ஆச்சரியம்!!!
ஆனால் உண்மை!!!!
இந்தியாவின் உச்சிக்கு மேலே பனி படர்ந்த காஷ்மீரையும் தாண்டி காரகோரம் மலைத்தொடர்களின் மடியில் கிடப்பதுதான் ஹன்சா பள்ளத்தாக்கு. பாகிஸ்தானின் வடக்கு எல்லையின் கடைசி பகுதி. அவ்வப்போது பறிக்கப்படும் பிரஷ் ஆப்ரிகாட் பழங்களும் படு தூய்மையான மலைக்காற்றும் இவர்களின் இளமை இரகசியங்கள்.
இவர்கள் ‘புருஸாஷ்கி’ என்னும் ஒரு மொழியைப் பேசுகிறார்கள்.இப்படி ஒரு இனம் பூமியில் இருப்பதே தெரியாமல் இருந்தது.1984 இல் இந்த இனத்தைச் சார்ந்த அப்துல் என்பவர் லண்டன் செல்ல விமானம் சென்றபோது அவரின் பாஸ்போர்ட் சரிபார்க்கப்பட்டது.பார்க்க இளமையாகத் தெரிந்த அவரின் வயது என்ன தெரியுமா?152! ஆம்!அவர் பிறந்த வருடம் 1832,மருத்துவ பரிசோதனைக்குப் பின்னரே விமான நிலைய அதிகாரிகள் நம்பி இருக்கிறார்கள்..ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
பொன்மொழிப் பூக்கள்
1. நெற்றியின் வியர்வைதான்,உன் வெற்றியின் திறவுகோல்.
2. துணிவு உனக்குத் துணையாய் வரும்;பணிவு உனக்கு உயர்வைத் தரும்.
3. அப்பா ஆயிரம் நண்பர்களுக்குச் சமம்; அம்மா ஆயிரம் அப்பாக்களுக்குச் சமம்.
4. தீமை செய்யாத நல்ல நண்பன் புத்தகம் மட்டுமே!
5. வெற்றி என்பது பெற்றுக் கொள்வது;தோல்வி என்பது கற்றுக் கொள்வது.
தெரிந்து கொள்வோம்
1. தினசர் உணவில் 4 கிராம் உப்பு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. உப்பு நீரில் வினாடிக்கு 1560 மீட்டர் வேகத்தில் ஒலி ஊடுருவிச் செல்லும்.
3. திபெத்தியர்கள் தேநீரில் உப்பைக் கலந்து குடிப்பது வழக்கம்.
4. போலந்தில் வெலிசா நகரிலுள்ள உப்புச் சுரங்கம்தான் உலகில் மிகப் பெரியது.
5. தென் இந்திய 4 மொழிகளிலும் உப்புக்குப் பெயர் ஒன்றுதான்.
-
No comments:
Post a Comment