Search This Blog

Saturday, January 14, 2017

பொங்கல் மடல்-2017

பொங்கல் வாழ்த்து – 2017

திருநாளாம் திருநாளாம்

தைத்திங்கள் முதல் நாளாம்

தரணியெல்லாம் செழித்து வந்த

தங்க மகள் தளிர் நாளாம் (திருநாளாம்)

மார்கழியின் மகளானாய் – நீ

மங்கலத்தின் உறவானாய்

மும்மாரியில் வளர்ந்த நீ

மூவுலகின் வசமானாய் (திருநாளாம்)

தை தை ஓசையோடு

வைகறையில் பிறக்கக் கண்டு

மனதில் நின்ற மார்கழியும்

முடிவு எடுத்ததன்றோ (திருநாளாம்)

புத்தாக்கச் சிந்தனையை

மண்ணில் விதைத்ததன்றோ

பூப்போன்ற புன்னகையுடன்

புதுப்பாவை படைத்ததன்றோ

தையல் நாயகியாய்…

தைப்பாவை பிறந்ததன்றோ (திருநாளாம்)

புதுப்பானை கொண்டேத்தி

புத்தரிசி அதிலே இட்டு

மஞ்சளும் இஞ்சியும் அதன் கழுத்தை அலங்கரிக்க

மாங்கல்யம் பூண்டது போல் மங்கலமாய் மலந்து 

நின்றாள் (திருநாளாம்)

இயற்கையின்பால் வந்ததனை

இரவிக்கே படைத்தருள்ந்து

இயற்கையைக் காப்போம் என்று

இரவியை வணங்கினரே (திருநாளாம்)





No comments:

Post a Comment

Translate