என்னுடன் பணிபுரியும்
ஆசிரியப்பெருமக்களுக்கு நான்
வழங்கிய வாழ்த்து மடல்.
ஆனந்தத்தை அள்ளித்தரும் இவ்வழகிய வேளையில்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும்
அழகிய திருமகளின் தங்கைகளாய் தம்பிகளாய்
வாரணம் ஆயிரம் சூழ வலம் வரும்
அன்றும் என்றும் தனக்கென
ஓர் இடத்தைப் பாரினில் பெற்று
பெற்ற பிள்ளையைப்போல்
பிற பிள்ளைகளையும் பாவித்தருளும்
பண்பினைப் பெற்ற பெரும் பொற்பதங்களே
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற
கொள்கைகளைப் போதித்தும்
சிறு கல்லையும் சிலையாக உருவாக்கும்
சிற்பியின் கையில் உள்ள உளியைப் போன்றவர்களே
தாங்கள் கல்லையும் கடவுளாக்கும் கடவுளல்லவா?
கடவுள் உள்ளாரா எனும் பல்வேறுபட்டவர்களின் கேள்விக்கே
கேளுங்கள் கல்வியைத் தருகிறோம்………
என்ற வினாவுக்கும் விடைக்கும் விளக்க அகராதியாகத் திகழும்
தாங்கள்தான் கடவுள் இல்லை என்போருக்கும் கடவுள்
அக்கடவுளின் உருவத்தை உம் வடிவில் நாம் இன்று கண்டோம்
ஆயிரம் திருநாள் வந்தாலும் அடியேனாகிய இவ்வாசானுக்கு
எடுக்கும் இவ்விழாவே எம் கண்ணுக்கு
பெரு விழாவாக காட்சியளிக்கிறது
ஏனென்றால் இங்குதான் உலக இருள் என்ற
அறியாமையை நீக்கும் அகஒளியான
மகர ஜோதி புறப்படுகிறது.
மகர ஜோதிகளே ……. இம்மண்ணில்
நம் பெருமையை என்றும் நிலைநாட்ட
நிஜமே ……. ஜெயமே என்ற கொள்கையோடு
நம் ஆசிரியப் பணியை மேற்கொள்வோம்.
அன்பே சிவம் என்ற கோட்பாட்டின்படி நடப்போம்
வெற்றி என்பது பெற்றுக்கொள்ள,
தோல்வி என்பது கற்றுக் கொள்ள
என்ற நம்பிக்கை விதையை ஊட்டுவோம்.
மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனையை வெளிப்படுத்துவோம்.
ஆசீர்வவதிக்கப்படவன் மட்டுமே ஆசிரியன்
அவனே இவ்வுலகிற்கு சொந்தக்காரன்
என்பதை நிலை நாட்டுவோம்.
மலர உறுதுணையாய் இருப்போம்.
நாம் கண்ணில்பட்ட பிம்பம் போல்
பிரதிபலிப்போம்.
நாம் நடந்தால், பார்த்தால் ஒவ்வொன்றிற்கும்
இலக்கணமாய்த் தெரிய முற்படுவோம்.
மொத்தத்தில் மாணவர்களின் மத்தியில்
ஒரு கதாநாயகர்கள், கதாநாயகிகள்
போலவும் செயல்படுவோம்.
Thangalin kavithai miga arumai.ungalin kalvi sevai thodara valthukkal. by L.R.Raja, Police, Tiruppur.
ReplyDeleteநன்றி ஐயா :)
Delete