கண்ணப்ப நாயனாருடைய இயற்பெயர் திண்ணன். திண்ணன் என்ற வேடன்தான் கண்ணப்பராக மாறினான். கண்ணப்பன் வழக்கமாக காட்டில் ஒரு சிவலிங்கத்தைப் பூஜை செய்து வந்தான். அந்தப் பூஜை கூட காய்கறி வைத்து நடத்திய பூஜை அல்ல. அசைவ உணவை வைத்துப் படைத்து நாள்தோறும் வழிபட்டான்.
ஒரு நாள் அந்த சிவலிங்கத்தின் கண்ணில் இரத்தம் வழிந்தது. அதற்கு சிகிச்சை செய்ய ஏதேதோ மூலிகைகளையெல்லாம் முயன்று பார்த்தும் முடியவில்லை. பிறகு தன் கண்ணை ஒரே அம்பால் பெயர்த்து சிவலிங்கத்தின் கண்ணிலே அப்பினான்.
ஆனால் அந்த சிவலிங்கம், ஒரு கண்ணை அப்பி விட்டாரே, ஆளுக்கு ஒரு கண்ணாக இருந்து விட்டு போகட்டும் என்று நினைக்காமல் அவனை சோதிக்க வேண்டி இன்னொரு கண்ணிலிருந்தும் இரத்தம் வருமாறு செய்தார். உடனே வேறு வழியில்லாமல் தன்னுடைய இரண்டாவது கண்ணையும் பிடுங்கி, சிவலிங்கத்திற்கு வைக்க முற்பட்ட கண்ணப்பன், அந்த கண்ணையும் பிடுங்கி விட்டால் எங்கே வைப்பது? என்று தெரியாது என்பத்ற்காக அடையாளத்திற்காக சிவனுடைய பழுதுபட்ட அந்தக் கண்ணில் தனது செருப்பணிந்த காலை வைத்துக் கொண்டு தனது மற்றொரு கண்ணைப் பிடுங்கி அப்பினான்.
அவனின் அளவில்லா பக்தியை அறிந்த ஆண்டவன் மகிழ்ச்சியடைந்து இரு கண்ணிலும் அவனுக்கு ஒளிதந்தான். அவன் தான் 63 நாயன்மார்களில் ஒருவனான, கண்ணப்ப நாயனார் ஆவார்.
No comments:
Post a Comment