கண்ணுக்கு
இனியவரே !
காட்சிக்கு
எளியவரே !
கிங்மேக்கராய்த்
திகழ்ந்தவரே !
கீதையின்
வழி நடந்தவரே !
குலக்கல்வித்
திட்டத்தை ஒழித்தவரே !
கூப்பிட்டக்குரலுக்குக்
குரல் கொடுத்தவரே!
கெடு
நினைவுகளை அகற்றியவரே !
கேள்வியறிவில்
வளர்ந்தவரே !
கையளவுப்
பொருள் கூட தனக்கெனச் சேர்க்காதவரே !
கொடுங்கோல்
ஆட்சி நடத்தாதவரே !
கோமகனாய்
நிலைத்தவரே !- மொத்தத்தில்
கௌதம
புத்தராய் ஆசையை அறவே வெறுத்து உயர்ந்தவரே ! அவரே
குமாரசாமி – சிவகாமி பெற்றெடுத்த
செல்வமகன் காமாட்சியே !!
No comments:
Post a Comment