Search This Blog

Thursday, April 2, 2020

வகுப்பு : 10 இயல் :2 பொருண்மை: இயற்கை உரை நடை உலகம் கேட்கிறதா என் குரல



கேட்கிறதா என் குரல்!


vகாற்று

vகாற்றின் வேறு பெயர்கள்

vதிசையில் அமைந்த பெயர்கள்
vஇலக்கியத்தில் காற்று
vகாற்றின் பயன்
vகாற்று மாசுபாடு
vநீக்கும் வழிமுறைகள்
காற்று
         இயற்கைக் கூறுகளுள் முதன்மை காற்று

உலக உயிர்களின் இயக்கம்
மூச்சுப்பயிற்சி உடலைப் பாதுகாத்துவாழ்நாளை நீட்டிக்கும்திருமூலர்
வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாகும்
ஔவையார்
வேறு பெயர்கள்
காற்று, வளி,தென்றல், புயல்,சூறாவளி

பருவ நிலை, சூழல்,வீசும் வேகத்திற்கேற்ப,

        1.தென்றல்2.பூங்காற்று3.கடல்காற்று4.பனிக்காற்று5.வாடைக்காற்று

       6.மேல் காற்று7.கீழ்க்காற்று8.மென் காற்று9.இளந்தென்றல்,பேய்க்காற்று,சுழல் காற்று,சூறாவளி10.புழுதி,ஆடிக்காற்று,

           கடுங்காற்று,புயல்காற்று

திசையில் அமைந்த பெயர்கள்
மேற்குகுடக்கு, வடக்குவாடை, கிழக்குகுணக்கு,
தெற்கு -தென்றல்
கிழக்கு
கிழக்கிலிருந்து வீசும்
வேறு பெயர்கொண்டல்
இது கடல் பகுதிக்கு மேலுள்ள மழை மேகங்களைச் சுமந்து வருவதால் மழைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறது.
இக்காற்று,
1.குளிச்சி தரும்
2.இன்பத்தைத் தரும்
3.மழையைத் தரும்
மேற்கு
Øமேற்கிலிருந்து வீசும் .
Øவேறு பெயர்கோடை
Øவறண்ட நிலப்பகுதியிலிருந்து வீசுவதால் வெப்பக்காற்று எனவும் அழைக்கப்படுகிறது.
Øவலிமையோடு வீசும்.

தெற்குவடக்கு

தெற்கு
1.தெற்கிலிருந்து வீசும்
2.வேறுபெயர்தென்றல்
3.மரம்,செடி,காற்று,ஆறு,மலை,பள்ளத்தாக்குகளைத் தாண்டி வரும்
4.இதமான இயல்புடன் வீசும்
வடக்கு
1.வடக்கிலிருந்து வீசும்
2.வாடை எனவும் வழங்கப்படுகிறது
3.பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறது.
இலக்கியத்தில் காற்று
வண்டோடு புக்க மணவாய்த் தென்றல் சிலம்பு
நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலேபத்மகிரி நாதர்தென்றல் விடு தூது
நதியில் விளையாடி கொடியில் தலை சீவிதிரையிசை
முந்நீர் நாவாய் ஓட்டியாக காற்று
1.கடல் பயணத்திற்கு
2.பாய்மரக்கப்பல்கள்
3.கடல் வாணிகம்தமிழர்கள்
4.கிரேக்க அறிஞர்ஹிப்பாலஸ்பருவக்காற்றின் பயனை உலகிற்கு அற்முகப்படுத்தியவர்.
எ.கா.
நா இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
கரிகால் பெருவளத்தான்ஔவை( வளி என்று குறிப்பிடுதல்.
காற்றின் பயன்
பருவ காலங்களில் மேகத்தைக் கொண்டு வந்து  மழையைத் தருகிறது.
தென்மேற்குவடமேற்கு பருவக்காற்றாக மேகத்தைக் குளிவிக்கிறது.
70% மழைதென்மேற்குப் பருவக்காற்று
ஜூன் முதல் செப்டம்பர்தென்மேற்குப்பருவக்காற்று
அக்டோபர் முதல் டிசம்பர் வரைவடகிழக்கு
வடகிழக்குப் பருவ காலங்களில் தாழ்வு மண்டலமாய் மாறி புயலாய், மழையாய் மாறுகிறது.
எ.கா.
வளி மிகின் வலி இல்லைஐயூர் முடவனார்புறம்
மதுரை இள நாகனார்
கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறதென வேகத்தைக் குறிப்பிடுகிறார்.
காற்றின் கூடுதல் பயன்
உயிர் வளி தந்து உயிர்களைக் காக்கிறது
தாவரங்களின்  ஒளிச்சேர்க்கை
விதைகளை எடுத்து தூவுதல்
பூ,தேன், கனி, தாவரம் உயிரினத்தின் மணம்இப்படி, உயிர்ச்சங்கிலித் தொடர் அறுபடாதிருக்க உதவுகிறது
நிலக்கரியின் தேவை குறைந்து கனிமவளம் பாதுகாத்தல்
தொலைத்தொடர்பின் மையம்
காற்றுள்ளபோதே மின்சாரம்
புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் அரண்
புவியைப் போர்வை போல சுற்றி பரிதியின் கதிர் சூட்டைக் குறைக்கிறது.
காற்று மாசுபாடு (மனிதனால்)
குப்பைகள், நெகிழிப்பைகள்,மெது உருளைகள், போன்றவற்றை எரிப்பது.
குளிரூட்டப்பட்ட அறை, குளிர் சாதனப்பெட்டி அதிகம் பயன்படுத்துதல்
பட்டாசுகளை அதிகமாக வெடிப்பது
புகை வடிகட்டி இல்லாமல் தொழிற்சாலைகளை இயக்குவது
தனிமனிதரின் மிகுதியான பயன்பாடு
வானூர்திகள் வெளியிடும் புகை
பாதிப்புகள்
1.கண் எரிச்சல், தலைவலி,தொண்டைக்கட்டு,காய்ச்சல், நுரையீரல் புற்று நோய்,இளைப்பு நோய்
2.குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைதல் (UNICEF – சிறுவர் நிதியம்)
3.குளிர் பதனப் பெட்டிகுளோரோ புளோரோ கார்பன்ஓசோன் பாதித்தல்
4.புற ஊதாக் கதிர்களால் பாதிப்பு
5.ஓரறிவு முதல் ஆறறிவு பாதிப்பு
6.கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு மழை நீரில் கரைந்து,அமில மழை.மண்,நீர்,கட்டடங்கள்,காடுகள், நீர்வாழ் உயிரினங்கள் பாதிப்பு
 நீக்கும் வழிமுறைகள்
மரங்களை வளர்த்தல்
குப்பை மேலாண்மை
பொதுப்போக்கு வரத்திற்கு முன்னுரிமை
மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகள் பயன்படுத்துதல்
கச்சா, நிலக்கரி போன்ற புதை வடிவ பொருள்களைத் தவிர்த்தல்
வீட்டுச் சமையலுக்கு விறகுகளைத் தவிர்த்தல்







2 comments:

Translate