Search This Blog

Saturday, April 18, 2020

கோபல்லபுரத்து மக்கள்

கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை
அதிகாலை நேரம்
அன்னமய்யா வருகை
நேசப்புன்னகையும்  நேயமும்
பொருத்தமான பெயர்
விருந்தோம்பல்
முடிவுரை
முன்னுரை

ஆசிரியர்: கரிசல் எழுத்தாளர். கி.ராஜ நாராயணன்
இடைச்செவல் மக்களின் வாழ்வியல் காட்சிகள், கிராமத்து வெல்ளந்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கதையில் வரும் கதைக்கரு:
 விருந்தோம்பல்
வரவேஏபு
எளிமையான உணவு
பகிர்ந்து கொடுக்கும் நேயம்
1991 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடெமி விருது பெற்ற நூல்.
அதிகாலை நேரம்
சுப்பையாவும் கொத்தாளியும் அருகு எடுத்து பின் கஞ்சி குடிக்க உட்காருதல்.
அந்நேரம் அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வருவதைக் காணல்.
அந்த ஆள், வயோதிகனாக, தாடி,அழுக்கு ஆடை, சாமியார் போன்று தென்படுதல்.
அப்பொழுது, வரும் ஆள் சன்னியாசியோ,பரதேசியோ அந்த ஆளுக்காக சுப்பையா, கொத்தாளி காத்திருத்தல்.
அன்னமய்யாவும் வாலிபனும்
அன்னமய்யா, சன்னியாசிபோல் இருக்கும் அந்த ஆளைப் பார்த்தல்.
சன்னியாசி அல்ல என்பதை அருகில் சென்றபின் உணர்தல்.
அவனின் முகம் வாடி இருத்தல், நடக்க முடியாமல் கால்களை நீட்டி புளிய மரத்தில் சாய்ந்திருத்தல்.
கோபல்லபுரத்துக் குழந்தைகள் தகப்பனாரின் மேல் துண்டுகளை உடுத்தி லாட சன்னியாசி விளையாட்டு விளையாடியது அவனைப் பார்த்ததும் நினைவுக்கு அன்னமய்யாவுக்கு வந்தது.
நேயமும் நேசமும்
அன்னமய்யாவைப் பார்த்து தண்ணீர் கேட்டல்.
வேப்பமரத்தின் அடியில் நிறைய மண்கலயங்கள் இருப்பதைக் கானல்.
மண் கலயத்தில் இருந்த நீச்சுத் தண்ணீரை சிரட்டையில் வடித்துக் கொடுத்தல்.
அன்னமய்யா கொடுத்ததைக் குடித்தபின் மீண்டும் மர நிழலில் படுத்து உறங்குதல்..
பொருத்தமான பெயர்
அன்னமய்யா அந்த ஆளைச் சுப்பையாவிடம் கூட்டிச் செல்லுதல்
அன்னமய்யா அந்த ஆளிடம் பெயர் கேட்டல்.
பரமேஸ்வரன் என்ற மணி என்று கூறுதல்.
மணி, அன்னமய்யாவிடம் பெயர் கெட்டல்.
அன்னமய்யா என்றதும் எவ்வலவு பொருத்தமான பெயர் என மணி நினைத்தல்.
அன்னமய்யா, மணியிடம் என் நண்பன் சுப்பையா புஞ்சையில் அருகு எடுத்துக் கொண்டிருக்கிறான்; அவனிடம் செல்வொம் என அழைத்துச் செல்லுதல்.
விருந்தோம்பல்
சுப்பையா, மணியையும் அன்னமய்யாவையும் வரவேற்றல்.
அமர்ந்து உண்ண கேட்டுக்கொள்ளுதல்.
மணி வட்டத்தில் அவர்களோடு அமர்தல்.
மணியின் கையில் கம்பஞ்சோற்றை வைத்தல்.
பின், பள்ளம் செய்து துவையலை வைத்தல்.
சோற்றின் நெடி மணியை என்னவோ இருப்பினும், துவையலோடு சேர்த்துச் சாப்பிடல்.
மற்றவர்கள், சாப்பிட்டு முடித்து ஊர்க்கதைகல் பேசினர்.
மணி மீண்டும் அமைதியாக கண்களை மூடிக்கிடத்தல்.
முடிவுரை
கிராமத்து விருந்தோம்பல் கிடைத்ததற்கரிய வரம்.
தமிழர்களின் பண்பாடுகளுள் விருந்தோம்பல் பெறும் இடம்.
பசித்தவருக்கு உணவு படைத்தல் ஓர் அறச்செயலாகவும்,பண்பாட்டுக் கூறுகளாகவும் விளக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Translate