தித்திக்கும் தீபாவளியே
தீ + ஆவளியே…………….
தீங்கினை அழித்த தீபாவளியே
திகட்டாத திண்பண்டங்கள்
தீம் தீம் என்ற தீப ஒளியே………….
திருமேரு மலையின் தீப
ஒளியே
தில்லைப் பெருமானின் தீப ஒளியே………
மன இருளை அகற்றும் தீப ஒளியே
மங்காப் புகழே – என் தீப ஒளியே………
அகந்தையை ஒழிக்க வந்த தீப ஒளியே
ஆனந்தத்தை அள்ளித் தந்த தீப ஒளியே………
..
இன்னல்களைக் களைந்த தீப ஒளியே
இணையிலா……… தீப ஒளியே-
நீ
ஈகையின் இலக்கணம் தீப ஒளியே
ஈடில்லா ஈசனின் தீப ஒளியே
ஈசனின் மைத்துனனாய் நின்ற தீப ஒளியே
சூரனை அழித்த தீப ஒளியே
உற்றோரும் மற்றோரும் மகிழ்ந்த தீப ஒளியே
உன்னத நிலை கொடுத்த தீப ஒளியே
எம்பெருமான் உருவில் வந்த தீப ஒளியே
ஏழ்கடல் தாண்டி வந்த தீப ஒளியே
ஐயன் என் கண்ணனாய் வந்த தீப ஒளியே
ஒற்றுமையை வளர்க்க வந்த தீப ஒளியே
No comments:
Post a Comment