Search This Blog

Saturday, February 11, 2012

சமச்சீர் கல்வி



சமச்சீர் கல்வி முறை 
                சமச்சீர் கல்வி என்பது தமிழ்நாட்டில்அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்வி முறையாகும். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்புவரை செயல்படுத்தப்பட்ட இந்த சமச்சீர் கல்வி முறையானது, இதுவரை மாநில அளவில் இருந்துவரும் நான்கு தொடக்கக்கல்வி அமைப்புகளை ஒன்றாக்கியது. மாநில அரசு கல்வி,மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளின் கல்வி முறையை ஒன்றாக்கி மாநில அரசின்கீழ் செயல்படும் அமைப்பாக்கியது தான் இத்திட்டம். சமச்சீர் கல்வித் திட்டம், தமிழகத்திலுள்ள குழந்தைகள் அனைவருக்கும் வேறுபாடின்றி, ஒரே விதமான, தரமான கல்வியைக்கொடுக்க வேண்டும் என்னும் அடிப்படையில் தமிழக அரசு உருவாக்கிய புதிய திட்டமாகும்.

வரலாறு
பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது. முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கையும், இது தொடர்பாக ஆராய்வதற்கு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. 2006ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது
புதிய கல்வி முறை:
       இத்திட்டத்தின்படி, தமிழகத்திலுள்ள மாநிலக்கல்வி வாரியம், மெட்ரிக்குலேசன் கல்வி வாரியம், ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம், ஓரியண்டல் கல்வி வாரியம் ஆகிய நான்கு கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து இந்த நான்கு வாரியங்களிலும் உள்ள சிறப்பு அம்சங்களைத் தொகுத்து, ஒரு பொதுக்கல்வி வாரியத்தை அமைத்தது; இது வரை நான்கு தனித் தனி வாரியங்களின்கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்திற்கும், ஒரு பொது பாடத்திட்டம், பொதுவான பாட நுல்கள், பொதுவான தேர்வு முறை ஆகியவைகளை நடைமுறைப்படுத்திடவும், பொதுப்பாடத் திட்டத்தின் கீழ் பாடநூல்கள் எழுதப்பட்டு, அவற்றை கல்வி ஆண்டு (2010 2011) முதல் 1 ம் வகுப்பு மற்றும் 6 ம் வகுப்புகளுக்கும், அதற் கடுத்த கல்வி ஆண்டில் ஏனைய வகுப்புகளுக்கும் இத்திட்டத்தைச் செய்தது.

அறிமுகப்படுத்தியதற்கான காரணங்கள்
நான்குவகையான கல்வி அமைப்புகளால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் தவிர்ப்பதற்காக இத்திட்டம் கல்வியாளர்களால் ஆராயப்பட்டு அவற்றை நீக்கும் எண்ணத்துடன் அறிமுகப்படுத்தபட்டது.

தாய்மொழிக் கல்வி

முத்துக்குமரன் தலைமையிலான குழு சமர்ப்பித்த 109 பரிந்துரைகளில் நான்கு மட்டுமே சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக "பொதுப் பள்ளி முறை, தாய்மொழி வழிக் கல்வி ஆகியவை புறக்கணிக்கப்பட்டன." தாய்மொழி கல்வித் திட்டத்தை அரசு கைவிடக் காரணம், அதற்கு மக்களிடம் ஆதரவு இல்லாத சூழல் ஆகும். இந்தச் சூழலுக்கு காலனித்துவம், பொருளாதாரம், கல்வி வணிக மயப்படுத்தப்படல், அரச கொள்கைகள் என பல காரணங்கள் உண்டு.

சமச்சீர் கல்வியின் சிறப்பு அம்சங்கள் 
சமச்சீர் கல்வி என்பது, இதுவரை நடைமுறையில் இருக்கும் ஒரு வாரியத்தின் பாடத்திட்டத்தை மற்ற வாரியங்களின் பள்ளிகள் மீது திணிக்கும் நோக்கம் கொண்டது அல்ல; ஒவ்வொரு வாரியத்திலும்  பின்பற்றப்பட்ட  பாடத்திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாடத்திட்டத்தின் தலைப்புகளில் பெரிய மாறுதல்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், நான்கு கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களிலும் உள்ள சிறப்பம் சங்களைத்தேர்வு செய்து, அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. 
புதிய பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டவுடன் அனைத்து வாரியப் பிரதிநிதிகளுக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டு, அவற்றின்மீது அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு; பின்னர் ஒன்றிய, மாவட்ட அளவில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. 
பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுப் பாடப்புத்தகங்கள் எழுதும்போதும் அனுபவம் வாய்ந்த அனைத்துத் தரப்பு ஆசிரியர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு   சிறந்த ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, பாடப்புத்தகங்கள் எழுதும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 
பாடத்திட்டம், பாட நூல்கள் குறித்து ஒளிவு மறைவின்றி பொது விவாதங்களின் மூலம் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன
அனைத்து பாடங்களிலும் காணப்படும் பொதுவான ஆய்வுக் கணிப்பு
  • கடந்த காலத்தில் இருந்த பாடப்புத்தகங்களைவிட தரமானதாகவும், மேம்பட்டதாகவும் (அனைத்து வகையிலும்) அமைந்துள்ளது.
  • புத்தகத்தின் வடிவமைப்பு வண்ண மயமான அச்சிடல் எழுத்து அளவு, கட்டமைப்பு ஆகிய அம்சங்கள் மிகவும் சிறப்பு.
  • ஆசிரியர்மாணவர் இடையேயான உறவை மேம்படுத்துவதில் அதிக பங்கு
  • குழு கற்றல்கலந்துரையாடல் ஆகிய வைகளுக்கு வழி கோலுகின்ற வகையில் பாட அமைப்பு.
  • மாணவர்களின் படைப்புத்திறன் சிந்தனை திறன் என பன் சமூகத்திறன்களை வளர்க்கும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

Translate