பிறந்த காலம் | 8ம் நூற்றாண்டு |
பிறந்த இடம் | திருமண்டங்குடி |
பிறந்த மாதம் | மார்கழி |
திருநட்சத்திரம் | கேட்டை |
வேறு பெயர்கள் | விப்ரனாராயனர் , திருமண்டங்குடியார் ,பாக்தங்கிரிறேனு , பல்லயுனர்த்திய பிரான் |
எம்பெருமானின் அடிமையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு பரமனை மாலைகள் அணிவித்துப் பார்த்து விப்ர நாராயணராக வாழ்ந்தவர்.
சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் இவர் திருவரங்கனைத் தம் பாசுரங்களால் பாடித் துதித்து மற்ற திவ்ய தேசக் கோயில்களுக்கும் விஜயம் செய்தார்.
ஸ்ரீமந் நாராயணணின் பக்தர்களின் காலடி மண்ணைத் தம் தலையிலிட்டுக் கொண்டு தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்றார்.
No comments:
Post a Comment