புறப்பொருள்
– பயிற்சித் தாள் – 2(2015-16)
இரண்டாம் தொகுநிலைத்தேர்வு – (SA-2)
1. புறம்
பற்றிய நெறிகளைக் கூறுவது ___
2. புறத்திணை
மொத்தம் ___
3. உலகியல்
நிகழ்வுகளைக் கூறும் திணை ___
4. வெட்சியின்
புறத்திணை ____
5. ஆநிரைகளைக்
கவர்ந்து வருபவர்கள் _____ பூவைச் சூடிச் செல்வர்.
6. ஆநிரைகளைக்
கவர்ந்து சென்றவர்கள் ____ திணை வீரர்கள்.
7. வெட்சி
வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை _____ பூவைச் சூடி _____ வீரர்கள் மீட்பது
வழக்கம்.
8. காஞ்சிப்பூ
சூடும் வீரர்களின் புறத்திணை _____
9. நிரை
கவர்தல் என்பது _______ ஐ குறிக்கும்.
10. கவர்தல்,
மீட்டல் – பொருள்
11. மண்ணாசை
கொண்டு பகை நாட்டரசனோடு போருக்குச் செல்லும் திணை______
12. பகையரசனால்
முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடும் திணை ___
13. மதிலைக்
காத்தல் வேண்டி ______ பூவைச் சூடி போர் வீரர்கள் போருக்குச் செல்வார்கள்.
14. பகை
வேந்தர் இருவருமே வெற்றி ஒன்றனையேக் குறிக்கோளாய்க் கொண்டு போரிடும் திணை ______ அவர்கள்
அச்சமயம் ______ பூவைச் சூடிச் செல்வார்கள்.
15. வட்கார்மேற்செல்வது
என்பது_____ பொருள்.இது ______ திணைக்குரியன.
16. காஞ்சிப்பூவைச்
சூடி எதிர்த்துப் போரிடும் மன்னன் ____ திணைக்குரியவன்.அவன் _________ அரசனோடு போரிடுவான்.
17. மதிலுக்கு
உள்ளிருந்து வெளியே இருக்கும் மன்னனோடு போரிடும் திணை ______
18. உட்காது
எதிரூன்றல் என்பது _______ பொருள்..இது _______ திணை.
19. எயில்
காத்தல் என்பதன் பொருள் ______ ..இது _____ திணைக்குரியன. இவ்வீரர்கள் ______ பூவைச்சூடி
போருக்குச் செல்வார்கள்.
20. உழிஞையின்
புறத்திணை ______இவர்கள் _____ பூவைச்சூடி போருக்குச் செல்வார்கள்.
21. எதிரியின்
கோட்டைக்குள் புகுந்து மதிலைச் சுற்றி வளைப்பது ____ திணை.இவர்கள் _____ பூவைச்சூடி
போருக்குச் செல்வார்கள்.
22. அது
வளைத்தல் என்பது ____ திணை.
23. அதிரப்
பொருவது என்பதன் பொருள் ______அதிரப் பொருவதுவின் புறத்திணை ______
24. வெற்றி
பெற்ற மன்னன் வாகைப் பூ சூடிப் போருக்குச் செல்வது _____
25. செருவென்றது
என்பதன் பொருள் ______ இது _____ திணை.
26. பாடாண்
திணை = பிரித்து எழுது
27. பாடுவதற்குத்
தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி,செல்வம்,வீரம் முதலியவற்றைப் போற்றிப் பாடும் திணை____
28. 12 புறத்திணைகளுள்
முதல் ஒன்பதில் உள்ள பொதுவான செய்திகள் மற்றும் கூறப்படாதச் செய்திகளையும் பற்றிக்
கூறுவது ____ திணை.
29. கைக்கிளை
என்பதன் பொருள் ______ இது ______ வகைப்படும்.அவை ________ மற்றும் _______.
30. பெருந்திணை
என்பதன் பொருள் ____இது ____ வகைப்படும்.அவை _____ மற்றும் _______.
31. மதில்போர்
பற்றிய புறத்திணைகள் மொத்தம் _____ அவை _____ மற்றும் _____.
32. வாகைத்
திணை என்பது போர்கலத்து மிக்கார் _____ ஆகும்.
33. பொருந்தாக்
காமம் என்பது ______
34. நிரைகளைப்
பற்றி கூறும் திணைகள் _______ ________
35. வெட்சி
______ வஞ்சி ______ நொச்சி ______ தும்பை _____.
No comments:
Post a Comment