில் வாழும்
உடம்பிற்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே –
உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தோர் ஆவர்
உண்டி முதற்று உணவின் பிண்டம்
 உணவை முதலாக வைத்து அவ்வுணவால்  வளர்க்கப்பட்ட உடம்பு
உணவெனப் படுவது நிலத்தொடு  நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங்  கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும் 25
உணவெனப் படுவது நிலத்தொடு நீர் –
ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்
நீரும் நிலனும் புணரியோர் –
நீரில்லா இடத்தில் அந்நீரையும், நிலத்தையும் ஒன்றாக இணைத்துச் செயல் படுத்தியவர்கள்
வித்தி வான் நோக்கும் புன்புலம் – நெல் முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய் ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலம்
கண்ணகன் வைப்பிற்று ஆயினும் – இடம் அகன்ற நிலப்பரப்பாயினு
இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே. 30
நண்ணி யாளும் இறைவன் தாட்கு உதவாதே - பொருந்தியாளும்
 அரசனது முயற்சிக்குப் பயன்படாது
அதனால் அடுபோர்ச் செழிய – ஆதலால் கொல்லும் போர்த்தொழிலை
உடைய செழியனே!
இகழாது வல்லே – இதனை அலட்சியப்படுத்தாது, விரைவில்நிலன் நெளி 
– நிலம் பள்ளமாக உள்ள குழிந்த இடங்களில்
நீர்நிலை பெருகத் தட்டோர் – நெடிய நீண்ட கரையெடுத்து, நீர்நிலை
    அமைத்து நீரைத் தேக்கி வேண்டுமளவு பயன்படுமாறு பெருகச் செய்தோர்இவண் தட்டோர் – தாம் செல்லும் உலகத்து அறம், பொருள், இன்பம் மூன்றினையும் இவ்வுலகத்து தம் பேரோடு   
    தளைக்கச் செய்தோர் ஆவர்
    தள்ளாதோர் – அந்நீரைப் பெருகச் செய்யாதோர்இவண் தள்ளாதோரே - இவ்வுலகத்து தம் பெயரைத் தளைக்கச் செய்யாதோர் ஆவர்.
விளக்கம்
வான் வரை உயர்ந்த மதிலைக் கொண்ட பழமையான ஊரின் தலைவனே!
வலிமை மிக்க வேந்தனே!
நீ மறுமை இன்பத்தை அடைய விரும்பினாலோ அல்லது உலகம் முழுவதும் வெல்ல விரும்பினாலோ அல்லது நிலையான புகழைப் பெற விரும்பினாலோ .. நீ செய்ய வேண்டியது என்னவென்று கூறுகிறேன் கேட்பாயாக!
பாண்டிய நெடுஞ்செழியனே!
நீரீன்றி அமையாது உடல்
உடல் உணவால் அமையும்.
முதன்மையானதும் கூட
எனவே, உணவைத் தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.
உணவு என்பது நிலம், நீர் ஆகும்.
ஆதலால், நிலத்தையும் நீரையும் சேர்த்தவர் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர் ஆவார்.
வலிமை மிக்க வேந்தனே!
நெல் முதலிய தானியங்களை விதைத்து மழையை நம்பிப் பார்த்திருக்கும் நிலமாக இருந்தாலும் சரி அல்லது அதனைச் சார்ந்து வாழும் அரசனின் முயற்சியாக இருந்தாலும் சரி ..இதில் எதுவும் உதவாது.
ஆதலால்,
நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர் நிலையைப் பெருகச் செய்யும்.
நிலத்துடன் நீரையும் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் நிலைத்தப் புகழையும் பெறுவர்.
செய்யாதவர், புகழ் பெறாது வீணாக மடிவர்.
அதனால், நான் கூறிய மொழிகளைக் இகழாது விரைவாகக் கடைப்பிடிப்பாயாக! என குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலைத்தப் புகழைப்பெற வழிமுறைகளைக் கூறுகிறார்.

No comments:

Post a Comment

Translate