தமிழ் அன்னைக்கு வணக்கம்!
“முதன்மையாக
இருப்பதல்ல வெற்றி! முன்னேறிக் கொண்டிருப்பதே வெற்றி”!!
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே!
தமிழால் இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் அமராவதி
பதிப்பகத்தின் சார்பாக வணக்கங்களையும், தமிழை வாஞ்சைகளுக்கு எளிய, இனிய நடையில் கற்றுக்கொடுக்கும்
ஆசிரியப்பெருமக்களாகிய உங்களுக்கு என் வாழ்த்துதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமராவதி பதிப்பகத்தார் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ்
உரை நூலாக வெளியிட்டிருக்கும் இக்கையேடானது எத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
இதனால் மாணவர்கள் அடையும் பயன் என்ன என்பதைக் கூறுவதே இப்போதைய என் நோக்கமாக
உள்ளது.
ஓர் ஆசிரியர் நல்லாசிரியர் என்ற நிலைக்குத் தள்ளப்படாமல்
தாலாட்ட வேண்டும், மாணவர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும்,அதுவும் இனிய தமிழை எளிய
நடையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவரே
நல்லாசானாக இருக்க முடியும். இவ்விருதை, அரசோ பிற துறை சார்ந்ததோ தர
வேண்டிய அவசியமில்லை. மாணவர்கள் மனதில் நிறைவது, நிறைந்தாலே அத்துணை விருதுக்கும்
சொந்தக்காரர்களாகி விடலாம் என்பது என் திண்ணமான நம்பிக்கை. அந்த வகையில், இந்த
உரைநூலானது மாணவர்களின் மனதை எடை போட்டே எடுத்தாளப்பட்டுள்ளது, தாங்களும் ஒரு
நல்லாசானாகத் திகழ்வீர்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.
எ.கா.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள உரைநூலானது,
மாணவர்களின் வயது, அதே நேரம் மத்திய அரசின் பாடத்திட்டத்தைத் தழுவியதாகவும்,
பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வின் முன்னோட்டக் களமாகவும் கொண்டு, எளிய நடையில்,
தேவைப்படும் பாடக்குறிப்புகள், மனவரைபடம்,செய்யுள் பொருளுணர் திறன் பகுதி
வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இலக்கணத்தை வெறுக்காமல் இருக்க,
விதிவருமுறை மனவரைபடத்துடன் பின்பற்றப்பட்டுள்ளது.தேவையான,கட்டுரைகள்,கடிதங்கள்,
அமைப்பு முறைகள், இயல் வாரியாக, பயிற்சிகள், மாதிரிப் பயிற்சிகள், மாதிரி
வினாத்தாள்கள் என பல கோணங்களில் பயன்பெறும் வகையில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.முக்கியமாக,ஒரு வினா விடை எடுத்துக்கொண்டால், அதில்,
முக்கியச்சொற்களுக்கு முன்னுரிமை கொடுத்து அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பை கருத்தில் கொண்டு, அதிக
சிரத்தையுடன், பயமின்றி மாணவர்கள் அரசுத்தேர்வை எதிர்கொள்ளும் நோக்கில், இயல்
வாரியாக வினாக்கள் தொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில் அரசுத்தேர்வில்,
புத்தகத்தில் உள்ள வினாக்கள் நேரிடையாகத் தொடுக்காமல், சுற்றி வளைத்து ஒரு
வினாவைக் கேட்டாலும் அதற்குத் தகுந்த பதில் இதுதான் என்ற ஆணித்தரமான
தன்னம்பிக்கையை விதைக்கும் பொருட்டு அத்தகைய வினாக்களும், இந்த உரைநூலில்
கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த உரைநூலின் சிறப்பம்சம், பாடநூல் இல்லாமலே
இதனைக் கொண்டே பயிலலாம். இலக்கணம் விதிவருமுறையில் மனவரைபடத்துடன்
கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியச்சொற்கள், ஆசிரியர், நூல் குறிப்பின் முக்கியத்துவம்
இயல் வாரியாகவும்,தொகுத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.பயிற்சி செய்யும் நோக்கில் அதிக
இலக்கணம், வினா விடைத் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடிதம்,கட்டுரை,சுருக்கி
வரைதல் அமைப்பு முறையோடு விளக்கப்பட்டுள்ளது. கட்டுரைக்கு வேண்டிய மேற்கோள்களும்
கொடுக்கப்பட்டுள்ளது. அரசுத்தேர்வின் மாதிரி வினாத்தாள், பயிற்சித்தாளும் அதிகம்
கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“உன்னைப் பலமானவன் என்று நினைத்தால் பலமானவன். உன்னை நீ பலவீனமானவன் என்று நினைத்தால் பலவீனமாவாய். என்னவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்” என்றார் விவேகானந்தர்.
இத்தகைய பொன்மொழிகளைத் தனது தாரக மந்திரமாக
மாற்றி, என்னையும் வழி நடத்தும் அமராவதி
பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.ஜெகந்நாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்.
-ஆசிரியர் -







please post in pdf form
ReplyDeleteScience book venum
ReplyDelete