பிறந்த காலம் | 9 ம் நூற்றாண்டு |
பிறந்த இடம் | ஆழ்வார் திருநகரி |
பிறந்த மாதம் | வைகாசி |
திருநட்சத்திரம் | விசாக |
வேறு பெயர்கள் | சடகோபன்,சடாரி, பராங்குசன் ,மாறன்,வகுளா பரணன்,குருகையர் கோனே |
அம்சம் | விஷ்வக்சேன |
வரலாறு
நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு திரு மகனாராக வேளாளர் குலத்தில் பிறந்தார். இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் ஒரு சடம் போல் இருந்தார். இக்குழந்தை உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர்.
பதினாறு ஆண்டுகள் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். அயோத்தியில் தங்கி இருந்த மதுரகவி என்பவர் தெற்கு திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தெற்கு திசை நோக்கி பயணித்தார். மாறனிடமிருந்து அந்த ஒளி வந்தது என்று அறிந்து அவரை சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். அவரிடமிருது நிறைய அர்த்தங்களைப் பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு.
நூல்கள்
நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய 4 நூல்களை இயற்றினார். இவை ரிக், யஜுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாக பெரியோர்கள் சொல்வார்கள். இந்த திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 7 பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார்.
No comments:
Post a Comment