Search This Blog

Sunday, November 22, 2015

சீறாப்புராணம் (2015-16)




 சீறாப்புராணம் – செய்யுள் பொருளுணர் திறன்.(SA2) 2015 -16
    I.     ஓரிரு வார்த்தைகளில் விடையளி:

1.   சீறாப்புராணத்தை இயற்றியவர் ____
2.   இந்நூலின் ஆசிரியர் யாருடைய மாணாக்கர்?
3.   யாருடைய வேண்டுகோளுக்கிணங்க இந்நூலை இயற்றினார்?
4.   வள்ளல் சீதக்காதியின் பெயர் என்ன?
5.   சீதக்காதிக்குப் பின் நூல் எழுத உதவியாக இருந்தவர்_____
6.   ஆசிரியர் எழுதிய வேறு நூல் ____ மற்றும் காலம்_____
7.   இறைவனின் திருத்தூதர் ______
8.   சீறாப்புராணம் ______ வரலாற்றை எழுத்தியம்புகிறது.
9.   சீறா, வாழ்க்கை – பொருள் தருக.
10. சீறாப்புராணம் ______ பிரிவுகளைக் கொண்ட காண்டம்.
11. இப்பாடலில் உள்ள மொத்த பாடல்கள்_______
12. நம் பாடப் பகுதியில் இடம்பெற்ற காண்டம்_____
13. காண்டம் என்றால் ______ பிரிவு.
14. வென்றி வாளரசே – இது ______ கூற்று.
15. வேறொரு காட்டினிற் புகுக. – இது யார், யாரிடம் கூறியது?
16. முகம்மது நபியை வணங்கியவன் _____
17. மடங்கல், உழுவை – பொருள் தருக.
18. முகம்மது நபி புலியை  நோக்கி, நீ இன்று முதல் ______  செய்வதை விடுத்து __________ புகுவாயாக.
19. உயிர்செகுத்திடுக, வேங்கை – பொருள் தருக.
20. மிகுந்த கொலைத் தொழிலையுடையது ____
21. முகம்மது நபியின் திருவடியில் வீழ்ந்து வணங்கியது ____
22. அதிசயம், உன்னி – பொருள் தருக.
23. சிங்கத்திற்கு ஒப்பாகக் குறிப்பிடப்படுபவர் ____
24. வெற்றி தரும் வாள் படை தாங்கிய வீரர் _____
25. மாதிரம், எழில், புயம், கேசரி, புளகிதம், பூதரம், கவின் – பொருள் தருக.
26. கூர்மை பொருந்திய நகத்தினையும்,திண்ணிய வலிமையினையும் உடையது _____
27. மந்திர மலைக்கு ஒப்பானவர் _____
28. வள்ளுகிர், புந்தி, சிரம்,கரம், சந்தம்- பொருள் தருக.
29. பெருவரி,பெருஞ்சிரம், திண்டிறல் – பிரித்து எழுது.
30. இடியைக் காட்டிலும் அதிகமாக முழங்கும் மிருகம் ___
31. பிளந்த பாதங்களைக் கொண்ட விலங்கு -___
32. கேழல், எண்கு,மரை,மேதி,கவை, நிணம் – பொருள் தருக.
33. பெருங்கோடு,வீழ்ந்துடல்,நெடுநீர்,உள்ளுரை – பொருள் தருக.
34. கொடிய வரிகளைக் கொண்ட புலி ______ காட்டில் உறைந்துள்ளது.
35. கனல், வனம்,புலால், எயிறு, தாரை, அடவி – பொருள் தருக.
36. வெண்பற்கள் ஒளிவிட, வாயில் புலால் வீச சினத்தோடு இருந்தது யார்?
37. இருவிழி,வெள்ளெயிறு,எண்கினங்கள் – பிரித்து எழுது.
38. அகமது என்னும் திருப்பெயர் பெற்றவர் ____
39. அடந்த காட்டில் வாழ்ந்த விலங்கு எது?
40. திரள்,கான், தடக்கரி, திரை – பொருள் தருக.
41. நம் பாடப் பகுதியில் இடம் பெற்ற படலம் ____
42. தரும்பெ ருங்கிரி பிதிர்ந்திட வுருமினும் அலறும் – இப்பாடலில் யாருடைய வெறிச்செயல் கூறப்பட்டுள்ளது?
43. உடைய வன்திருத் தூதரே உண்மையென் றுன்னித் – இதில் குறிப்பிடும் இறைத்தூதர்?
44. அபுல்காசிம் ஒரு _____ பெருமான்
45. படலம் – பொருள்
46. அகழி, காதவழி, கமழ – பொருள் தருக.
47. குருதி, கிரி, முறுவல் பொருள் தருக.
48. புலி தன் நீண்ட ______ தரையில் அடித்தது.
49. இரண்டு கண்களும் ____ பொறிகளைக் கக்கியது.
50. சீறாப்புராணம், தெண்டிரை – பிரித்து எழுது.


No comments:

Post a Comment

Translate