அகிலத்தின் அன்பு தெய்வம் ........?
அயராது பாடுபடும் ஆலய தெய்வம் ........?
அன்பெனும் மழையைப் பொழிபவள் ........?
அழகிய ஒளியாய் ஒளிர்பவள் ........?
அன்னமிடும் கையால் அரவணைப்பைத் தருபவள் ........?
அப்பழுக்கற்றத் தூய்மையால்
துன்பத்தைத் துடைப்பவள் ........?
.............அவளே...................
இவ்வுலகில் எனக்கு வாழ்வைத் தந்து
என் உயிராகவும் (அ)
உடலாகவும் (ம்)
உயிர் உடலாகவும் (மா)
என்னுள் இருப்பவளே,
எனக்கு இனியவளே,
எனக்கு உயிரைக் கொடுத்தவளே
அம்மா!! அம்மா!! அம்மா!! அம்மா!! அம்மா!!
No comments:
Post a Comment